யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/11/16

CCE பணித்தாள் - மூன்றாம் கட்டத் தேர்விற்கான அனைத்து பாட வினாத்தாள்கள்

CCE WORKSHEET 3rd Week English Answer Key



CCE -THIRD WEEK - TAMIL TENTATIVE ANSWER KEY FOR 6 to 8th Std



CCE -THIRD WEEK - TAMIL TENTATIVE ANSWER KEY FOR 1 to 5th Std

வங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16) சி.ஆர்.சி., பயிற்சி ஒத்திவைக்கப்பட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தற்போது500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்துநிலவும் வங்கி நடைமுறைகளால் பணம்எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. மேலும்ஆண்டு இறுதியாக உள்ளதால்
விடுமுறை இல்லாத நிலையில், ஆசிரியர்கள்வங்கிக்கு பணம் எடுக்கச் செல்லஇயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே நவம்பர் மாத ஊதியத்தைவங்கிக்குச் சென்று எடுக்க வசதியாகவரும் சனிக்கிழமை (03.12.16) நடைபெற உள்ள குறுவளமையஅளவிலான பயிற்சியினை ஒத்திவைத்து வேறொரு நாளில் நடத்திடஅரசு ஆவன செய்ய வேண்டும்என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடக்க கல்வி துறையும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் ஆசிரியர்களின்இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்ற ஆவன செய்வார்கள் என்றநம்பிக்கையில் ஆசிரியர்கள்.

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்றுகளை ஜனவரி 15 வரை அளிக்கலாம்

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுச் சான்றிதழை வரும் ஜனவரி 15 வரை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள்நேரில் சென்று கையெழுத்திட்டு வாழ்வுச் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் செலுத்த வேண்டும். ஆனால், வங்கிக் கிளைகளில் 500, ஆயிரம் ரூபாய் செல்லாதது என்ற அறிவிப்பால் எழுந்துள்ள சூழலால் வாழ்வுச் சான்றிதழ்களை வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கழிப்பறை பராமரிப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரசு பள்ளிகளில் ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், கழிப்பறையை சுத்தப்படுத்த, தனியார் ஒப்பந்தம் மூலம் ஒரு மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து தரவும், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், மதுரை ஐகோர்ட் கிளை, தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பனீந்திர ரெட்டி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

● அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை, 2014 ஜூலையில், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், கழிப்பறைகளைசுத்தப்படுத்த, தனியாக ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்

● மாநகராட்சி, நகராட்சிகளில் இந்த ஊழியர்களுக்கு சொத்து வரி வசூலில், கல்வி நிதிக்கு ஒதுக்கப்படும் தொகை மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, திடக்கழிவுமேலாண்மை நிதியில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும்

● அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிக்கும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சிகள் ஏற்க வேண்டும். இந்த பணிக்கு உள்ளாட்சிகள் தான் ஆட்களை நியமிக்க வேண்டும்.பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என, உள்ளாட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்

● பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, காலையில் பள்ளி துவங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன், ஊழியர்கள் சென்று கழிப்பறைகளை சுத்தப்படுத்தவும், பள்ளி முடியும் நேரம் வரை அவர்கள் பணியில் இருக்கவும், மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் கழிப்பறையை சுத்தம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்

● வகுப்பறை பராமரிப்பு, பள்ளி வளாகம் பராமரிப்பு பணிகளுக்கும் இந்த ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்

● அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளத்தையே, இந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்

● அரசு ஒப்பந்த விதிகளின் படி இந்த பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு இருந்தால், மகளிர் சுய உதவிக்குழு, சமுதாய அமைப்புகளையும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம்

● பள்ளி தலைமை ஆசிரியர்கள், பராமரிப்பு பணி குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்திற்கு திருப்தியில்லாத பராமரிப்பு பணி ஒப்பந்ததாரரை, உடனடியாக நீக்க வேண்டும்

● பெண்கள் பள்ளியில் கட்டாயம் இரண்டு பெண் துப்புரவுபணியாளர்களும், ஆண்கள் பள்ளியில் இரண்டு ஆண் அல்லது பெண் துப்புரவு பணியாளர்களும், இருபாலரும் படிக்கும் பள்ளியில் ஒரு பெண், ஒரு ஆண் துப்புரவு பணியாளர்களும் பணியமர்த்தப்பட வேண்டும்

● பெண்கள் பள்ளியில், 'நாப்கின்'களை பாதுகாப்பாக அகற்றுவது இந்த பராமரிப்பு பணி நிறுவனத்தின் வேலையாகும்

● அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர் விபரங்களை, ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?

ரிலையன்ஸின் ஜியோ நிறுவணம் கடந்த செப்டம்பர் மாதம் தனது 4G சிம்களை வெளியிட்டது. அறிமுக சலுகையாக தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை அளவற்ற இலவச 4G இனையதள வசதியும், இலவசமாக பேசும் வசதியையும் அளித்திருந்தது. இந்நிலையில் குறுந்தகவல் செயிலியான வாட்ஸாப்பில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவணம் கொல்கத்தாவில் உள்ள வடிகையாளர் ஒருவருக்கு, ரசீது அனுப்பியுள்ளதாக அந்த ரசீதின் புகைப்படத்துடன் தகவல் பரவி வருகிறது. அவர் 554.37 GB data உபயோகித்துள்ளதகவும், 44.4 நிமிடங்கள் பேசியுள்ளதாகவும் இதற்கு அவர் 27,718 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து ஜியோ நிறுவணம் விளக்கம் அளித்துள்ளது. “எங்கள் நிறுவணம் வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வரை இலவச இனையதள சேவையும், இலவச தொலைபேசி சேவையும் வழங்கியுள்ளது. தற்போது வாட்ஸாப்பில் பரவி வரும்ரசீதின் புகைப்படம் போலியானது எனவும், எங்கள் நிறுவணம் அவ்வாறு எந்தவொரு வடிக்கையாளருக்கும் ரசீது அனுப்பவில்லை” என தெரிவித்துள்ளது.இதன்மூலம் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை கலக்கி வந்த ஜியோ புரளி முற்றுப் பெற்றுள்ளது

SSLC SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (Em/Tm) NEW VERSION UPDATED Posted: 27 Nov 2016 09:26 AM PST 10th - SSLC SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (Em/Tm) NEW VERSION | Download *Click here 10th - SSLS - SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (Tamil Medium) *Click here 10th - SSLS - SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (English Medium) Thanks To, Mr V. Subramanian M.A.,M.A.,M.A.,B.Ed., B.T.Asst, M.N.U. Jayaraj Nadar Hr. Sec. School, Nagamalai, Madurai- 625 019. CCE WORKSHEET 3rd Week English Answer Key Posted: 27 Nov 2016 09:26 AM PST CCE Worksheet Key Answers CCE WORKSHEET 3rd Week English Answer Key | Download ... தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRC அளவில்"தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள்பயிற்சி!

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிவழங்க திட்டம்...

27/11/16

பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி டிச.15 வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தி டிசம்பர் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம்.புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு நவ.8-ஆம் தேதி அறிவித்தது.
அதனையடுத்து மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களில் பழைய நோட்டுகளை நவம்பர் 24-ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மின்கட்டணம், குடிநீர் வரி உள்ளிட்டவற்றுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன.இந்நிலையில் பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. ஆனால் ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே மாற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிப்பு: எனவே, மின்சார கட்டணத்தையும் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தி டிசம்பர் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது:டிசம்பர் 15-ஆம் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகள் மின்கட்டணம் வசூலிக்கும் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால் மின் கட்டணத்துக்காக ரூ.1,000 நோட்டுகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பெறப்படாது என்று தெரிவித்தனர்.

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு!!

பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும்வகையில், அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. 
தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார்.இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், புதிய, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் மூலம், பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில், சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கும், மாதிரி தேர்வு வைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 வரையிலும், இந்த முறை தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?

வங்கியில் பணம் இல்லை.பெரும்பாலான ஏ.டி.எம்-கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் எடுக்க முடியவில்லை என்பதே அன்றாட குரலாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. நாட்டில் பெரும்பாலான மக்கள் அன்றையபொழுதை வங்கிகளிலேயே செலவழிக்கத் தொடங்கிவிட்டனர். 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும்.நாட்டில் இன்னும் நிலைமை சீரடையவில்லை.
வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அல்லாடி வருகின்றனர்.செல்லாது என்று அறிவித்தநாளில் இருந்து வங்கிகள் நாளுக்கொரு அறிவிப்பும் பொழுதொரு விதிமுறைகளையும் கடைபிடிக்கச் சொல்லி ரிசர்வ் வங்கி கூறி வருகிறது.முதல் நாள் அறிவிப்பை நாளிதழிலோ அல்லது ஊடகங்களிலோ அறிந்து கொள்ளும் பொதுமக்கள் மறுநாள் வங்கி செல்லும்போது வேறு ஒரு புதிய அறிவிப்பு அவர்களை வரவேற்கிறது. அந்த அறிவிப்பு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இதனால் வங்கி ஊழியர்களுடன் பொதுமக்கள்சண்டைபோட்டுக் கொள்கின்றனர். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் இல்லாத நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து கூட அத்தியாவசியச் செலவுகளுக்குப் பணம் எடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். அன்றாடம் மாறும் ஆர்.பி.ஐ-யின் புதிய உத்தரவுகளால் திணறுகின்றனர். வங்கிகளுக்குச் செல்வதற்கு முன்  சில தகவல்களையாவது தெரிந்துகொண்டு சென்றால் ஓரளவு குழப்பத்தில் இருந்து தப்பிக்கலாம். வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?

 1. 25.11.2016  முதல் வங்கிகளில் 500 ரூபாய் 1000ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது.

2. அடுத்த மாதம்  டிசம்பர் 30-ம் தேதி வரை தங்களுடைய வங்கி கணக்குகளில் தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம்.

3. ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கமுடியும்.

4. ஒரு முறைக்கு 24 ஆயிரம் ரூபாய் எடுத்தால் அதற்கு அடுத்த வாரம் தான் உங்கள் கணக்கில் இருந்து நீங்கள் பணம் எடுக்க முடியும்

5. ஏ.டி.எம்-களில் 2000 ரூபாய் மட்டுமே ஒரு நாளைக்கு எடுக்க முடியும்.

6. பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், பால் விற்பனையகங்கள், ரயில் முன்பதிவு மையங்கள் மற்றும் அரசு சேவைகளுக்குப் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 14 -ம் தேதி வரை ஏற்பார்கள். 1000 ரூபாய் தாள்களை எங்குமே செலுத்த முடியாது. வங்கிக் கணக்கில்மட்டுமே போட முடியும்

7.வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டுப் பணத்தை வாரத்துக்கு 5 ஆயிரம் என்கிற நிலையில் மாற்றிக் கொள்ளலாம் . வெளிநாட்டவர்கள் பணம் மாற்றும் போது அவர்களது விவரம் அவர்களுடைய பாஸ்போர்ட் தகவலுடன் பதிவு செய்யப்படுகிறது.

8. 2000 ரூபாய் தாளில் வெள்ளைப் பகுதியில் எழுதப்பட்டால் சொல்லாது என்ற தகவல் உண்மையல்ல.

9. உங்கள் கணக்கில் இருந்து  ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதிக்க மறுத்தால் அது குறித்து நீங்கள் ரிசர்வ் வங்கிக்குப்புகார் தெரிவிக்கலாம்.

10.புதிதாக வந்துள்ள 500 ரூபாய் தாளில் சில தவறுகள்உள்ளது என்றும், எனினும் அது செல்லும் என்றும் வங்கிகள் தரப்பில் கூறுகின்றனர்.   அதேபோன்று வாடிக்கையாளர்கள்  தங்களுக்குச் சொந்தமான பணத்தை மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்தலாம். சந்தேகம் ஏற்பட்டால் வங்கி ஊழியர்கள் பணத்தை ஏற்க மாட்டார்கள்.

இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுவருமானவரித்துறை விசாரணை நடத்தும்.

730 BT/PG POST NOV- 2016 PAY AUTHORIZATION ORDER



பணமில்லா வர்த்தகத்திற்கு 'Mobile App' தயாரிப்பு : ஏழைகளுக்கு மானியத்துடன் 'ஸ்மார்ட் போன்'

பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்கு விக்கும் நோக்கில், 'சர்காரி' என்ற பெயரில், 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த, 'ஆப்'பை பயன்படுத்த, மானிய விலையில், ஏழைகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கவும், அரசு திட்டமிட்டு உள்ளது.


'பழைய ரூபாய் நோட்டு செல்லாது' என, 8ம் தேதி, மத்திய அரசு அறிவித்தது. இதனால், பணப்புழக்கம் குறைந்து, அன்றாட செலவுக்கே மக்கள் தவிக்கும் சூழல் நிலவுகிறது. எனினும், 'டெபிட் கார்டு' அல்லது 'மொபைல் போன்' மூலம் பணம் செலுத்தும் வசதியுள்ளோர், தங்கள் தேவைக்கு அதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும், பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, மத்திய அரசு முனைந்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, பெட்ரோல் பங்க்குகள், பால் விற் பனை நிலையங் கள், கல்வி நிறுவனங்கள், ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள் என, அனைத்து இடங்களிலும் பயன்படுத்தும் வகை யில், 'சர்காரி' என்ற பெயரில், மின்னணு முறை யில் பணம் செலுத்தும், 'மொபைல் ஆப்' உருவாக்கப்படுகிறது.

அதன் மூலம், சிறிய தேவைகளுக்கு கூட, கையில் பணமின்றி, மின்னணு முறையில் பணம் செலுத்த முடியும். இதை பயன்படுத்த, 'ஸ்மார்ட் மொபைல் போன்' தேவை; எனவே,
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, மானிய விலையில் ஸ்மார்ட் மொபைல் போன் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையும், நிதியமைச்சகமும் இணைந்து நட
வடிக்கை எடுத்து வருகின்றன. இதுபற்றிய அறிவிப்புகள்,விரைவில் வெளியாகலாம் என, தெரிகிறது.

டாக்டர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு : அமைச்சர் தகவல்

தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும் ஜனவரியில் நடைபெறும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 
புதுக்கோட்டையில், 249 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவக் கல்லுாரி கட்டடம் கட்டப் பட்டு வருகிறது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்தாண்டு, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதலை பெற்று திறக்கப்படும். வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது.
தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்களின் பணியிடங்கள், அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.உடன் இருந்த, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு, மத்திய குழு, ஐந்து இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளது. இந்த இடங்களில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில், மத்திய சுகாதாரத்துறை ஈடுபட்டு வருவதாக, தமிழக அரசிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

8ம் வகுப்பு தனி தேர்வருக்குஜன., 4ல் தேர்வு

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, ஜன., 4ல், பொதுத் தேர்வு துவங்குகிறது.எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, 2017 ஜன., 4 முதல், 9 வரை, பொதுத் தேர்வு நடக்க உள்ளது; 8ம் தேதி விடுமுறை. 
இதன் விபரங்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

ஆதார்' விபரம் பதியாதவர்கள் ரேஷன் கார்டு ரத்து?

ரேஷனில், 'ஆதார்' எண் பதியாதவர்களின், ரேஷன் கார்டை ரத்து செய்வதாக வெளியான தகவலை, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. 
அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' எண், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு
செய்யப்படுகின்றன. ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற அலைபேசி , 'ஆப்' மூலமும், அந்த விபரங்களை பதியலாம்.ஆனால், பலர், ஆதார் விபரத்தை பதிவு செய்யாமல், அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது.இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், ஆதார் எண் பதியாத, 1,500 ரேஷன் கார்டுகளை, மாவட்ட உணவு துறை அதிகாரிகள் ரத்து செய்தாக, தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை, உணவு வழங்கல் உயரதிகாரிகள் மறுத்தனர்.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷனில், பலர், ஆதார் விபரம் பதிவு செய்யாமல் இருப்பதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது உண்மை; அதற்காக, ஆதார் பதியாத ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதாக வெளியாகும் தகவலை, மக்கள் நம்ப வேண்டாம்.
டிச., முதல், ஆதார் பதிவு செய்யாத வீடுகளில், அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை கண்டறிய உள்ளனர். எனவே, இதுவரை ஆதார் பதியாமல் உள்ளவர்கள், விரைவில், அந்த விபரத்தை வழங்கினால், விரைவாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


எத்தனை பேர் (கோடியில்)
ரேஷன் கார்டில் உள்ள

உறுப்பினர்கள் - 7.72
ஆதார் பதிவு
செய்தவர்கள் - 5.27
ஆதார் பதியாதவர்கள் - 2.45
அலைபேசி எண்
பதிவு செய்தவர்கள் - 1.68 

செவ்வாயில் தண்ணீர் 'நாசா' கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான சூழல் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் பணியில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம்(நாசா) தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலத்தில் இருந்து வரும் தகவல்களை ஆய்வு செய்கிறது.
இந்நிலையில், செவ்வாயில் உடோபியா பிளனிசியா பகுதியில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் தடிமனில் மணல் ஈரப்பகுதி உள்ளதாகவும், அது 12,100 கன கி.மீ., பரப்பளவுக்கு உள்ளதாகவும் 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பரப்பளவு அமெரிக்காவின் சுப்பீரியர் ஏரியின் பரப்பளவை விட பெரியது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் செவ்வாய் ஆராய்ச்சிக்கென 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியுள்ளது.

AEEO., அலுவலகங்களில் ஆசிரியர் - அதிகாரிகள் மோதல்

தொடக்க பள்ளிகளில், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், பாடம் நடத்தாமலும், 'ஓபி' அடிப்பதாக, புகார்கள் உள்ளன. பள்ளிக்கு வராத நாட்களிலும், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, முழு ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.
அதனால், ஆசிரியர்களின் பணப்பலன், ஊக்க ஊதிய நிலுவை தொகை போன்றவற்றை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், உடனடியாக அனுமதிப்பதில்லை. சில ஏ.இ.இ.ஓ.,க்கள், தாங்கள் ஆசிரியராக இருந்த போது, எந்த
சங்கத்தில் இருந்தனரோ, அதற்கு சாதகமாக செயல்படுவதும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற விவகாரத்தால், கோவை - சூலுார், புதுக்கோட்டை, அரிமளம், விராலிமலை, பொன்னமராவதி, காங்கேயம் ஆகிய இடங்களில், ஏ.இ.இ.ஓ., அலுவலக பணியாளர்களை, ஆசிரியர் சங்கத்தினர் சிறை பிடித்து, போராட்டம் நடத்தியுள்ளனர். கோவையில் இந்த பிரச்னைக்காக, இரண்டு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுஉள்ளனர். மற்ற மாவட்டங்களில், உயரதிகாரிகளின் விசாரணைக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர், ராஜேந்திர பிரசாத் மற்றும் பொதுச் செயலர், சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:
நிர்வாக பணிகளில், ஏ.இ.இ.ஓ.,க் களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அதை சமாளிக்க முடியாத ஆசிரியர்கள் சிலர், பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
அதனால், அலுவலக ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பிரச்னைக்கு, அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

சம்பளத்தைரொக்கமாக வழங்க முடிவு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சம்பளத்தில், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக வழங்க, சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், நாட்டில் பண புழக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், மூன்று மற்றும் நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சம்பளத்தில், 10ஆயிரம் ரூபாய் மட்டும், ரொக்கமாக வழங்க, முதல்வர் உத்தரவிட்டார்.

DSR - Image Format



ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரிக்கை

ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாட்டில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், திருவள்ளூர் மாவட்ட மாநாடு, பொன்னேரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் நடந்த மாநாட்டில், கதிரவன் முன்னிலை வகித்தார்.

பொன்னேரி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து, மாநாட்டு அரங்கம் வரை நடந்த ஆசிரியர்கள் பேரணியை முன்னாள் மாநில தலைவர் இளங்கோ துவக்கி வைத்தார். திருவள்ளூர் தொகுதி எம்.பி., வேணுகோபால், பொன்னேரி எம்.எல்.ஏ., பலராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர்.

மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஆறாவது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை களைய வேண்டும்; புதிய கல்வி கொள்கையை தேவையான மாற்றங்களுடன் அமல்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என,தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை

மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் உத்தரவுப்படி, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 15ம் தேதி முதல், தினசரி தேர்வு நடக்கிறது.

வகுப்பு நேரத்தில், பாடவாரியாக தேர்வு நடத்தி, மாணவர்களின் கற்றல் திறன் அறிந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டது. வினாத்தாள் தயாரிக்கும் பணிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது.மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் வாயிலாக, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின், 'இ-மெயில்' முகவரிக்கு, வினாத்தாள் அனுப்பப்பட்டது. ஆன்லைனில், வினாத்தாள் பள்ளிக்கு வந்ததால், அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்க, போதிய நிதியில்லை என, ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.
வினாத்தாள் அச்சடிப்பு குறித்து, தகவல் இல்லாததால், கல்வித்துறை அதிகாரிகளும் மவுனம் சாதித்தனர். இந்நிலையில், கடந்த, 21 ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து, உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


10 கேள்விகள்
இதில், 'சி.சி.இ., எனும் தினசரி கற்றல் திறனாய்வு தேர்வு வினாத்தாளை, ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு அளிக்க வேண்டாம். வினாக்களை கரும்பலகையில் எழுதி போட்டு, மாணவர்களின் நோட்டில் விடை எழுதுமாறு அறிவுறுத்தி, மதிப்பிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.
இந்த வினாத்தாளில், பாடவாரி யாக, 10 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒரே வரியில் சிந்தித்து விடையளிக்கும் படியாக, கேள்விகள் இருப்பதால், பெரும் ஆதரவை பெற்றது. இதற்கு, மாணவர்களுக்கு பிரத்யேக வினாத் தாள் வழங்காமல், கரும்பலகை யில் எழுதி போட்டு தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துவதில் நிறைய சிக்கல் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களின் புரிதலுக்காக, வண்ணங்கள் அறிதலுக்கான கேள்விகள் உள்ளன.
இதை, கரும்பலகையில் எழுதி அறிவது சிரமம். மேலும், பொருத்துதல், இணையற்ற படங்களை கண்டறிய, ஓவியம் வரைய வேண்டியுள்ளது. இதை மாணவர்களும், நோட்டில் வரைந்து விடையளிக்க வேண்டும்.
ஓய்வு நேரம் இல்லை
தேர்வு நடத்த, 10 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. தினசரி விடைகளை திருத்தி, மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, செயல்வழி கற்றல் அட்டைகளை நிரப்புவதால், அதிக எழுத்துப்பணியால் திண்டாடுகிறோம்.
இதில், திறனாய்வு தேர்வை நடத்தி, மதிப்பாய்வு செய்தால், ஓய்வு நேரம் கிடைக்க வழியில்லை. இதற்கு பதிலாக, வினாத்தாளிலே விடையளிக்கும் படியாக தேர்வுத்தாள் வடிவமைத்து, பள்ளிகளுக்கு வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிப்பாடல்கள்

26/11/16

CCE WORKSHEET TEST - IMPORTANT FORMS

அச்சு பிழையால் 'கலர்' மாறிய புதிய நோட்டு செல்லும்

மும்பை:'புதிதாக வெளியிடப்பட்ட, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் சிலவற்றில், அச்சுப் பிழையால் வண்ணம் மாறியுள்ளது; அந்த நோட்டுகள் செல்லும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த, பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவித்த மத்திய அரசு, புதிதாக, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நோட்டுகளில், சிலவற்றில் வண்ணம் மாறியுள்ளது உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து, ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
புதிய நோட்டுகள் வெவ்வேறு வண்ணங்களில் வந்துள்ளதாகவும், இதனால் குழப்பம் ஏற்படுவதுடன், கள்ள நோட்டு அச்சடிக்க வாய்ப்பு ஏற்படும் என, பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள நோட்டுகளில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இரு வகையான வண்ணங்களில் நோட்டுகளை வெளியிடவில்லை; 10 லட்சம் நோட்டுகளில், ஒரு நோட்டில் இவ்வாறு சில குறைபாடுகள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 

அவ்வாறு வெளியான நோட்டுகள் செல்லும்; அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்தி, மாற்று நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நான்கு அச்சகங்கள்

நம் ரூபாய் நோட்டுகள், நாட்டின் நான்கு பகுதிகளில் உள்ள அச்சகங்களில் உருவாகின்றன. மத்திய பிரதேசத்தின், தேவாஸ், மஹாராஷ்டிராவின், நாசிக்கில் உள்ள அச்சகங்கள், மத்திய அரசின் கீழுள்ள பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. 

கர்நாடக மாநிலம் மைசூரு, மேற்கு வங்கத்தின் சல்போனி ஆகியவை, ரிசர்வ் வங்கியின், ரூபாய் அச்சடிப்பு நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளன.

கறுப்பு பண 'டிபாசிட்டா?': அதிரடிக்கு அரசு தயார்

புதுடில்லி:கறுப்புப் பணத்தை வங்கியில், 'டிபா சிட்' செய்வோருக்கு, 60 சதவீத வரி மற்றும் அபராதம் விதிப்பது குறித்து, மத்திய அமைச்ச ரவை கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர வைக் கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை.

செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 நோட்டுகள் அனைத்தையும் திரட்ட, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதிக வரி விதிக்கப்படும் என்ற பயத்தில், அதை அழிப்பதை தடுக்கும் வகையில், தகுந்த வரியை விதிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து செலுத்தும் திட்டத் தில், 'வரி மற்றும் அபராதமாக, 45 சதவீதம் விதிக் கப்படும்'என, அறிவிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தாதோர், தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்யும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி, வரி மற்றும் அபராதமாக, 60 சதவீதம் வசூலிப்பது குறித்து கூட்டத்தில் முடி வெடுக் கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக, நடப்பு பார்லி., கூட்டத் தொடரிலேயே, வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டலில்' கட்டணம் ஆராய நிபுணர் குழு

புதுடில்லி: கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், அரசுக்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவது குறித்து ஆராய, நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி விபரம்: அரசு - மக்கள் இடையிலான பரிவர்த்தனைகளை, டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது குறித்து ஆராய, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 'நிடி ஆயோக்' தலைமை செயலர் அமிதாப் காந்த் தலைமையிலான இந்த நிபுணர் குழு, எந்தெந்த துறைகளில், எந்தெந்த பரிவர்த்தனைகளை, டிஜிட்டல் முறைப்படி செய்ய முடியும் என ஆலோசனை வழங்கும்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

புதிய பாடத்திட்டங்கள் எப்போது அமலாகும்?

பெலகாவி: “பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன; 2018 - 19 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்,” என, தொடக்க கல்வி துறை அமைச்சர் தன்வீர் செய்ட் தெரிவித்தார்.மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர்கள் அருண் சஹாபுரா, சோமண்ணா பேவினமடா, காங்கிரசின் தர்மசேனா ஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் தன்வீர் செய்ட் கூறியதாவது:மாநிலத்தில், 1ம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை மாற்றி அமைப்பதற்கு, வெவ்வேறு மொழிகளில் வல்லுனர்கள் அடங்கிய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.இது பற்றி, பர்கூரு ராமசந்திரா தலைமையிலான கமிட்டியுடன் விவாதிக்கப்படுகிறது. இக்கமிட்டி, அடுத்த மாதம், 8 அல்லது, 9ம் தேதியில் தாக்கல் செய்யும்.அந்த அறிக்கையை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கமிட்டி அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டாகிறது. இக்கமிட்டி, இதுவரை எந்த இடைக்கால அறிக்கையும் அளிக்கவில்லை. அறிக்கை தயாரிக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளதாக, தெரிவித்துள்ளனர்.கமிட்டி தலைவர் பர்கூரு ராமசந்திரப்பா, கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராகவும் இருப்பதால், அறிக்கை அளிப்பது தாமதமாகிறது.பாடப்புத்தகங்களை அச்சிட ஆறு தொகுப்புகள் கொண்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதால், அடுத்த கல்வி ஆண்டு புதிய பாடப்புத்தகங்களை கொண்டு வருவது சாத்தியமில்லை.எனவே, 2018 - 19ம் ஆண்டிலிருந்து புதிய பாடப்புத்தகங்கள் செயல்பாட்டுக்கு வரும். மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கும் வகையில், பாடப்புத்தகங்கள் அமைக்கப்படும். வல்லுனர் கமிட்டி, அரசுக்கு அறிக்கை அளித்த பின், ஆசிரியர்கள் தொகுதியின் எம்.எல்.சி.,க்களுடன் கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்து, ஆலோசனை பெறப்படும்.மாநிலத்தில் எந்த அரசு பள்ளியும் மூடப்படாது. இவ்விஷயத்தில் யாருக்கும் சந்தேகமோ, அச்சமோ வேண்டாம். பெற்றோரும், மாணவர்களும் பயப்பட வேண்டாம்.அரசு பள்ளிகள் அபிவிருத்தி செய்யப்படும். அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த, 28 அம்சங்கள் கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.ஏழைகள், வசதியானவர்கள் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு அரசு கடிவாளம் போடும். தொழில்நுட்பம் அடிப்படையிலான கல்வி கற்பிப்பு திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வீடு ஒப்படைக்க தாமதமா? வருது புதிய கட்டுப்பாடு!

உறுதி அளித்த தேதியில், வீட்டை ஒப்படைக்காவிட்டால், கட்டு மான நிறுவனங்கள், 10.9 சதவீத வட்டியுடன், பணத்தை திருப்பி தர வேண்டும். அதற்கேற்ற வகையில், புதிய ரியல் எஸ்டேட் சட்ட விதிகள், அடுத்த ஆண்டு மே மாதம் அமலுக்கு வருகின்றன.
வீடு, மனை விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்த, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை, மத்திய அரசு இயற்றியுள்ளது. முதற்கட்டமாக, யூனியன் பிரதேசங்களில், இந்த சட்ட விதிகள் அமலாகியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட, பிற மாநிலங்களில், 2017 மே முதல், இந்த விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவை, நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு இறுதி செய்துள்ள வரைவின்படி, விற்பனை பத்திரங்கள் இருக்க வேண்டும்.
விதிமுறைகள் என்ன?
l கட்டுமான நிறுவனம், விற்பனை பத்திரத்தில் குறிப்பிட்ட தேதியில், பணிகளை முடித்து, பணம் செலுத்தியோரிடம், வீட்டை ஒப்படைக்க வேண்டும்l தாமதமானால், வீடு வாங்கியவர் செலுத்திய தொகைக்கு, 10.9 சதவீத வட்டி அளிக்க வேண்டும்l தாமதத்தால் விற்பனை ஒப்பந்தம் ரத்தானால், 45 நாட்களுக்குள், கட்டுமான நிறுவனம் பெற்ற தொகையை திருப்பித்தர வேண்டும்l 'ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டாம்' என, பணம் செலுத்தியவர் விரும்பினாலும், தாமத காலத்திற்கு வட்டி தொகையை பெற, அவர் தகுதி பெறுவார்l மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை காரணங்களால், கட்டுமான பணிகள் தாமதமானால், அத்தகைய சூழலில், பில்டர் அபராதம் செலுத்த வேண்டியதில்லைl வீடு வாங்குவோர், உரிய காலத்தில் தொகையை செலுத்தாவிட்டால், ஒப்பந்தத்தை, பில்டர்கள் ரத்து செய்யலாம் l ஒரு குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்குவோருக்கு, அதில், எத்தனை வீடுகள் கட்டப்படுகின்றன, பரப்பளவு, பொது பயன்பாட்டு இடங்கள், வாகன நிறுத்துமிட ஒதுக்கீடு போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்l புதிய பத்திரத்தை பதிவு செய்யும் போது, இந்த விதிகளை கட்டுமான நிறுவனங்களும், வீடு வாங்குவோரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த விதிகள், பணத்தை வாங்கி, மக்களை அலைக்கழிக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமையும்.

தேசிய திறனாய்வு தேர்வு:நவ., 28ல் விடைக்குறிப்பு

சென்னை:'தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு, வரும், 28ல் வெளியாகும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரு கட்ட திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடந்தது.'தேர்வு வினாத்தாளுக்கு, தற்காலிக விடைக்குறிப்புகள், வரும், 28ல், வெளியாகும். அவற்றை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சந்தேகங்கள் இருந்தால், இயக்குனரின், directordge.tn@nic.in என்ற முகவரிக்கு, வரும், 30க்குள் தகவல் அனுப்பலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மறுகூட்டல் 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வு, மறுகூட்டல் முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான முடிவு, நேற்று வெளியானது.
தேர்வுத் துறை யின், www/tndge.in என்ற இணையதளத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம். 'பதிவெண் இல்லாதவர்கள், ஏற்கனவே உள்ள மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என, எடுத்துக் கொள்ள வேண்டும். 'மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்' என, தேர்வுத் துறை இயக்ககம் கூறியுள்ளது.

ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி., என்ற உயர்கல்வி தொழில்நுட்ப கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர, ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ் என்ற, இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, ஏப்., 3ல் எழுத்துத் தேர்வும், ஏப்., 9, 10ல், ஆன்லைன் வழி தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்கு, டிச., 1 முதல், 31 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் பங்கேற்க, தமிழக அரசு பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., உட்பட, 54 பாடத்திட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும், 132 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. வெளிநாட்டில் இருப்போர், ஜே.இ.இ., மெயின் தேர்வை எழுத, துபாய், பக்ரைன், மஸ்கட், ரியாத் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
குஜராத்தியில் எழுதலாம் : ஜே.இ.இ., மெயின் தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி என, ஏதாவது ஒரு மொழியில் எழுத அனுமதி உள்ளது. தமிழிலும், இத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும், ஜே.இ.இ., தேர்வை எழுதலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் உட்பட, பல மாவட்டங்களில் குஜராத்தி மொழி பேசுவோர் பரவலாக உள்ளனர். 

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு

பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும் வகையில்,
அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், புதிய, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் மூலம், பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில், சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கும், மாதிரி தேர்வு வைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 வரையிலும், இந்த முறை தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில்... மாற்றலாம்!:டிச., 30 வரை வங்கிகளில் 'டிபாசிட்' செய்யலாம்:பணப்புழக்கத்தை சீராக்க மத்திய அரசு நடவடிக்கை

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றுவதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. எனினும், 'செல்லாத நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் கொடுத்து, பணம் பெற்றுக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அது போல, முன்னரே அறிவிக்கப்பட்ட படி, டிசம்பர், 30 வரை, பழைய நோட்டுகளை வங்கி களில், 'டிபாசிட்' செய்தும், புதிய கரன்சியாக எடுத்துக் கொள்ளலாம்.


கள்ள நோட்டு மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்க, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது' என, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 8ல் அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுகளை, நவ., 24ம் தேதி வரை, வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் தரப்பட்டது; டிச., 30 வரை, வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

முதலில், 'ஒரு நாளைக்கு, 4,000 ரூபாய் வரை மாற்றலாம்' என, அறிவிக்கப்பட்டது; பின், 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. மேலும், ஒருவர், ஒருமுறை மட்டுமே பணத்தை மாற்றும் வகையில் விரலில் மை வைத்து, விதிமுறை கடுமையாக்கப்பட்டது.


பணப் புழக்கம் குறைவு


வங்கிகளில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டதால், பணப் புழக்கம் குறைந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றுவதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. எனினும் குறிப் பிட்ட சில சேவைகளுக்கு, டிச., 15ம் தேதி வரை, பழைய, 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம்என, மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. 


இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கை:


செல்லாத நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, பணம் பெறுவதற்கான அவகாசம் முடிந்து விட்டது. இனி, செல்லாத ரூபாய் நோட்டுகளை, டிச., 30 வரை, வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த முடியும்.


அரசின் நோக்கம்


ஏற்கனவே அறிவித்த படி, செல்லாத ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக பெற லாம். ஒருவர், அதிகபட்சமாக, 2,000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும். 

பணப் புழக்கத்தை சீராக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்கு இல்லா தோர், இனியா வது வங்கி கணக்கு துவக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கிளை, மாநில தலைநகரங்களில் மட்டுமே உள்ளது.மற்ற பகுதிகளில் வசிப்போர், தங்களிடம் உள்ள செல்லாத நோட்டு களை, வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்து, பணமாக மாற்றலாம் என்பது மட்டுமே அவர்களுக்கு உள்ள ஒரே வழி.

டிஜிட்டல் பரிவர்த்தனை

லோக்சபாவில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி அளித்த பதிலில் கூறியதாவது:கரன்சி பணப் புழக்கத்தை குறைத்து, 'டெபிட், கிரடிட் கார்டு கள்' மூலம் பரிவர்த்தனை செய்வதை ஊக்கு விக்க, அரசு தீவிரம் காட்டுகிறது. கார்டு பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்தால் தான், கறுப்புப் பணம் கட்டுக்குள் வரும். எல்லா தரப்பு மக்களிடமும் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்த னையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம். 

ஆன்லைனில், 'ஷாப்பிங்' செய்வதை ஊக்கு விக்க, அரசு விரும்புகிறது. கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை ஏற்கப்பட்டுவிட்டால் வரி வரு வாயை பெருக்க முடியும். மின் கட்டணம் முதல் ஷாப்பிங் வரை, எல்லா வித பரிவர்த் தனைகளையும், ஒரே ஒரு எண் மூலம் செலுத் தும் ஒருங்கிணைந்த முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாட்டில், 80 கோடி டெபிட் கார்டுகள் உள்ளன. இதில், 40 கோடி கார்டுகள், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க அதிகளவில் பயன்படுத்தப் படுகின்றன. கார்டு பரிவர்த்தனை மூலம் கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும்; மோசடிகளை யும் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Directorate of Government Examinations ESLC - Jan 2017 - Private Candidates Time Table

சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு - புதிய விதிமுறைகள் அரசு ஊழியர்களுக்கு சிக்கல்....

Students Adhaar format details....

வங்கிகளில் ரூ. 500, 1000 இனி மாற்ற முடியாது. ஆனால் DEPOSIT செய்யலாம்.. டிச. 15 வரை மின், குடிநீர் கட்டணத்திற்கு செலுத்தலாம்

டெல்லி: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மின்கட்டணம்உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரைபயன்படுத்த மத்திய
அரசு அனுமதிஅளி்த்துள்ளது.

ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்துபொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்துவருகின்றனர். எதிர்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றனர். இதனால்நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியுள்ளது. மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வங்கிக் கவுண்டர்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை இன்றுநள்ளிரவுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் எனமத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்துமத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

குடிநீர்க்கட்டணம், மின்கட்டணம் செலுத்த பழைய ரூபாய்நோட்டுக்களை டிசம்பர் 15 வரை பயன்படுத்தலாம்

500, 1000 ரூபாய்நோட்டுக்களை இன்று நள்ளிரவுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்

நள்ளிரவுக்குமேல் ரூபாய் நோட்டுக்களை மாற்றமுடியாது

நள்ளிரவுக்குமேல் பழைய ரூபாய் நோட்டுக்களைமாற்றுவது நிறுத்தப்படும்

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களை பழையரூபாய் நோட்டுக்கள் மூலம் பெறலாம்

500, 1000 ரூபாய்நோட்டுக்களை வங்கிக் கணக்கில் டெபாசிட்செய்யத் தடை இல்லை

மத்திய, மாநில, அரசு பள்ளி, கல்லூரிகளில்ரூ2000 வரை பழைய 500 ரூபாய்நோட்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்

பழைய500 ரூபாய் மூலம் ப்ரீபெய்டு மொபைல்களில்ரூ500 வரை ரீசார்ச் செய்யலாம்

வங்கிகளில்பாஸ்போர்ட்டை காண்பித்து வெளிநாட்டினர் பணம் பெறலாம்

வெளிநாட்டினர்தங்கள் நாட்டு பணத்தை வாரத்திற்குரூ5000 வரை மாற்றிக் கொள்ளலாம்

பழைய நோட்டுகளை பயன்படுத்தி டிச.3 முதல் டிச15 சுங்க கட்டணம் செலுத்தலாம்


கூட்டுறவுஅங்காடிகளில் ஒரு முறை மட்டும்ரூ5000 வரை பொருட்களை வாங்கலாம்

1000 ரூபாய் நோட்டுக்கு 'கோவிந்தா'.. விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளில் ரூ. 500 மட்டுமே பயன்படுத்தலாம்!

சென்னை: மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்புகளில்முக்கியமானது இது. அதாவது 1000 ரூபாய்நோட்டு முழுமையாக இன்று
முதல் பயன்பாட்டிலிருந்துவிலக்கப்படுகிறது. விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளில்500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

டிசம்பர்15ம் தேதி வரை குடிநீர்க்கட்டணம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்கானகட்டணத்தை செலுத்த 500 ரூபாய் நோட்டை அனுமதிப்பதுகுறித்த முடிவை இன்று மாலைநிதியமைச்சகம் அறிவித்தது. அதில் இடம் பெற்றுள்ளமுக்கிய அறிவிப்பு என்னவென்றால், அந்த கட்டணத்தை 500 ரூபாய்நோட்டுக்களை மட்டுமே செலுத்தி சலுகையைபயன்படுத்த முடியும்.


மாறாக. 1000 ரூபாய் நோட்டு வாங்கப்பட மாட்டாதுஎன்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 1000 ரூபாய்நோட்டு இன்று நள்ளிரவோடு முற்றாகவிடைபெறுகிறது. இருப்பினும் வங்கிகளில் தங்களது கணக்குகளில் 1000 ரூபாய்நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

Revision in Interest Rates on Domestic Bulk Term Deposits (Rs.1-10 crs) W.E.F. 24.11.2016

ஒன்றியம் விட்டு ஒன்றிய அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு ! - கற்றல் உபகரணங்களை வாங்குவதில் முறைகேடா??

ALL "SLAS" STUDY MATERIALS & OLD QUESTION PAPERS

CCE WORKSHEET TEST - IMPORTANT FORMS

அஞ்சலகங்களில் இனி டெபாசிட் மட்டுமே செய்யலாம்.

செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 25) முதல் அஞ்சலக சேமிப்பு கணக்கில் டெபாசிட் மட்டுமே செய்யலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பொதுமக்கள்பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வந்தனர்.

அதன்படி, கோடிக்கணக்கிலான பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு ரூ.2000, ரூ.100 உள்ளிட்ட நோட்டுகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து அஞ்சல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசு விதித்திருந்த காலக்கெடு நவம்பர் 24 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அத்துடன், மை வைக்கும் முறைக்கு பிறகு அஞ்சலகங்களில் பணம் மாற்ற வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் பழைய ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

சேமிப்பு கணக்குக்கு மட்டும்: ஆனால், அரசு நிர்ணயித்த காலக்கெடு வரை அஞ்சலக சேமிப்பு கணக்கில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். அதுபோல், சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை நேரடியாகப் பெறலாம்., ஏடிஎம்-களில் போதுமான அளவுக்கு ரூ.100 நோட்டுகள் நிரப்பப்பட்டு வருகின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

'EMIS' சர்வரை மேம்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை.

கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான (எமிஸ்) இணையதள சர்வரை மேம்படுத்த வேண்டும் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:
தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்களை தொகுத்திடும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறை (எமிஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து 47 வகையான விவரங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எமிஸ் சர்வரின் வேகம் மிகக் குறைவாக உள்ளது. மாணவரின் ஜாதி உட்பிரிவுகளைக் குறிப்பிடுவதற்கான வழிகள் இல்லை. மேலும் எடை, உயரம் உள்ளிட்ட மாறுபடக் கூடிய தேவையற்ற விவரங்களையும் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பணியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்கள் வழக்கமான கல்வி, பள்ளி நிர்வாகப் பணிகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, இந்த முறையில் தேவையற்ற விவரங்களைக் கேட்பது தவிர்க்கப்படவேண்டும் என்பதோடு, "எமிஸ்' சர்வர் வேகம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்..

சான்றிதழ் சரிபார்ப்பு பணி 'ஜவ்வு' : 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு ஆபத்து?

மூன்று ஆண்டுகளாக, சான்றிதழ் சரிபார்க்காமல், அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை முடித்து, ஓர் ஆண்டை தாண்டி விட்டது. 
ஆனால், அவர்களின் சான்றிதழ்கள் உண்மையானதா என்பதை, அதிகாரிகள் சரிபார்த்து முடித்தால்தான், ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு கிடைக்கும். பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில், சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணிகள், முடியவில்லை. இதனால், திருப்பூர் மாவட்டத்தில், 600 பேர் உட்பட, மாநிலம் முழுவதும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் ஆகாமல் உள்ளனர். மேலும், விடுப்பு, பணப் பலன்கள் போன்றவை, நிறுத்தப்பட்டுஉள்ளன.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக்கல்வி இயக்குனரை சந்தித்து, முறையிட்டுள்ளனர். இத்தகையோரிடம், பாடம் நடத்தும் ஆர்வம் குறைந்துள்ளதால், 10ம் வகுப்பில், தேர்ச்சி பாதிக்கும் என, ஆசிரியர்கள் கூறினர்.

நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விநாடி-வினா போட்டி

தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வெளியிட்ட சுற்றறிக்கை:

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழு வதும் நடுநிலைப்பள்ளி மாணவர் கள் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளவும், 
அவர்களின் அறிவுக்கூர்மையை மேம்படுத்தவும் அம்பேத்கர் விநாடி-வினா போட்டியை நேரடி யாகவும், ஆன்லைன் வழியாக வும் நடத்தஅனுமதி அளிக்கப் படுகிறது. இப்போட்டிகள் அரை யாண்டு விடுமுறை மற்றும் ஜனவரி மாத விடுமுறை நாட்களில் நடத்தப்படும்.

வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழக அரசு தகவல்.

வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழக அரசு தகவல் | தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடிக்கும் மாணவ, மாணவிகள், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் வரை பெயர் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 36 ஆயிரத்து 843 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 42 லட்சத்து 33 ஆயிரத்து 343 பேர் பெண்கள். அந்த பெண்களில் 9 லட்சத்து 6 ஆயிரத்து 962 பேர் தொழில் கல்வியாளர்கள், 10 ஆயிரத்து 970 பேர் விதவைகள், 43 ஆயிரத்து 64 பேர் கலப்புத் திருமணம் செய்தவர்கள், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 509 பேர் மாற்றுத்திறனாளிகள்.

அரசு பள்ளிக்கூடங்களில் துப்புரவு ஊழியர்கள் நியமனம் அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், 
மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் கழிவறைகளை சுத்தம் செய்ய துப்புரவு ஊழியர்களை நியமிக்கப்பட உள்ளனர். இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா விதி எண்-110 அறிக்கையில் அறிவித்தார். அந்த அறிவிப்பையொட்டி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு

தனித்தேர்வர்களுக்காக அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 
மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். செப்டம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 27,397 ஆகும். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை 227 ஆகும். மறுகூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 455. இதில் மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள விடைத்தாள்களின் எண்ணிக்கை 5 ஆகும்.

மேற்படி தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்களை பதிந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் www.tnd-ge.in என்ற இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

SLAS Test என்றால் என்ன?

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க,9 மற்றும் 10ம் வகுப்பு  மாணவர்களுக்கு நவம்பர் 30ம் தேதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்குவரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமைஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்.

ரூ.500 பழைய நோட்டுகளை டிச.15 வரை பயன்படுத்த அனுமதி.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால், நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவுவதைக் கருத்தில் கொண்டு, பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
அதே நேரத்தில் ரூ.1,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிவித்தது. அப்போது, ரூ.1,000, ரூ.500 நோட்டுகளைக் கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக, ரூ.100, ரூ.50, ரூ.20 என குறைந்த மதிப்புடைய நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும், நவம்பர் 24-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம், வியாழக்கிழமை (நவ.24) நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், பழைய ரூ.500 நோட்டுகளை மட்டும் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி, நகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.2,000 வரை கட்டணம் செலுத்துவதற்கு பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.

பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பலாம்

சுங்கக் கட்டணம் செலுத்தலாம்

மத்திய, மாநில அரசுகளின் கூட்டுறவு பண்டக விற்பனை சாலைகளில் ஒரு முறை ரூ.5,000 வரை பொருள்கள் வாங்கலாம்.

குடிநீர் கட்டணம் செலுத்தலாம்

மின் கட்டணம் செலுத்தலாம்

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான தொகையை செலுத்தவும், மருந்தகங்களிலும் மருந்துகளை வாங்கலாம்

சமையல் எரிவாயு உருளை வாங்கலாம்

மெட்ரோ, புறநகர் ரயில்களில் டிக்கெட் வாங்குவதற்கும், ரயில் கட்டணம் செலுத்தலாம்

பேருந்து கட்டணம் செலுத்தலாம்

விமானக் கட்டணம் செலுத்தலாம்

ரூ.500 வரையிலான செல்லிடப்பேசி ரீசார்ஜ் செய்வதற்கும் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.

WIFS(Weekly Iron Folic Acid Supplementation)வாராந்திர போலிக் அமிலம்அடங்கிய இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் - படிவங்கள்








TET தளர்வு மதிப்பெண் 2012ல் எழுதியோர் எதிர்பார்ப்பு.

'2012ம் ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) எழுதியோருக்கும், 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்க வேண்டும்' என எதிர்பார்ப்பு நிலவுகிறது.தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டது.
2011ல் தேசிய கல்வி வாரியம் வெளியிட்ட வழிகாட்டுதல் குறிப்பில், 'அந்தந்த மாநிலம் விரும்பினால் இடஒதுக்கீடு பிரிவின் அனைவருக்கும் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கலாம்' என குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில், 2013ல் எழுதிய தேர்வர்களுக்கு 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்கி, அரசு உத்தரவிட்டது. இதனால் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) என்பதில் இருந்து 55 சதவீதமாக (82 மதிப்பெண்) குறைக்கப்பட்டது.'இது, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவருக்கு மட்டும்தான்' என தெரிவிக்கப்பட்டது.

'இச்சலுகையை 20௧௨ல் தேர்வு எழுதியவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்' என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.டி.இ.டி., தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், 'அரசின் கொள்கை முடிவுப்படி 2013ல் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கியது செல்லும்' என உத்தரவிடப்பட்டது. 2012ம் ஆண்டு தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்தன. அந்த ஆண்டுக்கும் தளர்வு மதிப்பெண் வழங்கினால் பலர் பயன்பெறுவர் .

பள்ளிக் கல்வி - அனைத்து வகை மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்கவும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனைப் பெட்டி வைக்கவும் உத்தரவு - செயல்முறைகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -பழைய சான்றிதழ் பெற சிறப்பு முகாம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -பழைய சான்றிதழ் பெற சிறப்பு முகாம்

Directorate of Government Examinations ESLC - Jan 2017 - Private Candidates Time Table

24/11/16

2016 - 2017 ஆம் கல்வியாண்டில் புதிதாக துவக்கப்பட உள்ள 5 துவக்கப்பள்ளிகளின் பட்டியல்

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

புதுடில்லி:'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: 


சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வை நிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித் திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின் ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில் 
கூறப்பட்டுள்ளது.

ஸ்காலர்ஷிப்' தேர்வு அறிவிப்பு

சென்னை: எட்டாம் வகுப்பு மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, தேர்வு நடத்தப்படுவது வழக்கம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாத உதவித்தொகை, அரசால் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, 2017 ஜன., 28ல் நடத்தப்படுகிறது. விண்ணப்பங்களை,
வரும், 23 முதல், டிச., 2 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். டிச., 5க்குள், விண்ணப்பிக்க வேண்டும்..

TNPSC GR1 தேர்வுக்கு டிகிரி மட்டும் படித்திருந்தால் தகுதி அல்ல; பதவி சார்ந்த சிறப்பு படிப்புகளையும் படித்திருக்க வேண்டும்

குருப் 1 தேர்வர்களுக்கு வணக்கம்..

பல வருடங்களாக நடைமுறையில் இருந்த டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுகளுக்கான கல்வித்தகுதி டிகிரியாக இருந்ததை எவ்வித அறிவிப்புமின்றி ரத்து செய்துள்ளது. ..
தற்போது அந்தந்த பதவிகளுக்குறிய சிறப்பு படிப்புகளையும் படித்து முடித்திருக்க வேண்டும்.

உதாரணமாக சட்ட அலுவலர் பணிக்கு பிஏ,பிஎல் அல்லது எல்எல்பி முடித்திருக்க வேண்டும். .

விரிவான விளக்கத்திற்கான படம்.

சிறுசேமிப்பு டெபாசிட் செய்ய பழைய நோட்டுக்கு தடை

சிறுசேமிப்புதிட்டங்களில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு டெபாசிட் செய்யக்கூடாது என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்துநிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழையரூ.500, ரூ.1,000 நோட்டை சிறுசேமிப்பு திட்டங்களில்துவங்கப்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக நிதியமைச்சகம்ஆலோசனை நடத்தியது. இதில், சிறு சேமிப்புதிட்டங்களில் இந்த நோட்டை டெபாசிட்செய்ய அனுமதிக்க தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்று கூறப்பட்டுள்ளது.

Post Office Savings Accounts are excluded to Deposit of old demonetized notes of Rs. 500 and Rs. 1000 - Finmin Order dtd 23/11/2016

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது பிறந்த நாள் விழா 26.11.2016 கொண்டாடுதல் குறித்து கடிதம்




Today All HM"s SSA Training School Entries Website Link....

IGNOU HALL TICKET DOWNLOAD DEC-2016 EXAM

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

புதுடில்லி:'சரியாக வேலை செய்யாதமத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுசம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து
உள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்தியபணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ளபதிலில் கூறியுள்ளதாவது:

சரியாகவேலை செய்யாத மத்திய அரசுஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வைநிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன்பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்தியஅரசு ஏற்றுள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித்திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின்ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில்

கூறப்பட்டுள்ளது.

PGTRB:-முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு

தமிழ்நாடுஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒருவாரத்தில் வெளியாக உள்ளது.தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம்எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில்,
1,500 இடங்கள் காலியாக உள்ளன. 'விரைவில் நேரடி நியமனம் நடக்கும்' என, மார்ச்சில், டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், இதுவரை நியமனபணிகள் துவங்கவில்லை.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடமிருந்து, டி.ஆர்.பி.,க்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது. இதனால், முதுநிலை ஆசிரியர்நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., ஒரு வாரத்தில் வெளியிடும் என, கல்வித்துறை வட்டாரங்கள்தெரிவித்தன.

CCE - SECOND WORK SHEET EVALUVATION - ENGLISH MEDIUM -Maths,Science & Social

ரேஷனில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் வீடுகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு


ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தராமல்இருப்பதால், வீடுகளில் ஆய்வு செய்ய, உணவுதுறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், இலவசஅரிசி வழங்கப்படுகிறது. ரேஷனில்
வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 3,450 கோடி ரூபாய் செலவு செய்கிறது. கடந்த, 1ல் இருந்து, உணவுபாதுகாப்பு சட்டம் அமலானதால், ஐந்துமற்றும் அதற்கு மேல் உள்ளகுடும்பங்களுக்கு, கூடுதலாக இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல்செலவாகும்.


அரிசி கார்டு வைத்துள்ள பலர், ரேஷன் பொருள் வாங்காததால், ஊழியர்கள்முறைகேடு செய்கின்ற னர். இதை தடுக்க,'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ரேஷன்கடை களில், 'பாயின்ட் ஆப்சேல்' கருவி வழங்கப்பட்டுள் ளது. அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' விபரம் பதியப்படுகிறது. பலர், ஆதார் விபரம்தராமல் உள்ளதால், வீடுகளில் ஆய்வு நடத்த, உணவுதுறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:இன்றையநிலவரப்படி, 2.09 கோடி ரேஷன் கார்டுகளில்,7.90 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

அதில், 5.20 கோடி பேர் ஆதார் விபரம்தந்துள் ளனர்; மற்றவர்கள் தரவில்லை. அதாவது, 83 லட்சம் ரேஷன் கார்டுகளுக்குமட்டுமே, ஆதார் விபரம் தரப்பட்டுள்ளது.


இதனால்,ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணிதாமத மாகி வருகிறது. ஏன்ஆதார் விபரம் தராமல் உள்ளனர்என்பதை கண்டறிய, டிச., முதல், வீடுகளில்ஆய்வு செய்யப்படும். ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, 'மொபைல் போன் ஆப்' மூலமும், ஆதார் விபரம் பதியலாம். அதை, பலர் பயன்படுத்தா மல் உள்ளனர்.இவ்வாறுஅவர் கூறினார்.

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

மீண்டும் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள்-DINAMALAR

புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்துசெய்யக்கோரி, ஆசிரியர்சங்கத்தினர்போராட்டங்களைதுவங்கியுள்ளதால், பள்ளிகல்வித்துறைக்கு, மீண்டும்நெருக்கடிஏற்பட்டுள்ளது.

கோரிக்கை : புதியபங்களிப்புஓய்வூதியதிட்டம்ரத்து, அகவிலைப்படி
உயர்வு, ஆசிரியர்கள்பணியிடத்தைநிரப்புதல்உள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்தி, கடந்தஆண்டு, ஆசிரியர்கள்நடத்தியதொடர்போராட்டம், தமிழகஅரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும்கடும்நெருக்கடியைஏற்படுத்தியது. சங்கங்களுடன்அரசுபேச்சுநடத்தி, பிரச்னையைதற்காலிகமாகமுடிவுக்குகொண்டுவந்தது. 
இந்நிலையில், ஆசிரியர்சங்கங்கள்மீண்டும்போராட்டத்தைதுவங்கியுள்ளன. தமிழ்நாடுமுதுநிலைபட்டதாரிஆசிரியர்கழகம், இருவாரங்களுக்குமுன், போராட்டத்தைதுவக்கியது. தமிழகஆரம்பபள்ளிஆசிரியர்கூட்டணி, 20ம்தேதி, மாவட்டதலைநகரங்களில், ஆர்ப்பாட்டம்நடத்தியது.

ஆலோசனை : தமிழ்நாடுஉயர்நிலைமற்றும்மேல்நிலைப்பள்ளிபட்டதாரிஆசிரியர்கழகம், வரும், 25ம்தேதியும், தமிழ்நாடுதொடக்கப்பள்ளிஆசிரியர்மன்றம், வரும், 27ம்தேதியும், போராட்டங்களைஅறிவித்துள்ளன. பிறஆசிரியர்சங்கங்களும்போராட்டத்திற்குதயாராகிவருகின்றன. பள்ளிகளில், அரையாண்டுதேர்வுதுவங்கஉள்ளது. இறுதிமற்றும்பொதுத்தேர்வுக்குமாணவர்கள்தயாராகும்நிலையில், ஆசிரியர்சங்கங்கள்மீண்டும், போராட்டத்தில்குதித்துள்ளது, கல்விஅதிகாரிகளைகவலையில்ஆழ்த்தியுள்ளது. இதற்கு, எப்படிதீர்வுகாண்பதுஎன, அவர்கள்ஆலோசித்துவருகின்றனர்.