யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/6/18

பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் விலை எகிறியதால் அதிர்ச்சி

புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, பிளஸ் 1 புத்தகங்களின் விலை, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட, பிளஸ் 1 புத்தகங்கள், ஒரு வாரத்திற்கு முன், டிஜிட்டல் முறையில், தமிழ்நாடு பாடநுால் கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.நேற்று முதல், புத்தக விற்பனை மையங்களில், பாட புத்தகங்களின் விற்பனை துவங்கியது. சென்னையில், டி.பி.ஐ., வளாகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலக புத்தக விற்பனை மையங்களில், பிளஸ் 1 புத்தகங்களை வாங்க, கூட்டம் அலைமோதியது.அறிவித்தபடி, சிறப்பு கவுன்டர்கள் நேற்று செயல் படவில்லை; கூடுதல் கவுன்டர்களும் அமைக்கப்படவில்லை. அதனால், புத்தகங்கள் வாங்க, பெற்றோர் நீண்ட நேரம் கால் கடுக்க, வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த புத்தகங்களை விற்க, தனியார் புத்தக விற்பனை மையங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அனைத்து மாணவர்களும், பாடநுால் கழக விற்பனை மையத்திலேயே, புத்தகங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.விற்பனை மையங்களில், அனைத்து பாடங்களுக்கான புத்தகங்களும் கிடைக்கவில்லை. அதாவது, 34 வகை புத்தகங்களுக்கு, 11 வகை புத்தகங்கள் மட்டுமே, நேற்று இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. தொழிற்கல்வி புத்தகங்கள் ஒன்று கூட இல்லை. மேலும், புத்தகங்கள் ஒவ்வொன்றின் விலையும், 2017ஐ விட, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக