யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/11/17

அதிக டெபாசிட்: ஒரு லட்சம் நோட்டீசுகள்!!!

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு அதிகளவில் பணத்தை 
டெபாசிட் செய்த சுமார் ஒரு லட்சம் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களின் வரி ரிட்டன்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரமே வருமான வரித் துறை நோட்டீசுகளை வெளியிடவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் முதற்கட்டமாக, 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வங்கிகளில் செலுத்திவிட்டு, வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யாத 70,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. இந்த நோட்டீசுகள் அனைத்தும் வருமான வரிச் சட்டம் பிரிவு 142 (1)-ன் கீழ் அனுப்பப்படவுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதே போல, முன்பு சாதாரணமாக பணத்தை டெபாசிட் செய்து, வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்துவிட்டு, பணமதிப்பழிப்புக்குப் பிறகு அதிகமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட சுமார் 30,000 நிறுவனங்களுக்கும் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பவுள்ளது. இதற்காகப் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட 20,572 வரி ரிட்டன்களை வருமான வரித்துறை மீளாய்வு செய்யவுள்ளது.

இதுபற்றி வருமான வரித் துறையின் உயரதிகாரி ஒருவர் பேசுகையில், “50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்தவர்களை எங்கள் நோட்டீசுக்கு பதிலளிக்க நாங்கள் கோருவோம். அவர்கள் ஒத்துழைக்காவிடில் சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்குவோம். 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவும், 50 லட்சம் ரூபாய்க்குக் குறைவாகவும் டெபாசிட் செய்தவர்கள் மீதும் இதே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக