யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/16

முகவர்கள் நியமிக்க 'டெண்டர்' கோரியது அரசு -

அங்கன்வாடிமைய குழந்தைக்கும் இனி 'ஆதார்' எண்பெறலாம்--அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இனி, 'ஆதார் ' பதிவுகளை மேற்கொள்ள வசதியாக, 
அதற்கான முகவர்களை நியமிக்க, 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது. 

இது குறித்து, தகவல் தொழில் நுட்பதுறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஆதார் அட்டை பதிவுபணிகளை, அக்., முதல், தமிழகஅரசு ஏற்றுள்ளது. அதற்கு முன் வரை, பள்ளிகளில், ஆதார் பதிவை மேற்கொண்டுவந்த மத்திய அரசு நிறுவனமான, 'பெல்' அப்பணிகளை நிறுத்தியது. அதனால், மீதமுள்ள மாணவர்களுக்கு, ஆதார் பதிவை மேற்கொள்ளும் பணிகள், சமீபத்தில் துவங்கின. இந்நிலையில், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும், ஆதார்பதிவு செய்வது பற்றிய கருத்து, முன் வைக்கப்பட்டது. அதனால், பள்ளிகளில் விடுபட்டமாணவர்களுக்கான ஆதார் பணி, அங்கன்வாடிமையங்களுடன் சேர்த்து நடத்தப்பட உள்ளது. இனி, அங்கன்வாடிமையங்களில் உள்ள, ஐந்து வயதுக்குஉட்பட்ட குழந்தைகள், புதிதாக சேரும் குழந்தைகள்என, 50 லட்சம் குழந்தைகளுக்கு, தொடர்ச்சியாகஆதார் பதிவு மேற்கொள்ளப்படும். இதற்குதகுதியுடைய, யு.ஐ.டி.ஏ.ஐ., அங்கீகாரம்பெற்ற மற்றும் ஆதார் நிறுவனத்தின்சான்று பெற்ற முகவர்களை தேர்வுசெய்ய, அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கான ஆவணத்தை, www.tnega.in என்ற இணையதளத்தில், இலவசமாகபதிவிறக்கம் செய்து, டிச., 13க்குள்முகவர்களை சமர்ப்பிக்கலாம். அதன்பின், தமிழகத்தில், பிறந்த குழந்தை முதல்அனைத்து வயதினருக்கும், ஆதார் கிடைத்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக