- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
24/11/18
அடுத்த டிசம்பர் சாதாரணமாக கடந்து போகாது.. மொத்தமா காத்திருக்கு.. மிரள வைக்கும் புள்ளி விபரம்..?
இதுநாள் வரை சென்னையில் பெய்த மழை எல்லாம் மிக குறைவு தான். இந்த நேரத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் வெறும் 55 சதவிகிதம் மட்டுமே தான் சென்னை பெற்றுள்ளது.
டிசம்பர் மாதத்தில் அதிக கனமழை உண்டாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் பரவலாக பொழிய வேண்டிய மழை, கஜா புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கோரமுகத்தை காட்டி ஒருவழியாக்கி சென்றுவிட்டது.
இன்னும் தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கும் கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழக கடற்கரைப் பகுதிகளில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இப்போது வலுவிழந்துள்ளது.
இது தொடர்ச்சியாக காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக தமிழகத்தின் உள்மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
வடமேற்குத் திசையில் நகர்ந்து செல்லும் போது இது வலுவிழக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரத்துக்கு வட மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் கனமழை பெய்யும்.
சென்னையில், இடைவெளி விட்டு மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை.
சென்னையைப் பொறுத்தவரை வழக்கத்தைவிட தற்போது 45 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.
வழக்கமாக பொழியும் மழைபொழிவை விட குறைவான அளவில் பதிவாகியுள்ளதால், அடுத்த மாதம் இதன் தாக்கம் இருக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அறிமுகமானது - Redmi Note 6 Pro!
கடந்த 4 வருடங்களுக்கு முன் இந்தியாவில் Mi3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது. அதிலிருந்து இன்று வரை அந்நிறுவனத்தின் வளர்ச்சி இந்தியாவில் அபரிவிதமாக இருக்கிறது. தற்போது இந்திய மக்கள் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் சியோமி நிறுவன மொபைலை பயன்படுத்துகின்றனர் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 4 , ரெட்மி நோட் 5 , நோட் 5 ப்ரோ என தொடர்ந்து இந்தியாவில் மொபைலை வெளியிட்டு தன்னை நிலையாக நிலை நிறுத்தியது. இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவிற்கு வந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் ரெட்மி நோட் 6 ப்ரோ - 4ஜிபி ரேம்/64ஜிபி வேரியண்ட் முதன்முதலாக தாய்லாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. தாய்லாந்தில் இந்த போனின் அறிமுக விலை டி.ஹெச்.பி 6,990 ஆகும். அதாவது இந்திய மதிப்பின் படி ரூ.15,300 ஆகும்.
ரெட்மி நோட் 6 ப்ரோவின் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் ரெட்மி நோட் 6 ப்ரோவின் சிறப்பு அம்சம், விலை, முதல் விற்பனை எப்போது என்பது குறித்து முழு விவரம் வெளியிடப்பட்டது.
இரட்டை சிம் வசதி கொண்டதாக இருக்கும்.
ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டது.
6.26 இன்ச் ஹெச்.டி + திரை 19:9 என்ற வீதத்தில் இருக்கும்.
கொரில்லா கிளாஸினால் பாதுகாக்கப்பட்டுள்ளது.
14nm அக்டோ- கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 SoC.
அட்ரினோ 509 GPU,
4ஜிபி/6ஜிபி ரேம், 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் .
பின்புறம் இரண்டு கேமிராக்கள் உள்ளன.
4000mAh பேட்டரி.
விற்பனை தேதி: முதல் விற்பனை நாளை வெள்ளிக்கிழமை மதியம் சரியாக 12 மணிக்கு தொடங்குகிறது. பிளிப்கார்ட் மற்றும் mi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இந்த போனை வாங்கலாம்.
பிளிப்கார்ட் : https://www.flipkart.com
எம்ஐ : https://store.mi.com/in/buy/product/redmi-note-6-pro
இந்தியாவில் இரண்டு மாடல்களில் ரெட்மி நோட் 6 ப்ரோ வெளியாகிறது. அதன் படி 4 ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ.15,999 க்கும் மற்றும் 6ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ. 17,999 க்கும் விற்பனை செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும், நாளை முதல் விற்பனையை முன்னிட்டு இந்திய வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாடலுக்கும் ரூ.3000 தள்ளுபடி வழங்கியுள்ளது. அதன் படி 4 ஜிபி / 64 ஜிபி மாடல் : ரூ. 12,999 | 6ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ. 14,999 க்கும் சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த சிறப்பு தள்ளுபடி நாளை மட்டுமே. நாளை சரியாக 12 மணிக்கு விற்பனை தொடங்கும் என்பதை நினைவில் கொள்க.

"கல்விமுறை 2030" எனும் தலைப்பில் மேகாலயா மாநிலத்தில் தமிழக ஆசிரியர் கட்டுரை சமர்பிப்பு!
NCERT மூலம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெறும் NERIE கருத்தரங்கு மற்றும் ஒரிசா மாநிலம் புபனேஸ்வரில் நடைபெறும் NCSE கருத்தரங்கிலும் பங்கேற்க நமது மாநிலத்திலிருந்து திரு சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இக்கருத்தரங்கில் பங்கேற்று எனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக 9.11.2018 அன்று நமது பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உயர்திரு. பிரதீப் யாதவ் அவர்கள் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உயர்திரு.கருப்பசாமி அவர்கள் முன் எனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தேன். நம் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் ஆய்வு கட்டுரை மிகச்சிறப்பாக உள்ளது என பாராட்டி, ஒரிசா மற்றும் மேகாலயாவில் நடைபெறும் கருத்தரங்கில் மிகச்சிறப்பாக வழங்கி நமது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும்படி வாழ்த்தி அனுப்பினர்.
சார்ந்த ஆசிரியரை நமது
கல்விசிறகுகள் வாழ்த்துகிறது.
Teacher Details:
Srinivasan K
Head master
Hindu primary school
AMBUR
Vellore

பிளஸ்1 தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்படுமா?
பிளஸ்1 வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. மாதாந்திரப் பாடத் திட்டம், புதிய மாதிரி வினாத் தாள் ஆகியவை தாமதமாக வெளியிடப்பட்டதால், பிளஸ்1 அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் சிலர் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. இவர்களுக்கென தனிப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படாமல் ஜுன் மாதம் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனால், பலரும் மீண்டும் தோல்வியைத் தழுவினர்.
இந்த நிலையில், பிளஸ்1 தோல்வியுற்ற மாணவர்கள் பிளஸ்2 வகுப்பில் தொடர்ந்து பயின்று வருகின்றனர். இவர்கள் வருகிற மார்ச் மாதம் பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகளை ஒரே நேரத்தில் எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு தேர்வெழுதும் மாணவர்கள் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்று, பிளஸ்1 தேர்வில் தோல்வியடைந்தால் மேற்படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் மறுதேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், பிளஸ்1 வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மறுதேர்வுகள் நடத்தப்படாத நிலையில், இனி வரும் காலங்களில் செப்டம்பர் மாதத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பிளஸ்1 தேர்ச்சி பெறாத மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் தோல்வியுற்ற பாடங்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

டிச.5ம் தேதி முதல் பான் கார்டு விதிமுறை மாறுது
வரி ஏய்ப்பை தடுப்பதற்காக வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் பான் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்து வருமான வரித்துறை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஓர் நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் செய்பவர்கள், பான் கார்டு எண்ணுடன் அனைத்து பரிவர்த்தனைகளையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓர் நிதியாண்டில் அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதி வரையில் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் மேற்கொள்ளப்படும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் பான் கார்டு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஒருவர், ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்பவராக இருந்தால், அவரிடம் பான் கார்டு எண் இல்லை என்றால், அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதிக்கு முன்பாக பான் கார்டு எண் பெறுவது கட்டாயம். வருமான வரி சட்டம் 1962ன் புதிய திருத்த விதிகளில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
* இந்தபுதிய வருமான வரி விதிமுறைகள், இதுபோன்ற நிதி பரிவர்த்தனைகளில் தொடர்பில்லாத வருமான வரி செலுத்தும் தனி நபரைக் குறிப்பிடவில்லை.
* மேலாண்மை இயக்குநர், இயக்குநர், பங்குதாரர், டிரஸ்டி, பொறுப்பாளர், நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி அல்லது தொழில் நிறுவனத்தின் அலுவலக நிர்வாகி ஆகியோர், புதிய வருமான வரி விதிகளின்படி, பான் கார்டு எண் இல்லை என்றால் அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து பான் கார்டு எண் பெறுவது கட்டாயம்.
* ஒரு நிதியாண்டில் பண பரிவர்த்தனை ரூ.5 லட்டத்திற்கு அதிகமாக இல்லை என்றாலும் இதுபோன்ற தொழில் நிறுவனங்கள் பான் கார்டு எண் பெற வேண்டும். அப்போதுதான், பண பரிவர்த்தனையை வருமான வரித்துறை எளிதாக பார்வையிட முடியும். இதன் மூலம் முறையான வரி விதிப்புக்கும் வரி ஏய்ப்பையும் தடுக்க முடியும் என்று வரி துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
* தேவைக்கேற்ப விதிமுறைகளை வருமான வரித்துறை அவ்வப்போது மாற்றி வருகிறது. பான் கார்டு விண்ணப்பிக்க தந்தை பெயர் குறிப்பிடுவது கட்டாயம். ஆனால் கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான் கார்டு விண்ணப்ப படிவத்தில் தந்தையின் பெயரை குறிப்பிட தேவையில்லை இதுவும் அடுத்த மாதம் 5ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

செல்போன் கட்டணம் உயருமா..? ஆட்டத்தை தீர்மானிக்கப்போகும் ரிலையன்ஸ்!
வரவிருக்கிற காலாண்டுகளிலும் வருவாய் இழப்பைச் சந்திக்க ரிலையன்ஸ் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் தயாராக இல்லை. போட்ட மூலதனத்துக்கு ஏற்ற வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் இந்த நிறுவனங்கள் முனைப்புடன் இருக்கின்றன.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர், செல்போன் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த கட்டணத்தில் தொலைபேசி சேவைகளை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சலுகை நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்றும், விரைவிலேயே செல்போன் சேவைக் கட்டணங்கள் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், அந்தக் கட்டண உயர்வு எப்போது என்பதைத் தீர்மானிக்கப்போவதும் ரிலையன்ஸ் நிறுவனம்தான் என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.
செல்போன் கட்டணம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆர்ப்பாட்டமான அறிவிப்புகள் மற்றும் அதிரடி சலுகைகளுடன் செல்போன் சேவை துறையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ. மிகக் குறைந்த கட்டணத்தில் அவுட் கோயிங் முற்றிலும் இலவசம், மின்னல் வேக இணையதள இணைப்பு என்ற சேவைகளைப் பார்த்து, அதுவரை பிற செல்போன் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தி வந்தவர்களும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாற, வேறு வழியில்லாமல் மற்ற செல்போன் நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டன. இருப்பினும் இந்தக் கட்டணக் குறைப்பு போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏர்செல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தத் தொழிலிருந்தே வெளியேறின. ஐடியா செல்லுலார் நிறுவனம், வோடஃபோன் இந்தியா நிறுவனத்துடன் இணைய நேரிட்டது. இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடஃபோன் ஐடியா உருவெடுத்தது. இதர சிறு நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன.
பின் தங்கிய போட்டி நிறுவனங்கள்
நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 4,974 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முக்கியக் காரணம் நஷ்டத்தில் இயங்கிய ஐடியா செல்லுலார் நிறுவனத்தை வாங்கியதுதான் என்றும் வோடஃபோன் நிறுவனம் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோன்று, பார்தி ஏர்டெல் நிறுவனமும் நஷ்டத்தைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 118.80 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி, சந்தை ஆய்வாளர்களையே ஆச்சர்யப்படுத்தியது. அதே சமயம் 2017-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 343 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இது 65.4% குறைவே.
ஆனால், ரிலையன்ஸ் ஜியோ எதிர்பார்த்தபடியே 681 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் ஈட்டி, தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் 3.7 கோடியாக அதிகரித்து, மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 25.23 கோடியாக உயர்த்திக் கொண்டது. தற்போது சந்தையின் வருவாய் பங்கு அடிப்படையில், இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய தொலைபேசி சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ்.
இதனுடன், தற்போது வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் ஆகிய 2 பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து நிற்கும் நிலையில், செல்போன் சேவைக் கட்டணங்களை இனி இந்த நிறுவனங்கள் உயர்த்தலாம் என, ஏற்கெனவே இத்துறை உயரதிகாரிகள் சூசகமாக தெரிவித்திருந்தனர். ரிலையன்ஸ் ஜியோவைத் தவிர்த்து, மற்ற செல்போன் சேவை நிறுவனங்கள், கடந்த சில காலாண்டுகளில் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்த போதிலும், கடன் பத்திரங்கள் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நிதி திரட்டி, தொழில் மூலதனத்தை அதிகரித்துக்கொண்டு போட்டியைச் சமாளித்து சந்தையில் நிலைத்து நிற்கின்றன. அதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு ஏற்கெனவே 3.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மூலதனமாக இறைத்துள்ளது.
இந்த நிலையில், வரும் காலாண்டுகளிலும் வருவாய் இழப்பைச் சந்திக்க, ரிலையன்ஸ் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் தயாராக இல்லை. போட்ட மூலதனத்துக்கு ஏற்ற வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் இந்த நிறுவனங்கள் முனைப்புடன் இருக்கின்றன. எனவே, கட்டண உயர்வு குறித்து இந்த நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
முதலிடத்தைக் குறிவைக்கும் ஜியோ
ஆனால், ஜியோ என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்தே அந்த நிறுவனங்கள் தங்கள் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க முடியும். ஏனெனில், ஜியோவும் நீண்ட காலத்துக்கு தற்போதைய சலுகைகளை வழங்க விரும்பாது. மற்ற செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை வளைக்கவே இலவச அவுட்கோயிங், கவர்ச்சிகரமான டேட்டா என சலுகைகளை அறிவித்தது. தற்போது, இந்திய செல்போன் பயன்பாட்டாளர்களின் சந்தையைத் தனது பிடியின் கீழ் கொண்டு வரும் அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிவிட்டது. இது நல்லதா, கெட்டதா என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
இந்த நிலையில், `4ஜி சேவை தளத்தில் தன் ஆதிக்கத்தை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள ரிலையன்ஸ் நினைக்கிறது. எனவே, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 40 கோடியாக அதிகரித்து, முதலிடத்தைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டால், அதன் பின்னர் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படலாம் என்றும், அது வரை கட்டண உயர்வு இருக்காது’ என்று பிரபல பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லைன்ச் தெரிவித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தலும் 2019 ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என்பதால், கட்டண உயர்வு இருக்காது என அந்த நிறுவனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜியோ
இதனிடையே சந்தை கைப்பற்றலின் தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக, ( ஃபைபர் டு த ஹோம்) என்ற பெயரில், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக ஃபைபர் கேபிள் மூலம் இணைதள சேவை அளிக்கும் பிராட்பேண்ட் சேவைத் திட்டம் மூலம் 5 கோடி வாடிக்கையாளர்களைத் தனது நெட் ஒர்க்கின் கீழ் கொண்டு வர ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜியோவில் பயன்படுத்திய அதே யுக்திகளை பிராட் பேண்டிலும் கையாளப்போகிறது ரிலையன்ஸ். அதாவது, ஜியோவைப்போலவே தொடக்கத்தில் இலவச டேட்டாக்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரத் திட்டமிட்டுள்ளது.
இது தவிர, தனது மொபைல் டவர்களின் எண்ணிக்கையையும் 2 லட்சத்திலிருந்து, அடுத்த 6 மாதங்களுக்குள் 2.36 லட்சமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய மொபைல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக உள்ளது. இதில் 50 % முதல் 60% பயன்பாட்டாளர்கள் இன்னமும் 2ஜி நெட் ஒர்க்கிலேயே உள்ளனர். அதாவது இன்டர்நெட் சேவை இல்லாமல் இருப்பவர்கள்.
கட்டண உயர்வு எப்போது?
இந்த நிலையில், ரிலையன்ஸ், தனது 4ஜி வாடிக்கையாளர்கள் தளத்தை மென்மேலும் தீவிரமாக விரிவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம், செல்போன் சேவை சந்தையில் 35 சதவிகித வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் 2ஜி வாடிக்கையாளர்கள் 4ஜி நெட் ஒர்க்குக்கு மாறுவது மிக மெதுவாகவே நடைபெகிறது. ஏர்டெல் நிறுவனத்திலும் இதே கதைதான். எனவே, இந்த வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறிவிடாமல் தக்கவைத்துக் கொள்ள இந்த நிறுவனங்கள் கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும்.
மொபைல் கட்டண உயர்வு
இத்தகைய சூழலில் ரிலையன்ஸ், போட்டி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கான இலக்கை எட்டிவிட்டால், அதன் பின்னர் கட்டணத்தை நிச்சயம் மாற்றியமைக்கும். அப்படி மாற்றியமைத்து விட்டால், அதைத் தொடர்ந்து வோடஃபோன் மற்றும் ஏர்டெல் போன்ற அதன் போட்டி நிறுவனங்களும் கட்டண உயர்வை அமல்படுத்திவிடும்.
இருப்பினும், இப்போதைக்கு செல்போன் சேவை கட்டண உயர்வு இருக்காது. ஆனால், விரைவிலேயே அதை எதிர்பார்க்கலாம்.

48 பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு
கமுதி ஒன்றியத்தில் உள்ள 48 பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் என 48 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 22 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் உள்ளிட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் வருகைப் பதிவேடு, இலவச நலத்திட்ட உதவி பதிவேடுகள், அடிப்படை வசதிகள், வருகைப் பதிவேடுகள், மாணவர்களின் கல்வித்திறன், வாசித்தல், ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறை, ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமையில் ஆய்வு செய்யபட்ட அறிக்கை குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் கமுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட 48 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

பேய் பிடித்து மாணவிகள் ஆட்டம்.! அதிர்ந்து போன ஆசிரியர்கள்.!! விபூதி போட மாவட்ட கல்வி நிர்வாகத்தை நாடிய ஆசிரியர்கள் !!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள கிராமம் கீரநல்லூர். இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் 230 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் அந்த கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் சனிக்கிழமை அன்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது அங்குள்ள 7 ம் வகுப்பில் பயிலும் 15 மாணவிகள் திடீரென எழுந்து கூச்சல் போடவும்., ஆடி குதிக்கவும் துவங்கினர்.
இதனை கண்டு ஒருகணம் செய்வதறியாது திகைத்துப்போன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்., மாணவிகள் அமைதியாகும் வரை பொறுமை காத்தனர். பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அவர்களின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு அவர்களை அழைத்து செல்லக்கூறி அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால்., திங்கட்கிழமை வழக்கம்போல பள்ளி நடைபெற்றது. அப்போது அதே வகுப்பறையில் இருந்த மாணவிகள் மீண்டும் அதே போன்று செய்தனர்.
மீண்டும் அவர்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்பியவுடன் அவர்களிடம் இது குறித்து ஆசிரியர் கேட்ட போது., காரணம் தெரியாமல் திகைத்தனர். பின்னர் அவர்களின் பெற்றோரை மீண்டும் தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் அவர்கள் வந்தவுடன் அவர்களை மருத்துவமைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.
இந்த செய்தியானது மாணவர்களிடையே., அவர்களுக்கு பேய் பிடித்துள்ள்ளது என்று பரவவே., விசயம் சுற்றுவட்டார கிராமங்களில் தீயை போல பரவியது. இதனால் பயந்துபோன பிற பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் செய்வதறியாது திகைத்த ஆசிரியர்கள்., இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதற்க்காக மனநல ஆலோசகர்கள் மூலமாக ஆலோசனை வழங்குவதற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது
அண்ணா பல்கலை. தேர்வுகள்: 3 மாவட்ட கல்லூரிகளின் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு
கஜா புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகளுக்கான நாளைய (சனிக்கிழமை) தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. வியாழக்கிழமை முதல் திட்டமிட்டபடி அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பருவத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது.
இதையடுத்து, புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நிறைவடையாததைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு மட்டும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், இந்த 3 மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகளுக்கான மறு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம் ஆதார் விவரங்களுடன் முழுவிவரம் சேகரிப்பு:
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி இருப்பதால் ஆதார் விவரங்களுடன் அவர்களின் முழு விவரம் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகள் தினமும் காலை 9.15 மணிக்கு தொடங்கி மாலை 4.15க்கு முடிவடைகிறது. பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக, தலைமை ஆசிரியர் அறையில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறையாக இருந்து வருகிறது. இது போல மதியமும் பள்ளி துவங்குவதற்கு முன், ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடவேண்டும்.
குறித்த நேரத்தில் வரமுடியாத ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை சரிக்கட்டி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வருகின்றனர். இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிகல்வித்துறை சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக அனைத்து பள்ளிகளிலும், இந்தாண்டு இறுதிக்குள் பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அங்கு பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளின் எண்ணிக்கை, ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்து வருகின்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 41,805 பேருக்கும், 4,040 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 774 பேருக்கும் இந்த பயோமெட்ரிக் முறையில் அமலுக்கு வருகிறது. இதற்காக ₹15.30 கோடி செலவிடப்பட உள்ளது. மேலும் நிதிப்பற்றாக்குறை காரணமாக அரசுப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் உதவிகள் செய்ய அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்ைத செயல்படுத்துவதற்காக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படும். அதன்பிறகு தனி சாப்ட்வேரில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் ஆசிரியர்களின் கை ரேகை பதிவுகள் செய்யப்படும். இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்

வட மாவட்ட பள்ளிகளில், 60 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலி!
கவுன்சிலிங் போது நிரப்பப்படாத காலிப்பணியிடங்களுக்கு, முறைகேடாக டிரான்ஸ்பர் வழங்கியதால், வட மாவட்ட பள்ளிகளில், 60 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, ஜூன் மாதம் நடந்தது.
இதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட, 20 மாவட்டங்களுக்கு காண்பிக்கப்படவில்லை. இங்குள்ள காலியிடங்களுக்கு, முறைகேடாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.வட மாவட்ட பள்ளிகளில் இருந்து பெரும்பாலானோர், தென்மாவட்ட பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர். இதனால், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார் உள்ளிட்ட, வட மாவட்ட பள்ளிகளில், பெரும்பாலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாட திட்டம் மாற்றப்பட்டதால், தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த, திணறுகின்றனர்.
பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் பின்தங்கும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் சுரேஷ் கூறுகையில்,''கவுன்சிலிங்கின் போது மறைக்கப்பட்ட இடங்களில், தற்போது ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். முறையற்ற பணியிடமாறுதல் கண்டித்து, இருமுறை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காலியிடங்கள் நிரப்ப, தற்போது அறிவிப்பு வெளியிட்டால் தான், பிப். மாதத்திற்குள், புதிய ஆசிரியர்கள் நியமிக்க முடியும். எனவே, மாணவர்களின் நலன்கருதி, விரைவில் டி.ஆர்.பி., மூலம், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்,'' என்றார்

மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து புயல் நிவாரண நிதி திரட்டும் இளைஞர் :
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலியில் கல்லூரி மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து நிதி திரட்டுகிறார், பாளையங்கோட்டை சாந்தி நகரில் வசிக்கும் இளைஞர் பா.பாப்புராஜ். இந்தியாவில் எந்தப் பகுதியில் இயற்கை பேரிடர் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டாலும் திருநெல்வேலியில் உள்ள அன்னை தெரசா நண்பர்கள் குழு நிதி திரட்டி அளித்து வருகிறது. இதற்காக வித்தியாசமான முயற்சிகளை இந்த குழுவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பா.பாப்புராஜ் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட போது, திருநெல்வேலியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களைச் சுத்தம் செய்து கொடுத்து நிதி சேகரித்து, ஆட்சியர் மூலம் அனுப்பி வைத்தார். தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்க ளுக்கு வழங்க, ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று வாசலில் அமர்ந்து மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து கொடுத்து நிதி சேகரித்து வருகிறார். கஜா புயல் சேதங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த புகைப்படங்கள், செய்திகளை பெரிய அட்டையில் ஒட்டி அதை தன்னருகில் வைத்துக்கொள்கிறார். மாணவர்கள் மத்தியில் கஜா புயலின் பாதிப்பு குறித்தும், மக்கள் படும் வேதனைகள் பற்றியும் சொல்லி நிதி சேகரிக்கிறார். இதற்காக மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து அளிக்கிறார். தினமும் 2 மணிநேரம் இதுகுறித்து பாப்புராஜ் கூறிய தாவது: கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து மிகுந்த வேதனை அடைந்தேன். அங்குள்ள சகோதர, சகோதரி களுக்காக நிவாரண நிதி திரட்ட திட்டமிட்டேன். அதன்படி கடந்த 19-ம் தேதி யிலிருந்து வரும் 26-ம் தேதி வரை தினமும் 2 மணிநேரம் திருநெல்வேலியில் உள்ள ஒவ்வொரு கல்லூரி வாசலிலும் அமர்ந்து மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளேன். இதுவரை 2 கல்லூரிகளில் நிதி திரட்டி யுள்ளேன். மற்ற கல்லூரிகளிலும் நிதி திரட்டி நேரடியாக டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உதவ உள்ளேன்” என்றார் அவர். பலமுறை உதவியவர் ஏற்கெனவே இவர் குஜராத் பூகம்பம், சுனாமி பேரழிவு, இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக செருப்பு துடைத்து நிதி திரட்டி அளித்திருக்கிறார். தானே புயல் பாதிப்பின்போது திருநெல்வேலியில் கார்களை சுத்தம் செய்து நிதி திரட்டினார்.
ஒரிசா புயல் வெள்ள பாதிப்பின்போது வெள்ள நிவாரண நிதி திரட்ட டீ விற்றிருக்கிறார்.கடந்த 19-ம் தேதியிலிருந்து வரும் 26-ம் தேதி வரை தினமும் 2 மணிநேரம் திருநெல்வேலியில் உள்ள ஒவ்வொரு கல்லூரி வாசலிலும் அமர்ந்து மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் நவம்பர் 30 வரை பள்ளி ,கல்லூரிகளுக்கு சிறப்புவிடுமுறை அளிப்பது குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் உயர்கல்வி மற்றும் பள்ளிகல்வி அமைச்சர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் :
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புறப் பகுதிகளுக்கே மின்சாரம் இன்னும் கிடைக்காத சூழலில், கிராமப் புறங்களுக்கு மின்சாரம் என்பது இன்னும் கூடுதல் நாட்களாகும் என்பது கண்கூடாக தெரிகிறது. ஒரு குடம் குடிதண்ணீருக்கு சாலையில் காத்திருக்கும் பொதுமக்களை நேற்று மாலைவரை கண்கூடாக காணமுடிந்தது.
ஒருவேளை உணவுக்காக சாலையில் கையேந்தி நிற்கும் நிலை ஊருக்கே உணவளிக்கும் தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு வரும் என்பதெல்லாம் கனவிலும் நினைத்துப்பார்க்க இயலாத சம்பவம்.
அத்தோடு மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் ஊடகநண்பர்கள், தன்னார்வ அமைப்புகள் இவர்களுடன் ஆசிரியர்கள்தான் பெரும்பாலும் இணைப்புப் பாலமாக செயல்பட்டு வருகின்றனர். நம் டெல்டா மாவட்டங்களை பாதிப்பில் இருந்து விரைவில் மீட்டெடுக்கவும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் *நவம்பர் 30 வரை பள்ளி ,கல்லூரிகளுக்கு சிறப்புவிடுமுறை* அறிவித்து ஆசிரியர்கள் அனைவரையும் களப்பணிக்கும் ஈடுபடுத்திக்கொள்ளவும், பள்ளிகளை புணரமைப்பு செய்திட வாய்ப்பு வழங்கவும் வகைசெய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
பள்ளிகளில் மரம் அகற்றுதல் என்பது தற்போதைய முதன்மை பிரச்சினையாக இருந்தாலும், அது எளிதில் சரிசெய்ய முடியும். மின்சாரம் இல்லாமல், குடிநீர் இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு வருதல் என்பது மிகச்சவாலானது.
*குடிதண்ணீரும், உணவு சமைத்தலும், கழிப்பறை உபயோகமும் அடிப்படைப் பிரச்சினைகளாகும்.* எனவே இதனைக் கருத்தில் கொண்டு சரியான நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்து நிவாரணப்பணிகளில் தற்பொழுது இரவு வரை பெற்ற அனுபவத்தில் இதனைப் பதிவு செய்கிறேன்.
சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்.

பள்ளி செல்லும் 80 சதவீத குழந்தைகள் காலையில் பட்டினி! ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கு உத்தரவு :
தமிழகத்தில் பள்ளிக்கு வரும் குழந்தைகளில், 80 சதவீதம் பேர், காலை உணவை தவிர்ப்பதாகவும், சரிவிகித உணவு முறையை பின்பற்றாத அவர்களின் பெற்றோருக்கு ஊட்டச்சத்து குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவின் பேரில், சென்னையில் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு வகுப்புகள், பல கட்டங்களாக நடக்கின்றன. வரும் 30ம் தேதி வரை, நடக்கும் வகுப்புகளில், கோவையில் இருந்து 12 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.சித்த மருத்துவம் முதல் உளவியல் நிபுணர்கள் வரை, துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று, ஊட்டச்சத்து, சரிவிகித உணவு முறை, தன் சுத்தம் குறித்து, பல்வேறு தகவல்களை விளக்கி வருகின்றனர்.
பங்கேற்ற ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இந்த வகுப்பில், பள்ளி வளாகத்தில் துாய்மை பேணும் முறை குறித்து வலியுறுத்தப்படுகிறது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 25 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறையும், 50 பேருக்கு ஒரு சிறுநீர் கழிப்பறையும் அமைத்தல் வேண்டும். தமிழகத்தில் 90 சதவீத பள்ளிகளில், இக்கட்டமைப்பு வசதி இல்லை.
உடலுக்கு தினசரி தேவைப்படும் தண்ணீர் அளவில், 20 சதவீதம் கூட, பள்ளி நேரத்தில் மாணவர்கள் குடிப்பதில்லை.அடிக்கடி தண்ணீர் அருந்தினால், கழிப்பறைக்கு செல்ல வேண்டுமே, என்பதால் குடிநீர் அருந்தும் பழக்கத்தையே, மாணவர்கள் பின்பற்றுவதில்லை. உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல், சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மாதவிடாய் சமயங்களில், பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர தயங்குகின்றனர். முறையாக சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்த, பல பள்ளிகளில் வசதி இல்லாததே காரணம். இதை அமைத்து தர வேண்டியது, தலைமையாசிரியர்களின் கடமை என, வலியுறுத்தினர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
விழிப்புணர்வுக்கு திட்டம்!
காலையில் பள்ளிக்கு வருவோரில், 80 சதவீதம் பேர், உணவு சாப்பிடுவதில்லை. சரிவிகித உணவு உடலுக்கு கிடைக்காததால், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவராக வளர வாய்ப்புள்ளது. இதற்காக விரைவில், அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பயிற்சி வகுப்பு நடத்தி, மாணவர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பெற்றோரே...கவனிங்க!
நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஜாஸ்மின் கிறிஸ்டல் கூறியதாவது: பள்ளியில் உள்ள குடிநீரை, அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். காலையில் சாப்பிடாத குழந்தைகள், இரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். உடலுக்கு தேவையான கலோரியை, காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் என, பிரித்து சாப்பிட வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு, சிவப்பு அவலை, பாலில் சேர்த்து அளித்தால், இரும்புச்சத்து அதிகரிக்கும்.பெற்றோர்களுக்கு இது குறித்து அறிவுறுத்த, கூட்டத்தில் டாக்டர்கள் வலியுறுத்தினர்.இவ்வாறு, அவர் கூறினார்

NMMS தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு :
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுகளுக்கு (என்.எம்.எம்.எஸ்.,) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு வரும் டிச.1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள யூஸர் ஐ.டி, பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி நுழைவுச் சீட்டுகளை நவ.22 வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் நவ.26 முதல் விண்ணப்பிக்கலாம் :
தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நவ.26-ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு 1.1.2019 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் நவ.26-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் டிச.5-ஆம் தேதி புதன்கிழமை வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Nodal Centre) நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.
முதல் முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவித்துள்ளார்

NEET - 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் வினாத்தாளில் குளறுபடி காரணமாக 196 மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நீதிக்கதை
வடைக்கு ஆசைப்பட்ட காகம் – விழியன்
பாட்டி அந்த காட்டுப் பாதையில் வடை சுட ஆரம்பித்தார். இரண்டு ஊருக்கு நடுவே ஒரு காடு. அந்த காட்டை கடப்பதற்கு ஒரு வழி இருக்கு. அங்க தான் பாட்டி கடையை போட்டாங்க. ஒரு நாள் ஒரு காக்காவுக்கு பயங்கர பசி. பாட்டி வடை சுடுவதை பார்த்துகிட்டே இருந்துச்சு. பாட்டிகிட்ட வந்து “பாட்டி பாட்டி எனக்கு ஒரு வடை தாங்களேன் என்றது. உன்னால என்ன பயன், உனக்கெல்லாம் தரமுடியாது காக்கா என்று சொல்லிவிட்டது.
ஒரு மரத்தின் மேலே போய் உட்கார்ந்துகொண்டது. அந்த பக்கம் நரி வந்தது. அடடே காகமே உன் வாயில் ஒரு வடை இருக்க வேண்டுமே எங்கே காணவில்லை என்று கிண்டலடித்தது. அட போங்க நரியண்ணா, எனக்கோ பசி, பாட்டி என்னால் என்ன பயன், வடை எல்லாம் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. அப்படியா சொல்லிட்டாங்க ஒரு கை பார்த்திடலாம் வா என காகத்தை அழைத்தது. தூரத்தில் பாட்டி வேர்த்து வியர்த்து வடை சுட்டுக்கொண்டிருந்தார்கள். காட்டுப் பகுதி என்பதால் குடிசை கூடப் போடவில்லை. வெயிலில் தான் அமர்ந்து இருந்தார்கள்.
நரி யோசித்தது. காகத்திடம் “உன்னால் இலைகளைப் பறித்து வரமுடியுமா?” என்று கேட்டது. “ஓ எத்தனை வேண்டும்” என்றது காகம். “எவ்வளவு முடியுமோ அவ்வளவு” என்றது நரி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…நாற்பது, அறுபது… நூறு. நூறு இலைகளைப் பறித்துக்கொண்டு வந்தது காகம். பெரிய இலைகளை கீழே வைத்து அதன் மீது சின்ன இலைகளை எல்லாம் தைத்தது நரி. கொஞ்ச நேரத்தில் பெரிய குடையாக விரிந்தன அந்த இலைகள். ஆமாம! நரி பாட்டிக்கு இலைகளைக்கொண்டும், கிளைகளைக்கொண்டும் பெரிய குடையை செய்துவிட்டது.
பாட்டியிடம் கொடுத்ததும் பாட்டிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. குடை நிறைய நிழலினைக் கொடுத்தது. "வடை கேட்ட காகம் நீதானே?" என்றார் பாட்டி. "ஆமாம் பாட்டி! பசியுடன் உங்களுக்காக இத்தனை இலைகளையும் காகம் எடுத்து வந்தது" என்றது நரி. "அடடே! பசின்னு கேட்டப்பவே வடை கொடுத்திருக்க வேண்டும். இந்தாங்க ரெண்டு பேரும் வடை சாப்பிடுங்க" என்று பாட்டி வடைகளை கொடுத்தாங்க. ஆளுக்கு ஒரு வடை இல்லை. நான்கு நான்கு வடை.
அய்யோடா! எப்படி இத்தனை வடையை சாப்பிடறதுன்னு காகமும் நரியும் யோசித்தன. நரி தன்னுடைய பங்கில் இருந்து இன்னொரு வடையையும் காகத்திற்கு கொடுத்தது. "உன்னால தான் எனக்கு வடை கிடைத்தது, வெச்சிக்கோ"என்று சொல்லிவிட்டு வடை சாப்பிட்டுக்கொண்டே பாட்டு பாடிக்கிட்டு போயிடுச்சு. காக்கா என்ன செய்தது தெரியுமா? “கா..கா..கா”ன்னு தன் சகாக்களை எல்லாம் கூப்பிட்டு எல்லோரும் சேர்ந்து, அந்த ஐந்து வடைகளையும் காலி செய்தார்கள்.
தினமும் காகமும், நரியும் பாட்டிகிட்ட இருந்து வடை வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிட்டன. ரெண்டு பேரும் பாட்டிகிட்ட வேலைக்கு சேர்ந்துட்டாங்க.
23/11/18
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் 9 கருணை மதிப்பெண் வழங்க வல்லுநர் குழுவுக்கு உத்தரவு
TNPSC குரூப் 2 தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள்! தவறை ஒப்புக்கொண்டது
கடந்த 11ம் தேதி தமிழகம் முழுவதும் 6 லட்சம் மாணவர்கள் எழுதிய குரூப் 2 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு வினாத்தாளில் தவறான விடைகள் இருப்பதாக புகார் எழுந்தது. தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடைகள் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
இதனை அடுத்து ஆறு கேள்விகளுக்கும் 9 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டியும் என கோரிக்கை எழுந்திருந்தது. TNPSC இது எங்கள் தவறு இல்லை என்றும் வினாத்தாள் தயாரித்த வல்லுநர் குழுவின் தவறு எனவும் கூறி வந்தது.
இந்நிலையில் ஆறு கேள்விகளுக்கும் 9 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்ணாக வழங்க வல்லுநர் குழுவிற்கு TNPSC உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது

How to Apply Aadhar Card?
ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தைத் அணுகுங்கள். பின்னர், பதிவு படிவத்தை நிரப்பவும் (படிவம் ஆன்லைனில் கிடைக்கும்)
அடையாள சான்று மற்றும் முகவரியின் ஆதாரம் போன்ற அடையாள ஆவணங்களுடன்
சேர்ந்து சமர்ப்பிக்கவும்
அனைத்து ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு,
உங்கள் கைரேகை மற்றும் கண்ணின் கருவிழி ஸ்கேன் அடங்கிய
உங்கள் பயோமெட்ரிக் தரவை சமர்ப்பிக்கவும்
உங்கள் புகைப்படத்தையும் ஆதார் எடுத்துச்செல்கிறது
14-இலக்க பதிவு எண் கொண்ட அடையாளம் சேகரிக்கவும்,உங்கள் ஆதார் அட்டையைப் பெறும் வரை ஒப்புதல் சீட்டு பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
பின்னர் உங்கள் ஆதார் கார்டு உங்கள் இருப்பிட முகவரிக்கு அனுப்பப்படும்

இந்தியாவின் 9 மொழிகளுக்கு பாதுகாப்பு நிலையத்தை வழங்கும் கூகுள்
ஆன்லைனில் பாதுகாப்பாக பயனாளிகல் பயன்படுத்தும் அதிகாரம் அளிப்பதற்கான நோக்கத்துடன், இந்தியாவில் புதிதாக விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தை கூகுள் உருவெடுத்துள்ளது, பயனர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நிர்வகிப்பதன் மூலம் இணையத்தை சிறப்பான முறையில் நிர்வகிக்க உதவும் வகையில் கூகுள் வடிவமைத்துள்ளது.
இந்தியாவில் அமைக்கப்படும் புதிய பாதுகாப்பு மையம் இங்குள்ள பயனர்கள் பல்வேறு பாதுகாப்பு கருவிகளையும், அடிப்படை பாதுகாப்பு வழிகாட்டல்களில் இருந்து, தரவு பாதுகாப்பு, தனியுரிமை கட்டுப்பாடுகள், மற்றும் இணையத்தில் குடும்ப மற்றும் நட்பு வட்டாரத்தினை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான உதவிக்குறிப்புகள் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றிய தகவல்களுக்கு பரந்த அளவிலான கருவிகள் மற்றும் ஆதாரங்களை கூகுள் தற்போது வழங்கியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் புரொடக்ட் மேனேஜ்மெண்ட் டைரக்டர் மார்க் ரிஷர் இதுகுறித்து கூறியபோது, "கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் பல டூல்ஸ்களை பயனர்களுக்காக உருவாக்கி அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். அந்த வகையில் தற்போது கூகுளின் பாதுகாப்பு அமைப்பு, கூகுள் சேவைகளில் அவற்றின் தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கு அவற்றிற்கு அதிகாரம் அளிப்பதாகவும் உள்ளது.
இந்த புதிய சேவை இந்தியாவில் உள்ள மேலும் ஒன்பது மொழிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அவை இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகள் ஆகும்.
இன்றைய இந்தியா உலகில் இண்டர்நெட் அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே இதுபோன்ற ஒருசில வசதிகள் கொடுத்து ஸ்மார்ட்பொன்களில் டேட்டா பயன்பாட்டை இன்னும் அதிகப்படுத்த முடியும் என கூகுள் நிறுவனத்தின் டிரஸ்ட் அண்ட் சேஃப்டி இயக்குனர் சுனிதா மொஹந்தி அவர்கள் கூறியுள்ளார்.
மொஹந்தி இதுகுறித்து மேலும் கூறுகையில், "இணையம் எல்லோருக்கும் வாழ்க்கையை எளிதாகவும் சுலபமாகவும் மாற்றுவதோடு அனைத்து வயதினர்களுக்கும் உதவும் வகையில் உள்ளது. ஆன்லைன் பயனர்கள் அல்லது முதல் தடவையாக ஆன்லைனில் வருபவர்களிடையே ஆராய்ந்து, உருவாக்குவதற்கும், ஒத்துழைப்பதற்கும் பல வாய்ப்புகளை வழங்குகிறது, சாத்தியமான எதிர்மறை அனுபவங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் இணையத்தில் அவை பாதிக்கப்படுவதால், இது பயனர்களுக்கு பல தகவல்களை கற்று கொடுப்பதோடு, இணையத்த்ல் உலாவும்போது அவை வெளிப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் அச்சுறுத்தல்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் இணையத்தின் தரவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பல கருவிகள் ஆன்லைனில் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவேதான் கூகுள் நிறுவனம் பாதுகாப்பாகவும், தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கவும் கூகுள் அக்கவுண்ட் மூலம் பல டூல்ஸ்களை கொடுத்து வருகிறது. பிரைவைட் செக்கப், மை ஆக்டிவிட்டி ஆகியவை பயனர்கள் தங்களுடைய தேவையை, டேட்டா அளவை சரிசெய்து கொள்ள இந்த கூகுள் அக்கவுண்ட் உதவுகிறது.
அதேபோல் கூகிள் குடும்ப பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு என இரட்டிப்பு பாதுகாப்பை வழங்குகிறது.. ஃபேமிலி லிங்க் செயலியானது பெற்றோர்களால் டிஜிட்டல் செட் செய்யப்பட்டு அவர்களே மேனேஜ் செய்வதால் குடும்பத்தில் உள்ளவர்களின் கூகுள் அக்கவுண்ட், அவர்களுடைய சாதனம் மற்றும் செயலிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கின்றது

ஆணவம்
ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம்.
வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.
அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் மெத்தப்படித்த மேதாவி. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும், மேதமை கொள்வான்.
மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை என் ஆணவம். அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக்கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தயுடன் இருந்தான்.
அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆனவத்துடன் பேசினான்.
அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார்.
அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மவுனம் காத்தார்.
இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், ‘கொஞ்சம் உணவு கிடைக்காதா?’ என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.
இதையடுத்து அந்த விவசாயியிடம், ‘ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும்’ என்றான்.
விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, ‘படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான்’ என்றார். தொடர்ந்து அவர், ‘இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம்’ என்றார்.
விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான், தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.
அரசு பள்ளிக்கு என தனி செயலி வடிவமைத்து அசத்தும் ஆசிரியர்கள்!
இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது .
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம்
மிளகனூர் கிராமத்தில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்விப்பணி
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை விடும் நோட்டிற்கு குட்பை சொல்லிவிட்டு, ஆப் மூலமாக பல அறிய தகவல்களை இப்பள்ளி வழங்கிவருகிறது.
* நமது பள்ளி செயலியை உருவாக்கியதில் பெருமிதம் கொள்கிறோம்
* இது முற்றிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனுக்காக
உருவாக்கப்பட்டுள்ளது.
* இந்தச் செயலி மூலமாக மாணவர்களின் வளர்ச்சியும்,பள்ளியின் வளர்ச்சி நிலையயும் எளிதில் அரசின் கவனத்தையும் நமது பள்ளியைச் சுற்றியுள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்து நமது பள்ளியை ஒரு முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்குவதே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதன் நோக்கமாகும்.
வாருங்கள், இந்தச் செயலியில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி உங்களுக்கு
விளக்குகிறேன்.
* முகப்பு பக்கத்தில் தலைமையாசிரியர் பெயரும் பள்ளியின் பெயரும்
தொலைபேசி எண்ணுடன் இடம் பெற்றிருக்கும்.
தொலைக்காட்சியில் ஓடும் Scrolling போல அறிவிப்பு செய்திகள் என்ற பகுதி உள்ளது.
* அடுத்து இரண்டாவது முகப்பு பக்கத்தில் ஆறு விதமான தலைப்புகளில் கட்டங்கள் அடங்கிய பகுதி காணப்படும். அந்தப் பகுதி குறித்து கீழ் காண்போம்.
* இந்த ஆறு கட்டங்களுக்கு மேல் பகுதியில் பள்ளியின் நிகழ்ச்சி நிரல்கள் தொடர் செய்தியாக நகர்ந்து செல்லும். அதில் ஏதாவது ஒன்றை தட்டினால் அது குறித்த முழு செய்தி குறித்த விபரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
1. ஆளுமை பகுதி (Admin)
ஆளுமைப் பகுதி என்பது நமது பள்ளி செயலி முழுவதும் தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் பதிவேற்றம் செய்யப்படும் நிகழ்ச்சி குறித்த செய்திகள், புகைப்படங்கள், பள்ளியில் பயிலும் மாணவர்கள் குறித்த அனைத்து விபரங்களும் தலைமையாசிரியர் அனுமதியின்றி யாரும் செயல்படா வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் தலைமையாசிரியர் கவனத்தின் மூலமாக.
2. பெற்றோர் பகுதி (Parents)
* இதில் மாணவர்களின் பெற்றோர் குறித்த விபரங்கள் அடங்கியிருக்கும்.
* மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் மற்றும் அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் பள்ளி தலைமையாசிரியர் மூலம் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும்.
* பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகள் குறித்த அறிவிப்புகள் தேதிகள் இதன் வாயிலாக அனுப்பப்படும்.
3. மாணவர்கள் பகுதி (Student)
* மாணவர்கள் பகுதியில் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட விபரங்கள் அடங்கியிருக்கும்.
* ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு உள்நுழை குறியீடும் மற்றும் இரகசிய சொல்லும் தரப்படும். இவற்றைப் பயன்படுத்தி மாணவர்கள் உள்நுழைந்து தங்கள் விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
* ஒவ்வொரு மாணவரும் பள்ளிக்கு வருகைபுரிந்த நாட்களானது இந்தப் பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
i. மாணவர்களின் குறைகள் பகுதி
* இதன் வாயிலாக மாணவர்கள் தங்கள் குறைகளை தலைமையாசிரியருக்குத் தெரியப்படுத்த முடியும்.
* ஒவ்வொரு மாணவரும் தங்கள் பள்ளியின் நிலை குறித்தும் தனது வகுப்பு ஆசிரியர் குறித்த நிறைகள் மற்றும் குறைகளை நேரடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திக் கொள்ளலாம்.
* மாணவர்களின் பெற்றோருக்கும் தங்கள் பள்ளி குறித்தும், பள்ளி ஆசிரியர்கள் குறித்தும் தங்கள் நிறை, குறைகளை தெரிவிக்க உதவியாக இருக்கும்.
* மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு வரமுடியாத பட்சத்தில் ஆப் மூலமாகவே விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டுதல் பகுதியும் (Leave Request) உள்ளது.
* மாணவர்கள் மற்றும் பெற்றோர் அளித்த புகார்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர் உண்மை நிலையை அறிந்து எளிதில் அதற்கான தீர்வு எடுக்க இந்தப்பகுதி பயனுள்ளதாக அமையும்.
4. நமது பள்ளி (namathu palli) :
நமது பள்ளி என்ற பகுதியில் நமது பள்ளியினுடைய சிறப்புகள் மற்றும் நமது பள்ளி அமைந்திருக்கும் இடம், சுற்றுச்சூழல் பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
5. Gallery :
இப்பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளோம். இதில் Photo gallery, Video gallery என இரண்டு பகுதிகள் உள்ளன. Photo gallery இல் நமது பள்ளியின் புகைப்படம் மற்றும் நம் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம், பரிசுகள் வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. Video Gallery இல் நமது பள்ளியின் video காட்சிகள் மற்றும் நம் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட video காட்சிகள், மாணவ மாணவிகள் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட video காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
6. நிகழ்வுகள் பகுதி (Events)
* நிகழ்வுகள் பகுதியில் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் குறித்த செய்தி இடம் பெற்றிருக்கும்.
* இதன் மூலம் மாணவர்களின் திறன் வெளிப்படுத்தப்படும்.
* மாணவர்கள் செய்த சமூகப்பணி (தங்கள் இருக்கும் பகுதி மற்றும் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றவை) இடம் பெறும்.
7. தேர்வு முடிவுகள் பகுதி (Result)
* தேர்வு முடிவுகள் பகுதியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறித்த செய்திகள் பதிவேற்றம் செய்யப்படும்.
* ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பருவத்தேர்வு முதல் சிறப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள் அவர்களுக்கு இதன் வாயிலாக தெரியப்படுத்தப்படும்.
* உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை வீட்டிலிருந்தே அறிந்து கெள்ள முடியும்.
* தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் பொழுது கூடவே ஒவ்வொரு மாணவரும்
தங்கள் பாடவாரியாகப் பெற்ற மதிப்பெணகளை இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
8. அறிவிப்பு பகுதி (Announcement)
* இதில் பள்ளிகளில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் குறிப்பிட்ட தேதி வாரியாக வெளியிடப்படும்.
* அனைத்து அறிவிப்புகளைவிடவும் மாணவர்களின் உயிர்நாடியாகக் கருதப்படும் அரசு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் இதில் முக்கியமாக இடம் பெற்றிருக்கும்.
* பள்ளியில் பருவத்தேர்வுகள் முதல் அரசுப் பொதுத்தேர்வு குறித்த தேதி அட்டவணைப் பட்டியல் குறித்த அறிவிப்புகள் அடங்கியிருக்கும்.
9. தேர்வுக்கு தேவையான குறிப்புகள் (Study materials)
* இந்தப்பகுதியில் மாணவர்களுக்குத் தேவையான தேர்வு காலங்களில் பயன்படும் வகையில் பாடப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாக்களின் தொகுப்பு PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்
* மாணவர்கள் தங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்
10. எங்களை தொடர்புகொள்ள (Contact)
* இந்தப் பகுதியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
* இந்தச் செயலி குறித்த கருத்துக்களை பொது மக்கள் அனைவரும் இதில் பதிவு செய்யலாம். இந்தச் செயலியில் உள்ள நிறை மற்றும் குறைகளை இதில் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு
அரசு உயர்நிலைப்பள்ளி
மிளகனூர், சிவகங்கை மாவட்டம்
தலைமையாசிரியர்
முனைவர் V.M.விநாயகமூர்த்தி
செல் : 9976935585

அறிவியல்-அறிவோம்: இளநீரை வெறும்வயிற்றில் அருந்தலாமா?
நாம் அனைவரும் அதிகம் விரும்பக்கூடிய இயற்கை பானங்களில் ஒன்று இளநீர். கிராமப்புறங்களில் சர்வசாதரணமாக கிடைக்கும் இளநீர், தற்போது நகர்புறங்களில் கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது.
தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக்கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.
சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்.
தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்னையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். கர்பிணி பெண்கள், இளநீரை குடித்தால், நீர்ச்சத்து குறைபாடு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
ஜிம்முக்கு செல்பவர்கள், அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீரை குடிக்கலாம். இதனால், உடற்பயிற்சி செய்வதன் பலனை அதிகரிக்கச் செய்கிறது. அதாவது நீங்கள் எந்த காரணத்திற்காக என்ன உடற்பயிற்சி செய்கிறேர்களோ, அந்த பலன், வித்தியாசம், வெகு விரைவில் தெரியும்.
மதிய உணவுக்கு முன்/பின்
மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடற்சூடு தணிக்கப்படுகிற. மேலும், செரிமான சிக்கலை உடனடியாக சரிசெய்யும் பவர் இளநீருக்கு உண்டு.
இரவு படுக்கைக்கு முன்:
இனிமையான இரவு உறக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. நமது இதயத்துடிப்பு அதிகம் இல்லாமல், நார்மலாக சாந்தமாக இருக்கச் செய்கிறது. இதனால், அன்றாட நமக்கு இருக்கும் எரிச்சல், மனச்சோர்வு, மன அழுத்தம் குறையும்.
"பூலோகக் கற்பக விருட்சம்' என்று இளநீர் சித்தமருத்துவத்தில் அழைக்கப்படுகிறது. இதில் A,B,C,K போன்ற வைட்டமின்களும்,
சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும்.
உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள லாரிக் ஆசிட்( lauric acid) முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்துவந்தால் மேற்கண்ட அத்தனை நன்மைகளையும் நாம் பெறலாம். இளநீர் மட்டுமல்ல, தேங்காய்ப்பாலும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது"

பள்ளிகளில் உள்ள கழிப்பறை கண்காணிக்க 'மொபைல் அப்ளிகேஷன்' :
பள்ளி ,அங்கன்வாடி , மருத்துவமனை, வீடு போன்றவைகளில், கழிப்பறைகள் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.முழு சுகாதாரம் அடைய, துாய்மை பாரத இயக்கத்தை, மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் சார்பாக, துாய்மை பாரத இயக்கத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 19ல் கொண்டாடப்படும் 'உலக கழிப்பறை தினம்' காஞ்சிபுரம் அடுத்த வேளியூரில் கொண்டாடப்பட்டது.மாவட்ட ஆட்சியர் பொன்னையா பங்கேற்று, பல்வேறு சுகாதார பணிகளை துவக்கி வைத்தார். அதில் குறிப்பிடும் வகையில், சுகாதார இயக்கத்திற்காக, 'துாய்மை காஞ்சி' என்ற மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அப்ளிகேஷன் மூலம், கிராமப்புறங்களில் உள்ள சுகாதார ஊக்குவிப்பவர்கள், மாதம் இருமுறை நேரடியாக ஆய்வு செய்து, அதன் விபரங்களை இந்த அப்ளிகேஷனில் பதிவிடுவர்.ஒவ்வொரு வீடுகளிலும், தொடர்ந்து கழிப்பறை பயன்படுத்தப்படுகிறதா என, ஆய்வு செய்யப்பட்டு, பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வீடுகள் மட்டுமல்லாமல், அங்கன்வாடி மற்றும் பள்ளிகளும் இந்த அப்ளிகேஷனில் பதிவிடப்படும். சிறப்பான முறையில் கழிப்பறையை பயன்படுத்தும் அமைப்புகளுக்கு, ஜனவரி 26ல், குடியரசு தினத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை 'TNTET Exam-ல் ' தகுதி பெற்றவர்களை நியமிக்க கோரிக்கை :
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில், 'டெட்' தகுதி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கடந்தாண்டு ஏப்ரல் , இறுதியில் நடந்தது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாகியும், பணிவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை. இதனால் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.புது உற்சாகம்!டெட் தேர்வுக்குப் பின், பிரத்யேக போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி கிடைக்கும் என, சமீபத்தில் அமைச்சர் தெரிவித்தார். இது, டெட் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வேறு வழியின்றி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடம் திரட்ட, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். சோர்ந்திருந்த டெட் தேர்வர்கள் மத்தியில், இந்த அறிவிப்பு புது உற்சாகத்தை அளித்துள்ளது.நியமனம் நடத்த வேண்டும்டெட் தேர்வர்கள் சிலர் கூறுகையில்,'தமிழகத்தில் 2013க்குப் பின், கடந்தாண்டு தான் டெட் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணிவாய்ப்பு குறித்து அரசு மவுனம் சாதிக்கிறது. 'காலிப்பணியிட விபரத்தையும் வெளியிட மறுக்கின்றனர். முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கும், தேர்வு அறிவிப்பு இல்லை. அப்புறம் ஏன் தகுதித்தேர்வு நடத்த வேண்டும்? தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில், தகுதியுள்ளோரை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 2 வாரத்தில் புதிய நோட்டு, புத்தகம் :
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில், டிசம்பர் முதல் வாரத்திற்குள், மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.வங்க கடலில் உருவான கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்க, தமிழக அரசின் பல்வேறு துறைகள் முயற்சி மேற்கொண்டு உள்ளன.பள்ளி கல்வித் துறை சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள், அலுவலகங்களை சீர்படுத்தும் பணி துவங்கியுள்ளது.நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவினர், புயல் பாதிப்புகளை கணக்கெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளனர்.
இந்நிலையில், புயலால் வீடுகள் சேதமடைந்ததால், ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை இழந்துள்ளனர். இதில், பள்ளி மாணவ - மாணவியரும், புத்தக பை, நோட்டு, புத்தகம் ஆகியவற்றை இழந்துள்ளனர். எனவே, புத்தகம், நோட்டுகளை இழந்தவர்களுக்கு, அரசின் சார்பில், மீண்டும் இலவச நோட்டு, புத்தகம் வழங்க, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.இந்த பணிகளை, டிசம்பர் முதல் வாரத்திற்குள், அதாவது இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், பள்ளிகளை ஒரு வாரத்திற்குள் திறப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புயல் நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு :
கஜா புயலுக்கு நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினரின் ஒருநாள் ஊதியம் வழங்கப்படும் என அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் கடலூரில் புதன்கிழமை கூறினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், இணைப்புச் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: கஜா புயல் நிவாரண நிதிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம், அதன் 15 இணைப்புச் சங்கங்கள், சகோதர சங்கங்களைச் சேர்ந்த 3 லட்சம் பேர் தங்களது ஒருநாள் சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்க உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் முன் பணமாக வழங்க வேண்டும்.
தமிழத்தில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள சுமார் 2.50 லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் வருகிற டிசம்பர் 2- ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 6 -ஆவது மாநில மாநாடு கடலூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பு ஒன்றானதை வரவேற்கிறோம் என்றார் அவர்

சிறப்பாசிரியர் தேர்வு: தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படுமா?
சிறப்பாசிரியர் தேர்வில் விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அத்தகைய காலஅவகாசம் தராமல் ஆசிரியர் தேர்வு வாரியம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளுக்கான தற்காலிக இறுதி தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிட்டது. அதில், பொதுப்பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் ஒதுக்கீடு (Reserved) என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி சென்னையில் நடந்த குழந்தைகள் தினவிழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வேறு மாநிலங்களில் படித்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அல்லது சார்-ஆட்சியரிடம் உரிய சான்றிதழைப் பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமர்ப்பிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்கள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு நிரப்பப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு தையல், ஓவிய பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் பயின்ற தேர்வர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது முற்றிலும் பாரபட்சமான நடவடிக்கை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது:-
டிடிசி-க்கு முந்தைய தேர்வான உயர்நிலை (ஹையர் கிரேடு) தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்க இயலாது என்று அந்தத் தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டு எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக சான்று அளிக்கப்பட்டுள்ளது.
விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் மட்டும் ஒதுக்கீடு என்ற பெயரில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதன்கீழ் தேர்வானோர் சான்றிதழை சமர்ப்பிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் அளித்துள்ளனர். இதே நடைமுறை ஓவியம், தையல் பாடத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் ஏன் பின்பற்றப்படவில்லை? உரிய கட் -ஆப் மதிப்பெண் எடுத்தவர்களை இதுபோன்று ஒதுக்கீட்டுப் பட்டியலில் வைத்துவிட்டு அவர்களிடம் உரிய சான்றிதழை தற்போது கேட்டுப் பெற்றிருக்கலாமே, இதை ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யவில்லை? சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிய இன்னும் 2 வாரங்கள் இருக்கின்றன.
எங்களுக்கும் இதுபோன்று கால அவகாசம் அளித்திருந்தால், தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்க இயலாது என்று சொல்லி அரசு தேர்வுத்துறை அளித்த சான்றிதழையோ அல்லது ஏதேனும் தனியார் பயிற்சி மையத்துக்குச் சென்று படித்தவர்கள் அங்கிருந்து பெறப்பட்ட சான்றிதழையோ அல்லது சுயமாக படித்தவர்கள் அதற்கு சுயஉறுதிமொழி சான்றிதழையோ சமர்ப்பித்திருப்போம்.
எனவே, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவைகளுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் போல் எங்களுக்கும் உரிய சான்றிதழை சமர்ப்பிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்

CTET நுழைவுச் சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் :
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) விண்ணப்பித்தவர்கள் வியாழக்கிழமை (நவ.22) முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.டி.இ.டி. வெளியிட்ட அறிவிப்பு:
கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி. என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.
2018-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 92 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 2,296 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டு www.ctet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நுழைவுச் சீட்டு கிடைக்காதோர்
இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பத்தை சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி நகல், கட்டணம் செலுத்தியதற்கான அத்தாட்சி ஆகியவற்றுடன் சி.டி.இ.டி. மையத்தை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவேண்டும். இந்த காலக் கெடுவுக்குள் தொடர்பு கொள்ளாதவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தல்: சிறப்பு வகுப்பறைகள் அமைக்க திட்டம் :
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பறைகளை ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து, ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, சேர்க்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கில வழி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பறையில் தமிழ்வழி மாணவர்களுடன் அமர வைத்து வகுப்புகள் கையாளப்படுகின்றன.
ஆனால், பிளஸ் 2 வகுப்புகளில், இந்த முறையை பின்பற்றுவதில் சிக்கல் உள்ளது. இதனால், சில பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் ஆங்கில வழி கற்பித்தல் தொடங்கப் படவில்லை. மாணவர் சேர்க்கை இருந்தும் வகுப்பறை இல்லாததால் ஆங்கில வழி பிரிவுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக சென்னையில் அண்மையில் நடைபெற்ற கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி சேர்க்கை குறித்த விவரங்கள் மாவட்ட வாரியாக, சேகரிக்கப்பட்டு வருகின்றன

கனமழை - 8 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு!!

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
காஞ்சிபுரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
திருவள்ளூர் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
விழுப்புரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
நாகை மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு(நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை) விடுமுறை அறிவிப்பு
சென்னை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு

22/11/18
புயலில் சிக்கிய 40 பள்ளிகள் சேதம் இயக்குனருக்கு சி.இ.ஓ., அறிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் 'கஜா' புயலில் சிக்கி 40 பள்ளிகள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனருக்கு சி.இ.ஓ., அறிக்கை அளிக்க உள்ளார்.
'கஜா'வின் கோரத்தாண்டவத்துக்கு பள்ளிக்கூடங்களும் தப்பவில்லை. பல இடங்களில் பள்ளிகள் மீது மரங்கள் விழுந்து கட்டடங்கள் சேதம் அடைந்தன. இப்பள்ளிகளின் விவரம், சேத மதிப்புகளை பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கோரி இருந்தார்.திண்டுக்கல்லை பொறுத்தவரை 40 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன.
குறிப்பாக, அய்யலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நின்ற 45 மரங்கள் 'கஜா'வின் ஆட்டத்தால் சாய்ந்தன. செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் மீது 4 மரங்கள் சாய்ந்து விழுந்தன. செட்டியப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 120 மீட்டர் நீளத்துக்கு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
கொடைக்கானலில் 10க்கும் அதிகமான பள்ளிகள் மரம் விழுந்து சேதம் அடைந்தன. சேத விவரங்களை சி.இ.ஓ., சாந்தகுமாருக்குதலைமை ஆசிரியர்கள் அனுப்பினர்.அவர் கூறும்போது, 'திண்டுக்கல் மாவட்டத்தில் 40 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக கொடைக்கானலில் மரம் விழுந்ததில் 6 பள்ளி கட்டடங்களில் விரிசல் விழுந்து மழை நீர் ஒழுகுகிறது. இது குறித்து கலெக்டர், பள்ளி கல்வி இயக்குனருக்கு அறிக்கை அளித்துள்ளோம். விரைவில் அரசின் உதவியோடு சீரமைப்பு பணி துவங்கும்' என்றார்.

ஒரு லட்சம் ஏடிஎம்-கள் நாடு முழுவதும் மூடப்படும் அபாயம்... தனியார் நிறுவனம் தகவல்
2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் 1.15 லட்சம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஏ.டி.எம்-களை நி்ர்வகிக்கும் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2 லட்சம் ஏ.டி.எம் கள் உள்ளன. இவைகளை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் ஏ.டி.எம் நிர்வகிக்கும் அமைப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏ.டி.எம்-களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டு வேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது செயல்படும் ஏடிஎம்-களில் பாதிக்கும் மேற்பட்டடை மூடப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏ.டி.எம்-களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள் மற்றும் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. இதனை வங்கிகள் ஈடு செய்யாத பட்சத்தில் பெரிய அளவிலான மூடலுக்கு வழி வகுக்கும் என்று ஏ.டி.எம் நி்ர்வகிக்கும் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

வட்டார கல்வி அலுவலர்களுக்கு, புதிய முறையில் கற்பித்தல் தொடர்பான பயிற்சி கூட்டம்
ஈரோடு வட்டார கல்வி அலுவலர்களுக்கு, புதிய முறையில் கற்பித்தல் தொடர்பான பயிற்சி கூட்டம் நடந்தது.
ஈரோடு, காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கூட்டம் நடந்தது. ஈரோடு சி.இ.ஓ., பாலமுரளி தலைமை வகித்தார். ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு புதிய முறையில் கற்பித்தல், அணுகுமுறை குறித்தும், நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு எளிய படைப்பாற்றல், கற்பித்தல் முறை குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்டத்தில், 14 யூனியன்களை சேர்ந்த வட்டார கல்வி அலுவலர், வட்டார கல்வி மேற்பார்வையாளர் உட்பட, 140 பேர் பங்கேற்றனர். பாடம் கற்பித்தல் குறித்து, தொடக்க கல்வி மாணவ, மாணவியர், 15க்கும் மேற்பட்டோரையும், கூட்டத்துக்கு வரவழைத்து, மாதிரி வகுப்பு நடத்தப்பட்டது

ஏன் சிரிக்கிறாய் ?
ஒரு பண்ணையில் ஆண் கழுதையொன்றும், பெண் கழுதையொன்றும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை பகலில் கடுமையாக உழைக்கும். பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலை தங்குமிடம் வந்ததும் அங்கு கிடக்கும் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும்.
பெண் கழுதை எந்த வேலையும் பார்ப்பதில்லை. பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி எழும். மிகவும் மகிழ்ச்சியாக, வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது.
ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை வந்து சேர்ந்தது. களைப்பின் மிகுதியால் வந்தவுடனே படுத்தும் விட்டது. ஆண் கழுதையைப் பார்த்து பெண் கழுதை பரிதாபப்பட்டது.
“”உன்னைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது!” என கிண்டல் செய்தது.
“”என்ன செய்வது என் நிலை அப்படி, உழைத்தால் தான் முதலாளி விடுவார்!” என்றது ஆண் கழுதை.
இதைக் கேட்டதும் பெண் கழுதை சிரித்தது.
“”ஏன் சிரிக்கிறாய்?”
“”சிரிக்காமல் என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? நான் மட்டும் கஷ்டப்பட்டு வேலையா செய்கிறேன்!”
ஆண் கழுதை அதை ஆச்சரியத்துடன் பார்த்தது.
“”ஆமாம்… நானும் இதைப் பற்றி உன்னிடம் கேட்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். அதை முதலில் கூறு!”
“”பண்ணையாள் வந்து உன் கயிற்றினை அவிழ்த்து விட்டதும், உடனே நீ வேலை செய்யப் போய் விடுவாய். நான் அப்படிப் போய் விட மாட்டேன்!”
“”பிறகு என்ன செய்வாய்?”
“”அப்படியே படுத்திருப்பேன். நான் எழவில்லை என்றதும் சாட்டையால் நான்கு அடி அடிப்பான். பொறுத்துக் கொண்டு படுத்துக் கொள்வேன். பிறகு என்னை விட்டு விட்டுச் சென்று விடுவான்!” என்றது பெண் கழுதை.
“”இவ்வளவுதானா!” ஆச்சரியமாகக் கேட்டது ஆண் கழுதை.
“”ஆமாம்… நீயும் அதுபோல சண்டித்தனம் செய்து விடு. உன்னையும் பண்ணையாள் விட்டுவிட்டுப் போய் விடுவான். எல்லாம் நம் கையில்தான் உள்ளது!” என அறிவுரை வழங்கியது.
காலைப் பொழுது வேலைக்குச் செல்லும் நேரம் பண்ணையாள் வந்தான். வழக்கம் போல் ஆண் கழுதையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றான். இன்று ஆண் கழுதை படுத்துக் கொண்டு சண்டித்தனம் செய்தது.
பண்ணையாள் சாட்டை எடுத்து அடித்தும் பார்த்தான். ஆண் கழுதை எழுவதாய்த் தெரியவில்லை. பண்ணையாள் பல விதங்களிலும் முயற்சி செய்து பார்த்து விட்டு, முதலாளியிடம் சென்றான்.
“”அய்யா! இந்த ஆண் கழுதை என்றுமில்லாமல் சண்டித்தனம் செய்கிறது!” என்றான்.
“”சரி பரவாயில்லை. இன்னைக்கு ஆண் கழுதைக்கு ஓய்வு கொடுத்துவிடு. தினமும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்து சும்மா இருக்கும், அந்தப் பெண் கழுதையை அடித்து இழுத்துப் போ!” என்றார்.
பண்ணையாளும் வந்து ஆண் கழுதை சாப்பிட பசும் புல்லைக் கொண்டு வந்து போட்டான்.
பிறகு, பெண் கழுதையை இழுத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினான். கெட்டதை சொல்லிக் கொடுக்கப் போய் தன்னுடைய பிழைப்பே போய் விட்டதை எண்ணி மிகவும் வருந்தியது பெண் கழுதை.
பள்ளியில் போலி சிறப்பாசிரியர்களுக்கு 'செக்' :
பள்ளிகளில் போலி சிறப்பாசிரியர்கள் யாரேனும் பணியில் சேர்ந்தார்களா என்பதை கண்டுபிடிக்க சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது.தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஓவியம், விளையாட்டு, இசை, தையல், கணினி போன்ற பயிற்சிகள் அளிக்க சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் சிறப்பாசிரியர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து அறிக்கை அளிக்க அனைத்து சி.இ.ஓ.,க்களுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்தது.திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 463 சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். முதற்கட்டமாக பழனி, வேடசந்துார் கல்வி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்கும் பணி, திண்டுக்கல் மாநகராட்சி நேருஜி பள்ளியில் நேற்று நடந்தது. சி.இ.ஓ., சாந்தகுமார் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய 9 குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். நவ.,22ல் திண்டுக்கல், வத்தலக்குண்டு கல்வி மாவட்டங்களுக்கு நடக்க இருக்கிறது.சி.இ.ஓ., கூறும்போது, 'சிறப்பாசிரியர்களின் 10, 12 வகுப்பு மற்றும் அவர்கள் சார்ந்த துறை படிப்புகளுக்கான சான்றிதழ்களை சரி பார்க்கிறோம். அரசு கேட்டு இருக்கும் சான்றிதழ்கள் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆய்வு செய்கிறோம். நாங்கள் அறிக்கை அளித்த பிறகு அரசு தான் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்' என்றார்
தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி துவக்கம் :
விழுப்புரம் மாவட்டத்தில் 1,072 தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது.தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இவர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை கண்டவறிதற்கான சரிபார்ப்பு பணிகள் தமிழகத்தில் நடந்து வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சி.இ.ஓ., முனுசாமி தலைமையில் 9 குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.இப்பணி 22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 1,072 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றது. இப்பணியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கண்காணிப்பாளர், அலுவலக எழுத்தர் ஈடுபடுகின்றனர்.
ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும என C.E.O உத்தரவு !!
ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்,'' என முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறினார்.காரைக்குடி அழகப்பா பல்கலை வளாகத்தில் மாவட்ட அளவிலான அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்., பள்ளி முதல்வருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:6,7,8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வைக்கு செல்ல வேண்டும். காலை 9:15 முதல் மாலை 4:15 மணி வரை வகுப்பு நடத்தப்பட வேண்டும்.பள்ளி நேரத்தில் அலுவல் நிமித்தமாக ஆசிரியர்கள் வெளியே செல்ல நேர்ந்தால், ஆசிரியர் இயக்க பதிவேட்டில் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும், இவற்றை தலைமை ஆசிரியர்கள் முறையாக கடை பிடிக்க வேண்டும். அலுவலக பணியாளர் இல்லாத பள்ளிகளில் மாற்று பணியில் அலுவலக பணியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.நிகழ்ச்சியில் தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, திருப்பத்துார் கல்வி அலுவலர் பரமதயாளன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் முனியாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
எல்லா வங்கிகளிலும் ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் திறக்கலாமா?
வங்கி கணக்கில் குறைந்தபட்ச
இருப்பு தொகையினை நிர்வகிக்கவே தனியாக சம்பாதிக்க வேண்டும் போல... இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் சரியான தீர்வு. எனவே, ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் குறிந்து தெரிந்துக்கொள்ளுங்கள்... ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை அனைத்து இந்தியாவின் முக்கிய அரசு மற்றும் தனியார் வங்கிகளில் திறக்கலாம். அதேபோல் ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை யார் வேண்டுமானால் திறக்கலாம்.ரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை திறக்க பணம் ஏதும் தேவையில்லை. குறைந்தபட்ச இருப்பு தொகையினை நிர்வகிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனிநபர் கணக்கு, ஜாயிண்ட் கணக்கு போன்ற சேமிப்பு கணக்கு சேவைகள் அனைத்தும் ஜிரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கில் கிடைக்கும். அனைத்து வகை சேமிப்பு கணக்குகளுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் கிடைக்கும்.
ரூபே டெபிட் கார்டு வேண்டும் என்றாலும் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளுக்கு ரூ.10 முதல் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஜிரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கிற்கும் இணையதள வங்கி சேவை அனுமதிகள் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிரோ பேலன்ஸ் வங்கி கணக்கை மூட சில வங்கிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பு: ஜிரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை வைத்துள்ளவர்களால் அதே வங்கி நிறுவனத்தில் வேறு சேமிப்பு கணக்கை திறக்க முடியாது. பிற சேமிப்பு கணக்குகள் திறந்தால் 30 நாட்களுக்குள் ஜிரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கை மூட வேண்டும்

பள்ளி-கல்லூரிகளில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள செல்போன் கோபுரங்களை அகற்ற வேண்டும் :
பெங்களூருவில் செல்போன்கோபுரங்கள் அமைப்பது குறித்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, கர்நாடக மாநிலத்தில் புதிதாக செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி களுக்கு 50 மீட்டர் தொலைவில் தான் செல்போன் கோபுரங்கள் அமைக்க வேண்டும்.
பெங்களூருவில் புதிதாக செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலுத்தி அதற்கான உரிமத்தை பெற வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு ரூ.15 ஆயிரம் செலுத்தி அதற்கான உரிமத்தை பெற்று கொள்ளலாம். முன்பு செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்க 45 நாட்கள் வரை ஆகும். ஆனால் தற்போது 15 நாட்களில் அதற்கான அனுமதியை பெற்று செல்போன் கோபுரங்கள் அமைத்து கொள்ளலாம்.
பள்ளி, கல்லூரி, ஆஸ்பத்திரிகளில் இருந்து 50 மீட்டருக்குள் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் கோபுரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசு அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் கோபுரங்களுக்கு 3 மாதங்களுக்குள் உரிய அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, துைண முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை!
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மற்றும் பெருமழை ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில், தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர வாய்ப்புள்ளதால், இப்பகுதிகளில் மழை பொழிய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநரான பாலச்சந்திரன், இன்று (நவம்பர் 20) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். “தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் பெருமழை பொழியவும் வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.
காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், காரைக்கால், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பொழிந்தது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 8 செ.மீ. மழை பதிவானது. “சென்னையில் மேகமூட்டம் காணப்படுவதோடு அவ்வப்போது மழை பொழியவும் வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார். தமிழகக் கடற்கரையின் தென்மேற்கு பகுதிகளிலும், மன்னார் வளைகுடாவிலும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)