யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/1/19

இணையதளத்தை பராமரிக்காமல் அலட்சியம் விளக்கம் கேட்டு, 558 கல்லூரிகளுக்கு, 'நோட்டீஸ்'

சென்னை:ணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில், ஒரு வாரத்தில், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணிக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்தும் கல்லுாரிகள், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற வேண்டும். மேலும், அந்தந்த மாநில பல்கலைகளில், பாடத் திட்ட இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும்.தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு அந்தஸ்தில், 733 கல்லுாரிகள் செயல்படுகின்றன. 
இந்த கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் போது, சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு கல்லுாரியும், நிர்வாகம் சார்ந்த, 11 அம்சங்களை கல்லுாரி இணையதளத்தில் கட்டாயம் பதிய வேண்டும். அவற்றை உரிய நேரத்தில், புதுப்பிக்க வேண்டும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, பெரும்பாலான கல்லுாரிகள் பின்பற்றாமல், அலட்சியமாக செயல்பட்டன.
இது குறித்து, தேசிய கல்வியியல் கவுன்சிலுக்கு புகார்கள் வந்தன.அதனால், இணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. 'பல முறை அறிவுறுத்தியும், இணையதளத்தை பராமரிக்காதது ஏன் என்ற விளக்கத்தை, வரும், 11ம் தேதிக்குள், பல்கலைக்கு அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.

எந்தெந்த கல்லுாரிகள்?

*சென்னையில், லயோலா, மியாசி, முத்துக்குமரன், ராஜலட்சுமி, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின், 'நிப்மெட்' கல்லுாரிகள்; கோவையில், பிஷப் அப்பாசாமி, சி.எம்.எஸ்., ஹிந்துஸ்தான், கலைவாணி, கஸ்துாரி, பி.பி.ஜி., செயின்ட் மார்க் கல்லுாரிகள் இடம் பெற்றுள்ளன 
* கடலுார், மாதா, பிளஸ்ஸி, விருதாம்பிகை, பவானி, ஆற்காட் லுத்ரன் கல்லுாரிகள்; காஞ்சிபுரம், கிறிஸ்ட், முகமது சதக், காஞ்சி, ராஜலட்சுமி, லட்சுமி அம்மாள் கல்லுாரிகள்; மதுரை சி.எஸ்.ஐ., - கே.எஸ்.எம்., - ராயல் கல்லுாரி, அரோபிந்தோ மீரா, ஸ்டீபன், யாதவா, ஆசிபா கல்லுாரிகள்
* திருநெல்வேலி, ஸ்ரீராம் நல்லமணி யாதவ், யு.எஸ்.பி., செயின்ட் ஜான்ஸ், மகாத்மா காந்தி உட்பட, தமிழகம் முழுவதும், 558 கல்லுாரிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக