வங்கி கணக்கு, மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
*சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை சற்றுமுன் நீட்டித்தது உச்சநீதிமன்றம்.
*மார்ச் 31-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது, அடுத்த தீர்ப்பு வரும் வரை காலக்கெடுவை காலவரையின்றி நீட்டிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ஆதார் வழக்கின் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட வற்றுடன் ஆதார் எண்-ஐ இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆதார் கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக நல உதவிகளை பெறுவதற்கும் மானிய உதவி பெறுவதற்கும் மட்டுமே மத்திய அரசு ஆதார் எண்-ஐ கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக ஆதார் இணைக்க மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஆதார் வழக்கில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை ஆதார் இணைக்க அவசியமில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக