யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/5/18

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 30, 2015ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-2வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. 
அதன்பின் இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 21, 2016 அன்று நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நேர்காணல் 2018ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற்றது.
இருக்கும் 1094 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு முதற்கட்ட கலந்தாய்வு 19/03/2018 முதல் 03/04/2018 வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25/04/2018 அன்றும் நடைபெற்றது. இரண்டாம் கட்டக் கலந்தாய்வு முடிந்த பின்னரும் நிரப்பப்படாமல் இருக்கும் 48 பணியிடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு 29/05/2018 அன்று நடத்தப்படவுள்ளதாகத் தேர்வாணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு 1:5 என்கிற விகிதாச்சாரத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் முறையே அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனித்தனியே விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும். அழைப்புக் குறிப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.யாருக்கு அனுமதியில்லை:
முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு வருவாய் உதவியாளர் பணியிடங்களுக்கான பணி ஒதிக்கீடு ஆணைப் பெற்றவர்கள் இந்த மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே போல் முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்கள் மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்படுவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக