கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் ரயில்வே நிலையத்தில்,
ரயிலில் பயணம்
செய்த மாணவர்கள் மற்றும் பொது மக்கள், ரயில்வே நிலைய அதிகாரிகளுக்கு
எதிராக ரயிலை மறித்து போராட்டம் இன்று (நவம்பர்,7) காலை போராட்டம் செய்தனர்.
56873 மயிலாடுதுறை பயணிகள் ரயில், விழுப்புரத்திலிருந்து காலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, சிதம்பரத்துக்கு 7.50 மணிக்கு தினந்தோறும் வந்துசேரும். இந்த
ரயிலில்தான், அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், நந்தனார் பச்சையப்ப பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயணிக்கிறார்கள்.
ரயில் மறியல் பற்றி, ரயிலில் பயணம் செய்த பாலமுருகனிடம் கேட்டோம். இதுப்பற்றி அவர் கூறுகையில், புதுச்சத்திரத்தில் ஐ.எல்.எப்.எஸ். பவர் கம்பெனி
ஆரம்பிக்கப்பட்டத்திலிருந்து பயணிகள் ரயிலை ½ மணிநேரத்துக்கும் மேலாக
நிறுத்தி, காலதாமதமாக அனுப்புகிறார்கள் ரயில்வே நிலைய அதிகாரிகள்.
பவர் கம்பெனிக்கும், பயணிகள் பயணிக்கும் ரயிலுக்கும் என்ன சம்பந்தம்
என்று கேட்டோம். “ பவர் கம்பெனிக்கு தூத்துக்குடியிலிருந்து கூட்ஸ்
மூலமாக ரயில் பாதையில்தான் நிலக்கரி ஏற்றிவருகிறார்கள். கூட்ஸ்பெட்டிகள்
ஒரு கிலோமீட்டர் தூரம் வரையிலிருக்கும். கூட்ஸ் வண்டி எதிரில் வருவதால், மாணவர்கள் பயணிக்கும் பயணிகள் ரயிலைப் புதுச்சத்திரத்தில் நிறுத்தி, கூட்ஸ் வண்டிக்கு வழிவிடுகிறார்கள். கூட்ஸ் வண்டிக்கு என்ன அவசரம், பரங்கிப்பேட்டை, கிள்ளை, ரயில் நிலையத்தில் நிறுத்தி, பயணிகள் ரயிலுக்கு வழிவிடலாமே? இப்போது தேர்வு நேரம், மாணவர்களின் படிப்புப்பற்றி ரயில்வே அதிகாரிகளுக்குத் அக்கறை இல்லையா?
அதனால்தான், ரயிலில் பயணித்த அனைவரும் ஒத்தகருத்துடன் இன்று காலை (நவம்பர், 7) ரயில் மறியல் போராட்டம் செய்தோம். அதன்பிறகு, பயணிகள் பயணிக்கும் ரயிலுக்குத் இனி தடையிருக்காது என்று உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள் ரயில்வே நிலைய அதிகாரிகள்.
அடிப்படை உரிமையைக்கூட இங்கு போராடித்தான் பெறவேண்டியதாகயிருக்கு. இந்தியசுதந்திர நாட்டில், இனி போராட்டங்கள் இல்லாமல் பொழுதுகள்
விடியப்போவதில்லை என்பது மட்டும் உணரமுடிகிறது என்று சொன்னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக