யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/3/18

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி: மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் அதிரடிக் குறைப்பு:

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, தனது வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவிட்டால் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது.

இந்த புதிய கட்டணக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராரிக்கவேண்டும் என கடந்த ஆண்டு வங்கி அறிவித்தது. அதன்படி, மாநகரங்களில் வசிப்போரு ரூ.3 ஆயிரம், சிறு நகரங்களில் இருப்பவர்கள் ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதமும், ஜி.எஸ்.டி. வரியும் விதித்தது.

அதன்படி, ஸ்டேட் வங்கி அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்து கடந்த 8 மாதங்களில் அந்தவங்கி ரூ.1,717 கோடி அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்தது. ஆனால், ஸ்டேட் வங்கியில் ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டு லாபமே ரூ.1,581 கோடிதான். இந்த செய்தி வெளியான பின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது, ஏராளமானோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் தொடர் எதிர்ப்பு, அதிருப்தி காரணமாக குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி மாத அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.

ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கையால், ஏறக்குறைய 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குநர் பி.கே. குப்தா கூறுகையில் ‘ வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளோம். வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். எங்களின் முயற்சிகள், நடவடிக்கை அனைத்தும் வாடிக்கையாளர்களின் நலனுக்காகவே’ எனத் தெரிவித்துள்ளார். *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக