அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களையும் வகையில் தமிழக அரசு அமைத்த ஒரு நபர் குழுவின் அறிக்கை ஓரிரு நாளில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு அரசு செயலர் சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் ஏழு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்,100க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், தனி நபர்கள் என பலரும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதுவரை பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் ஆசிரியர்களே பெரும்பான்மையாக கோரிக்கை மனுக்களை அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் துறை ரீதியான மனுக்கள் என அதன் தன்மைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு பின்பு அவர்களை நேரில் அழைத்து கருத்துக்களை கேட்டது. தற்போது அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், முதலமைச்சரிடம் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஸ்ரீதர் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக