யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/2/18

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு தலைவராக ஸ்ரீதர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வல்லுநர் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சாந்தா ஷீலா நயார் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்க 26.02.2016 அன்று உத்தரவிடப்பட்டது. இந்த ஆணையின்படி குழு அமைக்கப்பட்டு பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. அதன்படி 26.06.2016, 15.09.2016, 16.09.2016, 22.09.2016, 6.10.2016, 2.12.2016 மற்றும் 9.03.2017 ஆகிய நாட்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.


இந்நிலையில் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய 21.10.2016 அன்று ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து வல்லுநர் குழு அறிக்கை தயாரிக்க இருந்த நிலையில் சாந்தா ஷீலா நாயர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு அமைத்த வல்லுநர் குழு தனது பணியினை தொடர்ந்து விரைவாக அறிக்கை சமர்பிக்க ஏதுவாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.தர் வல்லுநர் குழுவின் தலைவராக தமிழக அரசு நியமித்து 3ம் தேதி (நேற்று) உத்தரவிட்டுள்ளது. இந்த குழு, அரசு அலுவலர்களின் ஓய்வூதியம் குறித்த அறிக்கையை வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக