யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/11/17

காருண்யா பல்கலை: பட்டச் சான்றிதழ்கள் செல்லாது!

                                              
கோவை, காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் 
நிறுவனத்தை மூடவேண்டும் என யுஜிசி நேற்று (நவம்பர் 7) உத்தரவிட்டுள்ளது.

யுஜிசியின் சார்புச் செயலர் குண்ட்லா மஹாஜன், காருண்யா பல்கலை பதிவாளர் எலைஜா பிளசிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “யுஜிசி விதிப்படி, அனைத்து நிகர்நிலை பல்கலைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு, தொடர் அங்கீகாரமும், அனுமதியும் வழங்கப்படுகின்றன. ஆய்வின் போது, தாண்டன் குழுவினர் பரிந்துரையின்படி, குறைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன. தீர்வு காணாத, 'பி' பிரிவு நிகர்நிலை பல்கலைகளில் புதிய கல்வி மையங்கள் அமைக்கவோ விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவோ அனுமதி அளிப்பதில்லை என அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, கோவையில் 'பி' பிரிவில் உள்ள காருண்யா நிகர்நிலை பல்கலையின் கீழ் செயல்படும், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில் புதிய கல்வி மையங்கள், புதிய துறைகள் மற்றும் புதிய பாடத் திட்டங்கள் தொடங்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க முடியாது. யுஜிசி, குழு ஆய்வு செய்து அக்குழுவினர் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே அனுமதியளிக்க முடியும்.

அதன் அடிப்படையில்தான், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், 2004 ஜூன் 23ஆம் தேதி முதல் 2007 ஜூன் 22 வரை நிகர்நிலை பல்கலை அந்தஸ்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர், நிகர்நிலை அந்தஸ்தில் தொடர்ந்து செயல்பட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. எனவே, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் மற்றும் அதில் தொடங்கப்பட்ட பாடப் பிரிவுகளை மூட அறிவுறுத்தப்படுகிறது. இந்நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட பட்ட சான்றிதழ்களும், பாடப் பிரிவுகளும் செல்லாது . இந்தக் கடிதம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு உயர் கல்வி பல்கலைக் கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் கோவை காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் 48ஆவது இடத்தைப் பிடித்தது என்பது நினைவுகூரத்தக்கது.

மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் நேரடியாகச் செயல்படும் யுஜிசி அமைப்புதான் உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் அமைப்பில் மிகப் பெரியது. இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வி ஒருங்கிணைப்பு, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு ஆகியவை யுஜிசியின் முதன்மைப் பணிகள். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குதல், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்யவும் யுஜிசி அமைப்புக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. உயர்கல்வி குறித்த முடிவுகளை எடுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணியையும் யுஜிசி மேற்கொண்டுவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக