யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/9/18

அரசுப் பள்ளியை தத்தெடுத்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி...

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் அரசுப் பள்ளியை தத்தெடுத்து அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

* வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நெரிஞ்சந்தாங்கல் கிராமத்தில்அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 1958 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பள்ளி , சரியாக சீரமைக்கப்படாததால் 44 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

* பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்லும் நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் இந்த பள்ளியை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ரவி.

* சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இனிப்பு கடை நடத்தி வரும் ரவி, இந்த அரசுப் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முன்வந்தார். போஸ்டர்கள், விளம்பர பேனர்கள் வைப்பதற்கு ஆகும் செலவை பள்ளிக்கு கொடுக்க முன் வந்தால் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பதை உணர்ந்த அவர் அதற்கான முயற்சியில் இறங்கினார்.

* மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், விளையாட்டு பூங்கா உள்ளிட்டவற்றை அவர் செய்து கொடுத்தார்.  வகுப்பறையில் மின்விசிறி போன்றவற்றை செய்து கொடுத்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..

* பள்ளியின் பக்கம் செல்லாததால் படிப்பின் அருமையை உணர்ந்ததாக கூறிய ரவி, மாணவர்களின் நலனே தனக்கு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.5 லட்ச ரூபாயில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து  கொடுத்த ரவிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் ரூ.16 கோடியில் முன்மாதிரி பள்ளிகள் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் ரூ.16 கோடியில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பில் முன்மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் மாணவர் நலன் கருதி இலவச பேருந்து அட்டை, மிதிவண்டி, சீருடை வழங்கப்பட வருவதாகவும் தெரிவித்தார்.

பள்ளி நேரத்தில் வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!


திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளில் பயிற்சி :

9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுக்கான
பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களின் படிப்புக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மத்திய அரசின் உதவி கிடைக்கும். இந்த தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பலரும் பின்தங்கி இருக்கின்றனர்.

இதை தவிர்க்க, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் சில மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!

ஆசிரியர்கள் கியூ.ஆர் கோடு மூலம் பாடம் நடத்த மட்டுமே அனுமதி.
வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு அனுமதி : அரசாணை வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.
இதுகுறித்து, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணை:கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் இடங்களில் 1683 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. மேலும், மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த மே மாதம் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் 2018-19ம் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே 2640 காலிப் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதிக்கவும், அதற்கான நிதி ஒதுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்துக் கொடுக்கவும் ஆணை வெளியிட கேட்டுக் கொண்டார். கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாக பரிசீலித்து 2018-19ம் கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி, பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் முறையான உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை 1883 கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை (கூடுதல் 1) பணியமர்த்த அனுமதியும், திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை இக்கல்வியாண்டு முதல் பின்பற்றவும் அரசு ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் - வேலூர் மாவட்ட "அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்புடன்" வேலூர் மாவட்ட "CEO" அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரம்!!

தமிழக அமைச்சரவை நிறைவு - நளினி உட்பட அனைவரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க முடிவு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
தமிழக அமைச்சரவை நிறைவு - நளினி உட்பட அனைவரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க முடிவு


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது.

இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதையடுத்து, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.



இந்நிலையில், இன்று மாலை சுமார் 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்படும்.

அதன்பின்னர், ஆளுநர் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியும் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு குறித்து பலரும் எதிர்பார்த்துள்ளனர்

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஸ்டிரைக் - கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு:

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறுவதால் தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.



முழு அடைப்புக்கு தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த போராட்டம் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சங்கமான தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறும்போது, “நாளை கடை அடைப்பு நடைபெறுமா? என்பது குறித்து வணிகர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்” என்றார்.

ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.சி.சி.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

முழு அடைப்பையொட்டி நாளை அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. ஆனால் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அந்த சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வருவதைப் பொறுத்து பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், லாரிகளும் பெட்ரோல்- டீசல் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓடாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ரெயில்கள் வழக்கம்போல் ஓடும்.

தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, கோவை, நெல்லை உள்பட முக்கிய நகரங்களில் ஏராளமான தனியார் பஸ்கள் ஓடுகின்றன. இந்த பஸ்கள் நாளை ஓடுமா? என்பது பற்றி இன்று மாலை ஆலோசனைக்குப்பின் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என்றும் சம்மேளனத்தின் செயலாளர் தன்ராஜ் கூறினார்.

நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கல்விக்கு கைகொடுக்கும் ஜி.வி.பிரகாஷ் - தமிழ் சொந்தங்களுக்கு வேண்டுகோள் :

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் கல்விக்கு கைகொடுக்கும் விதமாக அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் சம்பளத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருக்கிறார். அவ்வப்போது சமூக கருத்துக்களையும் பகிர்ந்து வரும் ஜி.வி. இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது,
கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவை. அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது. அதற்கு நாம் இப்போது முயற்சி எடுக்க வேண்டும். ஏற்கனவே கல்வி என்பது வியாபரமாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவச கல்வி என்பதே சாத்தியம் இல்லாமல் போய்விடும். உலகஅளவில் சாதித்த பல தமிழர்கள், அரசு பள்ளிகளில் படித்தவர்களே. தற்போது 890 அரசுப் பள்ளிகள் மூடும்நிலையில் உள்ளது. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான அளவிலான மாணவர்களே உள்ளனர். நகர்ப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இதில் எனது சிறிய முயற்சியாக சென்னையில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. சொல்லித் தரும் ஒரு தனியார் ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னை இந்த நல்முயற்சிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி, இவ்வாறு கூறினார்

9/9/18

10th Standard - Quarterly Exam Model Question Papers 2018

கல்வித்துறை அதிகாரிகளுக்கு




இன்றைய வேலூர் மாவட்ட நிகழ்வைப் பார்த்திருப்பீர்கள்.


ஓர் பிஜி ஆசிரீயர்!
உங்களைப் போலவே படித்துவிட்டு டிஆர்பி எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டு பணியில் சேர்ந்தவர்,
தன்னிடம் படிக்கும் மாணவன் திறனுடையவனாக முன்னேறவேண்டும் என்ற வேட்கை கொண்டவர் 

இன்று அவரது பள்ளியிலேயே நிராதரவாக்கிடப்பட்டு தனித்து சூழப்பட்டு பெண்களால்! அப்பள்ளி மாணவனாலேயே அடித்து வீழ்த்தப்பட்டு மண்ணில் சாய்கிறார்.


பார்க்கும் போதே குலை நடங்குகிறது.
Mass violence! என்றோ!Public rampage!என்றோ சிலரது கருத்துக்களாக மாறிப்போகும்.
நாள்பட மறந்தும் போகும்.


தான் பணியாற்றிய பள்ளியிலேயே தாக்கப்படும் ஆசிரியருக்கு பணிப்பாதுகாப்பு எங்கே?

பேருந்து ஓட்டுநர் எங்கேயாவது மோதிவிட்டால் இறங்கி ஓட்டம் எடுப்பதுபோல் இனி ஆசிரீயர்களும் ஓட வேண்டுமா?
இருநாட்கள் முன் ஆசிரியர் தினமென்று வாழ்த்திவிட்டு அடுத்த இரு நாட்களிலேயே அடிக்கும் காணொளியைப் போடுகிறார்கள்.


மாணவன் எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தின் உண்மைத்தன்மை உறுப்படும் முன்னரே கற்பிக்கும் ஆசானைஅடித்து துவைக்கிறார்கள்.மாணவனின் கடிதத்தில் எல்லோர் மேலுமே வெறுப்படைந்ததாக உள்ளதற்கு காரணம் யார்?அனைவரின் மேலுமே குற்றம் சொல்லிடும் அவனது மனநிலை என்ன?


இதற்கிடையே குறைந்தது தேர்ச்சியாவது பெற வைத்திட முடியாத நீங்கள் வாங்கும் சம்பளம் தர்மமா?எனவும் அதிகாரிகள் கேட்டுவிடுகிறீர்கள்.



தாக்கப்பட்ட ஆசிரியரின் மனநிலை என்னவாக இருக்கும்?அவர் தாக்கப்படுவதைப்பார்க்கும் அவரது குழந்தைகளும்,மனைவியும்,பெற்றோரும் இனி என்ன அவருக்கு சொல்லப்போகிறார்கள்?


கத்தியால் குத்திய மாணவனுக்கு தண்டனை இல்லை.அவனுக்கு கவுன்சலிங் கொடுத்து ராஜமரியாதையோடு அடுத்த பள்ளிக்கு கூட்டிச் சென்று சேர்த்து விடுகிறீர்கள்.ஆனால் அடிபட்ட ஆசிரியருக்கு என்றைக்காவாவது ஆறுதல் சொன்னதுண்டா?




எங்களின் பாதுகாப்பு யாரிடம் இனி கேட்பது?


அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இந்த உலகின் பாவத்தை சம்பாதித்த அப்பாவிகள்?

தமிழகத்தில் 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி துவக்கம்

திருநெல்வேலி: தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 412 மையங்களில் நேற்று முதல் பயிற்சிகள் துவங்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று நெல்லையில் இருந்து இரண்டாம் கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தின் சார்பில் தொடர்ந்து உதவிகள் கேரளத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்விற்கான பயிற்சி 412 மையங்களில் இன்று (நேற்று) பயிற்சி தொடங்கிறது. விடுமுறை நாட்களில் காலை , மாலைகளில் பயிற்சியளிக்கப்படும். மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமும் பயிற்சி வழங்கப்படும். இதற்காக 3,200 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரம் பள்ளிகளில் மையங்கள் தயார்படுத்தப்படும்.கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 24 பேர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் ஆயிரம் பேருக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும், என்றார்.

தயார் நிலையில் 2ம் கட்ட புதிய பாடத்தயார் நிலையில் 2ம் கட்ட புதிய பாடத்திட்டம்: இயக்குனர் தகவல்திட்டம்: இயக்குனர் தகவல்

மதுரை: "தமிழகத்தில் பத்து மற்றும் பிளஸ் 2விற்கான புதிய பாடத்திட்டங்கள் டிசம்பரில் வெளியாகும் வாய்ப்புள்ளது," என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: பள்ளி கல்வித்துறையில் 6, 9, 10, பிளஸ் 1க்கு புதிய பாடத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிகிறது. ஆசிரியர்களுக்கு தான் சவாலாக இருக்கும். மாணவர்களுக்கு இருக்காது. உரிய பயிற்சி மூலம் ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் எளிதாகி விடும்.இரண்டாம் கட்டமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு டிசம்பரில் வெளி வரவுள்ளது. அமைச்சர், அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புதிய பாடத்திட்டங்களால் இரண்டு ஆண்டுகள் வரை ஆசிரியர்கள் பிரத்யேகமாக பயிற்சி பெற வேண்டும். பாடம் நடத்துவதற்கு நேரம் இல்லை என ஆசிரியர்கள் தெரிவிக்க கூடாது. திட்டமிட்டு உரிய காலத்திற்குள் பாடத்தை நடத்தி முடிக்க வேண்டும். அலுவலக பணிக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது, என்றார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.1.62 கோடி நிவாரண உதவி

பள்ளிக் கல்வித் துறை சார்பில் இரண்டாம் கட்டமாக ரூ.1.62 கோடி மதிப்பிலான நிவாரண உதவி பொருள்கள் திருநெல்வேலியில் இருந்து வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

 தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒவ்வொரு துறை மூலமும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 அதன்படி, ஏற்கெனவே ஈரோட்டில் இருந்து முதல்கட்டமாக பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
 இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் அளித்த நிவாரண பொருள்கள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருநெல்வேலியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
 ரூ.1 கோடியே 62 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் 22 லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ். முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் கே.ஆர்.பி. பிரபாகரன், வசந்தி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

காலாண்டு தேர்வு முடிவுகள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

கல்வித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் நிபந்தனை:ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற உத்தரவு.


மதுரை:மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உட்பட ஐந்து கட்டளைகளை விதித்து ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார்.
கலெக்டராக பொறுப்பேற்றபோது 'கல்வி, சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்,' என நடராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாவட்ட கல்வித்தரத்தை ஆய்வு செய்ய தலைமையாசிரியர் ஆய்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய கல்வித்துறைக்கு உத்தரவிட்டார்.

இதன்படி சேதுபதி பள்ளியில் நேற்று கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கல்வித்துறைக்கு ஐந்து நிபந்தனைகளை விதித்தார். அனைத்து அரசு பள்ளிகளிலும் குடிநீர் வசதி செய்ய வேண்டும். போதிய கழிப்பறைகள் வசதி வேண்டும். குறிப்பாக மாணவிகளுக்கென தனிக் கழிப்பறைகள் இருக்க வேண்டும். பள்ளிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
பள்ளி வகுப்பறைகளில் லேசான பழுது இருந்தால் உடனடியாக பழுதுநீக்கி பராமரிக்க வேண்டும். பயன்படுத்த மற்றும் பராமரிக்க இயலாத வகுப்பறை கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். "கலெக்டரின் இந்நிபந்தனைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கப்படும்," என, சி.இ.ஓ., கோபிதாஸ் உறுதியளித்தார்.
ஆசிரியர்களிடம் விளக்கம்
அரசு பள்ளிகளில் வரும் காலாண்டு தேர்வு முடிவுகள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும். பாடங்களில் தோல்வியடைந்த மாணவரின் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். அத்துடன் பள்ளி தலைமையாசிரியர்களும் விளக்கம் அளிக்க வேண்டும். கல்வித்துறைக்கு அந்தநிலை வராமல் ஆசிரியர்கள் பொறுப்புணர்ந்து பணிபுரிந்து மாணவர்கள் மற்றும் மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு முன் தலைமையாசிரியர் முன்கூட்டியே சென்றுவிடவேண்டும் எனவும் கலெக்டர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆசிரியைகள் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் Tweet!

ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அல்லது 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம்.

புதிய பாடத்திட்ட சுமையை குறைக்க கோரி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள செய்தி

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

State wise New DEO Office Codes State wise New DEO Office Codes

அரசு கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்க ராமதாஸ் கோரிக்கை

அரசு கலை கல்லூரிகளில்
2640 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கல்லூரிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பதிலாக நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

8/9/18

பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டம் குறைகிறது மத்திய அமைச்சர் ஜாவடேகர் அறிவிப்பு

'அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கு, 10 - 15 சதவீத பாடத் திட்டங்கள் குறைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்து உள்ளார். சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் பாடதிட்டத்தை பின்பற்றும் பள்ளிகளின் பாடத்திட்டங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பள்ளிகளில், 1 முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளின் பாடத்திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என, ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, பாடதிட்டத்தை மறு சீரமைப்பு செய்து, அதன் சுமையை, 10 - 15 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம், அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். அதற்கு அடுத்த கல்வியாண்டில், பாடத் திட்டம், மேலும் குறைக்கப்படும். இந்த மறுசீரமைப்பு பணிகளை, என்.சி.இ.ஆர்.டி., செய்து வருகிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

முதுகலை ஆசிரியர் காலியிடம் அதிகரிப்பு, மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்!!!

SPD PROC - SHAALA SIDDHI - 201 8/19 ஆண்டிற்கான 42 பள்ளி தரவுகளையும் ONLINE - பதிவேற்ற இயக்குனர் உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்



1000 மாணவர்கள்; 3,100 ஆசிரியர்கள்'- கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இந்த ஆண்டு நீட் சபதம்!

கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 24 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்'' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து மாணவ - மாணவியர்களிடம் சேகரிக்கப்பட்ட 1.62 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை கேரளாவுக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, கொடியசைத்து லாரிகளை கேரளாவுக்கு அனுப்பிவைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ’’தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஈரோட்டில் இருந்து 2.6 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தற்போது, நெல்லையிலிருந்து 1.62 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை 22 லாரிகள்மூலம் அனுப்பிவைத்துள்ளோம். கேரள மக்களுக்கு உதவிசெய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறது.

எடை குறைப்பிலிருந்து இதய ஆரோக்கியம் வரை பயன்படும் கறிவேப்பிலை

எப்பொழுதுமே சாப்பிட ஆரம்பித்தவுடன் நாம் முதலில் செய்யும் காரியம் உணவில் உள்ள கறிவேப்பிலைகளை எடுத்து ஓரமாக வைப்பதுதான். அதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு.
ஏனெனில் நமக்கு தெரிந்தவரை கறிவேப்பிலை என்பது தாளிக்க பயன்படும் ஒரு பொருள் அவ்வளவுதான். ஆனால் உண்மையில் கறிவேப்பிலை ஒரு அற்புத மூலிகையாகும். நாம் ஓரமாக எடுத்து வைக்கத்தான் போகிறோம் என்று தெரிந்தும் ஏன் பழங்காலம் முதலே உணவில் கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?. ஏனெனில் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்களை கொண்டது. இந்த பதிவில் கறிவேப்பிலை பற்றி இதுவரை நீ இரத்தசோகை கறிவேப்பிலையில் இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலங்கள் அதிகம் உள்ளது. இரத்தசோகை என்பது உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவாக உள்ளதால் மட்டும் ஏற்படுவதில்லை, உங்கள் உடலில் உள்ள இரும்பு சத்துக்கள் சரியாக உபயோகிப்படாத போதும் ஏற்படுகிறது. இங்குதான் போலிக் அமிலங்கள் அவற்றின் வேலையை செய்கிறது. போலிக் அமிலங்களின் வேலையே இரும்பு சத்தை உடலை உறிஞ்ச செய்வதுதான். கறிவேப்பிலையில் இந்த இரண்டுமே உள்ளதால் இது இரத்தசோகையை குறைக்கிறது. உங்களுக்கு இரத்தசோகை இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சில கறிவேப்பிலை இலைகளை சாப்பிடுங்கள்.   கல்லீரல் பாதுகாப்பு நீங்கள் அதிகம் குடிப்பவராக இருந்தால் நிச்சயம் உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும். நீங்கள்தான் கறிவேப்பிலையை அதிகம் உண்ணவேண்டும். ஏனெனில் கறிவேப்பிலை தீங்கு விளைவிக்க கூடிய நச்சு பொருள்களில் இருந்து உங்கள் கல்லீரலை பாதுகாக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை மட்டும் பாதுகாக்காமல் மற்ற உடலுறுப்புகளையும் சீராக செய்லபட வைக்கிறது. சர்க்கரை நோய் கறிவேப்பிலை உடலிலுள்ள இன்சுலின் சுரப்பியை சீராக செயல்பட வைத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குகிறது. இதுமட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்துக்கள் சர்க்கரையின் அளவை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட எடை அதிகமாக உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை ஒரு சிறந்த மருந்தாகும். இதய நோய் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புளை கறிவேப்பிலை கரைக்க கூடியது என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட்கள் இரத்ததில் உள்ள கொழுப்புகளை கரைக்க கூடியது என்றார் சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. மேலும் இதிலுள்ள நல்ல கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்க கூடியது. சுந்தரம் சேவைகள் நிதி- NFO ஓபன்! இப்போதே முதலீடு செய்! சுந்தரம் சேவைகள் நிதி- NFO ஓபன்! இப்போதே முதலீடு செய்! சுந்தரம் சேவைகள் நிதி- NFO ஓபன்! இப்போதே முதலீடு செய்! செரிமானம் கறிவேப்பிலை இலைகள் இயற்கையாவே உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் உடையவை. அதேநேரம் இவை செரிமானத்தை ஊக்குவிக்க கூடியவை. ஆயுர்வேதத்தில் கறிவேப்பிலை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடலுக்குள் சென்ற உடனேயே செரிமானத்தை ஊக்குவிக்கும் பணியை தொடங்கிவிடுகிறது. வயிற்றுப்போக்கு இது வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாகும். ஏனெனில் இதில் உள்ள கார்பசோல் அல்கலாய்டு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு வயிற்று பிரச்சினைகளை குணமாக்க கூடியது. மேலும் இது உடலில் உள்ள பித்தத்தின் அளவை குறைக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மோரில் சில கறிவேப்பிலை இலைகளை அரைத்து தினமும் இரண்டு முறை குடித்தால் விரைவில் குணமடையும். கீமோதெரபி இது கறிவேப்பிலையில் உள்ள ஒரு அற்புத சக்தியாகும். ரேடியோதெரபி அல்லது கீமோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது நம் உடலில் அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படும். கறிவேப்பிலை இந்த பக்கவிளைவுகளை குறைக்க கூடும்.

அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் EMIS இணையத்தில் உள்ள பதிவின்படி செயல்படுத்தப்படுவதால் பள்ளிகளின் விவரங்களை சரிபார்த்து மதிப்பீடு செய்ய இயக்குநர் உத்தரவு

நீதிக்கதை :

மூன்று தலைகள்! - ஜென் கதைகள்


மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

Also Read: ஜென் குருவும் ஒன்பது திருடர்களும்

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்…  இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

ஆசிரியர்களே,கூட்டுறவு சங்கத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும்.

கூட்டுறவு சங்கம் அமைப்பு - உறுப்பினர்கள் பேரவை:

✍கூட்டுறவு தத்துவத்தின்படி உறுப்பினர்களின் பேரவையானது சங்கத்தின் ஒர் உயர்ந்த நிலை அமைப்பாகும்.


✍ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைவதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஒருமுறையாவது பேரவை கூடி கீழ்க்கண்டுள்ள பொருட்கள் பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

✍ஆண்டு வரவு,செலவு திட்டம் ஒப்புதல் செய்தல்.

✍தணிக்கை அறிக்கை மற்றும் ஆண்டறிக்கையும் வாசித்து அங்கீகரித்தல்.

✍நிகர லாபப் பங்கீட்டினை அங்கீகரித்தல்.

✍சங்கத்தின் செயல்திட்டத்தை மதிப்பிடுதல்.

✍முந்தைய ஆண்டில் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் சேவைகளை கலந்துரையாடல். (அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சங்கம் செய்திருந்த சேவைகளின் விவரங்களை பரிசீலித்தல்.)

புதிய துணைவிதிகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது ஏற்கனவே உள்ள துணை விதிகளுக்கு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுதல்.

✍தகுதியற்ற உறுப்பினரை விலக்குவது பற்றி முடிவெடுத்தல்.
(கடன் பெற்று மூன்று மாதம் திருப்பி கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்கள்)

✍சங்கப் பேரவை நிர்வாகக் குழுவால் கூட்டப்படவேண்டும்.

✍சங்க பேரவையை சங்க அலுவலகத்தில் அல்லது சங்கத் தலைமையிடத்தில் அனைவரும் கலந்துகொள்ளும் வசதியான இடத்தில் கூட்ட வேண்டும். 

✍உறுப்பினர்களுக்கு துணை விதிகளில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பேரவைக் கூட்ட, முன் அறிவிப்பு அனுப்ப வேண்டும்.

👉 நிர்வாகக் குழு:

✍ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகம் உறுப்பினர்களால் சட்டம் விதிகள் மற்றும் சங்க துணை விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.

✍நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவர் தலைவராகவும் இன்னொருவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

✍நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

✍நிர்வாகக் குழு கூட்டம்
நிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு 3 நாட்களுக்கு குறையாமல் முன்னறிவிப்புக் கொடுக்க வேண்டும்.

✍இக்கூட்டத்தை சங்கத்தின் செயல் எல்லையில் எங்கு வேண்டுமானாலும் கூட்டலாம்.

✍செயலாளர், தலைவருடன் அல்லது அவர் இல்லாத நேர்வில் துணைத்தலைவருடன் கலந்து, நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

✍மேலாண்மை இயக்குநர் இல்லாதபோது தலைவர் நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்டவேண்டும்.

✍மூன்று மாதங்களுக்குள் குறைந்தது ஒரு முறையாவது நிர்வாகக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

✍தலைவர் துணைத் தலைவர் தலைவர் பேரவைக் கூட்டத்தையும், நிர்வாகக்குழு கூட்டத்தையும் தலைமை தாங்கி நடத்தவேண்டும்.

✍சங்க துணை விதியில் குறிப்பிட்டுள்ளபடி சங்க நிர்வாகத்தை தலைவர் நடத்த வேண்டும்.

✍தலைவர் பதவி காலியாக உள்ளபோது, தலைவரின் அனைத்து அதிகாரங்களையும் துணைத் தலைவர் செயல்படுத்தலாம்.

கூட்டுறவு சங்கம் பார்வை👁👁👁👁

 கண்டிப்பாக தகவலை முழுவதும் வாசிக்கவும்...

Society Act-1983
Society Law-1988
ஒரு பார்வை...

✍கூட்டுறவு இயக்கத்தை முறையான வளர்ச்சி அடையச் செய்வதே கூட்டுறவுச் சட்டத்தின் நோக்கம்.

✍ஒவ்வொரு சங்கத்திலும் சட்டம் மற்றும் விதிப் புத்தகங்கள் கட்டடாயம் வைத்திருக்க வேண்டும்.🤦‍♂🤦‍♂

✍கூட்டுறவுச் சட்டம் மற்றும் விதிகளில் சொல்லப்பட்டிருப்பவற்றிற்கு உட்பட்டுத்தான் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகம் இருத்தல் வேண்டும்.

⚖சட்ட விதிகள்⚖

✍பிரிவு - 9 :
கூட்டுறவுச் சங்கத்தை பதிவு செய்தல் (120 நாட்கள்).
குறைந்தபட்சம் 25 உறுப்பினர்கள்...🤝🤝

✍பிரிவு - 1 விதி -9 :
பொதுவாக துணை விதித் திருத்தம் செய்தல் (120 நாட்கள்).
தேவைப்படும் போது DRO விடம் உறுப்பினர்கள் இணைந்து மாற்றலாம்.
உறுப்பினருக்கு நிர்வாக குழுவை மதிப்பிட உரிமை உள்ளது...

உறுப்பினர் யார் வந்து கேட்டாலும் பதில் சொல்லனுமா? என விதி ஒன்று கூட தெரியாமல் குதர்கமாக பேசக்கூடாது..

✍பிரிவு - 80:
தணிக்கை முடித்தல் (6 மாதங்கள்).

தேவையில்லாமல் காலம் கடத்திய பின் Audit பிரச்சனை என பொய் கூறக்கூடாது..😜😜

✍பிரிவு - 81:
விசாரணை முடித்தல் (3 மாதங்கள்).

தணிக்கை மீதும் , நிர்வாகம் மீதும் மேல்முறையீடு சார்பு.

✍பிரிவு - 87:
தண்டத்தீர்வை நடவடிக்கை முடித்தல் (6 மாதங்கள்).

நிர்வாக முறைகேடு கண்டறியப்பட்டால்..😀😀


✍பிரிவு - 88:
நிர்வாகக் குழுவை கலைக்க ஆணையிடுதல் (2 மாதங்கள்).

சங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்...🤦‍♂🤦‍♂

✍பிரிவு - 88:
நிர்வாக குழு கலைப்பு காலம் (6 மாதங்களுக்கு மிகாமல்).

சங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்...🤦‍♂🤦‍♂

✍பிரிவு - 89:
சில சூழ்நிலைகளில் தனி அலுவலர் நியமனம் (6 மாதங்களுக்கு மிகாமல்).

நிர்வாக குழு கலைக்கப்பட்டால்...
தேர்தல் கட்டுப்பாடு நடைமுறையில் கூட ...
உறுப்பினர் நலன் கருதி தனி அலுவலர் மூலமாக தாராளமாக (டிவிடண்ட்) பங்குத்தொகை வழங்கலாம்...😀😀

தேர்தல் காரணம் என பொய் சொல்ல கூடாது😜😜

✍பிரிவு - 36:
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தகுதியின்மை மற்றும் நீக்குதல்.

✍பிரிவு - 72 விதி 94:
நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்.🙊🙊

இலாபத்தில் வேலை செய்யும் சங்கங்கள்...
நிகர லாபத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் அதிக அளவு மாத மதிப்பூதியம்.

( உதாரணம்: தலைவர்/செயலாளர் - ரூ.1200 & இதர இயக்குநர்கள் - ரூ.2400 )
இப்ப பதவிக்கு ஏன் போட்டி போட்டுட்டு அரசியல் வருது என தெரியுதா?

👍முடிந்தால் ஆண்டறிக்கை நிர்வாக குழு பிரிண்ட் எடுத்து தர வேண்டும் தவறு ஒன்றும் இல்லை.

மாத ஆரம்ப இருப்பு தொகை , வரவு , மாத முடிவு தொகை & TDS தொகை... கூட்டம் கூட்டிய எண்ணிக்கை , கூட்டத்திற்கான டீ மிக்சர் செலவு ஆடிட் பண்ணுவதற்கான தொகை , ஆடிட் லஞ்சம் (தவறை பூசி மறைக்க) ஒன்று விடாமல் நிர்வாக குழு பிரிண்ட் தந்தால் நிர்வாகத்தில் எவ்வித குழப்பமும் இல்லை என அறிந்து கொள்ளலாம்.

👉🏼👉🏼இதில் ஆயுள் காப்பீடு என்று கொண்டுவந்தால் அதற்கான பாண்டை சார்ந்த ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும்.அந்த நிறுவனத்தின் பெயர் தெரிவிக்க வேண்டும்.
ஏனென்றால் அதையும் வருமான வரிக்கு உதவும்


மேலும் சில விதிமுறைகள்:

1. நாம் பெறும் கடன் (₹5,00,000) தொகையில் 10% (₹50,000)வைப்பு தொகையாக பிடித்தம் செய்து மீதம் வழங்கப்படும்.

2. மாதம் சிக்கன சேமிப்பு தொகை இடவேண்டும் குறைந்த பட்சம்₹500 முதல்

3 நாம் வைத்திருக்கும் வைப்புதொகைக்கு 50,000 க்கு 14% வட்டியும்,சேமிப்பு தொகைக்கு 8 & 8.5% வட்டியும்  கூட்டுறவு சங்க வழங்க வேண்டும்.

4. இந்த கணக்கீடு ஒவ்வொரு வருடமும் தணிக்கை முடித்து, 1.ஏப்ரல் முதல் அடுத்த வருடம் 31மார்ச் வரை இலாபத்தொகை (Dividend) பங்கீட்டு வழங்க வேண்டும்.a

நீதிக்கதை



 ‘நான்தான் பலசாலி’ ‘நான்தான் பலசாலி’ என்று சொல்லி சிங்கம் எப்பொழுது பார்த்தாலும் காடு மேடெல்லாம் தற்பெருமை அடித்துக் கொண்டிருந்தது.

இந்த செயல் மற்ற விலங்குகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அப்படியிருந்தும் சிங்கத்தின் தற்பெருமையை ஒருவரும் அடக்கமுடியாமல் அடங்கி ஒடுங்கி இருந்தனர்.

அந்தக் காட்டில் ஒரு குளம் இருந்தது. அதில் நட்சத்திர ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தை ஒட்டி ஒரு நாவல் மரம் இருந்தது. அதில் விச்சித்திரன் என்ற அணில் வாழ்ந்து வந்தது. நட்சத்திர ஆமையும், விசித்திரனும் உயிர்த் தோழர்களாகப் பழகி வந்தனர்.

சிங்கம், அணிலைப் பார்த்து ‘மூடனே நான் கீழே இருக்கிறேன். நீ மரியாதை இல்லாமல் மேலே இருப்பதா? நீ என்னைவிட பெரியவனா?  கீழே வந்து என்னை வணங்கி நில். இல்லை தோலை உரித்து கழுகுக்குப் போட்டு விடுவேன்.’ என்று அதட்டியது.

அணில் பயந்து போய்ச் சிங்கம் சொன்னது போல் நடந்தது.

சிங்கம் சென்றதும் குளத்தை விட்டு வெளியே வந்தது நட்சத்திர ஆமை.

தன் நண்பன் அவமானத்தால் தலை குனிந்து நிற்பதைக் கண்ட ஆமை, ‘வசித்திரா சிங்கம் சொன்னதற்கு ஏன் கவலைப்பட்டுத் தலைகுனிந்து நிற்கறே? உலகில் வலிமை உள்ளவர்கள் வலிமை அற்றவர்களை அடக்கி ஆள்வதுதானே வழக்கம்? யானையிடம் இப்படி அதனால் சொல்ல முடியுமா? என்று ஆறுதல் சொன்னது.

நண்பா சிறியவர்  பெரியவர் என்றாலும் தன்மானம் பொதுதானே? தேவை இல்லாமல் இன்னொருவருக்கு அடங்கி ‘சலாம்’ போடுவது கேவலம் இல்லையா? அவரவர் படைப்புக்கும், வேற்றுமைக்கும் ஏற்றபடி அவரவர் பலசாலிகள்தானே? என்று கொதித்தது.

‘நன்பா உன் ஆதங்கம் புரிகிறது. இதன் கொட்டத்தை அடக்கத்தான் வேண்டும். என் அம்மா இதன் கெடுபிடிக்கு அடங்க மறுத்ததற்காக அதை கொன்றுவிட்டது, எனக்கும் இதைப் பழிக்குப்பழி வாங்க தான் ஆசை. அதை எப்படி செய்யலாம்?’

அப்போது அங்கே ஒரு கட்டெறும்பு வந்தது.

‘நண்பர்களே! நீங்கள் பேசியதைக் கேட்டு நானும் கோபம் கொண்டேன். சிங்கத்தின் கொட்டத்தை நான் அடக்குகிறேன்.

அதோ அந்த ஆலமரத்தடியில் தானே சிங்கம் உறங்கும். நாளை அங்கு வந்துவிடுங்கள். ‘யார் பலசாலி’ என்று நிரூபிக்கிறேன்’ என்று ஆலமரத்தில் சென்று தங்கியது.

வழக்கம்போல சிங்கம்  ஆலமரத்தடியில் இளைப்பாறியது.

ஆமை கல்லுக்கடியில் மறைந்துகொண்டது. அணில் புதருக்குள் ஒளிந்துகொண்டது.

எறும்பு சிங்கத்தின் காதுக்குள் மெதுவாகச் சென்று நுழைந்து கொண்டு குடைந்தும் கடித்தும் இம்சைப்படுத்தியது.

சிங்கம் வலி தாங்க முடியாமல், ‘அய்யோ... அய்யோ... வலி உயிர்போகுதே. காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்று அலறியது.

‘நீ பெரிய பலசாலிதானே, முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளவும்’
என்று சிரித்தது எறும்பு.

அணிலும், ஆமையும் தைரியமாக வெளியே வந்து சிரித்துக் கூத்தாடின.

ஒரு கட்டெறும்பிடம் தன்பலம் பலிக்காமல் போகவே, சிங்கம் தன் ஆணவத்தை கைவிட்டது.

ஆமையும், அணிலும், சிங்கத்தை விட்டுவிடும்படி கூறவே, எறும்பு சிங்கத்தின் காதுக்குள் இருந்து வெளியே வந்தது.

அன்றில் இருந்து சிங்கம் தான் மட்டும் பலசாலி என்று சொல்வதை விட்டுவிட்டது.

குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்க கெடு-மத்திய அரசு :

குடும்ப அட்டையோடு ஆதாரை இணைக்கும் நடைமுறைக்கு வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். போலி குடும்ப அட்டைகள் வைத்திருப்பதை தடுக்க, ஆதரோடு இணைக்கப்பட்ட குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டுகளை தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் அனைத்து விவரங்களும் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. இதனை ஆதார் விவரங்களோடு பதிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

 அதன்படி, இதுவரை குடும்ப அட்டையை ஆதாரோடு பதிவு செய்யாதவர்கள், அக்டோபர் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனை :

'குரூப் 4 தேர்வில், மாற்றுதிறனாளி தேர்வர்கள், தேசிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், பிப்., 11ல் நடத்தப்பட்ட, குரூப் 4 தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள், ஆக., 30 முதல், செப்., 18 வரை, சான்றிதழ்களை, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி தேர்வர்கள், மருத்துவ குழுவிடமிருந்து சான்றிதழ் பெற்று, பதிவேற்றம் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது, அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவ சான்றிதழ் பெற முடியவில்லை என, மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.எனவே, சான்றிதழ் பதிவேற்ற வேண்டிய மாற்று திறனாளிகள், சான்றிதழ் இல்லை எனில், மாற்று திறனாளிகளுக்கான, தேசிய அடையாள அட்டையை பதிவேற்ற வேண்டும். 
அதனுடன், 'கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டால், உரிய மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கிறேன்' என்ற, உறுதிமொழி கடிதத்தையும் பதிவேற்ற வேண்டும்.அவ்வாறு பதிவேற்றாதோர், கவுன்சிலிங்கின் போது, மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இதுகுறித்து, சந்தேகம் இருப்பின், 044- - 2530 0336, 044- - 2530 0337 மற்றும், 1800 425 1002 ஆகிய, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பள்ளிகளில், 2,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' தேர்வு, போட்டித் தேர்வு என, இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 'டெட்' தேர்வை பொறுத்தவரை, ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது.
அந்த தேர்வு, ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு அல்ல. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு வேலைக்கான நியமனத் தேர்வு தனியாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 
இந்த நியமனத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆகியுள்ளது. இந்த வழக்கை, சட்ட ரீதியாக எதிர்கொண்ட பின், நியமனத் தேர்வை நடத்தும் பணிகள் துவங்கப்படும்.அதுவரை, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, தற்காலிகமாக நியமனம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், 2,000 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியுடன், தமிழிலும் எழுத, வாய்ப்பு தர வேண்டும். இது குறித்து, தமிழக அரசின் சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

3 ஆண்டு சட்ட படிப்பு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

மூன்றாண்டு சட்ட படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்ட பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மூன்றாண்டு, எல்.எல்.பி., பட்ட படிப்புக்கான, 'கட் -- ஆப்' பட்டியல், பல்கலை இணைய தளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.
பொது பிரிவு மாணவர்களுக்கு, வரும், 17ம் தேதியும்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு, 18; மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு, 19 மற்றும் 20ம் தேதியும், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் கேரளா மாநிலத்திற்கு ரூ 4 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா லாரி மூலம் அனுப்பி வைத்தார்..


புதுக்கோட்டை,செப்.6:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் மனமுவந்து கேரளா  மாநில வெள்ள நிவாரணத்திற்காக ரூ.4 இலட்சத்து 31 ஆயிரத்து 200 மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள்,பிஸ்கெட் பாக்கெட்கள்,ஆடைகள் மற்றும் பல்வேறு வகையான நிவாரணப் பொருட்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்கள்..
  அதனைத் தொடர்ந்து தலைமைஆசிரியர்கள் சேகரித்து சிப்பங்களாக கட்டி முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்..
அதனைத் தொடர்ந்து  நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இன்று மாலை 06-09-2018(வியாழக்கிழமை) லாரியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.வனஜா  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரக அலுவலகத்துக்கு  அனுப்பி வைத்தார்.
 இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆர்.ஜீவானந்தம், உயர்நிலை ஆர்.கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்....
இவ்வாறாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மண்டல அளவில் பல்வேறு மாவட்டங்களின்  பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கேரளா  மாநிலத்திற்கான வெள்ள நிவாரணப் பொருட்கள்07-09-2018(வெள்ளிக்கிழமை) நாளை மதியம்  மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது... கேரள  வெள்ள நிவாரணத்திற்கு மனமுவந்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவர்களை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்..

7/9/18

அரசுப்பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் ஆசிரியர்பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கும் என தமிழகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், இன்று முதல் செயல்படத்தொடங்கும். சுமார்3000 ஆசிரியர்களை கொண்டு 3 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும்.ஜெ.இ.இ தேர்வை தமிழ் மொழியில் எழுத மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமேஇல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும். அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம். சட்ட சிக்கல் தீர்ந்த பின் அவர்கள் நியமன தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

புதிதாக துவங்கிய அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை : பாடம் நடத்த முன்னாள் ஆசிரியரை நியமித்த கிராம மக்கள்

                                          
பண்ருட்டி அருகே புதிதாக துவங்கிய இணைப்பு துவக்கப்பள்ளிக்கு  ஆசிரியர்கள் வர மறுத்ததால் தற்போது முன்னாள் ஆசிரியரை கிராம மக்கள் நியமித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காவனூர் ஊராட்சி உளுந்தாம்பட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அப்பகுதி மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
அருகில் உள்ள காவனூர் கிராம மக்கள் தங்கள் பகுதியிலிருந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனியாக பள்ளி  வேண்டும் என பத்து வருடமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உளுந்தாம்பட்டு பள்ளிக்கு  காவனூர் மாணவர்களை அனுப்ப மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட  ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 4ம் தேதி நடந்த குறைகேட்பு  கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், காவனூர், உளுந்தாம்பட்டு, மக்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக உளுந்தாம்பட்டில் உள்ள பள்ளியில் காவனூர் மாணவர்கள்  செல்வதில் சிக்கல் உள்ளது என அதில் கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி காவனூர்  கிராமத்துக்கு இணைப்பு பள்ளியை வட்டார கல்வி அலுவலர் துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் வந்தபோது ஆசிரியர்களும் துவங்கிய நாள் மட்டுமே வந்து கல்வி போதித்தனர். 4, 5, ஆகிய இரு தினங்களில் பாடம் சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் வர மறுத்துவிட்டனர்.

இதனால் மாணவர்கள் வகுப்பறையில் கல்வி கற்க முடியாமல் அமர்ந்திருந்தனர். இதனால் பெற்றோர்கள் அவசர கூட்டம் கூட்டி முடிவெடுத்தனர். இதில் ஆசிரியர்கள் வராததால் நமது கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியரும், பத்திரிகையாளருமான சகுந்தலாநாராயணன் என்பவரை கல்வி போதிக்க செய்தனர். சத்துணவு சமைப்பதற்கும் உள்ளூர் சமையலரை வைத்து சமையல் செய்து வழங்கப்பட்டது. நேற்று ஆசிரியர்கள் தினம் என்பதால் ஆசிரியர்கள் வருவார்கள் என நினைத்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து  காவனூர் கிராம பெற்றோர்கள் கூறியதாவது: உளுந்தாம்பட்டில் இயங்கி வரும் பள்ளிக்கு எங்கள் கிராமத்திலிருந்து பிள்ளைகள் செல்வதில் மிகுந்த சிரமம்  உள்ளது.

நாங்கள் தனியாக கேட்ட பள்ளி தற்போது கிடைத்துள்ளது, இந்த பள்ளிக்கு தேவையான இடங்கள் 20 சென்ட் 2009ம் ஆண்டே வாங்கி வைத்துள்ளோம். காவனூர்  பகுதி பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் வரவில்லை என உளுந்தாம்பட்டு பள்ளியில் கேட்டபோது எங்களுக்கு போதிய அளவிற்கு மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். மீறி ஆசிரியர்கள் சென்றால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை என கூறினர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவனூர் பள்ளிக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்க கெடு-மத்திய அரசு

குடும்ப அட்டையோடு ஆதாரை இணைக்கும் நடைமுறைக்கு வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். போலி குடும்ப அட்டைகள் வைத்திருப்பதை தடுக்க, ஆதரோடு இணைக்கப்பட்ட குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டுகளை தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் அனைத்து விவரங்களும் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. இதனை ஆதார் விவரங்களோடு பதிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

 அதன்படி, இதுவரை குடும்ப அட்டையை ஆதாரோடு பதிவு செய்யாதவர்கள், அக்டோபர் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உயர் கல்வி உதவி தொகைக்கு வருமான வரம்பு உயர்வு!!

உயர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு, உயர்த்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மற்றும் டிப்ளமா முடித்து, உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்லுாரிகளில், இளநிலை பட்ட படிப்பில் சேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும், 82 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, கல்வி உதவித்தொகை, மூன்று ஆண்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. உதவித்தொகையை பெற, சம்பந்தப்பட்ட மாணவர்களின், குடும்ப ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என, ஏற்கனவே நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது
தற்போது, வருமான உச்சவரம்பை அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இனி, ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய் வரை உள்ள, குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், மத்
...

கற்பித்தல் மட்டுமே ஆசிரியர் பணி அல்ல: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

கற்பித்தல் மட்டும் ஆசிரியர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது. மாணவர்களுக்கு ஆலோசகராகவும், பல பரிமாணங்களில் தேடலுக்கு வழி செய்பவராகவும் விளங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் 130-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது விழா ஆகியவை முப்பெரும் விழாவாக சென்னையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
373 ஆசிரியர்களுக்கு விருது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் காந்திய அனுபவக் கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி என்ற நூலை முதல்வர் வெளியிட்டார். 373 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது, 40 பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளி விருதுகளை வழங்கி அவர் பேசியது:
ஆசிரியர் என்பவர் கற்பித்தலில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. அவதானி, ஆலோசகர் உள்ளிட்ட பல பரிமாணங்களில் தேடலுக்கு வழி செய்பவராக விளங்க வேண்டும் என கல்வியாளர் லூயில் கோகலே என்பவர் கூறியுள்ளார்.
ஏட்டுக் கல்வியின் வரையறையைத் தாண்டி, பரந்த பரிமாணத்தில், சமூக பொறுப்புடன் தீர்மானிக்கும் திறனோடும், வசீகரிக்கும் தன்மையோடும், சினேகித மனோபாவத்தோடும், சமூக மேம்பாட்டுக்கு வழிகாட்டும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
தியாக மனப்பான்மை கொண்டவராகவும் கற்பிக்கும் தொழிலில் பெரும் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பவர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள்.
மாணவ சமுதாயமும் தங்களின் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
கல்வித் துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. கிராமங்களிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் புதிய தொடக்கப் பள்ளிகள், 32 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டத்தில் தனித்திறன் பாடங்கள் அறிமுகம் என மாணவர்களை மேம்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
மாணவ சமுதாயம் நினைத்தால்...மாணவ சமுதாயம் நினைத்தால் எதையும் செய்ய இயலும். இதை ஆசிரியர்களும் நன்கு அறிவர். எனவே, மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள், பாட நூல்களைத் தாண்டி, மாணவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்த வேண்டும். தற்போது சமூக நலன் சார்ந்து தமிழக அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
இந்த விழாவில் வழங்கப்பட்ட விருதின் மூலம், ஆசிரியர்களுக்கு புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. விருது என்கிற பயணச்சீட்டைத்தான் உங்களுக்கு வழங்கியுள்ளோம். இன்னும் நீங்கள் பயணிக்க வேண்டியது நீண்ட தொலைவு இருக்கிறது. ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களாகவே இருந்து புதிது புதிதாகப் படிக்க வேண்டும். தான் படித்தவற்றை தன் மாணவர்களுக்கு தொடர்ந்து கற்பித்து வர வேண்டும். அதுதான் நீங்கள் மாணவர் சமுதாயத்திற்கு செய்யும் சீரிய தொண்டாகும் என்றார் முதல்வர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மாணவ சமூகத்துக்குத் தேவையான அறிவாற்றல், தன்னம்பிக்கை போன்றவற்றைக் கற்றுத் தந்து மாணவர்களை அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னதப் பணியினை மேற்கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள்.
பள்ளிகளில் நிலவும் சூழலை மிகத் திறமையாகக் கையாண்டு, மாணவர்களுக்கு சிறந்த கல்வியறிவை ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களது உழைப்பால், சமூகத்தின் மீது உள்ள அக்கறையால் மேற்கொள்ளும் சிறப்பு பணியை பாராட்டியே, இன்றைய தினம் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது என்பது ஆசிரியர்களின் கல்விப் பணியை மேலும் சிறப்புடன் செய்வதற்காக வழங்கப்படும் பெருமையாகும்.
இதனைச் சரியான முறையில் ஆசிரியர்கள் உள்வாங்கிக் கொண்டு, சமூகத்தின் உயர்வுக்காக முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றார் அவர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில்பங்கேற்றனர்

துப்பட்டாவால் முகத்தை மூட தடை : அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நிபந்தனைகள்

மாணவியர்,
 துப்பட்டாவால் முகத்தை மூடுவதற்கு, அண்ணா பல்கலை தடை விதித்துள்ளது
*சென்னை, அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைமுடிந்துள்ளது
*புதிய மாணவர்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், ஒருங்கிணைப்பு பயிற்சி துவங்கியது
*அதில், புதிய மாணவர் கள், பல்கலை மற்றும் கல்லுாரி வளாகத்தில், எப்படி நடந்து கொள்ள வேண்டும்; பாடங்களை படிக்கும் முறை ஆகியவை குறித்து, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன
*சீனியர்' மாணவர்கள், 'ஜூனியர்' மாணவர்களை, 'ராகிங்' செய்யாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
*இதற்காக, அண்ணா பல்கலையின், கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் கட்டடவியல் கலை படிப்புக்கான, 'ஆர்கிடெக்ட்' கல்லுாரி வளாகங்களில், ராகிங் தடுப்பு வாகனம், ரோந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது
*பல்கலையின் வளாகத்தில், ராகிங் தடுப்பு குழுவினர், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
அதேபோல், மாணவ - மாணவியருக்கு, சுய ஒழுக்கம் தொடர்பான, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன
அதன் விபரம்
*வளாக பகுதிகளில், அரட்டை அடித்து, நேரத்தை வீணடிக்கக் கூடாது; வகுப்புகளை புறக்கணிக்காமல், பங்கேற்க வேண்டும்
*மாணவ மாணவியரிடம் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது
*பல்கலை வளாகத்திற்குள், காதில், 'ஹெட் போன்' கருவி அணிந்து வரக் கூடாது
*மொபைல் போன், 'ஹெட்செட்டை' கல் லுாரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களும், மாணவி யரும், கைக்குட்டை மற் றும் துப்பட்டா போன்ற வற்றால் முகத்தை மூடி, வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது
*வாகனத்தில் வரும்போது, 'ஹெல்மெட்' அணிந்திருந்தால், அதில், முகத்தை மூடும் கண்ணாடியை, திறந்து விட்டிருக்க வேண்டும்
*ஒவ்வொரு மாணவியும், அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்
*பேராசிரியர்களும், பல்கலை ஊழியர்களும், காவலாளிகளும், அடையாள அட்டையை காட்டச் சொன்னால், மறுப்பு தெரிவிக்காமல் காட்ட வேண்டும்
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

சான்றிதழ்களில் ஆதார் பதிய தடை : கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு :

*மாணவர்களின் கல்வி சான்றிதழ்களில், ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு, திடீர் தடை விதித்துள்ளது.
*நாடு முழுவதும், அரசு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நிர்வாக செயல்பாடுகளுக்காக, ஆதார் எண் சேகரிக்கப் பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ - மாணவி யரிடமும் ஆதார் எண் சேகரிக்கப்பட்டு, கல்வி நிறுவன தகவல் தொகுப் பில் இணைக்கப்பட்டுள்ளது.
*மேலும், ஆதார் எண்ணை பயன்படுத்தி, சான்றிதழ்களை சரி பார்க்கவும், சான்றிதழ்களை வழங் கவும், ஏற்கனவே கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப் பட்டு இருந்தன. இந்நிலையில், ஆதார் எண்ணை, சான்றிதழ்களில் பதிவு செய்ய, மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.
*இதுகுறித்து, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் செயலர், ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல் கலைகளுக்கும், அனுப்பி உள்ள சுற்றறிக்கை: மத்திய அரசின், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சார்பில், 2017 மார்ச்சில், கல்வி நிறுவனங் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
*இதில், மாணவ - மாணவி யரின் ஆதார் எண்ணை பயன்படுத்துவது தொடர்பான, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில், ஆதார் எண்ணை வெளிப்படையாக தெரிவித்தால், அதன் வழியே, தனிநபர் ரகசியங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
*எனவே, பல்கலைகளும், கல்லுாரிகளும், தங்கள் மாணவர்களின் சான்றிதழ்களில், ஆதார் எண்ணை, எந்த காரணம் கொண்டும் பதிவிட வேண்டாம்.
*மேலும், ஆதார் எண்ணை, வேறு பயன்பாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.இந்த உத்தரவை பல்கலைகளும், கல்லுாரிகளும் உடனடியாக பின்பற்றி, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ஆசிரியர் தினத்தையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை தொட்டு வணங்கிய மாவட்ட ஆட்சியர்!

சேலம் கோட்டை  மாநகராட்சி
 பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். 
பள்ளியின் மூத்த பெண் ஆசிரியை ஒருவரின் காலில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி விழுந்து ஆசி பெற்றார். மேலும், பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்து தனது ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.
பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களுடைய வகுப்பறை ஆசிரியருக்கும் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியருக்கு பூங்கொத்து மற்றும் பரிசுகளை கொடுத்து வா
ழ்த்து தெரிவித்தனர்.





நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, ''மாணவ செல்வங்கள் ஒழுக்கத்தை கடைபிடித்து நன்றாக படிக்க வேண்டும் என்அறிவுரை கூறி அமர்ந்தார். அதையடுத்து பேசிய சேலம் கலெக்டர் ரோஹிணி, ''ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் நம்முடைய தவறுகளை சுட்டிக் காட்டும் போது கோபித்துக் கொள்ளாமல் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் நம்முடைய வளர்ச்சிக்கும் நன்மைக்குமே அக்கறையாக கண்டிக்கிறார்கள்'' என்று கூறினார்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்தம் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் விபரம்!!!

27 ஆண்டுகளாக வாங்கப்படாத மதிப்பெண் சான்றிதழ், பட்டய சான்று பெற்றுக்கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவிப்பு...!!

EMIS' பதிவேற்றப் பணிகளை ஆசிரியர் பயிற்றுநர்களிடம் ஒப்படைக்க கோரிக்கை!!!

6/9/18

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள் ..........

1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture).


2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை  சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.( Keeping a check on your weight ).

3.தொடர்ந்து ஒரேயிடத்தில்  நிற்பதினாலோ  அல்லது உட்கார்ந்து யிருப்பதினாலோ ஏற்படும்  கழுத்து வலி, முதுகு வலி வருவதை தவிர்க்க தங்களால் செய்யக்கூடிய சில உடற்பயிற்சி களை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியையும் முதுகு வலியையும் ( neck and pack pain )தவிர்க்க லாம்.

4.அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நிற்கும் நிலையை அல்லது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கைகால் களை நீட்டி உதைத்து சிறு பயிற்சியை மேற்கொள்ளுவது நலம். (Exercise regularly)

5. நாள் முழுவதும் தொடர்ந்து சத்தமாக பேசுவதினால் கற்றுக் கொடுப்பதினால் தொண்டை வறண்டு விடும். தொண்டை வலி தொண்டை புண் ஏற்படும். அதனால்
குரல் நாண்கள் (vocal chords)பாதிக்
கப்படும்.இதை தவிர்க்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு உறிஞ்சி குடிக்க வேண்டும்( take a sip of water frequently ).

6. தொடர்ந்து அதிக சத்தமாய் பேசாமல் , கொஞ்ச நேரம் வாய்க்கு ஓய்வு தரும் போது குரல் தொடர்பான பிரச்சினை
களை தவிர்க்கலாம்.(not talking loudly and give rest to your voice will  avoid voice related problems).

7. ஒவ்வொரு ஆசிரியரும்/ஆசிரியையும் குறைந்த பட்சமாக எட்டு மணிநேரம் நன்கு தூங்கியெழும்போது அடுத்த நாள் அவர்கள் தாங்கள்  புத்துணர்ச்சியுடன் யிருப்பதை அவர்கள் உணருவார்கள்.( Getting sleep for eight hours so as to fresh for next day).

8. ஆசிரியர்கள்/ஆசிரியைகள் தங்களது கால்களுக்கு  ஏற்ற பொருத்தமான வசதியான செருப்புகளை, ஷூக்களை (Comfortable chappals /shoes ) அணிவதன் மூலமாக கணுக்கால் சுளுக்கு ,கால் வலி (ankle sprain & foot pain ) ஆகியவைகளை தவிர்க்கலாம்.

- இந்த பதிவு ஒரு  ஆங்கில செய்தித்தாளில் வந்த " Appreciating Mentors : Teachers, it is important to take care of yourselves " என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட தாகும்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் தவிப்பு!

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ரேஷன் பொருள் வாங்கக்கூடாது தேனி கலெக்டர் சுற்றறிக்கையால் பரபரப்பு!!!

ஆதார் இல்லாத மாணவர்களும் பள்ளியில் சேரலாம் : மத்திய அரசு

டில்லி.. ஆதார் இல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது என பள்ளிகளுக்கு மத்திய அரசின் தனி நபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.


பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆதார் எண் அவசியம் என ஒரு சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. பல மாணவர்களிடம் ஆதார் எண் இல்லாததால் அந்த மாணவர்கள் பள்ளிகளில் சேர இயலாத நிலை ஏற்பட்டது. இது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதை மத்திய அரசின் தனி நபர் அடையாள ஆணையம் ஆய்வு செய்தது.

அதை ஒட்டி அந்த ஆணையம் இன்று அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் ஒரு சுற்றரிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில், "பல பள்ளிகளில் ஆதார் எண் இல்லாததால் மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த சுற்றரிக்கை மூலம் ஆதார் எண் இல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பின்னர் ஆதார் எண்ணைப் பெற்று பிறகு அந்த எண்ணை இணைக்கலாம். அது வரை வேறு அடையாளங்களை பெற்று மாணவர்களை பள்ளியில் சேர்க்கலாம். தற்போது வங்கிகள், தபால் நிலையங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ஆதார் முகாம்கள் நடைபெறுகின்றன. பள்ளிகள் இந்த முகாம்களின் உதவியுடன் மாணவர்களுக்கு ஆதார் பெற்றுத் தரலாம்" என குறிப்பிட்பட்டுள்ளது.

KVS - 8339 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.09.2018 :

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் இனி தேர்வு கிடையாது :

'பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, வழக்கமாக, செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டு முதல், இந்த தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும். 


தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூலையில் தேர்வு எழுதி, அதே ஆண்டில் கல்லுாரியில் சேரலாம். அரசு பள்ளிகளை தத்தெடுக்க அனுமதி கோரி, ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. இதற்காக, வட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்.அவர்களின் தொடர்பு எண்கள், சில தினங்களில் வெளியிடப்படும். அதன் பின், பள்ளியை தத்தெடுக்க விரும்புவோர், நேரடியாக அவர்களை தொடர்பு கொள்ளலாம். பள்ளிகளை தத்தெடுக்கும் பணிக்கு, 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும்.பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்ட, 14417 என்ற எண்ணுக்கு, இதுவரை, 300 புகார்கள் வந்து உள்ளன. அவற்றின் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு:

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான, செய்முறை தேர்வு, வரும், 18ல், துவங்குகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


இந்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு, விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு, 18 முதல், 20ம் தேதி வரை, அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.அறிவியல் செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், ஏற்கனவே நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்காத வர்கள், புதிய தேர் வர்கள் என, அனைவரும், இந்த செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இந்த தேர்வில் பங்கேற்க முடியாது. செய்முறை தேர்வு குறித்த விபரங்களை, மாவட்ட கல்வி அதிகரி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்துதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!

31/8/18

TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?

TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?
அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றிட
முதலில் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றிபெறவேண்டும். இந்தாண்டிற்கான தகுதிதேர்வு அக்.6 மற்றும் 7 (சனி,ஞாயிறு)  ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார். 
ஆனால் தற்போது தேர்விற்கு 37 நாள் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எப்போதுமே தேர்விற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிப்பதற்கான செயல்பாடுகள் துவங்கும். பின் கடைசிதேதி, தேர்வு கட்டணம் செலுத்தும்தேதி  அறிவிக்கப்பட்டு இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படும். ஆனால் தேர்விற்கு குறுகிய அவகாசமே உள்ள நிலையில் இதுவரையில் தேர்வு குறித்த அறிவிப்பை அரசு அறிவிக்காததால் ஆசிரியராக ஆவதற்காக கனவு கண்டுகொண்டிருப்பவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குடைக்குள் சண்டை: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!

பருவ மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடர்பாடு மற்றும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக ஆய்வு அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இது தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை நேற்று (ஆகஸ்ட் 28) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவ, மாணவிகள் மிதிவண்டிகளில் வரும்போது சகதிகளில் சிக்கி வழுக்கி விழக்கூடிய அபாயம் மற்றும் குடை, மழைக் கோட்டு கொண்டு வருவது குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு குடையைக் கொண்டு வரும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைத் தவிர்க்க ஆலோசனை கூறவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மழையால் பாதிக்கப்படும் வகுப்பறையை மூடுவதுடன், மாணவர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழையால் பள்ளிச் சுற்றுச்சுவர் பாதிக்கப்படும் நிலையில், அதில் இருந்து 20 அடி தொலைவுக்கு மாணவர்கள் செல்லாமல் தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என்றும், பள்ளி வளாகங்களில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் நீர்தேக்கத் தொட்டிகளை மூடி பராமரிப்பதுடன், மாணவ, மாணவிகள் அருகில் செல்லாமல் பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி கட்டடங்களின் மேற்கூரையில் நீர் தேங்காதவண்ணம் அடிக்கடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் போது மாணவ, மாணவிகள் மழை மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பாக கவனமாகச் செல்லவும் அறிவுரை வழங்க அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இடி, மின்னல் வரும்போது மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என அறிவுறுத்தவும் அதில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
பருவ கால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள், அவற்றுக்குக் காலதாமதமின்றி சிகிச்சை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு இணையான
 கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

'பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! இந்த குரலைத் தெரியும்... ஆளைத் தெரியுமா?

ரயில்வே ஸ்டேஷன் போனதும் நம்மையுமறியாமல்
ஒரு குரல் நம்மை ஈர்த்துக்கொள்ளும்..
                                  


சரளா சவுத்ரி குரல்:
"பயணிகளின் கனிவான கவனத்திற்கு..." இந்த குரலை கேட்டதும் ஸ்பீக்கரை திரும்பி பார்க்காத நபர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த குரல் நமது அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்று. ரயில் நிலையத்தில் பணிப்புரிபவர்களிடம் கேட்டு பாருங்கள் இந்த குரல் தான் எங்களுக்கு தாலாட்டு என்பார்கள்.
அப்படியொரு மென்மை, கம்பீரம் இரண்டுமே இருக்கும் அந்த குரலில். வெறும் 30 வினாடிகள் மட்டுமே அந்த குரலை அவ்வளவு எளிதாக பயணிகள் மறந்து விடமாட்கள்.நாள் ஒன்றுக்கு ஆயிரம் முறை ஒலிக்கும் "இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா..?
சரளா சவுத்ரி. 53 வயதாகும் இவர் 1982-ல் சென்ட்ரல் ரயில்வேக்கு அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் மேனுவல் தான். கம்ப்யூட்டர் கிடையாது. தற்செயலாய் இன்ஸ்பெக்சனுக்கு சென்றிருந்த ரயில்வே பொது மேலாளர் அட்ஸோத் பேனட்ஜி , இந்த குரலை கேட்டுவிட்டு உடனடியாக அதனை பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். மராத்தியில் ஒலிக்கு இவரது குரல் கணினி மூலம் எல்லா ரயில் நிலையங்களிலும் ஒலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆரம்பக காலத்தில் ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்து வந்த சரளா சவுத்ரி, மாருதி ட்ராபிக் தகவல்களை தினமும் காலையில் மக்களுக்கு அறிவிப்பார்.அதன் பின்பு தான், தனது தந்தையில் ஆசைப்படி ரயில்வே நிர்வாகத்தில் பணிப்புரிய தொடங்கினார்.
இவரின் குரலை பதிவு செய்த அன்று, அவருடன் பணிப்புரிந்த ஒட்டு மொத்த ஊழியர்களும் உன் குரலுக்கு நீ கண்டிபாக சுத்தி போட வேண்டும், கலாய்த்தார்களாம். சரளா தனது 49 ஆவது வயதில் சொந்த காரணங்களுக்காக ரயில்வே பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு துறைக்கு சென்றுவிட்டார்.
ஆனால், அவரின் குரல் இன்னமும் ரயில்வேக்கு பணியாற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது!!!

புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு 

முன் பிறந்திருக்க வேண்டும்). பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில்  நடைபெறவுள்ளது.
* காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும்
* பெயர் சேர்க்க - படிவம் 6
* பெயர் நீக்க - படிவம் 7
* வாக்காளர் அட்டையில் திருத்தம் - படிவம் 8
* முகவரி மாற்றம் - படிவம் 8A.

"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ? "கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.

    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது.சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.

நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.

 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.

ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குறிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.

   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375நாட்கள் சம்பளமும்
30ஆண்டுகள்பணி செய்திருந்தால்30×15=450நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.

   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு.அதிகப்பட்சம் 2000000(இருபது லட்சம்)மட்டுமே வழங்கப்படும்.

  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.

உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.

    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.

    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் சர்வீஸ் முடித்த பனிஷ்மென்ண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம்.(இப்போதைய DA 7%.)

  பேசிக்....................................40000
 DA7%(40000×7÷100)..............2800
மொத்தம்(40000+2800)........42800
26ஆல் வகுக்க=42800/26=1646ரூபாய்.

   இந்த1646தான் ஒருநாள் சம்பளம்.

15நாள் சம்பளம்=1646×15=24690ரூபாய்

35ஆண்டுசர்வீசுக்கு=24690×35=864150ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.

சுருக்கமாகச்சொன்னால்

(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்தஆண்டுகள்.இதுவே கிராஜூவிட்டி ஆகும்

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-31 "நகரும் சிலை" (30.08.2018) :



SEPTEMBER 2018 Diary:

1-Grievance day

5- Teachers Day

11-RL-Saamaupakarma

12-RL-Hijri new year


13-GH-Vinayagar chathurthi

21-GH-Moharam

17~22- I Term Exams

23~Oct 2- I Term holidays.