பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி பாடங்களுக்கு, தலா, இரண்டு தாள்களுக்கு நடத்தப்படும் தேர்வு, இனி, ஒரே தாளாக நடத்தப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்,ஆங்கிலம்,மொழி பாட தேர்வு,மாற்றம்,பிளஸ் 1, பிளஸ் 2 ,பொது தேர்வில்,2 தாள் முறை,ஒழிப்பு
இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், இரண்டு மொழி பாடங்களுக்கு, தலா, இரண்டு தாள்கள் மற்றும் முக்கிய பாடங்களுக்கு, நான்கு தாள்கள் என, எட்டு தாள்களுக்கு, 1978 - 79ம் ஆண்டில், தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அதன்பின், பிளஸ் 1க்கும், பொது தேர்வு நடத்த, 2017 - 18ல், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மொழி பாடங்களுக்கு தற்போதுள்ள, இரண்டு தாள்களை, வரும் கல்வி ஆண்டு முதல், ஒரே தாளாக குறைக்க வேண்டும் என, பல தரப்பிலும் கோரிக்கைகள் வந்தன.
ஒப்புதல் :
அதன்படி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் வடமாநிலங்களை போன்று,
தமிழகத்திலும், மொழி பாடங்களுக்கு, ஒரே தாளாக தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், மே, 3ல் நடந்த, உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ஒரு தாளை குறைப்பதால், மாணவர்கள், எவ்வித மன அழுத்தமும் இன்றி, மொழி பாடங்களை எளிதாக கற்று கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதால், இந்த மாற்றத்துக்கு, உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது. மொழி பாடங்களில், ஒரு தாளை குறைப்பதால், காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட பருவ தேர்வுகள், ஆயத்த மற்றும் திருப்புதல் தேர்வுகளை நடத்துவதில், 10 நாட்கள் வரை மிச்சமாகின்றன.
அரசு முடிவு :
இரண்டு தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகளை, ஒரே தாளில் இடம்பெற செய்வதால், அனைத்து பாடங்களையும், மாணவர்கள் படிப்பதில், எந்த மாற்றமும் இருக்காது. இந்த மாற்றத்துக்கு, ஆசிரியர் மற்றும் பெற்றோர் குழுக்களும் ஒப்புதல் அளித்துள்ளன.
ஜூன், 4ல், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டம், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில் நடத்தப்பட்டது. அதில், வினாத்தாளை குறைக்கும் முடிவுக்கு, அனுமதி வழங்கப்பட்டது. எனவே, இந்த கருத்துக்களை எல்லாம் பரிசீலித்து, மொழி பாடம் மற்றும் ஆங்கிலத்தை, ஒரே தாளாக குறைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான மாதிரி வினாத்தாளை வடிவமைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு, அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
அன்றே சொன்னது, 'தினமலர்' :
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், மொழி பாட தேர்வுகளை, ஒரே தாளாக குறைப்பது குறித்து, ஆலோசனை நடந்த நிலையில், திட்டம் வந்தால் என்ன பயன்; துறை ரீதியாக கிடைக்கும் பலன் குறித்து, நமது நாளிதழில், ஏப்., 25ல், விரிவான செய்தி வெளியானது. இந்த செய்தியில் கூறப்பட்ட கருத்துகள், உயர்மட்டக் குழு மற்றும் பொது கல்வி வாரிய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. அதன்படி, அதிகாரிகள், ஆலோசித்து முடிவு எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக