யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/16

பிளஸ் 2வில் சாதிக்கலாம்; ஆசிரியர்கள் ‘டிப்ஸ்’

தினமலர்’ நாளிதழ் சார்பில், ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, அவிநாசி, சந்திர மஹாலில் நேற்றுநடைபெற்றது. பத்தாம் வகுப்பு, பிளஸ்
2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிநேற்று நடந்தது. நேற்று மதியம், பிளஸ்அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்குஆசிரியர்கள், ‘டிப்ஸ்’ வழங்கினர்.




அமிர்தம்(தமிழ்): தமிழில் நிறைய பேருக்கு‘சென்டம்’ தவறுவதுக்கு காரணம், எழுத்து பிழையே. பெருவினாக்களுக்கு விடையளிக்கும் போது, இரண்டு பத்திகளாகபிரித்து எழுதுங்கள்; திருத்தும் ஆசிரியர்களுக்கு எளிதாக இருக்கும். அனைத்துபாடங்களிலும், ஐந்து மதிப்பெண் வினாக்களைமுழுமையாக படித்து வைத்திருக்க வேண்டும். எளிமையாக இருக்க கூடிய பகுதிகளை, முதலில் தேர்ந்தெடுத்து படியுங்கள்.

ஆங்கிலம்இரண்டாம் தாளை, எளிதாக கருதவேண்டாம். இரண்டாம் தாள், ‘கிரியேடிவிட்டி’யானது; யோசிக்க வைக்கும். தெரிந்த கட்டுரைகளை முதலில்எழுத வேண்டும். கட்டுரை சுருக்கும் பகுதியில், ‘ரப் டிராப்ட்’ பகுதியை அடித்தால் மட்டுமே, அதற்கு முழு மதிப்பெண் கிடைக்கும். ஆங்கில தேர்வில் பலரும் ‘கேப்ஸ்’, ‘ஸ்மால்’ எழுத்துக்களை மாற்றியெழுதி, தவறு செய்யக்கூடாது.

மரகதவித்யா(கணிதம்): கணிதத்தில் நீங்கள் சென்டம் பெறுவதைஉறுதி செய்வது, ஒரு மதிப்பெண் வினா; இதில் தவறு செய்தால், அதிகளவில்மதிப்பெண்ணை இழக்க நேரிடும். புத்தகத்தில்உள்ள அனைத்து ஒரு மதிப்பெண்வினாக்களையும் படிக்க வேண்டும். ஒருநாளைக்கு, 20 ஒரு மதிப்பெண் வினாவைபடிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள்.

இரண்டாவதுபகுதியிலிருந்து இரண்டு பத்து மதிப்பெண்வினா, கட்டாயம் இடம் பெறும். மனப்பாடம்செய்வது, கணக்கு தேர்வில் பலன்தராது; கணக்கை திரும்பத் திரும்பபோட்டு பார்த்து, பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ‘பார்முலா’ தெரிந்தால், அந்த வினாவை முதலில்எழுதி முடித்துவிடுங்கள். சரியான பயிற்சி இருந்தால், கணிதத்தில் ‘சென்டம்’ வாங்கலாம்.

மாலா (வணிகவியல், அக்கவுன்டன்ஸி): ‘ப்ளூபிரின்ட்’டை முழுமையாக படித்து, எந்த பகுதியில் இருந்து எத்தகைய கேள்விகேட்கப்படும்; எத்தனை மதிப்பெண்ணுக்கு பதிலளிக்கமுடியும் என்பதை தெரிந்து கொண்டுஅதற்கேற்ப தயாராக வேண்டும்.

வணிகவியலில்அதிகமாக எழுத வேண்டியிருக்கும்; எனவே, நேர மேலாண்மையை பின்பற்ற வேண்டியது அவசியம். வினாத்தாளை படித்த முடித்த பின்விரைவாக எழுத துவங்குங்கள்; ஒருமதிப்பெண் வினாவில், நேரத்தை வீணடிக்க வேண்டாம். கட்டுரை வினாவை அழகு படுத்தவேண்டியது அவசியம்.

அக்கவுன்டன்ஸியில், தெரியாத கணக்கை போட்டு குழப்பவேண்டாம். ஒரு கணக்கை துவங்கி‘டேலி’யாகவில்லையேனில், அதனை விட்டுவிட்டு அடுத்ததற்குசெல்லுங்கள். ஏதேனும் ஒரு இடத்தில்தவறு செய்து விட்டால், அதனைபென்சிலில் அடித்து விடுங்கள். ‘ஓவர்ரைட்டிங்’ செய்து, உங்களுக்கான மதிப்பெண்ணைகுறைத்து விடாதீர். 15 நிமிடம் முன்பாக தேர்வைமுடித்து விட்டு, கணக்குகளில் கூட்டல், கழித்தல் சரியாக முடித்துள்ளோமா எனசரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ராஜேஸ்வரி(இயற்பியல்): இயற்பியல் பாடம் இரண்டு மற்றும்ஏழில் இருந்து, பத்து மதிப்பெண் வினாகேட்கப்படாமாட்டாது. அவற்றில் இருந்து பிற வினாக்களைபடித்தால் மட்டும் போதும். ஒன்று, நான்கு, ஆறு மற்றும் எட்டுபகுதியில் இருந்து, அதிக கேள்விகள் கேட்கப்படும்.

மூன்றுமதிப்பெண் வினாக்களை எழுதும் போது கவனம்தேவை. ‘பார்முலா’, சமன்பாடு எழுத வேண்டியிருப்பின் தவறாமல்எழுத வேண்டும். ஒரு கேள்வி அல்லதுகணக்கு முழுமையாக எழுத தெரிந்தால், வேகமாகஎழுதுங்கள். தெரியாதவற்றை வைத்துக் கொண்டு நேரத்தை வீணாடிக்கவேண்டாம்.

சங்கீதா(பொருளியல்): பொருளியலில் வரிக்குவரி படித்தால், ஒரு மதிப்பெண் வினாக்களில்முழு மதிப்பெண் பெற முடியும். ஒவ்வொருபத்தியில் இருந்து, முக்கிய குறிப்புகளை தனியேதொகுத்து அதனை படியுங்கள். ஒன்றுமுதல் ஏழு வரையிலான பகுதியில்இருந்து கட்டாயம் மூன்று மதிப்பெண் வினாஅதிகளவில் வரும். மூன்று மணிநேரத்தில், 20 மதிப்பெண் விடை எழுத மட்டும்ஒரு மணி நேரம் வேண்டும்.

புத்தகத்தில்உள்ள படங்களை அடிக்கடி வரைந்துபாருங்கள். நேரத்தை பொறுத்து, படம்வரை வேண்டிய கேள்விகளை தேர்வுசெய்யுங்கள். குறைந்த நேரத்தை படத்தைஅழக வரைந்து விடை எழுதமுடியும் என தெரிந்தால் தேர்வுசெய்து எழுத துவங்குங்கள். ‘பார்முலா’வுக்கு தனி பாக்ஸ்போடுங்கள்.

தேவவிரதன்(கம்ப்யூட்டர் சயின்ஸ்): கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ‘சென்டம்’ பெற வேண்டுமெனில், 75 ஒரு மதிப்பெண் வினாவைமுழுமையாத எழுத, பயிற்சி எடுக்கவேண்டும். 76, முதல், 100 வரையிலான, 25 கேள்விகளில், 20 கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதினால்போதுமானது. 100 முதல், 110 வரையிலான, பத்து கேள்விகளில், ஏழுமட்டுமே எழுத வேண்டும்.

புத்தகத்தையேமுழுமையாக படிக்க வேண்டும். கேட்டகேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்கவேண்டும். உங்களுக்கு தெரியும் என்பதற்காக, அதிகமாக எழுதி, விடைத்தாள்திருத்துவோரின் நேரத்தை வீணாடிக்க வேண்டாம். ஓ.எம்.ஆர்., ஷீட்டில், துவக்கத்தில் என்ன ‘ஷேடிங்’ கொடுக்கிறோமோ, கடைசி வரை, அதையே பின்பற்றவேண்டும்.

சித்ராதேவி, (தாவரவியல்): தாவரவியல் - விலங்கியல் என்று குழப்பி கொள்ளக்கூடாது. பலரும், பதிலை மாற்றி எழுதிவைத்து விடுகின்றனர். தாவரவியல் புத்தகத்தில் பகுதி இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஆறு ஆகியவற்றைமுழுமையாக படித்தால், 60 மதிப்பெண் பெற முடியும். புத்தகத்தில்உள்ள படங்களை வரைந்தால் போதும்; கைடில் உள்ள படங்களை, மாறுபட்டிருக்கவாய்ப்புண்டு.

அழகு பார்த்து தான் வரைய வேண்டும்என்றில்லை. தாவரவியலில் ‘கீ வேர்டு’ முக்கியம். சென்டம்’ எண்ணிக்கையை குறைக்க, நான்கு ஒரு மதிப்பெண்வினா, புத்தகத்துக்கு உள்ளிருந்து கேட்கப்படும். தெரியாத வினாவை முதலில்பார்த்து, நம்பிக்கை இழக்க வேண்டாம்.

முருகானந்தம், (வேதியியல்): கனிம வேதியியல், இயற்வேதியியல்என, தலைப்புகளை தேர்வு செய்து, எளிதானதைமுதலில் படிக்க வேண்டும். எந்தபகுதியில் இருந்து அதிக வினாக்கள்கேட்கப்படும் என்பதை தெரிந்திருப்பது அவசியம். இப்போது, இருந்து படிக்க துவங்கினாலே, 180 மதிப்பெண்களை பெறலாம்.


கட்டாயவினாக்களை, தவிர்க்காமல் எழுத வேண்டும். வேதியியலில்சமன்பாடு அதிகளவில் இருப்பதால், ஒரு தடவை படித்ததைவிட, பலமுறை எழுதி பார்த்தால்மட்டுமே நினைவில் இருக்கும். பத்து மதிப்பெண், ஒருமதிப்பெண் வினாவில் கூடுதல் கவனம் செலு<த்தினால், நல்ல மதிப்பெண் பெறமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக