தமிழகத்தில் சார்பதிவாளர் உள்ளிட்ட 1,199 பணியிடங்களுக்கான குருப் 2 தேர்வு கடந்த நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வில், நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்தவர்களுக்கான 1,199 பணியிடங்களை நிரப்பும் பணியில் குரூப் 2 தேர்வு முதுநிலை தேர்வு நடைபெற்றது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 2,00,268 மையங்களில் நடைபெற்றது.
இந்த தேர்வை சுமார், 6,26,503 பேர் தேர்வெழுதினர். இவர்களில் ஆண்கள் 3,54,136 பேரும், 2,72,357 பேரும் மற்றும் 10 மூன்றாம் பாலினத்தவரும் எதிர்வு எழுதினர்.
இந்நிலையில், இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை https://www.tnpsc.gov.in/results.html என்ற இணையத்தளத்தில் காணலாம்.
முதன் முறையாக குரூப் ௨ தேர்வு முடிவுகள், தேர்வு முடிந்து ஒரே மாதத்தில் வெயிடப்பட்டுள்ளது. இதையடுத்து, குரூப் 2 பிரதான தேர்வு வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக