உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து ஆனதையடுத்து, மற்ற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலையும் ரத்து செய்து புதிய பட்டியலை தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அரசு பள்ளிகளில், ஆயிரத்து 325 சிறப்பாசிரியர்களை நியமனம் செய்த விவகாரத்தில், குளறுபடிகள் நிகழ்ந்ததாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஓவியம் மற்றும் தையல் பிரிவுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, வருகிற 18 ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. மதுரையைப்போல், சென்னையிலும் தீர்ப்பு வரும் பட்சத்தில், ஒட்டுமொத்த தேர்வு பட்டியலையும் ரத்து செய்துவிட்டு, புதிய தேர்வு பட்டியலை தயாரித்து வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக