யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/2/18

5-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுடன் தரையில் அமர்ந்து பாடம் கேட்ட திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலை அடுத்துள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளான பூஜா, மற்றும் வைஷ்ணவி ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்புற சூழல் குறித்து தங்களிடம் சில நல்ல திட்டங்கள் இருப்பதாகவும் அதை மாவட்ட ஆட்சியர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி கடிதம் எழுதினார்கள்.
இதை படித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அந்த மாணவிகளை அழைத்து திட்டங்களை முழுவதுமாக கேட்டறிந்தார். அவர்களின் திறமையை பாராட்டும் விதமாக தன்னுடைய ஆட்சியரின் இருக்கையில் அமர வைத்தும் அழகு பார்த்தார். அத்தோடு மட்டுமில்லாமல் இன்று அம்மாணவிகளை அழைத்து திருவண்ணாமலை வேங்கிகால் புதூரில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பூஜாவையும், வைஷ்ணவியையும் தங்களின் சுற்றுச் சூழல் குறித்த திட்டத்தை மாணவர்களுக்கு பாடம் எடுக்க சொல்லி பெருமைப்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் ஆகிய இருவரும் ஒன்றாக தரையில் அமர்ந்து கைத்தட்டி மாணவர்களின் பாடத்தை கேட்டறிந்தனர்.
பள்ளி மாணவிகள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் மாணவர்களளின் திறமைகளையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற ஆட்சியரின் இச்செயல் பாராட்டுக்குரியது என ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக