யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/9/16

பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவிகள் மூலம் வருகை பதிவு முறை அறிமுகம்.

பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகளை கொண்டு வருகை பதிவுமுறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
« சேலம் மாவட்டம், கருமந்துறையில் உள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிக்கு ரூ.3 கோடி செலவில் தனியே விடுதிக் கட்டிடம், வேலூர் மாவட்டத்தில், ஜவ்வாது மலையில் உள்ள புதூர் நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடி செலவில் மாணவியர் விடுதி கட்டப்படுகிறது.

« பழங்குடியினர் நல 306 உண்டி உறைவிடப் பள்ளிகள், 42 பழங்குடியினர் விடுதிகள், 2 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் ஆகியவற்றில் மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகைப் பதிவேடு கையாள்வதில் தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி புதிய தொழில்நுட்ப உத்தியின் அடிப்படையில் பயோ மெட்ரிக் கருவிகளைக் கொண்டு வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இத்திட்டம் ரூ.1 கோடியே 54 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

« பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், ரூ.1 கோடியே 29 லட்சம் செலவில், 25 பள்ளிகளில் ஓர் அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:

தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள்
EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
ஆண், பெண் இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான
 EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)
🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .
🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும் அதை ஓய்வுபெறும் போது  ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.
இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.
🍁 எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.
🍁மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள், மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)
🍁 ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.
🍁 அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.
மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள்.
 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)
🍁ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.
🍁ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ,
ECS ஆகும்தேதியோ அடுத்த முறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.
🍁EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும் பின்னர் முன் தேதியிட்டு DAஉயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன் தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.
🍁பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

🍁அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.
180 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது.

பள்ளிகளில் 2072 ஆசிரியர் பணியிடங்கள்

பள்ளிகளில் ஆசிரியர் பணி மற்றும் அலுவலக பணிகளுக்கு 2072 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:–

மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
உதவி ஆணையர், பிரின்சிபால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் போன்ற பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்து 72 பணி யிடங்கள் நிரப்பப்படுகிறது.பணி வாரியாக அசிஸ்டன்ட் கமிஷனர் பணிக்கு 2 பேரும், பிரின்சிபால் பணிக்கு 40 பேரும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 880 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 660பேரும், பட்டதாரி ஆசிரியர் (மூன்றாம் மொழிகள்) 255 பேரும், மிஸ்க் கேட்டகரி டீச்சர் பணிக்கு 235 பேரும்தேர்வு செய்யப்படுகிறார்கள்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு: உதவி ஆணையர் மற்றும் பிரின்சிபால் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும், முதுலை ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், இதர பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 31–7–2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுஅனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி: முதுநிலை அறிவியல் மற்றும் கலைப்படிப்புகளுடன், பி.எட். படித்தவர்கள், இளநிலை பட்டிப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.தேர்வு செய்யும் முறை:எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: உதவி ஆணையர் மற்றும் பிரின்சிபால் பணி விண்ணப்பதாரர்கள் ரூ.1500–ம், இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.1000–ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9–10–2016 வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். 14–10–2016–ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த உத் தேசிக்கப்பட்டு உள்ளது. இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து பிற்கால உபயோகத்திற்காக வைத்துக் கொள்ளவும்.

இது பற்றிய விவரங்களை   www.nvs-hq.org/ www.mecbsegov.in  ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

RMSA Training 10 Days Training 1st Schedule

*RMSA Training*
10 Days Training[1st Schedule - 5 Days -Tentative Schedule]
*for 9th and 10th handling teachers
*This is Tentative Schedule Only.
*4.10.16 முதல்08.10.16  வரை அறிவியல்.
*13.,14..,15.,17.,18-10-2016  ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல்
*19.20,21,22 & 24 -10-16 கணிதம்

19/9/16

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு: பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.

அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை, ஆதார் எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில பல்கலை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில், டில்லியில் நடந்தது.
இதில், தமிழகம் உட்பட அனைத்து மாநில பல்கலைகளுக்கும், மத்திய அரசு கட்டாய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், மாணவர்களின் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை, மத்திய அரசின், 'தேசிய அகாடமிக் டெபாசிட்டரி' அமைப்பின், இணையதளத்தில், பதிய வேண்டும். மாணவர்களின் ஆதார் எண்ணும் அதில் இடம்பெற வேண்டும். சான்றிதழ்களிலும், ஆதார் எண்ணை குறிப்பிட முயற்சிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே, ஒருங்கிணைந்த பதிவு எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், டிஜிட்டல் சான்றிதழ் பெறலாம்.இந்த முயற்சியால், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், போட்டி தேர்வு நடத்தும் அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வுவிண்ணப்பங்கள் வரவேற்பு

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெறவிரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில், காஞ்சி வளாகத்தில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இங்கு, 2016ம் ஆண்டிற்கான, மத்திய தேர்வாணையக் குழுவின், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், முதன்மைத் தேர்வு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள், மூன்று வேலை நாட்களில் வழங்கப்படும்.இப்பயிற்சி மையத்தில் படித்தவர்களும், தனியே தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்களும் என, மொத்தம் 225 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவர்.பயிற்சிக் காலத்தில், கட்டணமில்லா விடுதி வசதி உண்டு; மாதம், 3,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும்.

80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி

51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.தமிழகத்தில் 80 அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 51 கல்லுாரிகளில் முதல்வர் இல்லாததால், பொறுப்பு முதல்வர்கள் உள்ளனர். 
இவர்களால் கொள்கை முடிவுகளை எடுக்க முடிவதில்லை. காலியிடங்கள் அதிகரித்து வருவதால் நிர்வாக பணிகளில் மட்டுமின்றி மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த உதவிகள் பெறுவதிலும் தொய்வு நிலை நீடிக்கிறது.புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் வெளிநாட்டு பல்கலை, ஆசிரியர்களை அனுமதிக்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காரைக்குடி அழகப்பா அரசு கலைகல்லுாரியில் அனைத்து கல்லுாரி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் லோகநாதன், பொது செயலாளர் சிவராமன் கூறியதாவது: முதல்வர் காலிப்பணியிடத்தால் கொள்கை முடிவுகள் எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர், துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் காலியிடங்கள் உள்ளன. 10 ஆண்டுக்கு முன்பு அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு நியமிக்கப்படவில்லை.

மாணவர்களே வகுப்பறை, வளாகங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.1998-ல் பணி உயர்வு பெற்றோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தற்போது 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணி மூப்பை எதிர்நோக்கியுள்ளனர். பணிமூப்பு பட்டியல் வெளியிடாததால், துறை தலைவர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்படுகிறது. 3200-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கல்லுாரிகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி வரன்முறை படுத்த வேண்டும், என்றனர்.

பொது தேர்வில் கணினி விடைத்தாள்: தேர்வு துறை திட்டம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விடை திருத்தும் நாட்கள் குறையும் என,எதிர்பார்க்கப்படுகிறது. 
அரசு தேர்வுத்துறை சார்பில்,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுகள்நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும், மார்ச் மாதம் நடைபெறும் இந்தத் தேர்வுகளில், இரண்டு வகுப்புகளிலும்சேர்த்து, 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்; இவர்களின் விடைத்தாள்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிஆசிரியர்களால் திருத்தப்படுகின்றன.இந்தத் தேர்வில், கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும்,'பார் கோடு' உடைய விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன; மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்து குறியிட வேண்டும்.இந்த விடைத்தாள்கள், கணினி முறையில் திருத்தம் செய்யப்படுகின்றன; அதனால், வினாத்தாளை சரியாக திருத்தம் செய்யவில்லை என்ற பிரச்னை எழாது. மேலும், விடைத்தாளை திருத்த ஆசிரியர்களும் தேவையில்லை; அதிக நேர விரயமும் இருக்காது.

இந்த முறையை, அனைத்து பாடங்களுக்கும் அமல்படுத்துவது குறித்து, அரசு தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. அதன்படி, 2017 மார்ச்சில் நடைபெற உள்ள, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் கொள்குறி வகை வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும், இந்த திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

விரிவுரையாளர் வினாத்தாள் 'அவுட்' தேனி பெண் சிக்கினார்

ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு மதுரையில் நடந்த தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் கேள்விகளை அனுப்பிய தேனி பெண் பிடிபட்டார்.ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், மதுரையில் ஒன்பது மையங்களில், இந்த தேர்வு நேற்று நடந்தது. தனியார் பள்ளி ஒன்றில் தேனியை சேர்ந்த ராகப்பிரியா, ஆங்கில பாடத் தேர்வு எழுதினார்.அரை மணி நேரம் கடந்த நிலையில், சட்டைக்குள் வைத்திருந்த அலைபேசியை எடுத்த போது பிடிபட்டார். 
இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர் விசாரித்தார்.அப்போது, ராகப்பிரியா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்; அவரது அலைபேசியில் உள்ள தகவல்களை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த போது, வினாத்தாள் பக்கங்களை புகைப்படம் எடுத்து 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பியது தெரிந்தது.விசாரணை நடத்திய போதே, வினாக்காளுக்கான விடை 'வாட்ஸ் ஆப்'பில் வந்ததை கண்டு, கண்காணிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, கல்வி ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் குப்புசாமி, தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தலைமையிலான குழு அங்கு விசாரணை நடத்தியது.

பின், அலைபேசியை பறிமுதல் செய்து ராகப்பிரியாவை வெளியேற்றினர்.இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.'குரூப்'பில் விடை : தேர்வு துவங்கிய அரை மணி நேரத்துக்குள், வினாக்களை ராகப்பிரியா அனுப்பியுள்ளார். இதனால், அந்த 'வாட்ஸ்ஆப் குரூப்'பில்உள்ள மற்ற தேர்வர்களும் விடையை பார்த்திருக்கும் வாய்ப்பு உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசாமல், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து மட்டும், அரசு குழு பேசியது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட, பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன.எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.கடந்த, 2011 மற்றும், 2016 சட்டசபை தேர்தலின் போது, 'பழைய ஓய்வூதியதிட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்; எனவே, அதுகுறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிசாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இக்குழுவினர்,இரு தினங்களுக்கு முன், ஒன்பது அரசு ஊழியர் சங்கங்கள்,ஆசிரியர் சங்கங்களை சந்தித்து பேசினர். நேற்று முன்தினம், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் உட்பட, ஒன்பது சங்கங்களின் நிர்வாகிகள், குழுவினரை சந்தித்து பேசினர்.அனைத்து தரப்பினரும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அரசு குழுவினர், 'புதிய திட்டத்தில், மாற்றங்கள் செய்தால் போதாதா?' என கேட்டுள்ளனர்; அரசின் நிதி நெருக்கடியை எடுத்துரைத்துள்ளனர்.இதன் காரணமாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை, அரசு செயல்படுத்துமா என்ற சந்தேகம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டு உள்ளது. அரசு குழுவினர், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசாமல், புதிய திட்டத்தின்அம்சங்களையே பேசியதால், கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தினர், அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம்:அரசின் நிதி நிலைமையை எடுத்துரைத்தனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், என்ன மாற்றம் செய்யலாம் எனக் கேட்டனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பதை, ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பி.ஆரோக்கியதாஸ், ஒருங்கிணைப்பாளர்,

'டேக்டோ' கூட்டுக் குழு: மத்திய அரசின் திட்டத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவிக்கவில்லை. லோக்சபாவில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே, புதிய ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். மேலும் இது, லஞ்சத்திற்கு வழி வகுக்கும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர, குழுவிடம் கூறினோம்.

'ஜேக்டோ' கூட்டுக் குழுஒருங்கிணைப்பாளர்: 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் குறைகளை நீக்கி, எப்படி தொடரலாம்...' என, குழுவினர் ஆலோசனை கேட்டனர். ஆனால், 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தேவையில்லை; அதில்,எத்தனை திருத்தம் செய்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எந்த பலனும் கிடையாது.'எனவே, பழைய பென்ஷன் திட்டம் தான் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தேவை' என்பதை, உறுதியாக கூறிவிட்டோம்.

எஸ்.என்.ஜனார்த்தனன், மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்:தமிழக அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசின், பி.எப்., ஆணையத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையை மீண்டும் பெற, தமிழக ஊழியர்கள் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இதில், யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம்கிடைக்கும் என்ற விகிதாச்சாரம் கூட கூறப்படவில்லை. ஊழியர்களின் தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதன் வருமானம் நிரந்தரமாக இருக்காது. ஊழியர்களுக்கு எப்போது நிதி கிடைக்கும் என்ற உறுதியானதகவல்கள் இல்லை. எனவே, புதிய பங்களிப்பு திட்டமே வேண்டாம் என, கூறி விட்டோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Minorities Welfare Department - Announcement of New Schemes by the Honble Chief Minister

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.எட்.பயில்வது குறித்து RTI - மூலமாக பெறப்பட்ட தகவல்.. Posted: 18 Sep 2016 05:16 AM PDT IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016

*IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016*
FIRST & SECOND YEAR
.
08.12.16-  THU - ES-331
09.12.16-   FRI-   ES-332
10.12.16-   SAT-  ES-333
12.12.16-  MON- ES-341
14.12.16-  WED-  ES-342
15.12.16-   THU-  ES-343
16.12.16-    FRI-   ES-344
19.12.16-   MON- ES-345
2012.16-    TUE-   ES- 334
22.12.16-   THU-   ES-335
23.12.16-    FRI-    BESE-065
24.12.16-    SAT-   ES-361
26.12.16-    MON- BESE-066
27.12.16-    TUE-   ES-362
28.12.16-    WED-  ES-363
29.12.16-    THU-   ES-364

18/9/16

சிவில் சர்வீசஸ் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

இந்திய அரசு துறைகளின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 வகை பதவிகளுக்கு, 1,049 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு எனப்படும், முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடந்தது. 
இந்த தேர்வுக்கு, 11.36 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; ஆனால், 6.24 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வில், 33 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். அதன்படி, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பொது பணியாளர் தேர்வாணையம், முதல்நிலை தேர்வு முடிவை வெளியிட்டது; இதில், 15 ஆயிரத்து, 445 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், தங்களது விருப்ப பாடத்தின் படி, நவ., 12ல் நடக்கும், முதன்மை தேர்வை எழுத வேண்டும்; அதில், தேர்ச்சி பெறுவோர், நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டும்; நேர்முக தேர்வுக்கு பின், இறுதி பட்டியல் வெளியாகும்.

மும்பை பள்ளிகளில் யோகா: தடை விதிக்க கோர்ட் மறுப்பு

மும்பை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு யோகாமற்றும் சூரிய நமஸ்கார பயிற்சிகளை அளிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க மும்பை கோர்ட் மறுத்துள்ளது.மும்பை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா மற்றும் சூரிய நமஸ்காரப் பயிற்சிகளை அளிக்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதனை எதிர்த்து மசூத் அன்சாரி என்பவர் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் சூரிய நமஸ்காரத்தை கட்டாயமாக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

மேலும் மாநகராட்சியின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.அந்த மனு மீது நேற்று நடந்த விசாரணையில், சூரிய நமஸ்காரம் என்பது வெறும் பெயர்தான் எனவும், அதனை உடற்பயிற்சியாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் கோர்ட் தெரிவித்தது. வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், மாநகராட்சியின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

பரபரப்பாக செயல்பட்ட அரசு அலுவலகங்கள்

தமிழகத்தில், 'பந்த்' நடத்தப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள எழிலக வளாகம், மின் வாரியம் உள்ளிட்டஅரசு அலுவலகங்கள், வழக்கத்தை விட, நேற்று பரபரப்பாக செயல்பட்டன.இதுகுறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது:
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு சற்று தாமதமாக தான் வருவோம். ஆனால், இன்று தாமதமாக வந்தாலோ, விடுப்பு எடுத்தாலோ, 'பந்த்'க்கு ஆதரவு தெரிவிப்பதாக, உயரதிகாரிகள் கருதுவர்; அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு கல்லூரி மாணவர் பயிற்சி திட்டம் : பயிற்றுனர் இல்லாததால் பாதிப்பு.

அரசு கல்லுாரி மாணவர்களுக்கான மென் திறன் பயிற்சி திட்டத்திற்கு, பயிற்றுனர் கிடைக்காததால், செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு கல்லுாரி மாணவர்களில், இறுதி ஆண்டு படிப்போருக்கு, பணியில் சேர வசதியாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது; இதன்படி, 30 அரசு கல்லுாரிகளில், ஆண்டுக்கு, 500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு முதல், கூடுதலாக, 32 கல்லுாரிகளில் பயிற்சி அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது; இதற்காக, ஒவ்வொரு கல்லுாரிக்கும் ஆண்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய் வீதம், 1.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மென் திறன் பயிற்சி வழங்க, பயிற்றுனர்கள் இல்லாத குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சி அளித்து வந்த தனியார் நிறுவனங்களுடன், ஒப்பந்தத்தை நீட்டிக்காததால், இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தில், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மன்றத்தின் உறுப்பினர் செயலரான, கல்லுாரி கல்வி இணை இயக்குனர், சேகர் பங்கேற்கவில்லை; நந்தனம் கல்லுாரி முதல்வர், அமுதா பாண்டியன், மென் திறன் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரீத்தி பங்கேற்றனர்.

அப்போது, அரசு ஒதுக்கிய நிதியில், குறிப்பிட்ட தொகையை கல்லுாரிகளுக்கு அளித்து விடுவதாகவும், கல்லுாரிகளே பயிற்சியாளரை நியமித்து, மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும்படியும் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால், 'எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல், மென் திறன் பயிற்சி திட்டத்தை செயல்படுத்த முடியாது; பயிற்சியாளர்களை நியமிப்பதுடன், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்' என, கல்லுாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, எந்த முடிவும் சொல்லாமல், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி கட்டண கமிட்டிக்கு அடுத்த வாரம் புதிய தலைவர்

சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணய கமிட்டிக்கு, புதிய தலைவரை நியமிக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது. கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், நீதிமன்ற உத்தரவுப்படி, சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை, தமிழக அரசு அமைத்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள்; ஆசிரியர், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
பணிகள் முடக்கம் : கமிட்டியின் முதல் தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார்; பல்வேறு காரணங்களால், அவர் பதவி விலகினார். பின், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைவரானார். இரண்டு ஆண்டுகளுக்கும்மேலாக, கட்டணம் குறித்து விசாரணை நடத்தினார்; ஆட்சி மாற்றம் வந்ததும், 2012ல் பதவி விலகினார்.பின், 2012 ஜனவரியில், ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, கல்விக் கட்டண கமிட்டி தலைவரானார்; மூன்று ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த அவர், 2015 டிசம்பர் 31ல் ஓய்வு பெற்றார்.அவரை தொடர்ந்து, கமிட்டியின் சிறப்பு சட்ட அதிகாரி மனோகரனும், கடந்த மார்ச்சில் ஓய்வு பெற்றார். அதனால், கட்டண கமிட்டியின் பணிகள் முடங்கின. இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டண கமிட்டி தலைவரை நியமிக்காமல், இனியும் தாமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியது. மூன்று வாரங்களில் தலைவரை நியமிப்பதாக, தமிழக அரசு உறுதி அளித்தது.

முன்னாள் நீதிபதிகள் : இதையடுத்து, பள்ளிக்கல்வி, சட்டத்துறை இணைந்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. 'ஏற்கனவே தலைவராக பதவி வகித்த சிங்காரவேலு உள்ளிட்ட முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.அடுத்த வாரம், தலைவர் நியமிக்கப்பட்டு விடுவார்' என்று, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு, அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடப்பட்டு உள்ளது.தமிழக உள்ளாட்சி தேர்தலை, அடுத்த மாதம், 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேர்தல் செலவிற்காக, 183 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. 
தேர்தல் தேதி, நேற்று அறிவிக்கப்படும்என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'பந்த்' காரணமாக, தள்ளிப் போடப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாக, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள்தெரிவித்தனர்.

கேம்பஸ் இன்டர்வியூ' : அண்ணா பல்கலை 'டிப்ஸ்

அண்ணா பல்கலை சார்பில், சென்னை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லுாரிகளின், இறுதியாண்டு மாணவர்களுக்கு, 'கேம்பஸ்' தேர்வு நடந்து வருகிறது. 
அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் இணைப்பு பெற்றுள்ள, 550க்கும் மேற்பட்ட தனியார் இன்ஜி., கல்லுாரிகளுக்கும், விரைவில் கேம்பஸ் தேர்வு நடக்க உள்ளது. 'கேம்பஸ் தேர்வில் பங்கேற்பது எப்படி; தனியார் நிறுவன அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி' என, மாணவர்களுக்கு வழிகாட்டும் புத்தகத்தை, அண்ணா பல்கலையின் தொழில் நிறுவன இணைப்பு மையமான, சி.யூ.ஐ.சி., வெளியிட்டுள்ளது.இந்த விபரங்களை, www.annauniv.edu/pdf/AU-CUIC என்ற இணையதள முகவரியில் பெறலாம்.

செப். 23க்குள் அங்கீகாரம் பி.எட்., கல்லூரிகளுக்கு 'கெடு'

தனியார் பி.எட்., கல்லுாரிகள், செப்., 23க்குள், மாணவர்கள் பட்டியலை தாக்கல் செய்ய, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் கல்விதொடர்பான, பி.எட்.,பி.பி.எட்.,எம்.எட்., படிப்புகளுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், நேற்றுடன் மாணவர் சேர்க்கை முடிந்தது. 
தனியார் கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்த, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.ஆனால், ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர் சேர்க்கை நடத்த, இரண்டு வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, தனியார் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், அனைத்து தனியார் கல்லுாரிகளும், செப்., 23க்குள், மாணவர்களின்பட்டியலை தாக்கல் செய்து அங்கீகாரம் பெறும்படி, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிரடி உத்தரவிட்டுள்ளது..

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் சேவைமறுப்பு.. '52 கோடி' அழைப்புகளை துண்டித்த ஏர்டெல், ஐடியா, வோடபோன்..!

இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் 52 கோடி வாய்ஸ் கால்-களை ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் துண்டித்துள்ளது. 
 இதனால், ஜியோ வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களின் டெலிகாம் சேவை பயன்படுத்துபவர்களை  தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாய்ஸ் கால் இணைப்பிற்காக ஜியோ-விடம் கூடுதல் கட்டணங்கள் கோரிய ஏர்டெல் நிறுவனத்திற்கு டிராய் அமைப்பு மறுப்பு தெரிவித்தது. இந்தியாவில் முழுமையாக நெட்வொர்க் இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ சேவை வங்கப்பட்டது தவறாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வழங்க வேண்டும். ஆனால் லாப கணக்குகளைப் பாரத்து நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஜியோ வாடிக்கையாளர்களின் சுமார் 52 கோடி வாய்ஸ் கால்களை துண்டித்துள்ளது.

ஜியோவிடம் முழுமையான நெட்வொர்க் இல்லாத காரணத்தால் இரு வழி இணைப்பும் ஏர்டெல் மூலம் செய்யப்படுகிறது. ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்டுச் சில வாரங்கள் ஆன நிலையில், டெலிகாம் நிறுவனங்களின் கோரிக்கைக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது.இதனால் ஏர்டெல், ஐடியா, வோடபோன் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கு டிராய் ஆணைக்கு இணங்க நிலையான சேவை அளிக்கும் வகையில் இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்க முடிவு செய்துள்ளது.கடந்த வாரம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ வின் 100 வாய்ஸ்கால்களுக்கு 75 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மறுமுனையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் பிற நெட்வொர்க் வாடிக்கையாளர் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 2 கால் செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் ஜியோ இன்போகாம் உடன் முக்கிய ஆலோசனையை நடத்த உள்ளது.டிராய் அமைப்பு மூலம் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த டெலிகாம் நிறுவனங்கள் ஒரு கால் இணைப்பிற்கு14 பைசா கூடுதல் கட்டணத்தை ஜியோவிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளது.தற்போதைய நிலையில் இந்தியா முழுவதிலும் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களிடம் சுமார் 7,000 இண்டர்கனெக்டிங் பாயின்ட் உடனடி தேவையாக ஜியோ முன்வைக்க உள்ளது

தொடக்கப் பள்ளிக்காக ரூ.30 லட்சம் மதிப்பு நிலத்தை கொடுத்த தலைமை ஆசிரியர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட துளுவ புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளி உள்ளது.35 ஆண்டுகளுக்கு முன்பு, அரசிடம் இந்தப் பள்ளியை ஒப்படைத்தது நிர்வாகம். அதன் பிறகு, பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்குகி றது. 
இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 48 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.அவர்களை வழி நடத்தும் பணியில் 2 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இடவசதி தடையாக இருந்தது. அங்குள்ள தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை பள்ளிக்கு எழுதிக் கொடுத்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி. சந்தை மதிப்பில் தற்போது அந்த இடம் ரூ.30 லட்சமாகும்.சில தடைகளைத் தாண்டி, பள்ளிக் கட்டிடம் எழுந்துள்ளது.கொடிக் கம்பம் அருகே திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. மாநில நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு சுற்றுச் சுவரை கட்டிக் கொடுத்துள் ளது.ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித் துறை. பள்ளிக் கட்டிடம் கட்டும் பணியை கட்டிடக் குழு மேற் பார்வை செய்து வருகிறது.

இது குறித்து கட்டிடக் குழுவில் உள்ளவர்கள் கூறும்போது, “கல்வி ஆர்வலர்களின் நிதி உதவியால் சுமார் ரூ.12 லட்சம் வரை செலவிடப் பட்டு பணி நடைபெற்றது. மேலும், ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. அந்த நிதிக்காக காத்திருக்கிறோம். நவீன கணினி வழிக் கல்வி, யோகாசனம் மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செயதுள்ளோம். எங்கள் இலக்கு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றனர்.இதுகுறித்து பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி கூறும்போது, “அந்தப் பள்ளியில் படித்தவன் நான். ஆரம்பக் கல்வியை தொடங்கி, ஆசிரியராக உயர்ந்து நிற்கிறேன். அதற்கு அடித்தளமிட்டது, நான் படித்த இந்தப் பள்ளியாகும்.

 அந்த பள்ளிக்கு இடம் தேவைப்படுகிறது என்பதை அறிந்தேன். சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில், எனது 20 சென்ட் நிலத்தை எழுதித் கொடுத்துள்ளேன் ” என்றார்.வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கும் இந்த காலத்தில், ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிக்காக 30 லட்சம் மதிப்புள்ள தனது நிலத்தை தானமாக கொடுத்த தலைமை ஆசிரியர் கோவிந்தசாமியின் நடவடிக்கையை அனைத்துத் தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,ஆதார் எண் பதிவுக்கு செப். 20 வரை 'கெடு'

அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும், 20ம் தேதிக்குள், மாணவர்களின், 'ஆதார்' எண் பட்டியலை வழங்குமாறு, பள்ளிக்கல்வித் துறை, 'கெடு' விதித்துள்ளது. 
தமிழகத்தில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்கள், 'ஆன்லைன்' முறையில், 'எமிஸ்' என்ற மின்னணு ஆளுமை திட்டத்தில் இணைக்கப்படுகிறது; இதில் மாணவர்களுக்கு தனியாக, ஒரு அடையாள எண் வழங்கப்படும். இந்த பதிவுக்கு, ஒவ்வொரு மாணவருக்கும், ஆதார் எண் மிகவும் அவசியம்.

ஆனால், தமிழகத்தில் படிக்கும், 1.25 கோடி மாணவர்களில், இன்னும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, ஆதார்எண் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், எமிஸ் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், செப்., 20க்குள் பதிவு செய்து, அதன் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

Alagappa University - Invitation - One Day Induction Programme for the I year B.Ed(DDE)., students (2016-2018) on 18-09-2016

CCE - GRADE FORM

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழையதிட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர்சங்கங்கள் வலியுறுத்தல்.

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் நேற்று பிற்பகல் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. 
குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சாந்தா ஷீலா நாயர் கூட்டத்துக்குதலைமை வகித்தார். தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.தலைமை செயலக ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடுஅரசு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் தலா மூன்று நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும் தனித்தனியாக அழைக்கப்பட்டு அவர்களின்கருத்துக்களை குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் பற்றி தலைமை செயலக சங்க தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி, ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஓய்வூதியம் முக்கியமானது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த பாதுகாப்பும் இல்லை.மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் 1-4-2003 முதல் பழைய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 2004ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோன்று, மாநில அரசும் 10 சதவீதம் தனது பங்காக ஓய்வூதிய நிதிக்கு அளிக்கும். இந்த நிதி பங்கு சந்தையில் முதலீடு செய்து, அந்த முதலீடுகளில் கிடைக்கும் வருவாயில் பணியாளர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களுக்கு பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்குதுதான் புதிய ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டம் முற்றிலும் அரசு ஊழியர்களுக்கு எதிரானது ஆகும். மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமேஇந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் இது அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது. பிடிக்கும் பணம் பங்கு மார்க்கெட்டில் போடப்படுவதால் பணத்துக்கு பாதுகாப்பு கிடையாது. தேவையானபோது பணத்தை எடுக்க முடியாது. கடந்த 12 ஆண்டுகளில், பணியில் இருந்தபோது இறந்தவர்கள் ஒருவருக்கு கூட போட்ட பணம் திரும்ப கிடைக்கவில்லை. அதனால், புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பழைய ஓய்வூதியம் சாத்தியமில்லை வல்லுநர் குழுவினர் கைவிரிப்பு?

2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், இதனால் எந்த பலனும் இல்லை, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று 12 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதையடுத்து, தற்போது வல்லுநர் குழு அமைத்து, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் தமிழக அரசு நேற்று ஆலோசனை கேட்டது. 10க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தனித்தனியாக வல்லுநர் குழுவினரை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

வல்லுநர் குழுவினர் தெரிவித்த கருத்து குறித்து சில அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “நாங்கள் சொன்ன கருத்தை வல்லுநர் குழுவினர் கேட்டுக் கொண்டனர். அரசு தரப்பில் கூறும்போது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு வரி உள்படகிடைக்கும் அனைத்து வருவாயையும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மக்களுக்கு எந்த திட்டத்தையும் செய்ய முடியாது. அதனால் அதிகபட்சமாக தமிழக அரசால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் அரசு ஊழியர்களுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதாக தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டுக்கான ‘சென்டா ஒலிம்பியாட்’ போட்டி - விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்.

ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையிலான ‘சென்டா ஒலிம்பியாட்’ போட்டி நாடு முழுவதும் 22 நகரங்களில் டிசம்பர் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் இணைந்து வழங்குகின்றன.
இதுகுறித்து சென்டர் ஃபார் டீச்சர் அக்ரெடியேஷன் (சென்டா) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரம்யா கூறியதாவது:5,000-க்கும் மேற்பட்டோர்..‘சென்டா டீச்சிங் புரொஃபஷ் னல்ஸ் ஒலிம்பியாட்- 2016’ என்பது ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான போட்டி. ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்தவும், மேம்படுத்த வும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 300 நகரங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப் போட்டிகளில் கலந்துகொள்ள பதிவு செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, 2-வது ஆண்டாக நாடு முழுவதும் 22 நகரங்களில் வரும் டிசம்பர் 3-ம் தேதி 2016-ம் ஆண்டுக்கான போட்டிகள் நடக்க உள்ளன. போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் போட்டி நடக்கும்.மொத்தம் 13 பிரிவுகளில் போட்டி நடைபெறும். இதில் ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை என தங்கள் விருப்பத்துக்கேற்ப ஆசிரியர்கள் போட்டிப் பாடப் பிரிவைதேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு துபாயில் 2017-ல் நடக்க உள்ள உலக கல்வி, திறன்மேம்பாட்டு மாநாட் டில் பங்கேற்க வார்கே அறக் கட்டளை சார்பில் வாய்ப்பு அளிக் கப்படும். ஒவ்வொரு மாநிலத்தி லும் முதலிடம் பெறுபவர்களின் விவரங்கள் ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகும். இதுதவிர, வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு சென்ட் ரல் ஸ்கொயர் அறக்கட்டளை சார்பில் வெளியாக உள்ள புத்தகத்தில் எழுதும் வாய்ப்பும், ஹெச்டி பாரேக் அறக்கட்டளை மூலம் 50 பேருக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு...
கணினி மூலம் போட்டி நடத்தப்படும். தேர்வு செய்துள்ள பாடம், பாடம் நடத்தும் விதம் உள்ளிட்டவை தொடர்பாக ‘ஆப்ஜெக்டிவ்’ வகை கேள்விகள் இடம்பெறும். போட்டி குறித்தகூடுதல் விவரங்கள், முன்பதிவு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (www.tpo-india.org) தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

விடுமுறை அளித்த பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'

அரசின் அனுமதி பெறாமல், பள்ளிகளுக்கு தன்னிச்சையாக விடுமுறை அளித்த, தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப,பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.காவிரி பிரச்னை தொடர்பாக, நேற்று நடந்த முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு, சில தனியார் பள்ளிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர்.
அதனால், சேலம், நாமக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாகை போன்ற சில மாவட்டங்களில், தனியார் நர்சரி பள்ளிகள் செயல்படவில்லை.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற முக்கிய மாவட்டங்களில், பெரும்பாலான பள்ளி,கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு நடந்ததால், மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கின.

இந்நிலையில், தன்னிச்சையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த பள்ளி நிர்வாகத்தினருக்கும், சங்கத்தினருக்கும் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி: தமிழக அரசு அழைப்பு.

யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் உதவித் தொகையுடன் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

2016ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், முதன்மைத் தேர்வுக்காக மாணவர் / மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் எண். 163/1, பி.எஸ். குமாராசாமி ராஜா சாலை, சென்னை – 28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மூன்று அலுவலக வேலை நாட்களில் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று சேர்க்கை நடைபெறும். முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மொத்தம் 225 (SC-92, SC(A)-18, ST-03, MBC-40, BC-54, BC(M)-07, DA-07 மற்றும் OC-04)மாணக்கர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ / மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பயிற்சி வகுப்புகள், மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பித்து முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் வரை நடைபெறும். பயிற்சிக் காலத்தில் கட்டணமில்லா விடுதி வசதி உண்டு, இப்பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000/- உதவித் தொகை தமிழக அரசால் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
முதல்வர்
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம், சென்னை – 28.
தொலைபேசி எண் : 044 / 24261475

பழைய ஓய்வூதியத் திட்டமே மீண்டும் தேவை: நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசின் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை

பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான இந்த வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலகச் சங்கம் தனது கருத்தை முதலாவதாகப் பதிவு செய்தது.
சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் வெங்கடேசன், இணைச் செயலாளர் மோகனவள்ளி, இணைச் செயலாளர் ஹரி சங்கர், பொருளாளர் மகேந்திரன் தலைமையிலான குழு நிபுணர் குழுவிடம் மனு அளித்தது.
பல்வேறு பிரிவினரின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு ஒய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த நலத் திட்டங்களை எல்லாம் செயல்படுத்திவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஏற்கனவே பெற்று வந்த ஒய்வூதியத்தை, 1.4.2003 முதல் புதியதாகப் பணியில் சேர்பவர்களுக்கு வழங்க இயலாது என்பது முற்றிலும் சமூகப் பாதுகாப்பிற்கு எதிரானது. அரசு ஊழியருக்கு முற்றிலும் கேடு விளைவிக்கும் திட்டமான பங்களிப்புடன் கூடிய புதிய ஒய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஒய்வூதிய திட்டத்தினையே நடைமுறைப்படுத்த

வேண்டும் என்று தலைமைச் செயலக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளன.
வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கிய கருத்து கேட்புக் கூட்டம் மாலை 5.30 வரை நடைபெற்றது.

TRB: விரிவுரையாளர் பணிக்கு நாளை போட்டி எழுத்துத் தேர்வு.

ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (செப்.17) நடைபெற உள்ளது.
டிஆர்பி சார்பில், 
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள முதுநிலை, இளநிலை விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, சென்னை மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 2,443 பேர் பங்கேற்று தேர்வெழுத உள்ளனர்.
செல்லிடப்பேசி, மின்னணு கணக்கிடும் கருவி, மின்னணு கடிகாரம் ஆகிய சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு வர அனுமதி கிடையாது.
டிஆர்பி-யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டில் புகைப்படம் பதியவில்லையெனில், இணைப்புத்தாளில் புகைப்படம் ஒட்டி முழுமையாகப் பூர்த்தி செய்தோ அல்லது 2 புகைப்படங்களையோ எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தேர்வர்கள் மையத்துக்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

17/9/16

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்க சில வழிகள்

சரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலங்கள்

கோள்கள் பற்றிய சில தகவல்கள1

கோடை காலத்தில் அதிகரிக்கும் எண்ணெய் பசை சருமத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது

கொய்யாப்பழம்

கைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்

கேழ்வரகு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

குடியரசு தலைவர்கள் பற்றிய சில தகவல்கள்

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள்

குடல் புண் _அல்சர்_

கல்வி என்றால் என்ன?

கம்யூனிஸ்ட்கள1

கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்

ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட

ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம்

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது

உற்பத்தி பொருட்கள் இந்தியாவின் தொழில் நகரங்கள்

உடல் வெப்பத்தை தணிக்கும் 12 உணவுகள்

உடல் நலம் சார்ந்த குறிப்புகள்

இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள்

இந்திய பிரதமர்களின் பங்குகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் பற்றிய சில தகவல்கள்

இந்திய தேசியப் பெருமைகள்!

இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள்

ஆறுதல் சொல்வது எப்படி?

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

பப்பாளியின் பயன்கள்

படித்த போதே என்னை கண்கலங்க வைத்த

நிறுத்தற்குறிகள் அறிவோம்

தேசியக்கொடி சில துளிகள்

தென் இந்தியா சிறப்புகள் சில தகவல்கள்

தூங்குவது எப்படி?

தூக்கம்

தும்பை இலையும் மருத்துவகுணமும்

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள1

தனிமங்கள் லத்தீன் பெயர்கள்

தமிழ்நாட்டில் உள்ள அணைகள்

தமிழ் கவிஞர்கள் ஊர1

தமிழனின் சாதனை பட்டியல்கள்

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

சொத்துப் பத்திரத்தின் அசல்

சுகர் எப்படி வருது சூப்பர் கட்டுரை கண்டிப்பா படிங்க

சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு

தினம் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்

நல்ல குடிநீர் என்பதற்கும்

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி

பிரிட்ஜ்

புதிய கல்விக்கொள்கையின் பாதிப்பு என்ன?

பிரபலங்கள் அவர்களின் இயற்பெயர்

16/9/16

CPS வல்லுநர் குழு-ஆசிரியர் இயக்கங்கள் சந்திப்பு நடந்தது என்ன?

CPS நண்பர்களுக்கு

வல்லுநர்குழு _ சந்திப்பு குறித்த பதிவு.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அரசு சார்பில் திருமதி. சாந்தா ஷீலா நாயர், திரு. கிருஷ்ணன். திரு. சண்முகம், திரு. முத்து  ஆகியோர்பங்கு
பெற்றனர்.

பிரிஜேஸ்புரோகித் கலந்து கொள்ளவில்லை.

குழுவின்கேள்விகள் அனைத்தும் cps ஐ நியாயப்படுத்தும் விதமாகஇருந்தது.

என்ன காரணத்திற்காக குழு அமைக்கப்பட்டது என்றசந்தேகம் எழுகிறது.


Cps ஒழியஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே தீர்வு.

திண்டுக்கல் எங்கெல்ஸ்..

ஊராட்சி பதவிகளுக்கு வண்ண ஓட்டுச்சீட்டு

ஊராட்சிதேர்தலில், நான்கு பதவிகளுக்கு, வண்ணஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது.ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சிஒன்றிய குழு உறுப்பினர், மாவட்டஊராட்சி குழு உறுப்பினர் 
ஆகியபதவிகளுக்கான தேர்தலில், ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படஉள்ளது. 


கிராம ஊராட்சிகளில் வசிக்கும் வாக்காளர்கள், நான்கு ஓட்டு போடவேண்டும்.கடந்த உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவர் பதவிக்கு, 'பிங்க்' நிறம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்பதவிக்கு, வெள்ளை அல்லது நீலம்; ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்பதவிக்கு, பச்சை; மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் பதவிக்கு, மஞ்சள் நிறத்தில் ஓட்டுச்சீட்டுகள்அச்சிடப்பட்டன. இந்த உள்ளாட்சி தேர்தலிலும், வண்ண ஓட்டுச்சீட்டுகளை அச்சிட, மாநில தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது

SSLC:செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

பத்தாம்வகுப்பு துணைத் தேர்வு எழுதவிண்ணப்பித்தவர்களுக்கான, அறிவியல் செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர்வெளியிட்டசெய்திக் குறிப்பில்,

அக்டோபரில்நடக்கவுள்ள, 10ம் வகுப்பு துணைதேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், செப்., 23, 24 மற்றும், 26 ஆகிய நாட்களில் நடக்கும்செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

+2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு

பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு,காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. வரும்,
24ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.


தற்போதைய நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடப்பிரிவின், முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் பாக பாடங்களையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


டிசம்பர் மாதத்திற்குள், இந்த இலக்கை அடைந்து விட்டால், அரையாண்டு தேர்வுக்கு பின், பொதுத் தேர்வு வரும் வரை, தினசரி திருப்புதல் தேர்வுகள்வைத்து, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடங்களை நடத்துவதால், அனைத்து பாடங்களும் முடியும் நிலையில் உள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், பிளஸ் 2 பாடங்களை மீண்டும் ஒரு முறை நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.

சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:-
சுமையினால் வளர்ச்சி பாதிக்கும்சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை அதிக சுமையாக உள்ளது. இதனால் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்த மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின் வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள் முக்கிய பங்குவகிக்கின்றன.மாணவர்கள் தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டுவருகிறார்களா? என்றுஆசிரியர்கள் திடீர் என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் கொண்டுவரக்கூடாது என்று ஆசிரியர்கள்கூறவேண்டும்.

எடை குறைவான பைகள்

அதிக எடை இன்றி புத்தகப்பைகள் கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள் பரிசோதனை செய்யவேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளை வாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தினமும் எந்த எந்த புத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்ற கால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும்.மாணவர்களுக்கு பள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்கு கொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்கு வேண்டுகோள்

மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டு வரும் எந்த ஒரு பொருளும் எடை குறைவாக இருக்கவேண்டும்.தொடக்கப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள் குழந்தைகள் கால அட்டவணை படி கொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.

புத்தகப்பை, வீட்டுப்பாடம்

குறிப்பாக 1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது.மாணவர்கள் அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவே பள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூட முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.இவ்வாறு சி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

 தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
புதியதாக குழு: தமிழக அரசு அமைத்துள்ள குழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர். 
இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர் குழுவில் தாங்கள் தொடர முடியாது என அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார். 
முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர் குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 
வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், கருத்துக் கேட்பு கூட்டத்தின் போது நேரத்தை சிறப்பான முறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்த ஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு'

பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. வரும், 24ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடப்பிரிவின், முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
காலாண்டு தேர்வு முடிந்ததும், அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் பாக பாடங்களையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள், இந்த இலக்கை அடைந்து விட்டால், அரையாண்டு தேர்வுக்கு பின், பொதுத் தேர்வு வரும் வரை, தினசரி திருப்புதல் தேர்வுகள் வைத்து, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடங்களை நடத்துவதால், அனைத்து பாடங்களும் முடியும் நிலையில் உள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், பிளஸ் 2 பாடங்களை மீண்டும் ஒரு முறை நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

பி.எட்., 'அட்மிஷன்' நிறுத்த திடீர் உத்தரவு

பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ளுமாறு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி தொடர்பான, பி.எட்., - பி.பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, 670 தனியார் கல்லுாரிகளிலும், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளிலும், கடந்த மாதம் இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது.
அரசின் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், நிரம்பாத காலி இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நேற்று துவங்கியது; இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், அனைத்து தனியார், பி.எட்., கல்லுாரிகளிலும், இன்றுடன் மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை, நேற்று மாலை, திடீர் அறிவிப்பை வெளியி ட்டுள்ளது; இதனால், தனியார் கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 'எந்த முன்னறிவிப்புமின்றி, திடீரென மாணவர் சேர்க்கையை நிறுத்த உத்தரவிட்டால், கல்லுாரிகளை எப்படி நடத்துவது; மாணவர் சேர்க்கைக்கு, மேலும், இரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும்' என, தனியார் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பள்ளி, கல்லூரிகள் இயங்குமா?

கடையடைப்பு போராட்டம் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் இன்று இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பிரின்ஸ்பாபு கூறியதாவது: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, காலாண்டு தேர்வு, அரசின் பொது வினாத்தாளுடன், இன்று நடத்தப்படுகிறது. அரசு விடுமுறை அறிவிக்காததால், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். ஆசிரியர், மாணவர்கள், 'கறுப்பு பேட்ஜ்' அணிந்து வருவர்.


தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்களின் சங்க தலைவர் எம்.ஜே.மார்ட்டின் கென்னடி: எங்கள் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். பெற்றோர், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, முடிவு செய்து கொள்ளலாம்.

தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன்: மாணவர்கள் பாதுகாப்பு கருதி, இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கலாம் என, முடிவு செய்துள்ளோம். இன்று நடக்கவிருந்த தேர்வுக்கான மாற்று தேதி, பின்னர் அறிவிக்கப்படும். எனினும், பள்ளிகள் விடுமுறை அளிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப, பள்ளி நிர்வாகங்களே முடிவு எடுத்து கொள்ளலாம்.

நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார்: பள்ளி வாகனங்கள் இயங்காது என்பதால், எங்கள் சங்கத்தில்உள்ள பள்ளிகள் செயல்படாது; சனிக்கிழமை பள்ளிகளை இயக்குவோம்.

அரசு நிலை என்ன? : பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது, 'பள்ளிகளுக்கு, அரசு விடுமுறை அறிவிக்கவில்லை' என்றார். தனியார் கல்லுாரிகள் நிலவரம் குறித்து, எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

கோட்டையில் ஆலோசனை : 'பந்த்'தால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, தலைமைச் செயலர் ராமமோகன ராவ் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, போலீஸ் டி.ஜி.பி., ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரயில்களில் பாதுகாப்பு : 'பந்த்'தையொட்டி, ரயில் மறியல் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, தாம்பரம் உட்பட, தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 'ரயில் போக்குவரத்தில், எந்த பாதிப்பும் இருக்காது' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய ஓட்டல்கள் பங்கேற்பு : கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதால், தமிழகம் முழுவதும் உள்ள, மூன்று லட்சம் கடைகள் மூடப்படும் என, தமிழ்நாடு சிறு டிபன் கடைகள், உணவு விடுதிகள், பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால், சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பெட்ரோல் 'பங்க்' இயங்கும் : பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று, 'பங்க்'குகளை மூடுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம், பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நடத்தும், 197 பெட்ரோல், 'பங்க்'குகள், மாநிலம் முழுவதும், இன்று செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., ஆதரவு : தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:தமிழர்களின் உரிமையை, எந்த விதத்திலும் விட்டுத் தரக்கூடாது என்பதால், தமிழக பா.ஜ., முழு ஆதரவை தெரிவிக்கிறது. அதேநேரத்தில், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்களுக்கு அருகில் போராட்டம் போன்ற வன்முறையை துாண்டும் அறிவிப்புகளை, சிலர் உள்நோக்கத்தோடு
வெளியிட்டு இருப்பதை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நகை கடைகள்
இன்று அடைப்பு
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
தமிழகத்தில், 35 ஆயிரம் தங்க நகை கடைகள் உள்ளன. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகாவில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இன்று, 'பந்த்'
நடக்கிறது. அதற்கு ஆதரவாக, அனைத்து நகை கடைகளும் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ஓய்வூதிய திட்ட கருத்து கேட்பு : குழுவிடம் அரசு ஊழியர் சங்கத்தினர் மனு

பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகி கள், அரசு குழுவிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். தமிழக அரசு பணியாளர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல் அமல்படுத்தப்பட்டது; இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசுப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் அவர்களின் பணிக் காலத்திற்கு பின் பாதுகாப்பு அரணாக இருந்தது; அதில், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில், குடும்ப ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதில், பணியாளரின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதிய நிதிக்கு மாற்றப்படும். இதற்கு சமமானத் தொகையை, மாநில அரசு, தன் பங்காக, அளிக்கும். இத்தொகை, அரசால் நியமிக்கப்படும், நிதி மேலாளர் வசம் ஒப்படைக்கப்படும்; இத்தொகையை, பங்கு சந்தை யில் முதலீடு செய்வர். அந்த முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருவாயில், பணியாளர் ஓய்வு பெறும் போது, அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் உள்ள பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்கப் படும். இதன் காரணமாக, எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை உறுதியாக கூற இயலாது; பிடித்தம் செய்த தொகையை, பாதியில் பெற இயலாது என, பல்வேறு பாதகமான விஷயங்கள் உள்ளன.
எனவே, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. சட்டசபை தேர்தலின் போது, 'அ.தி.மு.க., வெற்றி பெற்றால், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது; இக்குழு, சென்னையில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. தலைமைச் செயலக ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம், அரசுப் பணியாளர் சங்கம், அனைத்து ஆசிரியர் சங்கம், அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, 'ஜேக்டோ, டேக்டோ' மற்றும் அரசு அலுவலர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர், உறுப்பினர்களிடம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி, மனுக்கள் அளித்தனர். 

செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான, அறிவியல் செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'அக்டோபரில் நடக்கவுள்ள, 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், செப்., 23, 24 மற்றும், 26 ஆகிய நாட்களில் நடக்கும் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிறது ?

செட்’ தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை!

செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.


கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகை பெற்று, இளநிலை ஆராய்ச்சி மாணவராக படிக்கவும், மத்திய அரசின், நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இத்தேர்வு நடக்கும். மாநில மொழிகளில் எழுதுவோருக்கு, மாநில அளவில், செட் என்ற தகுதித்தேர்வு நடந்தப்படுகிறது.

செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், பிற மாநிலங்களில் பணியாற்ற விண்ணப்பித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு: பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற, உதவி பேராசிரியர் பணிக்கான, செட் தேர்வில், 2002 ஜூன், 1ம் தேதிக்கு முன், தேர்ச்சி பெற்றோர், நாடு முழுவதும், அனைத்து பல்கலை, கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம்; நெட் தேர்வு தேர்ச்சி அவசியம் இல்லை.

அதன்பின் நடந்த, செட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், செட் தேர்வை நடத்திய, மாநில அரசு களின் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் மட்டுமே உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் நேற்று பிற்பகல் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சாந்தா ஷீலா நாயர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

15/9/16

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு : பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு : பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.

அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை, ஆதார் எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில பல்கலை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில், டில்லியில் நடந்தது.
இதில், தமிழகம் உட்பட அனைத்து மாநில பல்கலைகளுக்கும், மத்திய அரசு கட்டாய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், மாணவர்களின் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை, மத்திய அரசின், 'தேசிய அகாடமிக் டெபாசிட்டரி' அமைப்பின், இணையதளத்தில், பதிய வேண்டும். மாணவர்களின் ஆதார் எண்ணும் அதில் இடம்பெற வேண்டும். சான்றிதழ்களிலும், ஆதார் எண்ணை குறிப்பிட முயற்சிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு செய்யும் பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே, ஒருங்கிணைந்த பதிவு எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், டிஜிட்டல் சான்றிதழ் பெறலாம். இந்த முயற்சியால், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், போட்டி தேர்வு நடத்தும் அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள் : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை

பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள் : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை

'பாடத் திட்டத்தில் இடம் பெறாத புத்தகங்களை வாங்க, மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கை: அதிக சுமை கொண்ட புத்தக பையை சுமப்பதால், மாணவர்களுக்கு, உடல்நல பிரச்னைகள் ஏற்படும்.
கூடுதல் புத்தகங்களை, மாணவர்கள் சுமக்காமல்இருக்க, சரியான திட்டமிடலுடன், பாட அட்டவணை தயாரித்து, அதற்கேற்ப புத்தகங்களை கொண்டு வர, அறிவுறுத்த வேண்டும். வகுப்புகளுக்குதேவையில்லாத புத்தகம், நோட்டு மற்றும் விளையாட்டு பொருட்கள் கொண்டு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். வீட்டுப் பாடங்கள் அதிகம் கொடுத்தால், புத்தக பையின் சுமை ஏறும். தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகம் தவிர, கூடுதல் புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது; மீறும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

செட்' தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை

செட்' தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை

செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகை பெற்று, இளநிலை ஆராய்ச்சி மாணவராக படிக்கவும், மத்திய அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இத்தேர்வு நடக்கும். மாநில மொழிகளில் எழுதுவோருக்கு, மாநில அளவில், 'செட்' என்ற தகுதித்தேர்வு நடந்தப்படுகிறது.'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், பிற மாநிலங்களில்பணியாற்ற விண்ணப்பித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு: பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், 2002 ஜூன், 1ம் தேதிக்கு முன், தேர்ச்சி பெற்றோர், நாடு முழுவதும், அனைத்து பல்கலை, கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம்; 'நெட்' தேர்வு தேர்ச்சி அவசியம் இல்லை.அதன்பின் நடந்த, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 'செட்' தேர்வை நடத்திய, மாநில அரசு களின் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் மட்டுமே உதவி பேராசிரியர்களாகபணியாற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல் 'பங்க்'குகள் நாளைமூடல்

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல் 'பங்க்'குகள் நாளைமூடல்

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல், 'பங்க்'குகள், நாளை மூடப்படுகின்றன.தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் டீலர்கள் கூட்டமைப்புதலைவர், முரளி கூறியதாவது:தமிழகத்தில், 4,600 பெட்ரோல், 'பங்க்'குகள் உள்ளன. கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது, தாக்கு தல் நடத்தப்படுகிறது.
இதை கண்டித்து, நாளை காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 'பங்க்'குகள் மூடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

12 லட்சம் பேர் விண்ணப்பம் Gr4 : ஒரு பதவிக்கு 234 பேர் போட்டி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு மூலம் 5,451 இளநிலைப்பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.

இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும் என்றும் அறிவித்து இருந்தது. அதுபோல இணையதளத்தில் ஏராளமானவர்கள் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
விண்ணப்பிக்க கடந்த 8-ந்தேதி கடைசி என்று இருந்தது. ஆனால் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் விண்ணப்பிக்க விரும்பினார்கள். ஆனால் சர்வர் வேலை செய்யவில்லை. எனவே விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் கோரிக்கை விடுத்தது போல 14-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் அதன் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்தார். மேலும் தேர்விற்கான கட்டணம் செலுத்த 16-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதையொட்டி விண்ணப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க எளிதில் இணையதளம் கிடைத்தது.

விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். மொத்தம் 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 234 பேர் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள்.