யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/5/18

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிக்கை....

சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  இயற்கை வளப்பாதுகாப்பு, மனித உயிர்கள் உயிர் வாழ உத்திரவாதம் ஆகியவை இந்திய அரசியல் சாசனத்தில் உத்திரவாதம் செய்யப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதே மத்திய  மாநில அரசுகளின் கடமை. இந்த அரசியல் சாசன கடமைகளை அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று கோரியே  ஸ்டெர்லைட் சூழல் கேட்டுக்கு எதிராக மக்கள் கடந்த 100 நாட்களாக போராடி வந்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கழிவுகள் வழியாக உருவாகிய மாசு பல்வேறு தரப்பு மக்களையும் பெருமளவு பாதித்தமை ஆய்வுகள் மூலம் நிரூபணம் செய்யப்பட்டவை. இந்த சூழல் மாசுபாட்டு பயரங்கரவாதத்தை எதிர்த்தே  மக்கள் போராடி அரசுகள்  ஜனநாயக கடமையை நிறைவேற்றும் படி கோரிவந்தனர்.

போராட்டத்தின் போது தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மக்களோடு இணைந்து நின்று தனது ஆதரவைத் தெரிவித்தது.. அத்தோடு மட்டுமின்றி கள ஆய்வு மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுற்றுச்சூழல் பாதிப்பையும் மக்கள் போராட்டங்களையும் கருத்தில் கொண்டு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியது..

மக்களின் போராட்டங்களையும் கருத்துகளையும்  உரிய வழிமுறையில் அணுகாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டின் மூலம் மக்களை கொன்று குவித்ததும்  தடியடி நடத்தி பலரை குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியது அறிவியலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள  மக்கள் அறிவியல் இயக்கங்கள் இச்சம்பவத்திற்கு  எதிரான கண்ட குரல்களை நாடு முழுவதும் எழுப்பி வருகின்றன... அறிவியல்பூர்வமற்ற இந்த அணுகுமுறையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

👉🏼காவல்துறை மற்றும் துணைஇராணுவம்  மூலம் அச்சுறுத்தி மக்களை  அடக்கி ஒடுக்க நினைப்பதை உடனடியாக தமிழக  அரசு கைவிட வேண்டும்...

👉🏼அரசியல் சாசனம் உத்திரவாதம் அளித்துள்ள உயிர்வாழும் உரிமை,  மாசற்ற சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளப்பாதுகாப்பு ஆகியவற்றை உத்திரவாதம் செய்ய வேண்டும்...

👉🏼உடனடியாக மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில்  காவல்படைகளை விலக்கி, நீதிபதிகள்/ சட்ட வல்லுநர்கள் கல்வியாளர்கள்  சமூக ஆர்வலர்கள்/அறிவியல் விஞ்ஞானிகள் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும்....

👉🏼ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை அரசு கைவிடுவதோடு அபாயகரமான கழிவுகளை வெளியேற்றி வரும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக