நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில்(MCI), இந்திய பல் மருத்துவ கவுன்சில்(DCI)
ஆகியவற்றின் அனுமதி பெற்று நடத்தப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என் மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைகள் நடந்தன. இதற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிஎஸ்இ மூலம் நீட் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நடந்தது.இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது.
இந்நிலையில் நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்றும் சிபிஎஸ்-க்கு பதிலாக தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் 2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சி.பி.எஸ்.இ நடத்தி வரும் நீட் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் 2019ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக