யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/16

டெபாசிட் செய்யும் பணத்திற்கான வரியும்.. அபராதமும்... முழுவிவரம்

பழைய500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துக்கட்டும் மத்திய அரசின் திட்டப்படி, மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில்முழுமையாக டெபாசிட் செய்யலாம். ஆனால், இரண்டரை லட்சத்திற்குமேல் டெபாசிட் செய்யும் போது, அதற்கான வருவாய்ஆதாரங்களையும்
தயாராக வைத்திருக்க வேண்டும். வருமான வரித்துறை ஆய்வின் போது, டெபாசிட்செய்த தொகைக்கு பொருத்தமான வருவாய் ஆதாரங்களை காண்பிக்கதவறினால், வருமான வரியுடன் 200 சதவிகிதஅபராதத்தையும் செலுத்த நேரிடும்.
அதன்படிவங்கிகளில் செலுத்தும் பணத்திற்கான அபராதம் என்ன என்பதைவிரிவாகப் பார்க்கலாம்.
இரண்டரைலட்ச ரூபாய் வரை டெபாசிட்செய்தால் அதற்கு வரியோ, அபராதமோகிடையாது.
5 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 25 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 15 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
10 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு லட்சத்து 25 ஆயிரம்ரூபாய் வருமான வரியுடன், 2 லட்சத்து50 ஆயிரம் ரூபாய் அபராதமும் சேர்த்து3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 37.5 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
15 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 55 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
20 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 64 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
30 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து 21 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 73 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
50 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 27 லட்ச ரூபாய் அபராதமும்சேர்த்து 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 81 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.

ஒரு கோடி ரூபாய் டெபாசிட்செய்தால் 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 56 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து 84 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 85 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக