யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/12/18

இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களின் வருகையை பதிவு செய்ய புதிய திட்டம்...

                                     

பள்ளிகளில் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய புதிய திட்டம், சோதனை அடிப்படையில் வரும் 10ஆம் தேதி சென்னையில் அரசுப்பள்ளி ஒன்றில் அமல்படுத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில் பதிவேடு மூலமாக மாணவர்களின் வருகையை பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறைக்கு மாற்றாக, நவீன முறையில் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் பேஸ் ரீடிங் முறை, சோதனை அடிப்படையில் வரும் 10ஆம் தேதி சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல்படுத்தப்படவுள்ளது.  இந்த பள்ளியில் உள்ள ஒரே ஒரு வகுப்பறையில் மட்டும், இந்த திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் 
துவக்கி வைக்கிறார். இந்த முறையில் மாணவர்கள் ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுத்து கணிப்பொறியில் இணைத்துவிடுவர். பின்னர் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்ததும், ஆசிரியர் ஒரு புகைப்படம் எடுத்து அதனை கணிப்பொறியில் இணைத்ததும் புகைப்படங்களை சரிபார்த்து, எத்தனை பேர் வந்திருக்கிறார்கள், எத்தனை பேர் வரவில்லை என கணிப்பொறி கூறிவிடும். அத்துடன் இணையதளம் வழியாக இந்த தகவல், தலைமை ஆசிரியர் துவங்கி, உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் சென்றடையும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தை பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன மூலம் அரசு செயல்படுத்த உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டம், தமிழகத்தில் அரசு பள்ளியில், செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக