யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/2/18

தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து எதிரொலி: ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு நிதியுதவி பெறும் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் பாபு (57). இவர் மாணவரை செய்முறை ேதர்வுக்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர், தலைமை ஆசிரியரை கத்தியால் சரமாரி குத்திவிட்டார். இதில் படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியர், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் செங்கல்பட்டுக்கு வருகை தந்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்தியது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். அவர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். கத்திக்குத்துப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை ஆசிரியருக்கு மருத்துவ செலவாக ரூ.20 லட்சம் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக