யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/5/18

10ம் வகுப்பு தேர்வு: 94.5 சதவீதம் 'பாஸ்' : கடந்த ஆண்டை விட 0.1 சதவீத தேர்ச்சி அதிகம் : கணிதம், தமிழில் குறைந்தது தேர்ச்சி

பத்து லட்சம் பேர் எழுதிய, பத்தாம் வகுப்பு தேர்வில், 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர், 96.4 சதவீதமும்; மாணவர்கள், 92.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொது தேர்வு,
மார்ச், 16 முதல், ஏப். 20 வரை நடந்தது. 7,083 மேல்நிலை பள்ளிகள், 5,253 உயர்நிலை பள்ளிகள் என, 12 ஆயிரத்து, 336 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என, 10.01 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள் நேற்று காலை, 9:30 மணிக்கு, தேர்வுத் துறையின் இணையதளத்தில் வெளியானது.மேலும், மாணவர்கள் பதிவு செய்த அலைபேசிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆகவும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 2017ஐ விட, 0.1 சதவீதம் அதிகமாக, 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், பத்தாம் வகுப்பில், அதை விட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வில் பங்கேற்ற, 4.76 லட்சம் மாணவியரில், 96.4 சதவீதம் பேரும்; 4.74 லட்சம் மாணவர்களில், 92.5 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவியர், 3.9 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.100 சதவீதம்: மொத்தமுள்ள, 12 ஆயிரத்து, 336 பள்ளிகளில், 5,584 பள்ளிகளின் மாணவ - மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5,456 அரசு பள்ளிகளில், 1,687 அரசு பள்ளிகளின் மாணவ - மாணவியர், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதியோரில், 2.06 லட்சம் பேர், 401 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றுள்ளனர். இவர்களில், 1.02 லட்சம் பேர் மாணவியர்; 1.27 லட்சம் பேர் மாணவர்கள்.பாடவாரியான தேர்ச்சியில், வினாத்தாள் கடினமாக கருதப்பட்ட கணிதத்தில், 96.18 சதவீதம் என்ற, குறைந்த தேர்ச்சி கிடைத்துள்ளது. தமிழில், 96.42 சதவீத தேர்ச்சி உள்ளது.அதிகபட்சமாக, அறிவியலில், 98.47 சதவீதம் பேர்; ஆங்கிலம், 96.50 மற்றும் சமூக அறிவியலில், 96.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,443 மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒரு மணி நேரம் கூடுதல் சலுகை பெற்று, தேர்வு எழுதினர்.அவர்களில், 88.97 சதவீதமான, 3,944 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறை கைதிகளில், 186 பேர் தேர்வு எழுதி, 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாநில, மாவட்ட அளவில் யார் முதலிடம், இரண்டாம், மூன்றாம் இடம் என்ற, 'ரேங்கிங்' முறை, இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும் வெளியிடப்படவில்லை.இதனால், மாணவர்கள் இடையே, யார் முதல் இடம் பிடிப்பது என்ற, மன அழுத்தம் நிறைந்த போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பெற்றோரும், மற்ற மாணவர்களை ஒப்பிடாமல், தங்கள் பிள்ளைகள் என்ன மதிப்பெண் என்பதை பார்த்து, அதன்படி பிளஸ், 1 படிக்க வைக்க திட்டமிட துவங்கியுள்ளதால், மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக