யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/7/18

அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன்:

சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.

 சேலம் மாவட்டம், ஓமலுாரில், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று, புதிய பாடத் திட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:

வழக்கமாக பாட புத்தகங்கள் எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து செய்வர்.


இந்த முறை, இது மாற்றப்பட்டு, பாடப் புத்தகம் எழுதுவது, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது.துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து, புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன.பிளஸ் 1 பாட புத்தகத்தில், அனைத்து பாட பிரிவினருக்குமான மேற்படிப்புகள் குறித்தும், அதை எங்கு படிக்கலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள், அகில இந்திய போட்டி தேர்வுகளில், அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, ஆசிரியர்கள் கையில் உள்ளது என்றார்.

G.O -126,127,128,129 - DEE & DSE Special Rules

20/7/18

சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'

சமூக வலைதளைங்களில்  பதிவாகும் தகவல்களை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை' என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர், எஸ்.எஸ். அலுவாலியா தெரிவித்தார்.'வாட்ஸ் ஆப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், கலவரத்தை துாண்டுதல், பயங்கரவாதத்தை பரப்புவது போன்ற, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய தகவல்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன. புதிய அமைப்பு

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யவும், அவற்றை கண்காணிக்கவும் 'சமூக வலைதள தகவல் தொடர்பு மையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. பேச்சு சுதந்திரம் இது தொடர்பாக, லோக்சபாவில் நேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர், எஸ்.எஸ்.அலுவாலியா அளித்த பதில்: மக்களின் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தையும், ரகசியங்களையும் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பதியப்படும் கருத்து களை, கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ அரசு விரும்பவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை தேசத்துக்கு விரோதமாக வெளியாகும் தகவல்களை, பாதுகாப்பு அமைப்புகள் ஆய்வு செய்து, சட்டப்படி விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்.
சமூக வலைதளங்கள், இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டன. தங்கள் கருத்துகளை, எண்ணங்களை தெரிவிக்க, இதை ஒரு சாதனமாக, மக்கள் பயன்படுத்துகின்றனர்; சிலர், அதை தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப்போகும் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி திட்டம்! என்னவென்று தெரியுமா?

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி யைமங்களை உருவாக்கும் செங்கோட்டையனின் திட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்க உள்ளது.

தற்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள்மாநிலம் முழுவதிலும் இருந்து சென்னை வந்தே தங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களும் புற்றீசல் போல் உருவாகி, மாணவர்களிடம் இருந்து ஏராளமாக பணம் கறந்து வருகின்றன.இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து திறமையான மாணவர்களுக்கு அவர்களின் மாவட்டங்களிலேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தைசெங்கோட்டையன் அறிமுகம் செய்ய உள்ளார்.இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாகும் நிலை இருக்கிறது.


இது குறித்த சென்னையில் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.இந்த மையங்களில் திறன் வாய்ந்த 100 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் அதிக அளவில் மாவட்ட நூலகங்களுக்கு வாங்கப்படும்.

இந்த பயிற்சி மையங்கள் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும். இந்த மையங்களில் கிராமப்புறமாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நல்ல முறையில் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்

Matric School Teachers க்கு - புதிய பாடநூல் குறித்த பயிற்சி

இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்? 21ம் தேதி வெளியாகிறது அறிவிப்பு

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கோரும் வழக்கை, நாளை, உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளதால், பொது கவுன்சிலிங் அறிவிப்பு, 21ம் தேதிக்கு 
மாற்றப்பட்டுஉள்ளது.சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, 1.73 லட்சம் இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தள்ளி வைப்புசிறப்பு பிரிவினர், தொழிற்கல்வி மாணவர்கள், விளையாட்டு பிரிவினர் உள்ளிட்டோருக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் மட்டும், இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை, 31க்குள், கவுன்சிலிங்கை நடத்தி முடித்து, ஆகஸ்டில் வகுப்புகளை துவங்க வேண்டும்.ஆனால், 'நீட்' தேர்வு பிரச்னையால், மருத்துவ கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால், இன்ஜி., பொது பிரிவு கவுன்சிலிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கிற்குப்பின் அல்லது ஜூலை, 31க்கு பின், கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்றம்
இந்த வழக்கு, ஜூலை, 16ல் விசாரணைக்கு வந்து, நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.நேற்று இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில், கூடுதல் விபரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை, நாளைக்கு தள்ளி வைத்து உள்ளது.இதனால், பொது பாடப்பிரிவுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பை, வரும், 21ம் தேதிக்கு, இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி மாற்றியுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைத்தால், கவுன்சிலிங் தேதியை நேற்று அறிவிக்கலாம் என, தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில், வழக்கின் விசாரணை தள்ளிப்போனதால், அறிவிப்பு வெளியாகவில்லை

19/7/18

Tab பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி! தேதிகள்அறிவிப்பு

தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட்பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள்பயிற்சி : 30, 31ம் தேதிகளில் நடக்கிறது.
தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட் கணினிகளை பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வரும் 30ம் தேதி
தொடங்குகிறது.


அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர் அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18ம் கல்வியாண்டில் உயர் தொடக்க நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்காக புவியியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கான காணொலிகள் உருவாக்கப்பட்டு அவற்றை டேப்லெட் (கையடக்க கணினி) மூலமாக காண்பதற்கென ஒவ்வொரு நடுநிலைப்பள்ளிக்கும் ஒரு டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு வழங்கப்பட்டு இருக்கும் டேப்லெட்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ள ஆப் களை பயன்படுத்துவதற்காக மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி, மாவட்ட அளவிலான பயிற்சி 4 மண்டலங்களில் நடந்தது.


  இதில் 32 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வட்டார வள மையத்திலிருந்து 2  ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்இதன் தொடர்ச்சியாக வட்டார வளமைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக இரு பிரிவுகளாக வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் 2 நாட்கள் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட வேண்டும்இப்பயிற்சியில் 50 சதவீத நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 30ம் தேதியும், மீதமுள்ள ஆசிரியர்கள் 31ம் தேதியும் பங்கேற்க வேண்டும்வட்டார அளவிலான பயிற்சி எல்சிடி மற்றும் வைபை இணைப்பு இருக்கும் வகையில் அமைத்திட வேண்டியது அவசியம்.

இந்தபயிற்சியின்போது ஆசிரியர்களிடம் டேப்லெட் வழங்கப்பட்டு பயிற்சி நடத்தப்பட வேண்டும்2வது பிரிவில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களிடம் அந்தந்த பள்ளிக்குரிய டேப்லெட்டை உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு வழங்க வேண்டும்பின்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளி பார்வையின்போது, பள்ளி இருப்பு பதிவேடு மற்றும் கால் பதிவேட்டில் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்எனவே மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிற்சியினை பெற்ற ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்களை கருத்தாளர்களாக பயன்படுத்தி வட்டார வள மைய பயிற்சிகளை சிறப்பாக நடத்த அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்மேலும் வட்டார வளமையங்களுக்கு டேப்லெட் வழங்கப்பட்டதற்கான பதிவேட்டின் நகல் ஒன்றினை தவறாமல் மாநில திட்ட இயக்குனரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் குறைந்தால் Deployment உறுதி : செப்.30க்குள் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை
குறைந்தால் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு தற்காலிக

பணிமாற்றம் செய்யப்படுவர்," என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் எச்சரித்தார்
சி.இ.ஓ., அலுவலகத்தில் மதுரை, மேலுார் கல்வி மாவட்டங்களின் அரசு உயர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கூட்டம் கோபிதாஸ் தலைமையில் நடந்தது. டி.இ.ஓ.,க்கள் அமுதா, ஜமுனா, நேர்முக உதவியாளர் சின்னதுரை பங்கேற்றனர்
சி.இ.ஓ., பேசியதாவது: ஜூலை 31க்குள் 'எமிஸ்' பணிகளை முடிக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2வில் ஒரு குரூப்பில் குறைந்தது 15 - 20 மாணவர் இருக்க வேண்டும்
செப்., 30க்குள் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் அதிக மாணவர் உள்ள பள்ளிக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பப்படுவர்.பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ஆக.,14க்குள் வாசிப்பு திறனை அதிகரித்து, 'இன்ஸ்பயர்' விருதுக்கு அதிக மாணவர்களை தயார்படுத்த வேண்டும்
உரியநேரத்தில் ஆசிரியர் பள்ளிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும், என்றார்.தலைமை ஆசிரியருக்கு '34'ஒவ்வொரு மாதமும் தலைமையாசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 34 காலங்கள் கொண்ட படிவம் அளிக்கப்பட்டது
அதில் ஆசிரியர் வருகை விபரம், வருகை பதிவை முடிக்கும் நேரம், மருத்துவ விடுப்பு எடுத்த ஆசிரியர் விபரம், ஆசிரியர் கற்பித்தல் திறனை மதிப்பிடுதல் உட்பட விபரங்கள் கேட்கப்பட்டிருந்தது
இதைநிரப்பி சி.இ.ஓ.,விடம் நேரடியாக தலைமையாசிரியர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது
இதுபோன்ற படிவம் வழங்கி அறிக்கை விபரம் கேட்பது முதல்முறை," என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்

ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு!!!

புதுச்சேரி: 'அரசுபள்ளிகளில் கல்வித்தரத்தினை மேம்படுத்த மானிய தொகை 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உயர்த்தி அளிக்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்திற்கு
பதிலளித்து அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல் சூழலை மேம்படுத்திடவும், கல்வித் தரத்தினை மேம்படுத்திடவும், இந்த ஆண்டு பள்ளி மானியம், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு 25 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரை உயர்த்தி அளிக்கப்படஉ ள்ளது. இந்த நிதியை பள்ளியின் பராமரிப்பு, பயன்பாட்டு பொருட்கள், ஆய்வுக்கூடப் பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை வாங்க பயன்படுத்தி கொள்ளலாம். மாணவர் எண்ணிக்கை 1 முதல் 100 வரை- 25 ஆயிரம் ரூபாய், 100க்கு மேல் 250 வரை - 50 ஆயிரம் ரூபாய், 250க்கு மேல் 1000 வரை 75 ஆயிரம் ரூபாய், 1000க்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.பயோ மெட்ரிக் வருகைப் பதிவுஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க கைரேகை அடிப்படையிலான மின்னணு வருகை பதிவு இயந்திரம் அனைத்து அரசு பள்ளிகளிலும் பொருத்தப்படவுள்ளது.
காரைக்கால் பிராந்தியத்தின் பெருகிவரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, மத்திய மின் தொகுப்பில் ஒதுக்கியுள்ள மின்சாரத்தை பெறுவதற்கு, புதிதாக ஒரு தானியங்கி துணை மின் நிலையம் ரூ.48.17 கோடி செலவில் அமைக்க உத்தேசித்து, அதற்கான பணிகள் பவர் கிரிட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. துணைமின் நிலைய பணி செப்டம்பர் மாதம் முடிவடையும்.தொண்டமாநத்தத்தில் புதியதாக ஒரு துணைமின் நிலையம் ரூ.11.75 கோடி செலவில் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இத்துணைமின் நிலையம் இம்மாதம் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இந்ததுணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகத்திற்காக ரூ.5 கோடி செலவில் 22 கிலோ வோல்ட் மின்னுாட்டிகள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.பாகூர் தீயணைப்பு நிலையத்திற்கு இந்த ஆண்டு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும். தீயணைப்பு துறையில் நிலுவையிலுள்ள உபகரணங்கள் வாங்கவும், அத்தியாவசிய உபகரணங்கள் வாங்கவும், தற்போது உள்ள வாகனங்களை சரி செய்யவும் கூடுதல் நிதியாக ரூ.2 கோடி இந்த ஆண்டு வழங்கப்படும்.கடந்த 2015-16 கல்வியாண்டில் சுமார் 3427 இடங்கள் அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லுாரிகளில் இருந்தன. 2016-17 மற்றும் 2017-18 ம் ஆண்டுகளில் கூடுதலாக 1507 இடங்கள் உயர்த்தப்பட்டன. 2018-19ல் மேலும் 240 இடங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது மொத்தம் 5174 இடங்கள் உள்ளன.
அனைத்து கல்லுாரிகளிலும் வை-பை மற்றும் காணொலிக் காட்சிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.வரும் 2018-19 கல்வியாண்டில் காரைக்காலில் பட்டமேற்படிப்பு மையம் தொடங்கப்படும். காரைக்கால் பஜான்கோ கல்லுாரியிடம் இருந்து பெறப்பட்ட நிலத்தில், காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு அரசு மற்றும் சொசைட்டி கல்லுாரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த நிதியாண்டிற்குள் அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
துாய்மை இந்தியா திட்டத்தை பாகூர் பகுதியில் செயல்படுத்த 109.99 கோடியும், திருநள்ளார் பகுதியில் செயல்படுத்த 116.38 கோடி வரைவு திட்டத்திற்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'

சமூக வலைதளைங்களில்
பதிவாகும் தகவல்களை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை' என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர், எஸ்.எஸ்
. அலுவாலியா தெரிவித்தார்.'வாட்ஸ் ஆப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், கலவரத்தை துாண்டுதல், பயங்கரவாதத்தை பரப்புவது போன்ற, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய தகவல்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன. புதிய அமைப்பு

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யவும், அவற்றை கண்காணிக்கவும் 'சமூக வலைதள தகவல் தொடர்பு மையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. பேச்சு சுதந்திரம் இது தொடர்பாக, லோக்சபாவில் நேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர், எஸ்.எஸ்.அலுவாலியா அளித்த பதில்: மக்களின் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தையும், ரகசியங்களையும் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது.
சமூகவலைதளங்களில் பதியப்படும் கருத்து களை, கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ அரசு விரும்பவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை தேசத்துக்கு விரோதமாக வெளியாகும் தகவல்களை, பாதுகாப்பு அமைப்புகள் ஆய்வு செய்து, சட்டப்படி விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்.
சமூகவலைதளங்கள், இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டன. தங்கள் கருத்துகளை, எண்ணங்களை தெரிவிக்க, இதை ஒரு சாதனமாக, மக்கள் பயன்படுத்துகின்றனர்; சிலர், அதை தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

5, 8ஆம் வகுப்புகளுக்கு 'அனைவரும் தேர்ச்சி' திட்டம் ரத்து!

Flash News : "No Work No Pay" வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவு - GOVT LETTER

12/7/18

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா..?



🍅 பதறாதீர்..!மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ..!

🌷ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால், என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப்போட்டு விட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள்.

🌷இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்..? யாரை அணுகவேண்டும்..?
இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா..?
இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன..?

ஏ.டி.எம். ஃபிட் கரன்சி,,!

🌷ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன.

🌷இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுவிடும். ஆர்.பி. ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின் பற்றியாக வேண்டும்.

🌷அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. 

🌷கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தா ல் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.

எப்படி வருகிறது..?

🌷எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது.

🌷Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்துவருகின்றன.

🌷இவர்களின் பணிவங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.

யாரை அணுகுவது..?

🌷வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ளநோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம்.

🌷ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

🌷பின்னர் ஏ.டி.எம்.லிங்டுபேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி. எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள்.

🌷அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

வங்கி நடைமுறைகள்..!

🌷ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம்.

🌷ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ளநோட்டுதானா என பரிசோதிப்பார்கள். அது கள்ளநோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். 

🌷கள்ள நோட்டு தான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள்.

🌷உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த்தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள்.

🌷இந் த விசாரணையில் கள்ளநோட்டை கொண்டு வந்தவர்மீது சந்தேகம் வந்தால் அவர்மீது வங்கியானது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.

எஃப்.ஐ.ஆர். ஃபைல்..!

🌷பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த்தாள்கள் கள்ளநோட்டுகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களின்மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும்.

🌷அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும்.

🌷தனது ஏ.டி. எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும்.

🌷வாடிக்கை யாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.

ஆர்.பி.ஐ.-ன் உதவி..!

🌷வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ளநோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென் று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

🌷அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம்.

🌷இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு,

www.rbi.org.in
www.paisabolthahai.rbi.org.in

என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.”

🌷இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்

1முதல்‌ 3ம் வகுப்பு வரை பாடத்திட்டம் எழுத தேவை இல்லை.

*ஒன்றா ம்வகுப்பு புதிய பாடநூல் சார்ந்த கருத்தாளர்களுக்கான பயிற்சியின் போது வழங்கப்பட்ட சில தகவல்கள்

*  1.புதிய கற்பித்தல் முறையில் 1-3 வகுப்புகளுக்கு Lesson plan எழுத
தேவையில்லை.

 2.Work done register தேவையில்லை, விரும்பினால் ஆசிரியர் எழுதி பராமரிக்கலாம் .

3.கம்பிப்பந்தல், கீழ்மட்ட கரும்பலகை, காலநிலை அட்டவணை, ஆரோக்கிய சக்கரம், சுயவருகைப்பதிவேடு ஆகியன பயன்படுத்த வேண்டும்

 4.CCE RECORD உண்டு

 5.இந்த ஆண்டுமுதல்  SKILLS ACHIEVEMENT RECORD or CHART என்ற ஒன்றை உருவாக்கி பயன்படுத்தவேண்டும்

6. புதிய கற்பித்தலுக்கென எந்தவொரு குழு அட்டைகளும் பயன்படுத்த  தேவையில்லை.

7.நான்கு & ஐந்து வகுப்புகளுக்கு SALM முறையில் கற்பித்து Lesson plan எழுதவேண்டும்

 மற்ற பிற செய்திகள், பயிற்சிகள், நிகழ்வுகள் வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியில் BRT & கருத்தாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும்.. *அதுவரை ஆவலுடன் காத்திருங்கள் காத்திருப்போம்.*

பிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் !!

*பயிற்சி தேதி மாற்றம்* பிரைமரி ஆசிரியர்களுக்கான இரண்டுநாட்கள்
பயிற்சி...
கட்டம்1: 16.07.2018, 17.07.2018),( திங்கள்,செவ்வாய்)

கட்டம் 2 ;
18.07.2018, 19.07.2018,(புதன்,வியாழன்)
அனைத்து ஒன்றியங்களுக்கும் பயிற்சி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பல வண்ண சீருடை : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசுபள்ளிகளில், பல வண்ண சீருடைகள் வழங்கப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன்
நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, 9, 10ம் வகுப்புகளுக்கு, ஒரு வகை நிறத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வேறு வகையான நிறத்திலும், சீருடைகளின் நிறம் மற்றும் உடை வடிவங்கள் மாற்றப்பட்டு உள்ளன.

அதேபோல், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், இந்த ஆண்டு, பச்சை நிறத்தில் சீருடைகள் மாற்றப்பட்டன.இந்நிலையில், மீண்டும் சீருடைகள் மாற்றப்படும் என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:தற்போதுள்ள சீருடை, ஒரே வண்ணத்தில் உள்ளதால், அவற்றுக்கும், தனியார் பள்ளி சீருடைக்கும் இடையே, பெரும் வித்தியாசம் உள்ளது.

இந்தவித்தியாசம் தெரியாத வகையில், பல வண்ணங்களில் இருக்குமாறு, சீருடைகள் மாற்றப்படும். வரும் கல்வி ஆண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு: சேமூரில் உள்ள அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வரும் முகமது யாசின் என்ற சிறுவன் சாலையோரம் கிடந்த ரூ.50,000-த்தை எடுத்து பள்ளியின் ஆசிரியர் மூலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார்

Image may contain: 6 people, people standing and people sitting

திருவண்ணாமலை மாவட்ட அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்

Image may contain: 2 people

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆரணிஅருணகிரிசத்திரம் பூந்தோட்டம் பகுதி கண்ணப்பன் தெருவில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.61 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய
அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கட்டடங்களை திறந்து வைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
ஜிஎஸ்டி வரியை எதிர்கொள்ளும் வகையில், 25 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (சார்டர்டு அக்கவுன்டன்ட்) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது பிளஸ் 2 பயின்று வரும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் அவர்களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும்.
1, 6, 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தின் மூலம் கணினி வழியில் பயிலும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படுகின்றன. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.500 கோடியில் இணையதள வசதியுடன் முற்றிலும் கணினிமயமாக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு அனைத்துப் பாடங்களும் புதிய பாடத் திட்டங்களாக மாற்றப்பட உள்ளது. ஆகையால், சுமார் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் இருந்து 600 பயிற்சியாளர்களை வரவழைத்து ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கிலத்தை சரளமாக பேசக்கூடிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்துகிறது.
பள்ளிகளில் கழிப்பறையை சுத்தம் செய்ய ஜெர்மனி நாட்டிலிருந்து 1,000 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எத்தகைய தேர்வுகளையும் எதிர்கொள்ள பாடத்திட்டம்'

மத்திய அரசின், எத்தகைய தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், புதிய
பாடத்திட்டம் அமையவிருக்கிறது,'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அரசு பள்ளி கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், கோபியில், 2,500 மாணவர்களுக்கு, தணிக்கையாளர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய அரசின் ஜி.எஸ்.டி., புதிய வரி திட்டத்தின் மூலம், தமிழகத்தில், தகுதி வாய்ந்த தணிக்கையாளர்கள் தேவைப்படுகின்றனர். அடுத்தாண்டு முதல், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. அலைபேசி, ஸ்மார்ட் கணினிகளிலும் பாட திட்டங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மத்திய அரசின் எத்தகைய தேர்வுகளையும், மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும், ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினர்.

கிராமத்தினரே நடத்தும் பள்ளி; 25 குழந்தைகள்... ஒரே ஆசிரியர்!

சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்குப்பட்டி ஊராட்சி வி.புதுப்பட்டியில்தன்னார்வ நிறுவனம் கைவிட்ட பள்ளியை கிராமத்தினரே
நடத்துகின்றனர். இங்கு5 வகுப்புகள், 25 குழந்தைகள் படிக்கின்றனர். ஒரே ஆசிரியர் விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறார்.

மலையடிவார பகுதியான இங்கு 1986 ல் 'அசேபா' தன்னார்வ நிறுவனம் சார்பில் தொடக்கப் பள்ளி துவக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. அந்நிறுவனம் பள்ளியை நடத்த முடியாமல் 2014 ல் கைவிட்டது. இதனால் 100 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கிராமத்தினரே பள்ளியை நடத்துகின்றனர். தன்னார்வ நிறுவனத்தில் பணிபுரிந்த ஆசிரியர் வள்ளியம்மை விடுப்பு எடுக்காமல் 5 வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
அவர்கூறுகையில், ''துவக்கத்தில் ஐந்து ஆசிரியர்கள் இருந்தனர். பள்ளியை கைவிட மனமில்லாமல் தொடர்ந்து நடத்துகிறேன். தற்போது ஐந்து வகுப்புகள் உள்ளன. விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறேன்,'' என்றார்.
முன்னாள் ஊராட்சித் தலைவர் பழனி கூறியதாவது: இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன், 50 குழந்தைகள் இருந்தனர். பள்ளி தொடர்ந்து நடக்குமா என்ற பயத்தில் சிலர் பக்கத்து ஊர்களில் குழந்தைகளை சேர்த்தனர். ஏழு கட்டடங்கள், ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. 'குறைந்தது 25 மாணவர்கள் இருந்தாலே அரசு பள்ளி துவங்கலாம்' என விதிமுறை உள்ளது.
தற்போது ஒரு ஆசிரியருக்கு தொகுப்பூதியம் தருவதாக அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். பள்ளியை அரசு ஏற்று நடத்தினால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றார்.

ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் இயங்கும் பள்ளி: தொடக்கக் கல்வி இயக்குநர் ஆஜராக உத்தரவு

ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் பள்ளி இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் வரும் 18 - ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சின்ன கொடுங்கையூரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையை அடுத்துள்ள புழல் அருகே கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு பாதுகாப்பான கட்டடங்கள் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் இந்த பள்ளிக்கூடம் குறித்து திருவள்ளூர் மாவட்ட தலைமை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' எனக் கோரியிருந்தார்.

இந்தமனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பள்ளிக்கூடத்தின் தற்போதைய நிலை தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. புகைப்படங்களை பார்த்த நீதிபதி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல் மற்றொரு சம்பவம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன்கூடிய பள்ளிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? மேலும் இந்த பள்ளிக்கு எப்படி ஆண்டுதோறும் அங்கீகாரம் நீட்டிக்கப்படுகிறது? எனக் கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் வரும் 18 -ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

ஆசிரியர்கள் இன வேறுபாட்டுடன் செயல்படக்கூடாது - NCERT

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதியதாக
பள்ளிகளை துவக்குவதோடு, பள்ளிகளில் நிலவும் மத மற்றும் பண்பாடு ரீதியிலான பிரச்னைகளை களையும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட
வேண்டும்' என்று, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (என்.சி.இ.ஆர்.டி.,) பரிந்துரைத்துள்ளது!

'பொதுவாக, பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களை சிறுபான்மையின குழந்தைகள் சந்திப்பது ஒருபுறம் இருக்க, பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளிலேயே கலாசார மற்றும் மத ரீதியான வேறுபட்ட பிரச்சனைகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். சில நேரங்களில், அவர்களது உணவு பழக்கமுறை கூட குற்றமாக கருதப்படும் சூழல் நிலவுகிறது. சில பிரிவினரால் வேறுபட்ட சீருடை பின்பற்றப்படுவதும் விரும்பத்தக்கதல்ல.
'சிறுபான்மையினரது கலாசார ரீதியான பண்டிகைகள் பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும். சிறுபான்மையினர் சந்திக்கும் இன பாகுபாடு மற்றும் பல்வேறு சவால்களை, பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்' என்றும் என்.சி.இ.ஆர்.டி., பரிந்துரைத்துள்ளது

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: ஆன்லைன் கலந்தாய்வு மூலம் இடங்களை தேர்வு செய்வது எப்படி?

என்ஜினீயரிங் ஆன்லைன் கலந்தாய்வு குறித்து மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 509 என்ஜினீயரிங் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு
இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்திவருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டன.
என்ஜினீயரிங் சேர 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் சான்றிதழ் சரிபார்த்தனர். கட்டணம் கடந்த ஆண்டு விதிக்கப்பட்டது தான். தரச்சான்று உள்ள கல்லூரிகளுக்கு கலந்தாய்வு மூலம் வரும் மாணவர்களுக்கு கட்டணம் ரூ.55 ஆயிரம். தரச்சான்று இல்லாத கல்லூரிகளில் கட்டணம் ரூ.50 ஆயிரம். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் தரச்சான்று உள்ள கல்லூரிகளில் ரூ.87 ஆயிரம், தரச்சான்று இல்லாத கல்லூரிகளில் ரூ.85 ஆயிரம்.

கலந்தாய்வு தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆன்லைனில் கலந்தாய்வுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் 5 குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். முதல் குழுவுக்கு 15 ஆயிரம் பேரும், 2-வது குழுவுக்கு 25 ஆயிரம் பேரும், 3-வது குழுவுக்கு 25 ஆயிரம் பேரும், 4-வது குழுவுக்கு 30 ஆயிரம் பேரும், 5-வது குழுவுக்கு மீதம் உள்ளவர்களும் அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான ரூ.5 ஆயிரத்தை முன்வைப்பு தொகையாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் அல்லது டி.டி. எடுத்து உதவி மையங்களில் கொடுக்க வேண்டும். அதன்பின்னர் தான் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு 3 நாட்கள் நேரம் ஒதுக்கப்படும். அவர்கள் எத்தனை இடங்களையும் தேர்வு செய்யலாம்.

ஆனால் 3-வதுநாள் மாலை 5 மணிக்குள் ஒரு கல்லூரியையும், ஒரு பிரிவையும் மட்டும் தேர்ந்து எடுக்க வேண்டும். மறுநாள் மாணவர் சேர்க்கை அலுவலகத்தில் இருந்து அவர்கள் தேர்ந்து எடுத்த கல்லூரி மற்றும் இடம் ஆகிய தகவல் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., இ.மெயில் ஆகியவை மூலம் கொடுக்கப்படும்.

இந்தசுற்றில் கலந்துகொண்டு இடஒதுக்கீடு பெறாதவர்கள் அடுத்த சுற்றில் முறைப்படி கலந்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படும். ஏற்கனவே இடத்தை தேர்ந்து எடுத்தவர்கள் ஒரு வாரத்திற்குள் அந்த கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

6ஆம் வகுப்பு சமூகவியல் மதிப்பீடு QR Code செயல்பாடுகள் செய்யும் போது கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS )உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension ​) மற்றும் பணிக்கொடை (Gratuity )வழங்கும் மத்திய அரசு -RTI -கடிதம்

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மறைப்பு -மீண்டும் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்

Image may contain: one or more people and text

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு!

அரசுப்பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டிக்கானஇட ஒதுக்கீட்டில் கீரிமி லேயர் வரையறையைப்பொருத்துவதற்கு எதிராக இடைக்காலத்
தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம்தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டவழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில்நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர்மற்றும் டி.ஒய்.சந்திரசௌத்ஆகியோர் கொண்ட அமர்வானது தனதுதீர்ப்பில் கூறியதாவது:

2006இல்நாகராஜ் எதிர் இந்திய அரசுஎன்ற வழக்கில், கீரிமி லேயா் வரையரையைஅரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சிமற்றும் எஸ்டி பிரிவினருக்குப் பொருத்துவதுகுறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராகஇடைக்காலத் தடை விதிக்க முடியாதுஎன்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையைஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்கொண்ட அரசியல் சட்ட அமர்வுவிசாரிக்கும் என்றும் கூறியுள்ளது.

முன்னதாகஅரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள்ஏழு பேர் கொண்ட அரசியல்சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். ஏனெனில் ரயில்வேத் துறையிலும் பல்வேறு அரசின் சேவைத்துறைகளிலும் இப்பிரச்சினை குறித்து வேறுபட்ட நீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது. அதைத் தீர்த்து வைக்கஅரசியல் சட்ட அமர்வு விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராஅவருக்குப் பதிலளிக்கும் விதமாக, தற்போது ஓர்அரசியல் சட்ட அமா்வானது பல்வேறுபிரச்சினைகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கைஉடனே எடுத்துக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் முதல் வாரத்தில்இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சட்ட அமர்வுஎடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.

காமராஜ் காரை நிறுத்திய காவலரின் கதி!!!

காமராஜரை பற்றிய சில தகவல்கள் | அவரின் பிறந்தநாளைனை முன்னிட்டு மாணவர்களுக்காக



1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.


திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” காமராஜ்.

“ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார் காவல்துறை அதிகாரி. “இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி – நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி பின் இவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமெ என்று பத்றிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே என கலங்கினார்.

அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.

காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL)

கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.

பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.

ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் “காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?”, அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.

“ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க” என்றார்.

என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.

அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் “பெல்” என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.

காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.



அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், “பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”.

பிறப்பு: ஜூலை 15, 1903

இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா

பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.

இறப்பு: அக்டோபர் 2, 1975

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு:

கு. காமராஜர் அவர்கள், 1903  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “விருதுநகரில்” குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும்  அமைந்தது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியில்” சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.


விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு:

டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். “ஹோம் ரூல் இயக்கத்தின்” ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்ரஹத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.

மேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு:

‘காங்கிரஸ் தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்’, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’ எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

தமிழக முதல்வராக காமராஜர்:

1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

முதல்வராக காமராஜர் ஆற்றியப் பணிகள்:

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.
..

நம்ம வீட்டு பிள்ளைக்கு பத்து ரூவாய்க்கு மிட்டாய் வாங்கி குடுக்க முடியலை ஆட்டகாரிக்கு ஐநூறு ரூவா அன்பளிப்பா..

தண்ணி இல்லாம நம்ம ஊரு தரிசா கிடக்கு தன்சானியாவுக்கு தண்ணி மேம்பாட்டுக்கு 617 கோடி நிதிய அள்ளி வீசிட்டு போறதை நினைச்சா எல்லாம் விதின்னு தலையில கைய வச்சுகிட்டு வானத்தையாவது பார்ப்போம்..

மழைய நம்பி தான் நமக்கு இனி சோறு பொங்க உலை இந்த

மோடிய நம்பினா நமக்கு இனி உயிரோட சமாதி சிலைதான்.

[14:13, 11/7/2016] +91 95510 53137: #வட்டக்_கத்தி: இது தமிழர்களின் 12ம் நூற்றாண்டு ஆயுதம். திருச்சி மாவட்டத்தை அடுத்த கல்லக்குடி ஊரின் அருகே உள்ள மேலரசூரில் உள்ள தியாகராசர் கோவிலின் முன்புறத்தில் 110 செ.மீ. உயரம், 51 செ.மீ. அகலம் கொண்ட கி.பி. 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்தூண் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.


இதில் சிற்ப கலைநயத்துடன் கூடிய திருத்தலத்தை குறிக்கும் வடிவம், சித்திரமேழி பெரிய நாட்டாரின் சின்னங்களான உடுக்கை, ஏர் கலப்பை, 2 போர் வாள்கள், சக்கர வடிவ ஆயுதம், 2 குத்துவிளக்குகள், ஒரு முக்காலியின் மேலே பூர்ணகும்பம் ஆகிய புடைப்பு சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அச்சிற்பங்களில் 19.5 செ.மீ, வெளிவிட்டம் அளவுடைய சக்கர வடிவ ஆயுதம் அல்லது வட்டக்கத்தி குறிப்பிடத்தக்கது.

தட்டையாக இல்லாமல் குவிந்த அமைப்புடையதும், மெல்லியதும், வெளிவட்டம் மட்டும் கூர்மையான நுனி உடையதுமான இதற்கு சக்குரும், சக்கர், சக்ரே, சலிக்கர் போன்ற பெயர்கள் உண்டு. இது பழங்கால போர் படை கருவிகளில் பாணிமுக்தா எனும் எறிந்து தாக்கும் வகையை சார்ந்தது.

ஆள்காட்டி விரலின் சுழற்சியாலோ அல்லது ஆள்காட்டி விரல், கட்டை விரல் ஆகிய இருவிரல்களால் பிடிக்கப்பட்டு முன் கையின் அதிவிரைவு அசைவாலோ எறிந்து தாக்கப்படும் இது எதிரிகளின் தலை, கை, கால்களை துண்டிக்கக்கூடிய அதிபயங்கர ஆயுதமாகும்.

12 செ.மீ. முதல் 30 செ.மீ. வரையிலான விட்டம் அளவுகளுடன் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் இரும்பு அல்லது பித்தளை ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதம் முறையே 40 முதல் 60 மீற்றர் அல்லது 80 முதல் 100 மீற்றர் வரை பறந்து சென்று எதிராளியை தாக்கக்கூடியது.

இந்த ஆயுதம் தமிழகம், பஞ்சாப் போன்ற இந்திய மாநிலங்களில் மட்டுமின்றி திபெத், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆயுதத்தை கையாளும் வல்லவர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர் என்பது இக்கண்டுபிடிப்பின் சிறப்பம்சமாகும்.

கல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்!


நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர்.
பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர். அரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர் மூத்தத் தலைவர்கள் அரசியலில்  பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து  அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.
'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் கர்ம வீரர் காமராஜர்.
இவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்திருந்தால் நமது மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. 1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம் நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர், ஏழ்மையான குடும்ப ஏழ்மையின் காரணமாகவும், படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.
12-ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலைப் பார்த்தார். அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு 15 வயதான போது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது. அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சவுகர்யம், பதவி, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.
1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். 
மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில்  நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு 
அப்படி அவர் என்ன செய்தார்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? “பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்” என்பதுதான்.
அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார். எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார். 
ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். அவ்ர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார். அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம்  செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.
காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை  அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.
இப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார்.
இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர் திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.
இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை 'கிங்மேக்கர்' என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது அகவையில் காலமானார்.
அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய“பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர். ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! 
தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?
முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்! 

அரசர்களின் அரசர்! காமராஜர் ( கவிதை)




கடையெழு வள்ளல்கள்
வலம் வந்த
தமிழ் நாட்டில்
கல்வி வள்ளலாய்
அவதரித்த
கர்ம வீரரே!
காமராசரே!

அண்ணலின் சீடராய்
அயராது
பாடுபட்டீர்கள்!
அவர்தம் வழியில்
கதராடை உடுத்தி
மற்றதனை மறுத்தீர்கள்!

எளிமையின் சின்னமாய்
இறுதி வரை
வாழ்ந்தீர்கள்!

ஏழைக்கும்
கல்வி தந்து
ஏற்றம் அளித்தீர்கள்!

படிக்காத மேதை
நீங்கள்
பதினாலாயிரம்
பள்ளிகள் திறந்தீர்கள்!

வளம் பெறக் கல்வியும்
நலம் பெற உணவையும்
நன்றாகக் கொடுத்தீர்கள்!

வெளிநாட்டுப் பயணத்திலும்
வேட்டி சட்டையுடன்
வீறுநடை போட்டீர்கள்!
தென்கோடியில் பிறந்து
வடக்கேயும்
வெற்றிக்கொடி பிடித்தீர்கள்!

தமிழனின் புகழைத்
தனி ஆளாய்ச்
சுமந்தீர்கள்!

விண்ணளவு புகழ் கொண்டு
சென்னையில் ஓய்வெடுக்கும்
தன்னிகரில்லாத்
தலைவரே!

எங்களை மன்னியுங்கள்!

அன்று
தேர்தலில்
உங்களைத் தோற்கடித்தோம்!

இன்றும்
தோல்வியை
நாங்களல்லவா சுமக்கிறோம்!

கிளைகளை
வெட்டாமல்
வேரை அல்லவா
வெட்டியுள்ளோம்!

உங்களின் ஆட்சிதான்
இன்றும்
உரைகல் எங்களுக்கு!

வான் முட்டும்
உயரம்
உங்களுக்கு மட்டுமல்ல!

உங்கள் எளிமைக்கும்
நிலைத்த
புகழுக்கும்தான்!

புவிக்கோளம்
வாழும் வரை
பச்சைத் தமிழரே!

உங்கள்
புகழ் வாழும்!

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்!: ஜூலை 15 முதல் தொடங்கும்

மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இந்த வகுப்புகளில் அருகே உள்ள அரசு நூலகங்களிலிருந்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பொது நூலகத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4,600-க்கும் மேற்பட்ட அரசு நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பொது நூலகத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். உறுப்பினராகச் சேரும் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், பேச்சு, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.
ஜூலை 15 முதல் தொடங்கும்: இது குறித்து பொது நூலகத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஜூலை-15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை வாசிப்பு மாதமாகக் கொண்டாடப்படும். இந்த ஒரு மாதத்தில் பள்ளிகளில் ஒரு நாள் ஒரு வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்படும். ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் வாசிக்க வாய்ப்பு வழங்கப்படும். ஒரு சுற்று வாசிப்பு முடிவடைந்ததும் மீண்டும் அடுத்த சுற்று தொடங்கும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் இந்த வகுப்புகள் நடைபெறும்.
இந்த நேரத்தில் நன்னெறிக் கதைகள், படக் கதைகள், பொது அறிவு, தலைவர்கள் வரலாறு உள்பட பல்வேறு வகையான நூல்கள் பள்ளிகளுக்கு அருகில் அமைந்திருக்கும் அரசு நூலகங்களிலிருந்து நூலகர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர தற்போது 14 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நடமாடும் நூலக வாகனங்களை 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்

மாணவர்களை துன்புறுத்தியதாக கூறி ஆசிரியரிடம் ரூ1 லட்சம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் 2 பேர் கைது

பிரவுசிங்' மையங்களை தவிர்க்க வேண்டும் : இன்ஜி., கவுன்சிலிங் செயலர் எச்சரிக்கை

இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கு, தனியார் இணையதள மையங்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்,''


என, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தும்முறை, மாணவர்கள் அவற்றில் பதிவு செய்வதற்கான வசதிகள் குறித்து, தமிழ்நாடு இன்ஜி., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ், நேற்று நிருபர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், விண்ணப்ப பதிவு மற்றும், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை முடிந்துள்ளன. மாணவர்களின் தரவரிசை அடிப்படையில், ஐந்து பிரிவுகளாக, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. தரவரிசையில் முன்னிலை இடம் பெறும், 15 ஆயிரம் பேர், முதல் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்பர்.அடுத்த, 15 ஆயிரம் பேர் இரண்டாம் பிரிவிலும், மீதம் உள்ளவர்கள், அடுத்தடுத்த மூன்று பிரிவுகளிலும் பிரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படும்.கவுன்சிலிங்கில், ஆன்லைனில் விருப்பமான பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகளை பதிவு செய்ய, மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். மூன்றாம் நாள் மாலை, 5:00 மணிக்கு விருப்ப பதிவுக்கான, 'போர்டல் லாக்' செய்யப்படும்.அதற்குள், மாணவர்கள் தங்கள் விருப்ப பதிவை பதிவு செய்து விட வேண்டும். ஒரு மாணவர் எத்தனை கல்லுாரிகள், பாடப்பிரிவை வேண்டுமானாலும், பதிவு செய்யலாம்.தரவரிசைக்கு ஏற்ப, அவருக்கான பொது ஒதுக்கீடு அல்லது இன ரீதியான ஒதுக்கீடு அடிப்படையில், இடம் உள்ள கல்லுாரிகளில், ஆன்லைன் வழியே, தானாகவே தோராயமான இட ஒதுக்கீடு வழங்கப்படும்.அதை மாணவர்கள் உறுதி செய்வது கட்டாயம். மாணவர்கள் அளித்துள்ள விருப்ப பதிவில், முன் வரிசையில் எந்த இடம் காலியாக உள்ளதோ, அதையே கணினி வழி, 'சாப்ட்வேர்' மேற்கொள்ளும்.எனவே, மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் கல்லுாரி, பாடப்பிரிவு எது என்பதை, முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்.அடுத்தடுத்த விருப்பங்களை, அடுத்தடுத்த வரிசையில் பதிவு செய்ய வேண்டும். முதலில் உள்ள கல்லுாரியில் இடம் இல்லாவிட்டால், அடுத்த இடம் தேர்வாகும்.அதுவும் இல்லாவிட்டால், அதற்கு அடுத்த இடம் தேர்வாகும். இந்த முறையை அறிந்து, மாணவர்கள் விருப்பமான பாடம், கல்லுாரி வரிசையை மேலிருந்து கீழாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.தனியார் பிரவுசிங் மையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் உதவி மையங்கள் வழியாக, கவுன்சிலிங் பதிவுகள் மேற்கொள்வதை, மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.மாறாக, மாநிலம் முழுவதும், 42 உதவி மையங்கள், அரசின் சார்பில் செயல்படுகின்றன. அவற்றுக்கு சென்று, பதிவுகளை மேற்கொண்டால், பாதுகாப்பானதாகவும், யாருடைய குறுக்கீடும் இன்றி இருக்கும்.பெரும்பாலும், வீட்டில் உள்ள கணினிகளில் தாங்களாகவே சுய முடிவு எடுத்து, பதிவு செய்வது சிறந்தது. உதவி மையங்களை பொறுத்தவரை, அவற்றில் தனியார் நிறுவனங்களின் குறுக்கீடுகள் கிடையாது.அண்ணா பல்கலையால் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், இணையதளத்தில் பதிவு செய்யும் போது, மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவர்.
இவ்வாறு ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். 

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் இருக்காது: CBSE

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு சுற்றறிக்கையாக அனுப்பப்படும் என சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. 
தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி., தரும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்தக்கோரி வழக்கு தொடப்பட்டது. 
இதுகுறித்த விசாரணையின் போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு இரண்டு வாரங்களுக்குள் சுற்றறிக்கையாக அனுப்பப்படும் என சி.பி.எஸ்.இ., உத்திரவாதம் அளித்தது. தொடர்ந்து இந்த வழக்கை இரு வாரங்களுக்கு ஐகோர்ட் ஒத்தி வைத்தது.

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும், 16ம் தேதி வினியோகம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 16ம் தேதி, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

 'மார்ச்சில், பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய அனைவருக்கும், ஜூலை, 16ம் தேதி காலை, 10:00 மணி முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 'மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி, சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

309 டெக்னிக்கல் எஸ்.ஐ., பணி ஆக.10 க்குள் விண்ணப்பிக்கலாம்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குழுமம் சார்பில், 309 டெக்னிக்கல் எஸ்.ஐ.,
பணியிடங்களுக்கு இன்று (ஜூலை 11) முதல் இருபாலரும் ஆன்லைனில் (tnusrbonline.org) விண்ணப்பிக்கலாம். போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உண்டு. ஆக.,10ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.


விண்ணப்பிப்பவர்கள் 2018 ஜூலை 1 ல் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (1990 ஜூலை 1 அல்லது அதற்கு பின் பிறந்தவர், 1998 ஜூலை 1 அல்லது அதற்கு முன் பிறந்தவர்). பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வயது உச்ச வரம்பு 30 வயது. ஆதிதிராவிடருக்கு 33 வயது, விதவைகளுக்கு 35 வயது, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் போலீஸ் துறையில் உள்ளவர்களுக்கு 45 வயது இருக்கலாம்.தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் பட்டய படிப்பில் குறைந்தபட்சம் 2ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய தொழில்நுட்ப கல்வி குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் பட்டம் ( பி.டெக்.,- பி.இ.,) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம் 500 ரூபாய். மேலும் விபரங்களை சீருடை தேர்வாணைய இணையதளத்தில் பார்க்கலாம்

PGTRB விரைவில் நடத்தப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு
பாடப்பொருள்மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் ‘கியூ ஆர்’ கோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ‘கியூ ஆர்’ கோடுவை செல்போனில் ‘ஸ்கேன்’ செய்தால், இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ தெரியும். அதாவது உதாரணமாக 6–ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கும்மி அடி என்று தலைப்பில் உள்ள பாடத்தில் ‘கியூ ஆர்’ கோடு இருந்து, அதை ‘ஸ்கேன்’ செய்தால், கும்மி அடிப்பது மற்றும் சத்தம் ஆகியவை வீடியோ மற்றும் ஆடியோவாக தெரியும். அதை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பார். இப்படி அனைத்து பாடப்புத்தகங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ‘கியூ ஆர்’ கோடு இடம் பெற்றுள்ளது. இவற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார்.இதையடுத்து முதன்மை கல்வியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சியின் நிறைவு விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இணை இயக்குனர், இயக்குனர் மூலம் எதையும் தீர்க்க நாட்கள் அதிகமாகும். அதனால் தான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும். நான் 8 முறை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன். அதற்கு காரணம், யார் எதை கூறினாலும் அதை காது கொடுத்து கேட்பேன். அவர்களை தட்டிக்கொடுப்பேன். அதேபோல நீங்களும் செயல்படுங்கள்.உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு அந்த பள்ளிகளில் கழிப்பறை மற்றும் ஏதாவது குறை இருந்தால்தெரியப்படுத்துங்கள். பள்ளிகளுக்கு அனைத்து கட்டமைப்புகளும் செய்து கொடுக்கப்படும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் சேவை மனப்பான்மை உள்ளவர்களை சேருங்கள். சிறப்பாக பணியாற்றுங்கள். பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ்–2 படித்து முடித்த உடன் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அனைத்து பாடங்களும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் புதுமை பள்ளி விருதுகளையும், கனவு ஆசிரியர் விருதுகளையும் ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு எப்படி பாடம்நடத்துவது என்பது குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு.ஆனால் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுவதால் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் பயிற்சி நடத்தப்படும். அந்த பயிற்சி விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கூட வேலைநேரம் போக மற்ற நேரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக விழாவின் போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கருப்பசாமி, மெட்ரிகுலே‌ஷன் பள்ளிகள் இயக்குனர்ச.கண்ணப்பன், இணை இயக்குனர் நாகராஜ முருகன் மற்றும் தீக்ஷா மற்றும் மின்னணு மதிப்பீடு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடமேற்கு வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வரும் 13ம் தேதி வலுப்பெறும் என்பதால் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 3 வாரங்களுக்குப் பின் மீண்டும் வலுவடைந்துள்ளது. கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய பருவமழையால், ஜூன் மாதம் முதல் 2 வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள பகுதிகளில் அதிக மழை கிடைத்தது. ஜூன் 1 முதல் நேற்று வரை தமிழகத்தில் 64 மி.மீ மழை இயல்பாக பெய்ய வேண்டும். ஆனால் இயல்பைவிட 28 சதவீதம் அதிகரித்து, 81.9 மி.மீ நேற்று வரை பதிவாகியுள்ளது.கடந்த 3 வாரங்களாக பருவமழை வலுவிழந்து காணப்பட்டது.
 தற்போது மீண்டும் பருவக்காற்று வலுவடைவதால் மழை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. அதன்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கோவை பொள்ளாச்சி, தேனி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சம் கோவை சின்னக்கல்லாரில் 110 மி.மீ, வால்பாறையில் 90 மி.மீ, வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 80 மி.மீ, பொள்ளாச்சியில் 60 மி.மீ, நீலகிரி தேவலாவில் 40 மி.மீ, தேனி பெரியார் பகுதியில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து நேற்றும் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில்,  வடமேற்கு வங்க கடலில் ஆந்திரா கடல் பகுதி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி நிலவி வருகிறது. இது வரும் 13ம் தேதி வலுப்பெறும் என்று இந்திய  வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் திடீர் மழைசென்னையில் நேற்று மாலை 6.15 மணி அளவில் திடீரென மழை பெய்தது.
 தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், திருவான்மியூர், மெரினா காமராஜர்  சாலை உள்ளிட்ட பல இடங்களில் மாலை லேசான மழை பெய்தது. பின்னர் இரவு 8 மணி  அளவில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாசாலை, அண்ணாநகர்,  ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில்  விட்டு, விட்டு சில நிமிடங்கள் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. வெப்பச் சலனத்தால் நேற்று மழை பெய்துள்ளது.

ஒன்றாம்வகுப்பு புதிய பாடநூல் சார்ந்த கருத்தாளர்களுக்கான பயிற்சியின் போது வழங்கப்பட்ட சில தகவல்கள்:

1.புதிய கற்பித்தல் முறையில் 1-3 வகுப்புகளுக்கு
Lesson plan எழுத தேவையில்லை.

2.Work done register தேவையில்லை, விரும்பினால் ஆசிரியர் எழுதி பராமரிக்கலாம் .

 3.கம்பிப்பந்தல்,கீழ்மட்ட கரும்பலகை, காலநிலை அட்டவணை, ஆரோக்கிய சக்கரம், சுயவருகைப்பதிவேடு ஆகியன பயன்படுத்த வேண்டும்

4.CCE RECORD உண்டு

5.இந்த ஆண்டுமுதல்  SKILLS ACHIEVEMENT RECORD or CHART என்ற ஒன்றை உருவாக்கி பயன்படுத்தவேண்டும்

 6. புதிய கற்பித்தலுக்கென எந்தவொரு குழு அட்டைகளும் பயன்படுத்த  தேவையில்லை.

 7.நான்கு & ஐந்து வகுப்புகளுக்கு SALM முறையில் கற்பித்து Lesson plan எழுதவேண்டும் 💐💐💐💐💐💐 மற்ற பிற செய்திகள், பயிற்சிகள், நிகழ்வுகள் வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியில் BRT & கருத்தாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும்.. அதுவரை ஆவலுடன் காத்திருங்கள் 💐காத்திருப்போம்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..!

தமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில்
45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு தேர்வு செய்து முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சை உருவாகி உள்ளது. தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடி

தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வில் நிகழ்ந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண் பெற்றதாக கூறி தவறாக தேர்வு முடிவுகளை வெளியிட்ட மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 1ந்தேதி நடந்த 3375 காலிபணியிடங்களுக்காண முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது வெளியிடப்பட்ட தகுதி பட்டியல் மூலம் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த தேர்வில் கணித பிரிவில் பங்கேற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு எழுதிய ஹேமாலட்சுமி 45 மதிப்பெண்கள் பெற்றதாகவும் அவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ளும் தகுதியை கூட பெற வில்லை என்றும் ஆன்லைனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மெரிட் அடைப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களின் பெயர் பட்டியலில் 45 மதிப்பெண் பெற்ற ஹேமாலட்சுமியின் பெயர் முதலாவதாக இடம் பெற்று இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் 45 மதிப்பெண் மட்டுமே பெற்ற ஹேமாலட்சுமி தேர்வில் 81 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருப்பதாக குறிப்பிட்டு இருப்பதை பார்த்த மற்ற தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் எந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு தேர்வு தாள் திருத்தும் பொறுப்பை வழங்கி இருந்தனரோ அதே தனியார் நிறுவனத்திடம் தான் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தாளை திருத்தும் பொறுப்பையும் ஒப்படைத்ததால் இந்த முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனி தனியாரிடம் தேர்வு தாள் திருத்தும் பணியை ஒப்படைக்க கூடாது என்கின்றனர் கல்வியாளர்கள்

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தி, இதில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றும், தேர்வு முடிவுகளை வெளியிடும் போது ஏற்பட்ட குளறுபடியால் வேறு ஒரு மாணவியின் மதிப்பெண் தவறுதலாக வெளியானதாகவும், 81 மதிப்பெண்களுக்கு சொந்தகாரர் பொதுப்பிரிவில் தேர்வு எழுதிய டெல்லிராணி என்றும் அவருக்கு தான் மெரிட் அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் பொதுப்பிரிவு மாணவர்கள் பணியில் சேரவேண்டுமானால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி இருக்க 81 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற பொதுப்பிரிவு மாணவி டெல்லி ராணி எந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

எனவே பணம் பெற்றுக்கொண்டு குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், இவரை போல இன்னும் எத்தனை பேர் பணிக்கு தேர்வாகி உள்ளனர் என்பதை பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

12th History - MLM Centum Marks - Study Material - Mr A.Arivazhagan:

                                                  

Click here to read more

'ஜியோ' கல்வி மையத்துக்கு சிறப்பு அந்தஸ்து ஏன்?

துவக்கப்படாத, ஜியோ இன்ஸ்டிடியூட்டிற்கு, 'மேன்மை பொருந்திய கல்வி மையம்' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நிபந்தனை அடிப்படையில்
அந்த அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு துறையைச் சேர்ந்த மூன்று கல்வி மையங்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த மூன்று கல்வி மையங்களுக்கு, மேன்மை பொருந்திய கல்வி மையம் என்ற அந்தஸ்து வழங்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. சிறப்பு அந்தஸ்து பெற்ற இந்த கல்வி மையங்களுக்கு, பிற கல்வி மையங்களை போல் அல்லாமல், அதிகளவு தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்படும். அவை, புதிய பிரிவு பாடங்களை துவக்கவும், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சேர்க்கவும், வெளிநாடுகளை சேர்ந்த கல்வி மையங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அதிகாரம் தரப்படும்; இதற்கு, மத்திய அரசின் ஒப்புதலை பெறத் தேவையில்லை.

மேன்மை பொருந்திய கல்வி மைய அந்தஸ்து பெற்ற தனியார் கல்வி மையங்களில் ஒன்று, ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த, ஜியோ இன்ஸ்டிடியூட். இந்த மையம், இன்னும் துவக்கப்படாத நிலையில், அதற்கு, மேன்மை பொருந்திய கல்வி மைய அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு, பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை செயலர், சுப்ரமணியம், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மேன்மை பொருந்திய கல்வி மையமாக தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில், 11 தனியார் கல்வி மையங்கள் இடம் பெற்றன. அவற்றில், ஒன்றான, ஜியோ இன்ஸ்டிடியூட், நிலம் கையிருப்பு, உயர் திறன் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், போதிய நிதி, எதிர்காலம் குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வை, செயல் திட்டங்கள் ஆகியவற்றை பெற்றுள்ளது.

ஜியோ இன்ஸ்டிடியூட், பசுமைக்கள கல்வி மையம் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, நிபந்தனைகளுடன், 'மேன்மை பொருந்திய கல்வி மையம்' அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

என்ஜினீயரிங் கலந்தாய்வு பற்றி 13-ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் 3 விதமான சிறப்பு கலந்தாய்வும் நிறைவு பெற்றுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 
கவுன்சிலிங்கில் 117 இடங்களும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 76 இடங்கள் காலியாக இருக்கிறது. 230 பேருக்கு மட்டுமே அழைப்பாணை விடுக்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும். விளையாட்டு பிரிவு 282 பேர் அழைக்கப்பட்டு, அதில் 213 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களும் கூடிய விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கவுன்சிலிங் காரணமாக, கல்லூரியை காலதாமதமாக தொடங்க நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். அந்த வழக்கு வருகிற 13-ந்தேதி வருகிறது. எனவே உரிய உத்தரவை பெற்று, மாணவர்களின் கல்வியும் பாதிக்காத அளவு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பழகனிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- என்ஜினீயரிங் கவுன்சிலிங் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- 13-ந்தேதி வழக்கு வரட்டும். அதன்பிறகு என்ஜினீயரிங் கவுன்சிலிங் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

கேள்வி:- மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை என்ன?

பதில்:- என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர். இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தவர்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பொறியியல் படிப்புக்காக அனுமதி பெற்ற 509 கல்லூரிகள். அதன் அடிப்படையில் 1,78,139 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்தோர் எண்ணிக்கை விவரம் தற்போது இல்லை.

கேள்வி:- என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறதே?

பதில்:- அந்தந்த சூழ்நிலையில் பொறியியல், கலை பாடம் என்று ஆர்வம் காணப்படும். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் அதிகமானதே தவிர மாணவர் சேர்க்கை குறையவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகம்தான்.

கேள்வி:- மாணவர்களின் வேலைவாய்ப்புக்காக என்ன திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது?

பதில்:- சீமன்ஸ் கம்பெனியுடன் அரசு தொழிலாளர் நலத்துறை இணைந்து ரூ.546.84 கோடியில், 6 கல்லூரிகளில் தொழில் கட்டமைப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அப்பணிகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளன. இதில் அரசு சார்பில் ரூ.54.68 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் எல்லா முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

கேள்வி:- பெரும்பாலான என்ஜினீயரிங் கல்லூரிகளில் டெபாசிட் தொகை செலுத்தப்படுவது கிடையாதே?

பதில்:- அதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேள்வி:- பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், அதிகாரி சந்தானம் குழுவின் ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லையே?

பதில்:- நிர்மலாதேவியிடம் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. முழுமையான அறிக்கை விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.