யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/11/17

கட்டணத்தை உயர்த்திய ரயில்வே துறை!!!

                                              
48 ரயில்களை அதிவேக ரயில்களாகத் தரம் உயர்த்தவும்,
அவற்றின் வேகத்தை மணிக்கு 5 கி.மீ. உயர்த்தவும் திட்டமிட்டுள்ள ரயில்வே துறை பயணக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

தற்போதைய நிலையில் ராஜ்தானி, டுரோண்டோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் மிகவும் தாமதமாகவே இயங்கி வருகின்றன. பனிமூட்டம் காரணமாக வடக்குக் கட்டுப்பாட்டு ரயில்கள் அனைத்தும் பல மணி நேரங்கள் குறைவான அளவிலேயே இயங்குகின்றன. எனவே 48 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை சூப்பர் பாஸ்ட் ரயில்களாகத் தரம் உயர்த்த இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ள ரயில்வே துறை நவம்பர் 1ஆம் தேதி வெளியிட்டுள்ள புதிய பயண அட்டவணையில் ரயில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.70 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கட்டண முறைப்படி, வழக்கமான கட்டணத்தில், ஸ்லீப்பர் பிரிவுக்கு ரூ.30 கூடுதலாகவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தர ஏ.சி. பெட்டிகளில் ரூ.45 கூடுதலாகவும், முதல் தர ஏ.சி. பிரிவுக்கு ரூ.75 கூடுதலாகவும் பயணிகள் செலுத்த வேண்டியிருக்கும். சூப்பர் பாஸ்ட் ரயில்களாக 48 ரயில்களும் மாற்றப்பட்ட பிறகு, சூப்பர் பாஸ்ட் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 1,072 ஆக உயரும். ரயில்வே துறையிடமுள்ள விவரங்களின்படி, ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 890 சூப்பர் பாஸ்ட் ரயில்கள் தாமதமாக இயங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஜூலை மாதத்தில் 129 ரயில்களும், ஆகஸ்ட் மாதத்தில் 145 ரயில்களும் செப்டம்பர் மாதத்தில் 183 ரயில்களும் 1 முதல் 3 மணி நேரங்கள் தாமதமாக இயங்கியுள்ளன. இந்நிலையில்தான் ரயில்களின் வேகத்தை மணிக்கு 5 கி.மீ. வேகம் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக