தமிழக பாடத் திட்டங்களில் மாற்றம், அரசுப் பள்ளிகளுக்கான புதுத் திட்டங்கள், நடப்பாண்டு தமிழகக் கல்வித் துறைக்கு ஒதுக்கியுள்ள நிதி போன்றவற்றைப் பற்றி தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு..!
அப்போது அவர், 'இதுவரை 40,000 பேர் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். வருகின்ற 26-ம் தேதி வரை இந்தத் திட்டத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கப்படும். இந்தாண்டு கல்வித்துறைக்காக 26,913 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் 12-ம் வகுப்பு வரையுள்ள அரசுப் பள்ளிகள் 36,830 இருக்கின்றன. இந்த அரசுப் பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரவும், புதிய கட்டடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். 6 ஆண்டு காலத்தில் நபார்டு திட்டம் மூலம் 12,000 கோடி ரூபாய் பெற்று திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
தொழில் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் ஆசிரிய அமைப்புகள் அரசு பள்ளிகளுக்கு முன்வந்து உதவிகளைச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம். உதவி செய்ய விரும்புவோருக்கு ஏதுவாக ஒரு பிரத்யேக குழு அமைக்க உள்ளோம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகம் திகழும். தூய்மையைப் போற்றும் வகையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணி செய்பவர்களை பள்ளிகளைச் சுத்தம் செய்ய பயன்படுத்த உள்ளோம்.
ஏறத்தாழ 12 ஆண்டுகளாக பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை என்று கூறப்பட்டது. இன்னும் 3 ஆண்டுகளில் எந்த வகுப்புகளுக்கு எப்படி பாடங்களை மாற்றலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து 2 நாள்களில் கொள்கை முடிவு எடுக்கப்படும். வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வுகள் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் வெளியிட்ட இரு நிமிடங்களில் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் முடிவுகள் தெரிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.