தமிழ் வழியில் படித்த, 960 மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும், சி.ஏ., தேர்வுக்கு பயிற்சி வழங்குவது, அடுத்த மாதம் துவங்கஉள்ளது. இதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 3,000 அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில், இந்த வகுப்பறைகள் திறக்கப்படும்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, செப்., 5ல், தமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பள்ளிகளில் சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதேபோல, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2வில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, 960 மாணவர்களுக்கு, அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.