யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/16

2017ஆம் ஆண்டிற்கான 22 அரசு பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு !!

Madurai Kamaraj University B.Ed Admission 2016-18 - Merit List

Annamalai University (DDE) December 2016 Examinations. Instruction-to-candidate-December- 2016 All B.A., M.A., B.Ed ,Timetable

முகவர்கள் நியமிக்க 'டெண்டர்' கோரியது அரசு -

அங்கன்வாடிமைய குழந்தைக்கும் இனி 'ஆதார்' எண்பெறலாம்--அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இனி, 'ஆதார் ' பதிவுகளை மேற்கொள்ள வசதியாக, 
அதற்கான முகவர்களை நியமிக்க, 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது. 

இது குறித்து, தகவல் தொழில் நுட்பதுறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஆதார் அட்டை பதிவுபணிகளை, அக்., முதல், தமிழகஅரசு ஏற்றுள்ளது. அதற்கு முன் வரை, பள்ளிகளில், ஆதார் பதிவை மேற்கொண்டுவந்த மத்திய அரசு நிறுவனமான, 'பெல்' அப்பணிகளை நிறுத்தியது. அதனால், மீதமுள்ள மாணவர்களுக்கு, ஆதார் பதிவை மேற்கொள்ளும் பணிகள், சமீபத்தில் துவங்கின. இந்நிலையில், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும், ஆதார்பதிவு செய்வது பற்றிய கருத்து, முன் வைக்கப்பட்டது. அதனால், பள்ளிகளில் விடுபட்டமாணவர்களுக்கான ஆதார் பணி, அங்கன்வாடிமையங்களுடன் சேர்த்து நடத்தப்பட உள்ளது. இனி, அங்கன்வாடிமையங்களில் உள்ள, ஐந்து வயதுக்குஉட்பட்ட குழந்தைகள், புதிதாக சேரும் குழந்தைகள்என, 50 லட்சம் குழந்தைகளுக்கு, தொடர்ச்சியாகஆதார் பதிவு மேற்கொள்ளப்படும். இதற்குதகுதியுடைய, யு.ஐ.டி.ஏ.ஐ., அங்கீகாரம்பெற்ற மற்றும் ஆதார் நிறுவனத்தின்சான்று பெற்ற முகவர்களை தேர்வுசெய்ய, அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கான ஆவணத்தை, www.tnega.in என்ற இணையதளத்தில், இலவசமாகபதிவிறக்கம் செய்து, டிச., 13க்குள்முகவர்களை சமர்ப்பிக்கலாம். அதன்பின், தமிழகத்தில், பிறந்த குழந்தை முதல்அனைத்து வயதினருக்கும், ஆதார் கிடைத்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தினமும் பரீட்சை: பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு

குழந்தைகள்தின விழா மற்றும் சிறந்தநூலகர்களுக்கு விருது வழங்கும் விழாசென்னையில் நேற்று நடந்தது. இந்தவிழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர்சபீதா தலைமை தாங்கினார். விழாவில்
பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல்மற்றும் கணித பெட்டகம் (Science Kit, Maths Kit) வழங்கப்படும். மேலும், இன்றிலிருந்து அரசுமற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 1 முதல் 9ம் வகுப்புவரையில் பயிற்சித் தாள்(Work Sheet) பள்ளிகளுக்கு தினமும் இணைய தளம்மூலம் அனுப்பப்படும்.
அதன் மூலம் அந்த மாணவர்களின்கற்றல் திறன் சோதிக்கப்படும். இந்தபயிற்சித் தாளில் 10 கேள்விகள் இடம் பெறும். இந்ததிட்டம் இன்று முதல் நடைமுறைக்குவருகிறது.

தமிழகத்தில்ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 1 முதல் 8ம்வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி(All Pass) என்பது தொடரும்.

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரம் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்களுக்குநீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. கல்வியோடுநல்லொழுக்கம் பள்ளி மாணவர்களுக்கு கல்வியுடன்  நல்லொழுக்கத்தையும் கற்பிக்க
வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

அதன்படிஅனைத்து வகுப்புகளிலும் ஆசிரியர்கள் நீதிபோதனைவகுப்புகளை நடத்த வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டுள்ளது. 6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவ-மாணவிகளுக்கு நீதிபோதனைவகுப்புகள் எடுக்க ஆசிரியர்களுக்கு தனியாகபுத்தகம் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 9 மற்றும்10-ம் வகுப்புகளுக்கான நீதிபோதனை புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. மனிதநேயம், திறன்வளர்த்தல் அந்த புத்தகங்களில் பொதுஉடமை, மனதிடம், தேசிய உணர்வு, திறன்வளர்த்தல், சேவை மனப்பான்மை, உடல்நலம்பேணுதல், மனிதநேயம், சாலை விதிகளை மதித்தல், பொதுசொத்துகளை பாதுகாத்தல், கடமை உணர்வு, போதைஇல்லா வாழ்வு, புகைபிடிப்பதால் புற்றுநோய்ஆபத்து, வெற்றி தோல்விகளை சமமாகபாவித்தல், பெற்றோரை மதித்தல், மதநல்லிணக்கம், சகிப்புதன்மை, பெண்ணின் பெருமை உள்பட பல்வேறுதலைப்புகளில் விளக்கத்துடன் கூறப்பட்டுள்ளன. மேலும் 9, மற்றும் 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்குஇந்த நீதிபோதனை வகுப்புகளை எப்படி நடத்துவது என்பதுகுறித்து விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் செய்துவருகிறார்.

2017ஆம் ஆண்டிற்கான 22 அரசு பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு

CCE - WOKSHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

பணம் மாற்றுபவர்களுக்கு அடையாள மை: சக்தி காந்ததாஸ் பேட்டி

டெல்லியில்பொருளாளதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களைசந்தித்தார்.

அப்போதுஅவர் கூறியதாவது,

போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்குவருவதை தடுக்க சிறப்பு கண்காணிப்புபடை அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கருப்பு பணம்
டெபாசிட்செய்யப்படுகிறதா என்பது குறித்து வருவாய், அமலாக்கத் துறையால் கண்காணிக்கப்படும். வங்கிகளில் ஒருவரே பலமுறை பணம்எடுக்கும் முயற்சியை தடுக்க விரலில் மைவைக்கப்படும். இணையதளம் மூலமான வங்கி பரிவர்த்தனைகளைபிரபலப்படுத்தும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

மத்தியகூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாகவங்கிகளுக்கு சரியான அளவில் ரொக்கப்பணம் அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ரூபாய் நோட்டு பற்றாக்குறை என்றுசமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள்நம்ப வேண்டாம்.

அனைத்துவகை பண பரிவர்த்தனைகளும் மிகவும்உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜன்தன் கணக்குகளில் 50 ஆயிரம்ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால்ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

வங்கிகளில்பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைதவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்குறித்து ஆலோசித்து வருகிறோம். மத்திய அரசின் நடவடிக்கைக்குஎதிராக சில மக்கள் விரோதசக்திகள் குழப்பதை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.


அத்தியாவசியபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்கிற தகவலில் துளிஅளவு கூட உண்மையில்லை. நாட்டில்போதுமான அளவு உப்பு இருப்புஉள்ளது. பொதுமக்கள் வீண் வதந்தியை நம்பவேண்டாம். இவ்வாறு கூறினார்.

டெபாசிட் செய்யும் பணத்திற்கான வரியும்.. அபராதமும்... முழுவிவரம்

பழைய500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துக்கட்டும் மத்திய அரசின் திட்டப்படி, மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில்முழுமையாக டெபாசிட் செய்யலாம். ஆனால், இரண்டரை லட்சத்திற்குமேல் டெபாசிட் செய்யும் போது, அதற்கான வருவாய்ஆதாரங்களையும்
தயாராக வைத்திருக்க வேண்டும். வருமான வரித்துறை ஆய்வின் போது, டெபாசிட்செய்த தொகைக்கு பொருத்தமான வருவாய் ஆதாரங்களை காண்பிக்கதவறினால், வருமான வரியுடன் 200 சதவிகிதஅபராதத்தையும் செலுத்த நேரிடும்.
அதன்படிவங்கிகளில் செலுத்தும் பணத்திற்கான அபராதம் என்ன என்பதைவிரிவாகப் பார்க்கலாம்.
இரண்டரைலட்ச ரூபாய் வரை டெபாசிட்செய்தால் அதற்கு வரியோ, அபராதமோகிடையாது.
5 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 25 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 15 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
10 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு லட்சத்து 25 ஆயிரம்ரூபாய் வருமான வரியுடன், 2 லட்சத்து50 ஆயிரம் ரூபாய் அபராதமும் சேர்த்து3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 37.5 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
15 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 55 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
20 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 64 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
30 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து 21 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 73 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
50 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 27 லட்ச ரூபாய் அபராதமும்சேர்த்து 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 81 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.

ஒரு கோடி ரூபாய் டெபாசிட்செய்தால் 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 56 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து 84 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 85 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.

29 மாணவர்களுக்கு ஜெ., நிதியுதவி

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவ, மாணவியர், தங்களின் படிப்புக்கு நிதியுதவி வழங்கும்படி, முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலனை செய்த ஜெயலலிதா, 'புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட்' மூலம், கல்வி நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி, 29 மாணவ, மாணவியருக்கு, 21.11 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கட்சி அலுவலகத்தில், அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், நேற்று வழங்கினார்.

தூய்மை இந்தியா திட்டத்தில் பழநி பள்ளி தேர்வு

பழநி: தமிழக அரசு பள்ளிகளுக்கான துாய்மை இந்தியா போட்டியில் மாநில அளவில் வென்ற பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தேசிய போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் துாய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளை ஊக்கப்படுத்சிறந்த துாய்மையான நகர், புறநகர் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் பள்ளியின் குடிநீர், கழிப்பறை வசதி, சுகாதாரம் உள்ளிட்டவை சிறப்பாக உள்ளதா என சிறப்பு குழுவினர் ஆய்வுசெய்தனர். இதில் தமிழகத்தில் மொத்தம் 5 பள்ளிகள் மாநில அளவில் தேர்வாகின. அதில் பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியும் ஒன்று.தலைமையாசிரியர் பழனிச்சாமி கூறியதாவது: மாவட்ட அளவிலான தேர்வுக்கு பள்ளியில் செய்துள்ள வசதிகள் குறித்து வீடியோ ஆதாரத்துடன் விண்ணப்பித்தோம். அதில் தேர்வாகியதால், அக்.,27ல் மாநில ஒருங்கிணைப்பாளரான பொதுப்பணித்துறை பொறியாளர் மணிமேகலை மூலம் ஆய்வு செய்தனர். பள்ளியை நன்றாக வைத்துள்ளதாக பாராட்டி ரூ.5 ஆயிரம் பரிசு தந்தனர்.
அவர்களது அறிக்கையை தொடர்ந்து மேல்நிலைப் பள்ளிகளில் நகர்ப்பகுதியில் மாநில அளவில் எங்கள் பள்ளி தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மத்திய மனிதவளதுறை தேசியக்குழுவினர் விரைவில் பள்ளியில் திடீர் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதில் வென்றால் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு, சான்றிதழ் கிடைக்கும்,” என்றார்.

கூட்டுறவு வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., 'அட்வைஸ்'

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், வாடிக்கையாளர்கள், 24 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதிக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 24ம் தேதி வரை, வாடிக்கையாளர்கள், அவர்களது கணக்கில் இருந்து, 24 ஆயிரம் ரூபாய் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
எனினும், பழைய செல்லாத, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, வாடிக்கையாளர்கள் கணக்கில் அனுமதிக்கக் கூடாது. அந்த செல்லாத நோட்டுகளை பெற்று, புதிய நோட்டுகளை தரக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி; SSA ’விறுவிறு’

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின், ஊட்டி வட்டார வள மையம் சார்பில், தொடக்க, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களின் கையெழுத்து மற்றும் ஓவியத் திறமை யை மேம்படுத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது; மாவட்டத்தில் உள்ள, 14 மையங்களில் நடந்த பயிற்சியில், 95 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

புத்தகத்தில் உள்ள பாடங்களை, மாணவர்கள், ஆர்வத்துடன் புரிந்து படிக்க வகை செய்யும் வகையில், பொம்மலாட்டம் மற்றும் கதை கூறுதல் மூலம், கற்பிப்பது தொடர்பான பயிற்சி, மாவட்டத்தில் உள்ள, எட்டு மையங்களில் வழங்கப்பட்டது; 94 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

ஊட்டி சி.எஸ்.ஐ., சி.எம்.எம்., பள்ளியில், ’உள்ளூர் வளங்களை பயன்படுத்தி, அறிவியல் பாடங்களை கற்பித்தல்’ என்ற தலைப்பில் வழங்கப்பட்ட பயிற்சியில், 181 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பள்ளி மற்றும் தங்கள் பகுதி யை சுற்றி, எளிதாக கிடைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தி, அப்பொருட்களை கற்பித்தலுடன் இணைத்து, கல்வி போதிப்பது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது; அனைத்து தொடக்க கல்வி ஆசிரியர்களும் பங்கேற்றனர். 

எந்த ஏடிஎம்களில் பணம் உள்ளது..? இந்த வெப்சைட் மூலம் அறியலாம் Atm

ரூ 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் பணத்தை எடுக்க ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு வருவதால் மக்கள் ஏமாற்றதுடன் திரும்புகின்றனர். இந்த சிரமத்தை நீக்கவும் பொதுமக்கள் வசதிக்காகவும் எந்தெந்த இடங்களில் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வெப்சைட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்க, கடந்த 10 மாதங்களாக ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு கடந்த 8- ஆம் தேதி பிரதமர்மோடி, 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதை தொடர்ந்து நாட்டில் பல பகுதிகளில் மக்கள் பணத்தை மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எந்தெந்த இடங்களில் எந்தெந்த வங்கி ஏடிஎம்கள் செயல்பாட்டிலுள்ளது என்பதை துல்லியமாக காட்ட http://atmkaro.in/ என்ற வெப்சைட் வடிவமைக்கபட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு எழுதிய மாணவர்கள்...தவிப்பு:பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு

தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தவிக்கின்றனர். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது. 


இத்தேர்வை எழுத 7 ம் வகுப்பில் எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள், மற்றவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 8 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தலா ரூ.6 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை வழங்குவதற்காக மாணவர்களிடம் வங்கி சேமிப்பு கணக்கு எண் பெறப்பட்டது. 

சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தவிக்கின்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலையும், அவர்களது சேமிப்பு கணக்கு எண்ணையும் அனுப்பி விடுவோம். அவர்கள் நேரடியாக மாணவர்கள் கணக்கில் உதவித்தொகைக்குரிய பணத்தை செலுத்திவிடுவர். உதவித்தொகை வராதது குறித்து எங்களுக்கு தெரியாது, என்றார்.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் தினமும் பரீட்சை: பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு

குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:  


பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல் மற்றும் கணித பெட்டகம் (Science Kit, Maths Kit) வழங்கப்படும்.  மேலும், இன்றிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 1 முதல் 9ம் வகுப்பு வரையில் பயிற்சித் தாள்(Work Sheet) பள்ளிகளுக்கு தினமும் இணைய தளம் மூலம் அனுப்பப்படும்.

அதன் மூலம் அந்த மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்படும். இந்த பயிற்சித் தாளில் 10 கேள்விகள் இடம் பெறும். இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 

தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி(All Pass) என்பது தொடரும். 

டெட்' தேர்வுக்கு புது வினாத்தாள் பல்கலைகளை ஈடுபடுத்த திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், பி.எட்., கல்லுாரிகள் மூலம் புதிய வினாத்தாள் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு, 2013க்கு பின் நடக்கவில்லை. தேர்வுக்கு பின், தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டு வந்ததும், சாதி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் சிக்கலை ஏற்படுத்தியது.
தேர்வு எழுதியோர், உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், மூன்று ஆண்டுகளாக, 'டெட்' தேர்வு நடத்தப்படவில்லை.இந்நிலையில், 'டெட்' தேர்வு வழக்கு, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.
தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும், 'வெயிட்டேஜ்' முறை செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் விரைவில், 'டெட்' தேர்வை, எவ்வித குழப்பமுமின்றி நடத்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல் மற்றும் மாணவர்களுக்கு அவற்றை சரளமாக பேச சொல்லித் தருவதில் சிக்கல் உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, இந்த சிக்கல் இருக்கக் கூடாது; தனியார் பள்ளி ஆசிரியர்கள் போல் இருக்க வேண்டும் என, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய தரமான வினாத்தாள் தயாரிப்புக்காக, பி.எட்., கல்லுாரிகள் மற்றும் பல்கலை மூலம் கமிட்டி அமைக்க, கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. 

2000 ரூபாய் நோட்டை பிச்சைகாரன் கூட வாங்கமாட்டான்! பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு

2000 ரூபாய் நோட்டை பிச்சைகாரன் கூட வாங்கமாட்டான்! பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு



பிரதமர் நரேந்திர மோடி மக்களை பிச்சைகாரர்களாக ஆக்கிவிட்டார் என்றும் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பிச்சைகாரன் கூட வாங்கமாட்டான் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது, கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் இரவோடு இரவாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்ததிலிருந்தே மக்கள் சில்லறைக்காக பிச்சைகாரர்கள் போல அலைந்து வருகிறார்கள்
தற்போது வெளியாகியிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் சாயம் வெளுத்து போன மாதிரி இருக்கிறது.

இந்த நோட்டை மடித்து பாக்கெட்டில் நான்கு முறை வைத்தால் கிழிந்துவிடும்
மேலும், இந்த நோட்டுகளை பிச்சைக்காரனிடம் போட்டால் கூட அதை அவன் வாங்க மாட்டான் என அவர் கூறியுள்ளார்.


இவரின் இந்த பேச்சானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது8.

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தண்ணி தொட்டு தேய்த்தால் சாயம் போகிறது பகிர் தகவல் : டி.வி. சேனலில்

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தண்ணி தொட்டு தேய்த்தால் சாயம் போகிறது பகிர் தகவல் : டி.வி. சேனலில்



பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். 
மேலும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என கூறினார்.

இதையடுத்து பொதுமக்கள் கடந்த 10–ந் தேதி முதல் வங்கிகளின் முன் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்துநின்று புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கினர்.

அவர்கள் மகிழ்ச்சியாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர்.
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பல சிறப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்தநிலையில் நேற்று பிரபல தனியார் மராத்தி டி.வி. செய்தி சேனல் ஒன்றில் புதிய 2 ஆயிரம் நோட்டில் சாயம் போவதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது.

அந்த செய்தியில், ஒருவர் ஈரமான வெள்ளை துணியை வைத்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தேய்க்கிறார்.

அப்போது, அந்த நோட்டில் உள்ள ‘பிங்க்’ கலர் துணியில் படிகிறது. தனியார் டி.வி. சேனலில் வெளியான இந்த செய்தியால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செய்தியை பார்த்த பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் ஈரத்துணியை தொட்டு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டில் சாயம் போகிறதா? என சோதனை செய்துபார்த்தனர்.

அப்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் சாயம் போவதாக மும்பையை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தெரிவித்தார்.