யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/1/19

பிப். 20 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் வருவாய் அலுவலர்கள் பங்கேற்பு:

மாநிலத்தில் காலியான 11ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்புவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
மாநில அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வருவாய்த்துறை அலுவலர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். மாநிலத்தில் 11 ஆயிரத்து 500 பணியிடங்கள் காலியாகவுள்ளதால் கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. காலியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சம்பளம், தனி சம்பளம் வழங்க வேண்டும். துணை கலெக்டர் பட்டியலை அதிகப்படியான காலியிடங்களுடன் வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வருவாய் அலுவலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததால் பிப்., 20 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட 12 ஆயிரம் வருவாய் அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
மாநில நிர்வாகிகள் பார்த்திபன், முருகையன் கூறியதாவது: உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. துணை தாசில்தார்களுக்கு தனி சம்பளம் 500, தாசில்தார்களுக்கு 1000 ரூபாய் தொடர்ந்து வழங்க வேண்டும். இலவச வேட்டி, சேலை திட்டத்தில் நான்காண்டுகளுக்கான நிதியை ஒதுக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி ஸ்டிரைக் நடத்தப்படும். 
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் ஜன., 8, 9 நடக்கும் வேலைநிறுத்தத்திலும் சங்கத்தினர் பங்கேற்பர் என்றனர்.
-நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக