யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/16

காலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான, அரசு உத்தரவை வெளியிடாவிட்டால், ஜனவரியில் நடைபெறும் மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,'' என அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.


தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில் திருமங்கலத்தில் நடந்த ஓய்வூதியர் தின விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2003ம் ஆண்டிற்கு பின்னர், அரசு ஊழியர் சங்க அமைப்புகளின் சார்பில் வலுவான போராட்டம் நடத்தப்படவில்லை. அரசு ஊழியர்களையும், பெண் ஊழியர்களையும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களையும் ஒன்று திரட்டுவதில் பிரச்னையும், பலகீனமும் உள்ளது. அரசு நிர்வாக பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் உண்மை நிலை மற்றும் கோரிக்கை குறித்து முறையாக ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்வதில்லை. அவர்கள் ஆட்சியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடைவெளி ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையை மாற்ற நாம் முன்பு போல் ஒன்று திரள வேண்டும். நமக்குள் கூட்டு சக்தியை உருவாக்க வேண்டும். பெண் ஊழியர்கள் உட்பட அத்தனை அரசு ஊழியர்களும் சென்னையில் ஒன்று திரண்டால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து விடலாம். 3.5 லட்சம் தொகுப்பூதிய பணியாளர்களும் ஒன்று திரண்டால் தொகுப்பூதிய முறையை மாற்றி விடலாம். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் 20 சதவீதம் உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்குவது, தொகுப்பூதிய திட்டத்தை ஒழிப்பது, மீண்டும் நிர்வாக தீர்ப்பாய சிறப்பு குழு அமைப்பது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இவை நிறைவேறாவிட்டால், திருவண்ணாமலையில் ஜனவரி 6, 7, 8, தேதிகளில் நடக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பிளஸ் 2 தனித்தேர்வு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 தனித்தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோரிடம் இருந்து ‘ஆன்-லைனில்’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.


தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ‘ஆன்-லைனில்’ பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ‘ஆன்லைனில்’ விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான அறிவுரை ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

ஒப்புகை சீட்டு

‘ஆன்-லைனில்’ விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வு துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே ஒப்புகைச் சீட்டை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.. வாழ்க்கைக்கு உதவும் கல்வியே சிறந்தது - ஜெர்மன் அறிஞர் பேச்சு

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர். வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்று கொண்டால் சிறப்பாக இருக்கும். மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை என ஜெர்மன் நாட்டை சேர்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர். நிகழ்வுக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன்,எல்.ஐ.சி.வினை தீர்த்தான், அழகப்பா பல்கலைகழக அலுவலர் காளைராஜன், மணலூர் அழகு மலர் பள்ளி தாளாளர் யோகலேட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேசிய சுபாஷினி, நிறைய வாசித்தால் நல்ல குணங்கள் ஏற்படும்.வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்று கொண்டால் சிறப்பாக இருக்கும். மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.ஜெர்மானியர்கள் கடமை உணர்வு அதிகம் உள்ளவர்கள்.அங்கு இயற்கை சூழ்நிலை நன்கு பாதுகாக்கபட்டுள்ளது. இயந்திரவியல் கல்வி முறை அதிகம். அறிவை ஆக்க பூர்வமாக பயன்படுத்தும் நாடுகளில் ஜெர்மன் முன்னிலை வகிக்கிறது. jerman tamil marapu arakattalai president subhashini discussion with school student தமிழகத்தில் தொன்மையான விசயங்களான கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும். கற்கும் பருவத்தில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.கணிதம், கணிபொறி தொடர்பான அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் பெரிய வெற்றிகளை அடையலாம். புத்தகங்களை நிறைய வாசித்தல் நல்ல குணங்கள் உண்டாகும். இனத்தின் வரலாறை பாதுகாப்பதுதான் சந்திதியனரின் முக்கிய கடமை. ஜெர்மன் நாட்டில் அதிகமான வளர்ந்த தொழில்நுட்பம் பயன்படுவதால் அந்த நாட்டை தேர்ந்தெடுத்து அங்கு சென்று பணிபுரிந்து வருகின்றேன். எந்த விசயம் நமக்கு வரவேயில்லை என்று நினைக்கிறோமோ அதனை மீண்டும்,மீண்டும் முயற்சி செய்து அது நன்றாக வரும் வரை அதனை தொடர்ந்து செய்ய வேண்டும். நிச்சயம் நம்மால் அதனை அடைந்து விட முடியும். கணினி மூலமாக நல்ல கல்வியை பெற்று வாழ்க்கையில் சிறந்த வெற்றியை பெற முயற்சி செய்ய வேண்டும். அது உங்களால் முடியும். உங்களின் கேள்வி கேட்கும் ஆற்றல் என்னை வியக்க வைக்கிறது. அதற்கு என் பாராட்டுக்கள். தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக பள்ளியின் செயல்பாடுகளை பாராட்டி மாணவர்களுக்கு கணினி கற்கும் வகையில் கணினி வழி கல்விக்காக கணினி ஒன்றினை பரிசாக வழங்கினார். கல்வி கற்பது வாழ்வில் இன்றியமையாதது. கல்வி கற்பதன் மூலம் பல வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். சிறந்த கல்வியாளர்களாக வர வேண்டும். வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கல்வி தான் சிறந்த, உற்ற நண்பனாக இருக்க முடியும். வீதிகளில் பல இடங்களிலும் பார்க்கும் போது ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. குப்பைகளை கொட்டக் கூடாது. அதற்கான இடங்களில் கொட்ட வேண்டும்.யாரேனும் குப்பையை கொட்டினால் அதைஎடுத்து தொட்டியில் போடவேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் போட்டால் ஏற்படும் கெடுதல்களை பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இளம் வயதிலேயே கீரை போன்ற சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் காயத்ரி, செந்தில்குமார், தனலெட்சுமி, ராஜேஷ், அய்யப்பன், ராஜேஸ்வரி, ரஞ்சித், ஜெனிபர்,ராஜி உட்பட பலர் கேள்விகள் கேட்டனர். ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

20/12/16

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்துமறைந்துவிட்டால்

நகம் கடிப்பது மனநிலை பாதிப்பா

நகைச்சுவை

நன்றி மறந்த சிங்கம்

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்

நாம் மாற வேண்டும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

பாதுகாப்பான இன்டெர்நெட் பேங்கிங் வழிமுறைகள்

புகழ்பெற்ற கல்லறை

புதினா ஒரு மருத்துவ மூலிகை

புதிய கல்விக்கொள்கை - ஒரு தேன் தடவிய விஷம்

பூண்டை வறுத்து சாப்பிட்டால்

மகிழ்வித்து மகிழ்

மனிதனின் சுயநலத்தால் 60

மனைவியை மடக்க சில யோசனைகள்

மூணே மூணு வார்த்தை

விளக்கு ஏற்றும் திசைகளும்

வென்னீர் மகத்துவம்

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்

ஜன., 1 முதல் 'ஹால்மார்க்' குறைப்பு:நகை வாங்கும் பொதுமக்களே உஷார்

தங்க நகை விற்பனையில், ஜன., 1 முதல் ஹால்மார்க் அளவை, ரிசர்வ் வங்கி குறைப்பு செய்துள்ளதால், தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளில், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சம்மேளனத்தின் மாநில தலைவர் ஸ்ரீராம், சேலத்தில் அளித்த பேட்டி:பணப்புழக்ககெடுபிடி காரணமாக, தமிழகத்தில் தங்கம் விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கம் விற்பனையில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், அதே நேரம், பொதுமக்களுக்கு தரமான தங்கம் கிடைக்கும் வகையிலும், ரிசர்வ் வங்கி, ஹால்மார்க் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மதிப்பீடு

பல ஆண்டுகளாக, ஹால்மார்க்கில், 22, 20, 18, 16, 14 என, பல்வேறு தரத்தில் தங்கம் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், வரும் ஜன., 1 முதல், 22 காரட், 916 கே.டி.எம்., 18 காரட், 750 கே.டி.எம்., 14, காரட் 565 கே.டி.எம்., ஆகிய மூன்று தரம், அளவுகளில் மட்டுமே தங்கத்தை மதிப்பீடு செய்ய ஹால்மார்க் மதிப்பீட்டாளர்கள், தங்க நகை வியாபாரிகளுக்கு, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.பொதுமக்கள் தங்கம் வாங்கும் போது, அவற்றின் தரத்தை பரிசோதித்து வாங்க வேண்டும். தரம் குறித்து தெரிவிக்காத வியாபாரிகள் மீது புகார் அளிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள தங்க நகை வியாபாரிகள், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், உற்பத்தி, சேதாரம், செய்கூலி, தள்ளுபடி உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். இதில், எள்ளளவும் உண்மை இல்லை. தங்கம் நிர்ணயம் செய்யப்படும் விலையில், அவர்கள் சலுகை அளிப்பது இல்லை. மாறாக, அதற்கான பிற தயாரிப்புகளை சுட்டிக்காட்டி, தள்ளுபடி செய்வதாக அறிவிப்பது, உண்மைக்கு புறம்பானது.

இதற்கு முடிவு கட்டும் வகையில், தமிழகம் முழுவதும் தங்கத்தின் விலையை, எங்கள் சம்மேளனம் நிர்ணயம் செய்து,அறிவிக்கதங்கத்துக்கான கொள்முதல் கெடுபிடி, இருப்பு தங்க ஆபரணத்துக்கான கெடுபிடி ஆகியவற்றால், இத்தொழில் கடும் நசிவை சந்தித்து வருகிறது.ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம், பொதுமக்களிடம் பணம் கையிருப்பு ஆகியவற்றை அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி, தங்கம் வாங்கும் பொதுமக்கள், அதன் தரத்தை, ஹால்மார்க் அடிப்படையில் உறுதி செய்த பின் வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

'8' போடும் அமைப்பில் 'சென்சார்'டூ - வீலர் உரிமத்தில் புதிய முறை

இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக, '8' போடும் அமைப்பில், 'சென்சார்' கருவி பொருத்தப்பட உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள, '8' அமைப்பில் இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும்; தரையில் கால் ஊன்றாமல் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகள் உண்டு.
மோட்டார் வாகன ஆய்வாளர் பார்வையிட்டு உரிமம் அளிப்பார். இந்நிலையில், '8' அமைப்பில், 'சென்சார்' கருவி பொருத்தி உரிமம் அளிக்கும் புதிய முறை விரைவில்வர உள்ளது. அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த அமைப்பில் பொருத்தப்படும், 'சென்சார்' கருவி, வாகனங்களின் போக்கை துல்லியமாக கணக்கிடும். இதை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்யும் அதிகாரி, அந்த மென்பொருள் பரிந்துரைப்படி உரிமம் அளிப்பார். இது குறித்து, புனேயில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு நடக்கிறது. விரைவில் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு :தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள், இன்று முதல் வரும், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசுதேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு சென்று, இன்று முதல் வரும், 24 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களை, அரசு தேர்வுத்துறையின், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கானல் நீரா கேந்திரிய வித்யாலயம்?

துறைமுகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் நிறைந்துள்ள முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடியில், கேந்திரிய வித்யாலயம் பள்ளி அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களிடையே மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களில் வெவ்வேறு மாநிலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்கள்பணிமாறுதல் பெற்று செல்லும்போது அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, கேந்திரிய வித்யாலய பள்ளிகளை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மத்திய அரசு நடத்தி வருகிறது. கடந்த 1963ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மத்திய கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்படுகிறது. கேந்திரிய வித்யாலய பள்ளிகள் இந்தியாவில் மட்டுமன்றி காத்மாண்டு, மாஸ்கோ, தெஹ்ரான் போன்ற இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.ஹிந்தி, ஆங்கிலப் பாடத்திட்டத்துடன், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சம்ஸ்கிருதம் கட்டாயமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாலும் அங்கு கேந்திரிய வித்யாலய பள்ளிகள்இருந்தால் குழந்தைகளின் கல்வியில் சிக்கல் எதுவும் ஏற்படுவதில்லை என்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.பொதுவாக கேந்திரிய வித்யாலய பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகளவில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களை கருத்தில்கொண்டு அங்கு பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்படுகிறது.மத்திய அரசுப் பணியாளர்களை போல மாநில அரசுப் பணியாளர்களும் தங்களது குழந்தைகளை கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் சேர்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள அண்டை மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் இரண்டு கேந்திரிய வித்யாலய பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், திருநெல்வேலி, நாகர்கோவில், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் உள்ளன.ஆனால், தூத்துக்குடியில் துறைமுகம், ரயில் நிலையம், விமான நிலையம், கடல்சார் பயிற்சிக் கல்லூரி, மத்திய தொழில்பாதுகாப்புப் படை, வணிகவரி அலுவலகம், மீன்வளக் கல்லூரி, பழையகாயல் ஜிர்கோனியம் வளாகம், முத்தையாபுரம் கனநீர்ஆலை, சுங்கத்துறை அலுவலகம் என மத்திய அரசு நிறுவனங்கள் நிறைந்து காணப்பட்டும் இம்மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்கஇதுவரை எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.இந்நிறுவனங்களில் பணிபுரியும் மத்திய அரசின் பணியாளர்கள் கேந்திரிய வித்யாலய பள்ளி இல்லாததால் தங்கள் குழந்தைகளை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்ட தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து வருகின்றனர். அவர்களில் திடீரென இடமாறுதலில் செல்லும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதையை மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை அறிவித்தார்.இதற்கு இடம் ஒதுக்க தூத்துக்குடி வஉசி துறைமுக நிர்வாகம் முன்வந்தது. ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலய பள்ளி என்பது கானல் நீராகவே உள்ளது.

இப்பள்ளிகளில் கட்டணம் குறைவு என்பதாலும், சுமார் 20 சதவீதம் வரை அரசு ஊழியர் அல்லாதவர்களுக்கு இடம் வழங்கப்படும் என்பதாலும் பொதுமக்களும் கேந்திரிய வித்யாலய பள்ளியை எதிர்நோக்கி உள்ளனர். ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களைக் கொண்ட தூத்துக்குடியில், கேந்திரிய வித்யாலய பள்ளி அமைவது எப்போது என்ற எதிர்பார்ப்பு மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்: மாற்றுத்திறனாளி, கற்றல்குறைபாடுள்ள மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல்அவதி.

அரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் மாற்றுத்திறனாளி மற்றும் கற்றல் குறைபாடு உடைய மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் அவதிப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கற்றல் குறைபாடுடைய மாணவ, மாணவியர் தங்களால் சுயமாகத் தேர்வு எழுத முடியாத சூழலில், பதிலித் தேர்வர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதும் வசதியை அரசு வழங்கியுள்ளது. இத்தகைய மாணவ, மாணவியர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மூலம் பள்ளி நிர்வாகம் மருத்துவச் சான்றிதழ் பெறவேண்டும். இதற்காக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவக் குழுக்கள் உள்ளன.மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் தலைமையிலும், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரி தலைமையிலும் மருத்துவக்குழு செயல்படும். வாரம் ஒரு நாள் கூடும் இந்த மருத்துவக்குழு முன்பாக மாணவ, மாணவியர் நேரில் ஆஜராக வேண்டும். மாணவர்களின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.

கற்றல் குறைபாடுள்ள மாணவர் மற்றும் சுயமாகத் தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மனநலப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கு உளவியல் மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை, எழுத்துத் தேர்வு உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தி அவர்களது மூளைத்திறன் இயங்கும் தன்மை குறித்து ஆய்வு செய்வர்.பரிசோதனை அடிப்படையில் மருத்துவக்குழு சான்றிதழ் வழங்க பரிந்துரைப்பர். அந்த சான்றிதழ் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். தாமாகத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு பதிலித் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் வாரத்திóல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கி விடுவதால் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்துக்குள் மருத்துவச் சான்றிதழைப் பெற்று பள்ளி நிர்வாகத்திடம்மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும். தாமதமாக வழங்கப்படும் சான்றிதழ்களை பள்ளிகள் ஏற்றுக்கொள்வது இல்லை.

இந்நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் கரூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மண்டல மருத்துவக் குழுவிடம் ஆஜராகி சான்றிதழ் பெறவேண்டிய நிலை உள்ளது.இங்கு கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வுகள் உள்ளிட்ட பரிசோதனைகள் 6 நாள்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் தங்கள் பெற்றோருடன், மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் வரவேண்டும். ஆண்டு தோறும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிசோதனைகளுக்காக இங்கு வருகின்றனர். சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் பரிந்துரைத்த பின்னரும் அலுவலக ஊழியர்கள் அலைக்கழிப்பதாக பெற்றோர்புகார் தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பாக பெற்றோர் கூறியது: மாவட்ட மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் இருப்பது இல்லை. குறிப்பாக கண், மனநலம், மூளை, நரம்பியல் குறைபாடுடைய மாணவர்களை அழைத்துச் செல்லும்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குசெல்லுமாறு பரிந்துரைக்கின்றனர்.

 அங்கு சென்றால் மருத்துவ பரிசோதனைக்கு குறைந்தது ஒரு வாரமாவது அலைக்கழிக்கின்றனர். பின்னர் சான்றிதழ் பெறுவதற்கு ஒரு மாதம் ஆகிவிடுகிறது. இதில் சில மருத்துவர்கள், பரிசோதனையே செய்யாமல் மாணவர்கள் நன்றாக இருப்பதாகக் கூறி நிராகரித்து விடுகின்றனர். இதனால் தேர்வுக்கு தயாராவதில் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.ஏற்கெனவே ஒரு வாரம் வேலைகளை விட்டு விட்டு, தொலைதூரப் பகுதிகளில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள்போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக சில ஆயிரம் ரூபாய்களை செலவழிக்க வேண்டியுள்ளது.

எனவே மாணவர்களை அலைக்கழிக்காமல் மருத்துவப் பரிசோதனைகளை ஓரிரு நாளில் முடிக்க வேண்டும். மேலும் மாவட்ட மருத்துவமனைகளிலேயே அனைத்து பிரிவுகளையும் ஏற்படுத்தும் பட்சத்தில் மாணவர்கள் வெளி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்றனர்.மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியது: கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4,400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏராளமான மாணவர்கள் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு வரிசை அடிப்படையில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தகுதி இல்லாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன்செயல்பட வேண்டியுள்ளது. மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறையும் உள்ளது. ஆனாலும் மாணவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

பி.இ படித்தவர்களுக்கு பி.எட் படிக்க அனுமதிப்பது வேலையில்லா பட்டதாரிகளை அதிகரிக்கும்

பி.இ படித்தவர்களுக்கு பி.எட் படிக்க அரசு அனுமதித்திருப்பதுமேலும் வேலையில்லா பட்டதாரிகளை அதிகரிக்கும் என வேலையில்லா பட்டதாரிஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் துறைமங்கலத்தில் தமிழ்நாடு பி.எட், கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி  ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூரில்நடைபெற்றது.

1992-ம் ஆண்டு  முதல் தற்போது வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டபட்டதாரிகள் கணினி அறிவியல் பி.எட். முடித்துள்ளதாகவும், அதற்கு அரசு முறையாகஅங்கீகாரம் வழங்கவில்லை என்றும், தமிழக அரசு நடத்தும் எந்தொரு ஆசிரியர்நியமனத் தேர்விலும், கணினி அறிவியல் பி.எட். படித்தவர்களுக்கு தேர்வுகள்எழுதும் வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.மேலும் இதே போன்று டி.இ.டி, டி.ஆர்.பி போன்ற தேர்வுகளிலும்புறக்கணிக்கப்படுவதை அரசு நிறுத்த வேண்டும்.உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பி.எட் படிப்பு தகுதிஎன்று நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில் கணினி ஆசிரியர்களை இதிலும்புறக்கணிப்பு செய்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிற பாடப்பிரிவுகளுக்கு இணையாககணினி அறிவியலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதற்கான ஆசிரியர்கள் நியமனம்செய்யப்படாமல் காலியாக உள்ளது.சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேலையில்லாமல் உள்ள நிலையில் பி.இபடித்தவர்களுக்கு பி.எட் படிக்க அரசு அனுமதித்திருப்பது மேலும் வேலையில்லாபட்டதாரிகளை அதிகரிக்கும் வாய்ப்பாகவே  அமையும் என கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது.கடந்த நவ.11-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்களிடம் காலிப்பணியிடம் குறித்துஅறிக்கை கோரப்பட்டுள்ளது. எனவே வறுமையில் வாடும் தங்களுக்கு வேலை வாய்ப்பைவழங்க வேண்டுமென வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளியின் சார்பாக INSPIRE விருது திட்டத்திற்கான போட்டி.

மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்துதல், அறிவியல் படைப்புகளை உருவாக்குதல் மற்றும் தனித்திறன் வெளிப்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும் நிலையில்
, ஆர்வமுள்ள மாணவர்கள் அதிக அளவில் பங்குபெறச் செய்திட முனைப்புடன் செயல்படுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களும்கேட்டுக்கொள்ளப்படுவதுடன், இதில் தனிக்கவனம் செலுத்தி தங்கள் பள்ளியின் சார்பாக INSPIRE  விருதுதிட்டத்திற்கான போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் விவரங்களை உடனடியாக இணைய தளத்தில் (http://www.inspireawards-dst.gov.in) பதிவேற்ற அறிவுறுத்தப்படுகிறது.

NMMS தேர்வுக்கு நமது மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவது?

1) மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் உள்ள அச்சத்தை போக்கி மனதளவில் மாணவனை தயார்படுத்துதல் மிக அவசியம்.

2) நாள்தோறும் தேர்வு பாடப் பகுதிகளில் அதிக பயிற்சிஎடுத்து கொள்வது சிறப்பு.

3) Mental Ability, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் கால அட்டவணை ஒன்று தயார் செய்து அதன் படி சரியாக திட்டமிட்டு படிப்பது நிச்சயம் வெற்றியைத் தரும்.

4) மாணவர்களுக்கு OMR Sheet -ல் விடை குறிப்பிடும்முறையை கற்றுக் கொடுத்து மாதிரி OMR Sheet பிரதிகளை மாணவர்களிம் கொடுத்து பயிற்சி பெற செய்வது அவசியம். இது தேர்வு சமயத்தில் விடையளிக்கும் போது ஏற்படும் தடுமாற்றத்தையும், பதற்றத்தையும் குறைக்கும்.

5) அதிக அளவில் மாதிரி தேர்வுகளை (குறிப்பிட்ட கால அளவுக்குள்) எழுதி பார்க்க வேண்டும்.

6) Mental Abilit தேர்வில் கேட்கப்படும் 90 வினாக்களுக்கு விடையளிக்க 90 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையளிக்க மாணவர்கள் சிரமப்பட நேரிடும். இதை தவிர்க்க Mental Ability பகுதிகளில் பல்வேறு short Cut யுத்திகளை கையாண்டு விடையளிக்க பழக்கப்படுத்த வேண்டும். பெரும்பாலான வினாக்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட நான்கு Option களை பயன்படுத்தியே விடைகளை விரைவாக கண்டறிய முடியும்..

7) சில சமயங்களில் , மாணவர்கள் சரியான விடை தெரிந்திருந்தும் விடைத்தாளில் தவறாக குறிப்பதும் உண்டு. இதை தவிர்க்க ஒவ்வொரு முறையும் சரியான வினா எண்ணிற்கு உரிய விடையை தான் பதிவு செய்கிறோமா என்ற கவனத்துடன் செயல்பட பயற்சி அளிக்க வேண்டும் ...

8) வரலாறு பாடத்தில் இடம்பெறும் ஆண்டுகள், அறிவியல் பாடத்தில் இடம்பெறும் அறிவியல் பெயர்கள் மற்றும் வேதி குறியீடுகள், கணித பாடத்தில் சூத்திரங்கள் போன்றவற்றை தனி காகிதத்தில் சுருக்கமாக குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும்.. இது தினந்தோறும் பயிற்சிக்கும், தேர்வுக்கு முந்தைய நாள் நினைவு கூர்தலுக்கும் உறுதுணையாக இருக்கும்...

முயற்சி + பயிற்சி = வெற்றி என்ற எண்ணம் எப்போதும் மாணவர்கள் மனதில் இருக்கட்டும்...

தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும், பயிற்சி தரும் ஆசிரிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...தொய்வில்லாமல் பணியை தொடர்வோம்

டெபாசிட் செய்யவும் புதிய கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் அடுத்த அதிரடி.

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய புதிய கட்டுப்பாட்டினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பணம் எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளைப் போல, வங்கிகளில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

அதன்படி, பழைய ரூபாய் நோட்டுகளை அதிகபட்சமாக ரூ.5000 வரை மட்டுமே வங்கியில் டெபாசிட்  செய்ய முடியும். டிசம்பர் 30ம் தேதி வரை ஒரு வங்கிக் கணக்கில் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்று அதிரடி கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கி ஊழியர்களின் மூலமாக, கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்படுவதைத் தடுக்க, ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம், கருப்புப் பணம் தனிநபர் மற்றும் போலி வங்கிக் கணக்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது தடுக்க முடியும் என்று கருதப்படுகிறது.

புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி.

புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: -
புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், அதன் வரிசை எண்ணில் "L" என்ற எழுத்து பொறிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்து இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து 40 நாட்களை கடந்தும் நாட்டில் பணத்தட்டுப்பாடு சீரடையாத நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால்  நிலைமை கொஞ்சம் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், அந்த நோட்டுகள் சீராக விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

+2,பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களே உஷார்.... பெயர், பிறந்த தேதியை சரி பாருங்க: கல்வித் துறை அறிவுரை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுஎழுதும் மாணவர்கள், மதிப்பெண், டிசி உள்ளிட்ட வற்றில் இடம் பெறும் பெயர், இனிஷியல், பிறந்த தேதி ஆகியவை சரியாக உள்ளதா என்பதை திருத்தம் செய்வதற்கான கடைசி வாய்ப்பை தேர்வுத் துறை வழங்க உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. இத்தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாரித்தனர். அவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அந்த பட்டியல்கள் தற்போது தேர்வுத்துறையில் உள்ளது. அவற்றின் அடிப்படையில் கடந்த 16ம் தேதி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாணவர்களின் இனிஷியல் பிரச்னை, பிறந்த தேதி, வயது, ஊர், பெற்றோர் பெயர் உள்ளிட்டவற்றில் சில சந்தேகங்கள் இருப்பதாக தேர்வுத்துறை கருதுகிறது.

அதனால் பள்ளிகள் மூலம் வரப் பெற்ற மாணவர்கள் பட்டியல்களை திரும்பவும் பள்ளிகளுக்குஅனுப்பி உரிய முறையில் திருத்தம் செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. திருத்தம் செய்ய இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பதால், மாணவர்கள் தங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரே பாடத்திட்டம் வருமா?

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அனுப்பியுள்ள மனு: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அந்த பாடத் திட்டத்தில் நடத்தப்படுகிறது.சி.பி.எஸ்.இ., மாணவர்கள், இத்தேர்வில் அதிகமாக பங்கேற்கின்றனர்; அவர்களுக்கு எளிதாக உள்ளது.
ஆனால், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு இத்தேர்வு கடினமாக உள்ளது.இதற்கு, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்து, அதன் பின், 'நீட்' தேர்வு நடத்தினால், நியாயமான போட்டியாக இருக்கும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி

சிண்டிகேட் வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கா 400 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 400

பணி: Probationary Officer (PO)

தகுதி: 01.10.2016 தேதியின்படி 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42020

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவதாகம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2016

எழுத்துத் தேர்வு நடைபெறுவதற்கான கடைசி தேதி: 26.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.syndicatebank.in/RecruitmentFiles/PGDBF_ADVERTISEMENT_2017-18-12122015.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிவிந்துகொள்ளவும்.

3ம் பருவப்பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்குள் வினியோகிக்க உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தக சுமையை குறைப்பதற்காக முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பாடப்புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியே அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான இரண்டு பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு தற்ேபாது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், வரும் 24ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதம் தான் பள்ளிகள் இயங்கும் என்பதால் 3ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். முன்னதாக 52 தலைப்புகளில் சுமார் 6 கோடி இலவச பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பாடப்புத்தகங்களை பெற்று 22க்கும் மேற்பட்ட கிடங்குகளில் வைத்துள்ளனர். இன்னும் சில மாவட்டங்களுக்கு புத்தகங்கள் சென்று சேரவேண்டிய நிலை உள்ளது. இரண்டு நாட்களில் முழுமையாக புத்தகங்கள் சென்று சேர்ந்துவிடும். ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், 28ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை அனுப்ப மாவட்ட கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

’செமஸ்டர்’ கட்டணம்; கல்லூரிகள் கெடுபிடி

தனியார் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், பணத் தட்டுப்பாடு காரணமாக, ’செமஸ்டர்’ கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.


தனியார் கலை, அறிவியல் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளில், ஒவ்வொரு செமஸ்டரிலும், தனியாக கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 


இந்த ஆண்டில், இரண்டாவது செமஸ்டருக்கான கட்டணம், டிச., 1 முதல் வசூலிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான கல்லுாரிகள், டிச., 15க்குள் கட்டணம் செலுத்த, காலக்கெடு விதித்துள்ளன. 40 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியுள்ளதால், மாணவ, மாணவியர் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். 


தற்போது ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டில், இந்த தொகையை, வங்கிகளில் எடுக்க முடியாமல், பெற்றோர் தவிக்கின்றனர்; கல்லுாரிகளில் காசோலைகள் வாங்கவும் மறுக்கின்றனர். இதை கண்டு கொள்ளாத கல்லுாரி நிர்வாகங்கள், கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியரை, கல்லுாரியை விட்டு வெளியே அனுப்புவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. 


எனவே, கல்லுாரி கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்லுாரி இயக்குனர் ஆகியோர் தலையிட்டு, மாணவ, மாணவியருக்கு, ஜன., வரை அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என, மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை!

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், சமூக சூழல்கள் காரணமாக ஆராய்ச்சி படிப்பை தொடரமுடியாத பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்திலிருந்து இந்த விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், திருமணம், குழந்தை பேறு, விபத்து, உள்ளிட்ட சமூகசூழல்கள் காரணமாக ஆராய்ச்சி படிப்பை தொடரமுடியாத பெண்களுக்கு ஆராய்ச்சிகளை தொடரமூன்றாண்டு கால ஊக்கத்தொகை, அறிவியல்மற்றும் தொழில்நுட்ப துறையின் மூலம்வழங்கப்படுகிறது. 

இந்த ஊக்கத்தொகைக்கு தேர்வு பெறும் பெண்கள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், ஆராய்ச்சி படிப்புகளைதொடரவும், மாதம் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, மூன்று பிரிவுகளின் கீழ் பலஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டம் பெற்ற பெண்கள் சமூக காரணங்களால் படிப்பைதொடர முடியாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் முதுநிலை முடித்து, இரண்டு ஆண்டுகள் இடைவெளியும், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கானகட்டுரையும் சமர்ப்பித்தால் போதுமானது. தமிழகத்தில், இதுபோன்று படிப்பை தொடர முடியாத பல பெண்கள்இருப்பினும், பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான ஊக்கத்தொகை சார்ந்த விழிப்புணர்வு இல்லை. 

ஆனால், வடமாநிலங்களில் இதுகுறித்த விழிப்புணர்வுடன் அதிகப்படியான விண்ணப்பங்கள்சமர்ப்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில், பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகை பிரிவில்,விண்ணப்பிப்பவர்களின் பங்கு மிகவும் சொற்ப அளவில் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் வேதனைதெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, அரசு கல்லுாரி பேராசிரியர் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர் ரவி கூறியதாவது: 

ஆராய்ச்சி என்ற பிரிவின் கீழ், பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. எம்.பில்., பி.எச்டி., போன்றஆராய்ச்சி படிப்பை அதிக அளவில் மாணவர்களே மேற்கொள்கின்றனர். திருமணம், மகப்பேறு போன்ற சமூககாரணங்களால் ஆராய்ச்சிகளில் பெண்கள் சாதிக்க முடிவதில்லை. இதன் காரணமாகவே, மத்திய அறிவியல்மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ், பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 

தமிழகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வும், விண்ணப்பிப்பவர்களும் மிகவும் குறைவு. 27 முதல் 55க்குள்வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். 

தரமான ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கவேண்டும். இதுகுறித்த, விபரங்களுக்கு, 97897 74351 என்றஎண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு

2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி வட்டி 8.80%ல் இருந்து 8.65% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

19/12/16

 1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம். 

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.  

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில் 
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.                        SLAS Instruction SLAS -தேர்வு சார்பான வழிமுறைகள்....www.tamilagaasiriyar.com
[9:52 AM, 12/19/2016] +91 98433 62887: 🔥🔥🔥

பாரதிதாசன் பற்றிய செய்திகள் !!


பாரதியார் மீதான பற்று :

➦ தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

தொழில் வாழ்க்கை :

➦ பாரதியாரிடம் நட்பு கொண்டது முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார்.

➦ அச்சமயத்தில், சுதந்திரப் போராட்டத்தாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார்.

➦ அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார்.

➦ பெருந்தலைவர்களான மு. கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் அண்ணாதுரை, போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

➦ ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

பாரதிதாசனின் மிகச்சிறந்த படைப்புகளில் முக்கியமானவை :

1. பாண்டியன் பரிசு
2. எதிர்பாராத முத்தம்
3. குறிஞ்சித்திட்டு
4. குடும்ப விளக்கு
5. இருண்ட வீடு
6. அழகின் சிரிப்பு
7. தமிழ் இயக்கம்
8. இசையமுது
9. குயில்
10. தமிழச்சியின் கத்தி
11. பாண்டியன் பரிசு
12. பாரதிதாசன் ஆத்திசூடி

ப்ளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கும் என தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

மார்ச் 2 - மொழிப்பாடம் முதல் தாள்

மார்ச் 3 - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

மார்ச் 6 - ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 7 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 10 - வணிகவியல்/புவியியல்/ஹோம் சயின்ஸ்

மார்ச் 13 - வேதியியல்/கணக்குப் பதிவியல்

மார்ச் 17 - கணினி அறிவியல், உயிரி வேதியியல், தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம்

மார்ச் 21- இயற்பியல், பொருளாதாரவியல்

மார்ச் 24 -தொழிற்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்

மார்ச் 27 - கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்துவியல்

மார்ச் 31 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்

TNPSC DEO EXAM CERTIFICATE VERIFICATION WILL BE HELD ON 27.12.2016

TNPSC DEO EXAM CERTIFICATE VERIFICATION WILL BE HELD ON 27.12.2016
 | TNPSC DEO தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 06.08.2015 மு.ப, 07.08.2015 மு.ப. மற்றும் 08.08.2015 மு.ப ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது.

   அதில் 2432 தேர்வர்கள் பங்கேற்றனர். இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆசிரியர் பிரிவில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அழைக்கப்பட்ட 15 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-II தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 27.12.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
 The Main Written Examination for the 11 vacancies relating to the post of District Educational Officer in Tamil Nadu School Educational Service was held on 06.08.2015 FN, 07.08.2015 FN 08.08.2015 FN. 2432 candidates had appeared for the Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification for the said Recruitment, a list of register numbers of 15 Candidates (List-II) those who have admitted provisionally to Certificate Verification to verify their eligibility under Teacher Category against thevacancies in Physics and Chemistry subjects is hosted at the Commission'sweb-site"www.tnpsc.gov.in".Thecertificateverificationwillbeheldon27.12.2016attheOfficeoftheTamilNaduPublicServiceCommission,FrazerBridgeRoad,Chennai- 600 003.V.SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பா?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் தேர்வுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, விடுமுறை இன்றி தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், பிற பாடங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், 
தமிழுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 
அதை நிரூபிக்கும் வகையில், தமிழ் பாடங்களுக்கு விடுமுறை இன்றி, தேர்வு நடத்தப்படுகிறது. அரசு தேர்வுத் துறை, நேற்று முன்தினம் அறிவித்த அட்டவணை படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, தமிழ் பாடத்தில், இரு தாள்களுக்கு, தேர்வு நடக்கிறது. இதில், இரு தாள்களுக்கும் இடையே, படிப்பதற்கு கால அவகாசமின்றி, தொடர்ந்து இரு தினங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற தேர்வுகளுக்கு, இரு நாட்களுக்கு மேல், படிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழாசிரியர்கள் கூறியதாவது: தமிழக அரசின் தேர்வுத் துறை நடத்தும் தேர்விலேயே, தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால், வேறு யார் முக்கியத்துவம் அளிப்பர். அதனால் தான், உயர் கல்வியில் மாணவர்கள், தமிழ் பாடத்தில் பட்டம் பெறவோ, அதில் ஆராய்ச்சி மேற்கொள்ளவோ தயங்குகின்றனர்.

ஆசிரியர்கள் நியமனத்திலும், அனைத்து பாடங்களுக்கான ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிய பின், தமிழ் பாடத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்; இது துரதிருஷ்டவசமானது.

அரசு தேர்வுகள் இயக்ககம் -மேல் நிலை பொதுத் தேர்வு மார்ச் 2017-தனி தேர்வுகளுக்கான அறிவுரைகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012-2013 தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை வழங்குதல் - குறித்து கோவை CEO அவர்களின் கடிதம்..

மேல்நிலைத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு..

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 01. 07. 2016 முதல் அகவிலைப்படி உயர்வு சார்பான அரசாணை






NMMS EXAM - SAT - MODEL QUESTIONS WITH ANSWER key Posted: 18 Dec 2016 08:38 AM PST CLICK HERE DOWNLOAD - SAT - MODEL Questions 1 CLICK HERE DOWNLOAD - SAT - MODEL Questions 1 Answer key CLICK HERE DOWNLOAD - SAT - MODEL Questions 2 CLICK HERE DOWNLOAD - SAT - MODEL Questions 2 Answer key தொடரும் ....... NMMS EXAM - SAT - STUDY MATERIALS

NMMS EXAM - SAT - MODEL QUESTIONS WITH ANSWER key

17/12/16

தமிழகத்தை மிரட்ட அடுத்து உருவாகிறது 'அஸ்ரி' புயல் : அதிர்ச்சி தகவல்

தமிழகத்தை மிரட்ட அடுத்து உருவாகிறது 'அஸ்ரி' புயல் : அதிர்ச்சி தகவல்

அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் மண்டலம் உருவாகி வருகிறது. இது புயலாக மாறும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக மாறி, சென்னையில் கரையை கடந்தது.

இந்த புயலின் தாக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஒரு புயல் உருவாகி வருவதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது,
பருவமழை தாமதமாகத் தொடங்கியிருப்பதால் இந்த ஆண்டு மழை தாமதமாகத்தான் முடியும்.

எனவே வர்தா புயலோடு மழை முடிவுக்கு வந்து விடாது. இன்னும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையோ அல்லது புயலோ வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வர்தா புயலின் தாக்கத்தால் வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னையில் மழை பெய்யாவிட்டாலும் அதிகபட்சமாக குன்னூரில் நேற்று 10 செமீ மழை பெய்துள்ளது. நீலகிரி 7 செ.மீ, தாராபுரம் 5 செ.மீ பீளமேடு, போளூர், கோவை 1 செ.மீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் ஒரு காற்றழுத்தம் நேற்று மாலை உருவாகியுள்ளது.

இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த நான்கு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு அஸ்ரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இனி ஏழைகளுக்கு ரூ.5க்கு மதிய உணவு : அரசு அதிரடி உத்தரவு

இனி ஏழைகளுக்கு ரூ.5க்கு மதிய உணவு : அரசு அதிரடி உத்தரவு

ஜெய்ப்பூர்: தமிழகத்தை போல் ராஜஸ்தானிலும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் வசுந்துரா ராஜே தொடங்கிவைத்தார்.
ராஜஸ்தானில் வசுந்துரா ராஜே தலைமையிலான பாஜ அரசு செயல்பட்டுவருகிறது.

விரைவில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வசுந்துரா ராஜே ஏழைகளின் வாக்குகளை கவரும் வகையில் புதிய உணவு திட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.

‘அன்னபூர்ணா ரசோய்’ என்ற பெயரில் குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டத்தை ஜெய்ப்பூரில் உள்ள மாநகராட்சி வளாகத்தில் நேற்றுமுன்தினம் அவர் தொடங்கி ைவத்தார்.

தமிழகத்தில் அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவது போல் இங்கும் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.5க்கு டிபனும், ரூ.8க்கு முழு சாப்பாடும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் ராஜஸ்தானியர்கள் விரும்பி சாப்பிடும் பஜ்ரே கி கிச்சடி, பேசன்கட்டா, பூண்டு சட்னி ஆகியவை பரிமாறப்படுகிறது.

இது தவிர பாரம்பரிய உணவான தால் பதி குருமா, பஜ்ரி கி ரொட்டி, மேக்கி கி கிச்சடி ஆகிய உணவுகளும் பரிமாறப்படுகிறது.

கிராமப்புறத்தில் உள்ள ஏழைகள் வயிறார சாப்பிடும் வகையில் முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தயாரிக்கப்பட்ட உணவுகளை 80 வேன்களில் ஏற்றி சென்று கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகள் மற்றும் தலித்களுக்கு குறைந்த விலையில் சப்ளை செய்யப்படுகிறது.

விரைவில் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

டியூசன் நடத்தி 25 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் : அதிர்ச்சி தகவல் உஷார் பெற்றோர்களே

டியூசன் நடத்தி 25 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் : அதிர்ச்சி தகவல் உஷார் பெற்றோர்களே

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(25). தனது நண்பர்கள் ஈஸ்வரன்(26), மற்றொரு சிவக்குமார்(27) ஆகியோருடன் சேர்ந்து தர்மபுரி,
பாலக்கோட்டில் டியூசனுக்கு வந்த 25க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள சிவகுமார் தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால், ஆசிரியர் பணியில் சேர முடியாததையடுத்து தர்மபுரி அரசு மகளிர் பள்ளி அருகில், துளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் தொடங்கினார்.

அவரது நண்பர் ஈஸ்வரனும், டியூசன் சென்டருக்கு கீழே ெசல்போன் கடை வைத்துள்ள மற்றொரு சிவகுமாரும், அடிக்கடி அங்கு வந்து சென்றனர்.

பின்னர் பாலக்கோட்டிலும், அதே பெயரில் டியூசன் சென்டர் ஆரம்பித்தார். இங்கு 8 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகள் அதிகம் சேர்ந்தனர்.

டியூசனுக்கு வந்த மாணவிகள் சிலருக்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிவகுமாரும், அவரது நண்பர்களும் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். மேலும், அதை ஒருவருக்கொருவர் ெமாபைலில் படம் எடுத்து, அந்த வீடியோவை பார்த்து ரசித்து வந்தனர்.

இந்நிலையில் டியூசன் சென்டர் தொடங்கியபோது சேர்ந்த மாணவி ஒருவருக்கு சிவக்குமார் பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிவக்குமார் மிரட்டியுள்ளார். அந்த மாணவி அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் படிப்பை முடித்த அந்த மாணவிக்கு திருமணம் நடந்துள்ளது.

பழைய ஆபாச வீடியோ பதிவை காட்டி தனது இச்சைக்கு இணங்கும் படியும், இல்லையென்றால் இணையதளத்தில் வீடியோ பதிவை வெளியிடப்போவதாகவும் டியூசன் ஆசிரியர் சிவக்குமார் மிரட்டியுள்ளார்.

அந்த மாணவி தனது குடும்பத்தினர் துணையுடன் பாலக்கோடு போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாருக்கு பின்னர் தான் விஷயம் போலீசுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பாலக்கோடு போலீசார் விசாரிக்க தொடங்கியபோது,

சிவக்குமார் மீது மேலும் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த வாரம் புகார் அளித்துள்ளனர். அப்போது தான் 25 மாணவிகளை டியூசன் என்ற போர்வையில் சிவக்குமார் சீரழித்தது தெரியவந்தது.

இதற்கு உடந்தையாக சிவக்குமாரின் நண்பர்கள் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் ஆகியோரும் இருந்தது தெரிந்தது. இதையடுத்து 3 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், ‘‘ திருமணமான பின்னரும் ஒரு மாணவிக்கு மிரட்டல் விடுத்தபோதுதான் சிக்கி கொண்டனர்.

ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்துள்ளோம். அவரது டியூசன் சென்டரில், மெமரி கார்டு ஒன்று சிக்கியது.

அதில் மேலும் பல மாணவிகள் ஆபாசமாக இருப்பது போன்ற படங்கள் உள்ளது. இதில் சில வீடியோக்கள் செல்போன் மூலம் வேறு நபர்களுக்கு வைரலாக பரப்பப்பட்டுள்ளது.

இவை வேறு ஏதேனும் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இதுகுறித்து விசாரிக்கிறோம்,’’ என்றனர்.

மின்னணு முறையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு: மோடி

மின்னணு முறையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு: மோடி


மின்னணு முறையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு அளிக்க போவதாக பிரதமர் மோடி பாராளுமன்ற குழு கூட்டத்தில் பேசியுள்ளார்


புதுடெல்லி:மின்னணு முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு ‘லக்கி கிரகாஹ் யோஜனா’ திட்டத்தையும், வியாபாரிகளுக்கு ‘டிஜி-தன் வியாபாரி யோஜனா’ திட்டத்தையும் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் பேசியதாவது:-

மின்னணு முறையை ஊக்குவிக்க ‘லக்கி கிரகாஹ் யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 8-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை ரூ.50-ல் இருந்து ரூ.3 ஆயிரம் வரை மின்னணு முறையில் பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.

இந்த பரிசு திட்டம் 25-ந்தேதியான கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தொடங்கும். அன்று முதல் 100 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,000 வீதம் பரிசு வழங்கப்படும். இந்த பரிசு அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்த திட்டம் பணக்காரர்களுக்கானது அல்ல. பொதுமக்களுக்கான உன்னதமான திட்டம். இது அவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு போன்றது ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை : அதிரடி உத்தரவு

பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை : அதிரடி உத்தரவு


பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.


பெங்களூரு:ஏவியேடர்ஸ் ஏர் கெஸ்க்யூ என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்) சேவை தொடக்க விழா பெங்களூரு எச்.ஏ.எல்.

விமான நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-


பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், நோயாளிகளை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

அவசரமான நேரங்களில் இது பாதிப்பை உண்டாக்குகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. என்றாலும் வாகன நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது.

இதனால் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை இந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.

மிக அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நோயாளிகள் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல முடியும்.

இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறவர்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி விவரங்களை தெரிவிக்கலாம்.

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தேவைப்படும் பட்சத்தில் நோயாளியை சாலை மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு வந்து அதன் பிறகு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள்.

இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்சில் மருத்துவர்கள் குழு இருக்கிறது. அவசரமான நேரத்தில் இந்த சேவை மிக முக்கியமானது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.
அந்த நிறுவனம் ஹெலிகாப்டர் ஆம்புலன்சுக்காக 3 ஹெலிகாப்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

ஒரே என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர்களில் அவசரமான நேரங்களில் சிகிச்சை அளிக்கக்கூடிய ஐ.சி.யு. வசதி உள்ளது. இந்த ஹெலிகாப்டர் இதற்கு என்றே தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒலியும் மற்ற ஹெலிகாப்டர்களை விட குறைவாக இருப்பதாக அந்த நிறுவனத்தினர் கூறினர்.

டன் கணக்கில் வெளிநாடுகளில் குப்பைகளை வாங்கி குவிக்கும் சுவீடன்! அதிர்ச்சி செய்தி

டன் கணக்கில் வெளிநாடுகளில் குப்பைகளை வாங்கி குவிக்கும் சுவீடன்! அதிர்ச்சி செய்தி


சுவீடன் நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, அந்நாட்டு அரசு வெளிநாடுகளில் இருந்து டன்கணக்கில் குப்பைகளை வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சுவீடன் நாட்டில் மின்சார உற்பத்தி பெருமளவு அந்நாட்டு குப்பைகளில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.

அதாவது குப்பைகளை மறுசுழற்சி செய்து அதை மின்சாரமாக்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்நாட்டில் மின்சார உற்பத்தி பெருமளவு இதன் மூலம் தான் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் தங்களுடைய கழிவுகளை எரித்தால் கூட அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு அரசுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உள்ளது எனவும் கூறப்படுகிறது.

தற்போது அந்நாட்டில் உள்ள குப்பைகளை எல்லாம் மறு சுழற்சி செய்து முடித்து விட்டதால், மின்சாரம் தயாரிப்பதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக, சுவீடன் அரசு வெளிநாட்டிலிருந்து குப்பைகளை டன் கணக்கில் கன்டெய்னர்களில் இறக்குமதி செய்து மின் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் சுவீடனோ இதை, மறுசுழற்சி புரட்சி என்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டில் வெறும் 97 சதவிகிதமாக இருந்த இந்த அளவை தற்போது அந்நாட்டு அரசு 99 சதவிகிதமாக உயர்த்திருப்பதாக கூறப்படுகிறது.

17.12.2016 ஓய்வூதியர் உரிமை நாள்.

17.12.1982 அன்று உச்ச நீதிமன்றதலைமை நீதிபதிசந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வுஓய்வூதியம் உரிமை என உச்ச நீதிமன்றம்தீர்ப்பு வழங்கியநாள்.
ஓய்வூதியர்களால் கொண்டாடப்படும் நாள்.
ஓய்வூதியம் என்பது கருணைஅல்ல.
அரசு ஊழியர்களின் நீண்டகாலபணிக்கு வழங்கப்படும்கொடுபடா
ஊதியம்.

ஊழியர்களின் சமூக பொருளாதாரபாதுகாப்பு.
ஆகவே, நண்பர்களே
பெற்ற உரிமையை பாதுகாப்போம்.
வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீட்போம்.
போராட்ட வாழ்த்துகளுடன்

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

ஆசிரியர்களுக்கு உதவும் ஆன்ட்ராய்டு செயலி

டிச.26-ல் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்க தேர்வு தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகதொலைதூரக் கல்விஇயக்ககத் தேர்வுகள், டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்குகின்றனஎன
பதிவாளர்கே.ஆறுமுகம்அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர்வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தேர்வுக்கு பதிவுசெய்துள்ள தேர்வர்கள், அவர்களுக்குரிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் (www.annamalaiuniversity.ac.in)அறிந்துகொள்ளலாம். மேலும், இதுகுறித்த விவரங்களை அருகிலுள்ளபல்கலைக்கழக படிப்பு, தகவல் மையங்களிலும் தெரிந்துகொள்ளலாம். செய்முறை, வாய்வழிதேர்வுகளுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

 தேர்வுகள் நாட்டின்பல்வேறு மையங்களில்நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை(Hall Ticket) பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து சனிக்கிழமை (டிச.17) முதல் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.


 மாணவர்கள் தங்களுக்குஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வுஎழுத அனுமதிக்கப்படுவர். மின்னணுப் பொருள்களைதேர்வு அறைக்குள்எடுத்துச் செல்லஅனுமதி இல்லைஎன்றார் பதிவாளர்கே.ஆறுமுகம்.டிச.26-ல் அண்ணாமலைப்பல்கலை. தொலைதூரக்கல்வி இயக்கதேர்வு தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகதொலைதூரக் கல்விஇயக்ககத் தேர்வுகள், டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்குகின்றனஎன பதிவாளர்கே.ஆறுமுகம்அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர்வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தேர்வுக்கு பதிவுசெய்துள்ள தேர்வர்கள், அவர்களுக்குரிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் (www.annamalaiuniversity.ac.in)அறிந்துகொள்ளலாம். மேலும், இதுகுறித்த விவரங்களை அருகிலுள்ளபல்கலைக்கழக படிப்பு, தகவல் மையங்களிலும் தெரிந்துகொள்ளலாம். செய்முறை, வாய்வழிதேர்வுகளுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

 தேர்வுகள் நாட்டின்பல்வேறு மையங்களில்நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை(Hall Ticket) பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து சனிக்கிழமை (டிச.17) முதல் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.

 மாணவர்கள் தங்களுக்குஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வுஎழுத அனுமதிக்கப்படுவர். மின்னணுப் பொருள்களைதேர்வு அறைக்குள்எடுத்துச் செல்லஅனுமதி இல்லைஎன்றார் பதிவாளர்கே.ஆறுமுகம்.

SR DIGITIZATION 01.07.2017 முதல் நடைமுறைப்படுத்தப்படும் !

2016-November-B.Ed Result For BHARATHIDHASAN UNIVERSITY

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகளை உணர்ந்த ஒருவரின் உணர்வு பூர்வமான கவிதை

 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாம்
இது பாடாய் படுத்திடும்திட்டமாம்!
திட்டம் என்னவென்று தெரியவில்லை-இதில்
எத்தனை அபாயம் என்றுபுரியவில்லை!
ஓய்வூதியம் என்பது எனதுரிமை
ஆனால் உரிமை கோரஇயலவில்லை!
மதில்மேல் பூனையைப் போல

பங்குச் சந்தை முதலீடு!
தனியார் நிறுவன இலாபத்திற்காக
தாரை வார்க்குது அரசாங்கம்!
ஊழியனாகிய எனது விருப்பத்தை
உதறி தள்ளுது அரசாங்கம்
சமூக பாதுகாப்பு இல்லை
இப் புதிய ஓய்வூதியதிட்டத்திலே!
உறவுகள் என்னை கைவிடும்போது
உழைக்கவும் எனக்கு உடலில்தெம்பில்லை!
உடல் உபாதைகளுக்குக் கூட
ஔடதம் வாங்கவும் வழியில்லை!
என் கையில் காசுஇருந்தாலே
என் சமூகம் என்னைமெச்சிடுமே!
வெறுங்கையுடன்(ஓய்வூதியம் இல்லாமல்) இருக்கும் எனக்கு
வீட்டுக்குள்ளே அனுமதியில்லை!
படித்து வாங்கிய பட்டமெல்லாம்
காற்றில் இன்று பறந்ததுவே!
புதிய பட்டம் கிடைக்குதுவேஅது
தண்டச் சோறு என்பதுவே!
ஏன் இந்த நிலைமையென்று
என்னால் கூற இயலுமே
இதற்கெல்லாம் ஒரே காரணம்தான் அது
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்தான்!
ஓன்று கூடுவோம் போராடுவோம்
உடைத்தெரிவோம் CPS திட்டத்தை
இணைந்திடு தோழா!
வென்றிடு தோழா!
இணைவோம்! இணைவோம்!!
இறுதி முடிவு கிடைக்கும்வரை
இணைந்து போராடுவோம்!

இப்படிக்கு
பாதிக்கப்பட்டவர்களில்ஓருவன்
சி.தீர்த்தகிரி M.Sc.,B.Ed.
இ. நி.உ.ஆ., அரூர்ஒன்றியம்

தருமபுரி மாவட்டம்

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS) 2016 – இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்காக கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் படி 05.12.2016 முதல் 17.12.2016 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது


குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு !!

உளவுத்துறை அறிக்கைகளை தொடர்ந்து இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் மால்வேர் நிறைந்த செயலிகளை முக்கிய பிளே ஸ்டோர்களில் வெளியிட்டிருப்பதாகவும், இவற்றை பயனர்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் பட்சத்தில் ஹேக்கர்களால் பயனர்களின் வங்கி சார்ந்த அதிமுக்கிய தகவல்களை திருட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் Top Gun, Mpjunkie, Bdjunkie மற்றும் Talking Frog உள்ளிட்ட செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் துவக்கம் முதலே சைபர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து இருக்கின்றன. இத்துடன் இந்திய ராணுவ நடவடிக்கைகளை கன்காணிக்க இது போன்ற செயலிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் கூகுள் SmashApp எனும் செயலியை உடனடியாக தடை செய்திருக்கிறது. இத்துடன் இந்திய ராணுவ வீரர்களையும் இது போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் டிஜிட்டல் வாலட் மற்றும் ஆன்லைன் பேங்கிங் சார்ந்த பயன்பாடுகள் அதிகரித்து இருக்கும் போது வெளியிடப்பட்டிருக்கும் இது போன்ற அறிவிப்பு மக்களிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் பொது மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது கூடுதல் கவனமாக இருப்பது அவசியமாகி இருக்கிறது...

சத்துணவு ஒதுக்கீடு ஒழுங்காக இல்லை "சனி வந்தாலே சத்துணவு கட்..முட்டையும் இல்லை

தொடக்கக் கல்வித் துறை படுத்தும்பாடு

இந்த வாரத்தில் அதாவது 12.12.2016 முதல் 23.12.2016 வரைக்கும் இரண்டாம் பருவத் தேர்வு,தமிழ் கற்பித்தலில் இரண்டு கட்ட பயிற்சி,19.12.2016 முதல் 22.12.2016 வரை SLAS என்னும் இளம் பிள்ளைகளுக்கு IAS  தேர்வுக்கு நிகரான தேர்வு,14.12.2016 ல் பள்ளிகள் அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி 15.12.2016 ல் ஒன்றிய அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி,NMMS தேர்வுக்கான விண்ணப்பங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் இப்படி படாதபாடு படுத்துவது சரியா.மனவியல் அடிப்படை செயல்பட வேண்டிய இடம் பள்ளி.பள்ளிகளில் உள்ள பணியை இப்படி அவசர கோலத்தில் செய்ய கட்டாய படுத்தும் நிலையால் என்ன பயன் கிடைக்கும் என்று கூற முடியும்.பள்ளி பணிகளை பொறுத்தமட்டில்  எந்த விடயத்திலும் கோபப்பட கூடாது முடியாது.கல்வி துறையில் மாணவர்களை மட்டும் மனவியல் அடிப்படையில் நடத்த வேண்டும் ஆனால் மாணவர்களை சீர்படுத்தும் ஆசிரியர்கள் மனவியல் நிலைக்கு அப்பார்ப்பட்ட இயந்திரங்களா? இப்படிப்பட்ட நிலை தொடர்ந்து அமையுமானால் ஆசிரியர்களில் மன நோயாளிகள் அதிகம் உருவாவது உறுதி. இதைத்தான் கல்வித்துறை விரும்புகிறதா? அவசரமாக எதையாவது செய்தால் தவறாக முடிந்துவிடுகிறது எதை எப்படி செய்வது என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள்....

தொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்'?, பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவு.

NEET' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசியதகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது. 

பாடத்திட்டம் பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு 2017 ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறும்.இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால் நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின் சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து 200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும்.இந்தத் தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கான ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை பருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்த வகுப்புகளுக்கு நடத்தப்படும்.1956 இந்திய மருத்துவ சபை சட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள் அளவிலோ எந்த ஒரு பல்கலைக்கழகம் / மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வு செல்லுபடி ஆகாது.
'நீட்' தேர்வின் முக்கியத்துவம்:
NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்பு பாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் கல்வி ஆண்டுக்கான இந்தத் தேர்வில் நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவை அடங்கி இருக்கும்.
'நீட்' தேர்வின் கீழ் வராத நிறுவனங்கள்:
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்ட மேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவனங்கள் NEET-SS –ன் கீழ் வராது.தேசிய தேர்வுகள் வாரியம் மத்திய அரசால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்திய அடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவது அதன் முக்கிய நோக்கமாகும்.தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்ட மேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்கு NEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டு NEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையான காலத்தில் அகில இந்திய பட்ட மேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் சம்பளம் உயருகிறது:

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், மத்திய அரசுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், 'சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, அரசு பரிசீலித்து வருகிறது; இதற்கு, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவைகள் சட்டத்தில், திருத்தம் செய்து, பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், இதற்கான மசோதா நிறைவேற்றப்படும்.
இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு, தற்போது, அனைத்து பிடித்தங்கள் போக, மாதம், 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.