யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/11/18

பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு

                                              



NPS issue: Old Pension Scheme will be restored by AAP Govt. in National Capital


Delhi CM Arvind Kejriwal announces old pension scheme will be restored by AAP government in national capital


arvind-kejriwal

Delhi: Delhi Chief Minister Arvind Kejriwal announced Monday that the old pension scheme will be restored by his government and he will write to his counterparts in other states to follow the suit. He said a resolution to restore the old pension scheme in the city will be passed in a special session of the Legislative Assembly.

"It will then be sent to the Centre for approval. I will fight with the Centre to get it implemented," Kejriwal said while addressing a rally organised by the All Teachers, Employees Welfare Association (ATEWA) at Ramlila Ground here. He said that he will also speak to his counterparts in West Bengal, Kerala, Andhra Pradesh and Karnataka for implementation of the scheme.

"The government employees have the power to change the government of the country. I want to warn the Centre, if the demand of employees is not accepted in three months, there will be an apocalypse in 2019," the Aam Aadmi Party (AAP) convener said. Slogans like "desh ka neta kaisa ho, Kejriwal jaisa ho" greeted the Delhi chief minister as he made the announcement at the rally. Kejriwal slammed the new pension scheme as "betrayal and cheating" with government employees.

"I want to request Modiji that you cannot accomplish nation-building by disappointing the government employees," he said, adding that the AAP government could perform in the areas of education, health, power and water supply only because of the cooperation of its employees. The new pension scheme was introduced by the Centre in 2004. Under it, employees contribute towards pension from their monthly salary along with an equal contribution from their employer. The funds are then invested in earmarked investment schemes through pension fund managers.

1 மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரை - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை 


1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.

3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.

1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.

DECEMBER MONTH DIARY - 2018



Flash News: "நீட் தேர்வு எழுதும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும்"

நீட் தேர்வுக்கு கட்டணம் செலுத்த முடியாத அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவு.....

* ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 5 மாணவர்களை கட்டாயம் நீட் தேர்வில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு

* அனைத்து மாணவர்களையும் நீட் தேர்வில் கலந்து கொள்ள வைக்கும் முயற்சி என கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்

* நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் எளிமைப்படுத்தி, விரிவுபடுத்த கல்வித்துறை திட்டம்.
                            
                                                                 
                                      
                                   

கஜா புயலால் நிவாரணம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க ஜாக்டோ- ஜியோ முடிவு :


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் அறிவித்துள்ளார்.திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளா் மற்றும் ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், ஊராட்சி செயலாளர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21-மாத நிலுவைத் தொகையை உடனே வழங்குதல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளன.

இக்கூட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கூட்டம் நடத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 26-ஆம் தேதி முதல், 30-ஆம் தேதி வரையில் வேலை நிறுத்த பிரசாரம் மேற்கொள்ளவும், 30-ஆம் தேதி தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். அதற்குள் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் 4-ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கவும் இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

நீதிக்கதை



நீ எந்தக் காகம்?

பலராம் பிழைப்பதற்கு வழியின்றித் தவித்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை....ஒரு நாள் அறிவுமதி என்ற அறிஞரைச் சந்தித்தான். அவரிடம் தன் கஷ்டங்கைச் சொன்னான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் அறிவுமதி. அவர் பலராமிடம், ""இந்த பூமி பரந்து விரிந்து கிடக்கிறது....இந்த ஊரில் உனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வெளியூர் சென்று வேலை தேடு...உன் முயற்சிக்கு ஏற்ப இறைவன் கூலி தருவான்...''

பலராமும் சம்மதித்துப் புறப்பட்ட மூன்றாம் நாள் ஊருக்குத் திரும்பினான்.

ஊருக்குத் திரும்பியவன், அறிவுமதியைச் சந்தித்தான்.

அவரிடம், ""தங்கள் அறிவுரைப்படி நான் கிளம்பிவிட்டேன்.....வழியில் பாலைவனம்!....ஒரே ஒரு மரம் மட்டும் தென்பட்டது....கடுமையான வெயிலில் நடந்து களைத்துப் போய் அந்த மர நிழலில் அமர்ந்தேன்....அந்த மரத்தில் சிறகொடிந்த ஒரு நொண்டிக்காகம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது...அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இன்னொரு காகம், தான் கொண்டு வந்த உணவை இந்த நொண்டிக் காக்கைக்கு ஊட்டி விட்டுச் சென்றது! எங்கோ பாலைவனத்தில் பசியால் கிடந்து துடிக்கும் ஒரு நொண்டிக்காக்கைக்கு மற்றொரு காகத்தின் மூலம் உணவை அளிக்கும் இறைவன், என்னை மட்டும் கை விட்டு விடுவானா....என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது!....திரும்பி வந்து விட்டேன்!...'' என்றான்.

அறிவுமதி சிரித்துக் கொண்டே, ""அது சரி!....நீ அதில் எந்தக் காகம்?'' என்று கேட்டார்.

""ஐயா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

""யாராவது உணவு தருவார்களா,....என்று பரிதவிக்கும் நொண்டிக் காகமா?....அல்லது .....பாடுபட்டு உணவு தேடி தானும் உண்டு பிறருக்கும் வழங்கும் வலிமை உள்ள காகமா?...நீ எந்தக் காகமாக இருக்கு விரும்புகிறாய்?''
இப்போது நம்பிக்கையோடு உற்சாகமும் பலராமுக்கு ஏற்பட்டு விட்டது.

தற்போது அவன் வறுமை நீங்கி சந்தோஷமாக இருக்கிறான்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.80 கோடி நிவாரணம் - ஜாக்டோ ஜியோ முடிவு:


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் 80 கோடி ரூபாய் வழங்க முடிவு
 செய்யப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியகள் ஒருநாள் ஊதியம் 80 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ஊழியர்கள் ஊதியத்தை வழங்க உள்ளதாக அவர் கூறினார்

2019ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை: அகரம் Foundation "விதை திட்டம்" இவ்வாண்டு +2 முடிக்கும் மாணவர்களை பரிந்துரை செய்யும் ஆசிரியர்கள் கவனத்திற்கு!!


                            

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு : தமிழக அரசு உத்தரவு :

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நிலையில் 3 மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால், அந்த ஊதிய உயர்வு கிடைக்காமலே ஓய்வுபெறும் நிலை இருந்து வந்தது.

இதுதொடர்பாக அரசு அலுவலர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஓய்வுபெறும் மாதத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால் முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் சுவர்ணா வெளியிட்ட அரசாணையில் (எண்.148) கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தாலோ, மரணம் அடைந்து விட்டாலோ அந்த அரசு ஊழியர்களுக்கு அந்த மூன்று மாத தொடக்கத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன் கூறுகையில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தால், கடைசி மூன்று மாதத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் ஊதிய உயர்வுக்கு ஓராண்டு ஆகியிருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, ஓய்வுபெறும் ஊழியர்கள் 10வது மாதத்திலேயே ஊதிய உயர்வு பெறும் நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்’ என்றார்.

கனவு ஆசிரியர்கள்




ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள 5 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்.! மிஸ் பண்ணிடாதீங்க.!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது 5 சிறப்பு புது ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்குப் பல சலுகைகளையும் பல புதிய திட்டங்களையும் அறிவித்துக்கொண்டே இருக்கிறது. ஏர்டெல் இன் புதிய ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.34, ரூ.64, ரூ.94, ரூ.144 மற்றும் ரூ.244 என்ற ஐந்து புதிய திட்டங்களை அதிகப்படியான 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.34:
தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரூ.34 திட்டத்தில் 100 எம்.பி 4ஜி டேட்டா பயன்பாடு, ரூ.25.66க்கு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு வினாடிக்கு 2.5 பைசா என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.64:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.64 திட்டத்தில் 200 எம்.பி 4ஜி டேட்டா பயன்பாடு சேவை, ரூ.54க்கு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு வினாடிக்கு 1 பைசா என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது ஏர்டெல் பயனர்களுக்கு கிடைக்கிறது.

ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.94:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.94 திட்டத்தில் 500 எம்.பி 4ஜி டேட்டா பயன்பாடு சேவை, ரூ.94க்கு முழு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது கிடைக்கிறது.



ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.144:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.144 திட்டத்தில் 1 ஜிபி 4ஜி டேட்டா சேவை, ரூ.144க்கு முழு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா என்று 42 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.244:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.244 திட்டத்தில் 2 ஜிபி 4ஜி டேட்டா சேவை, ரூ.244க்கு முழு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா என்று 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அறிவியல்-அறிவோம்: விரல் ரேகை மாறுமா-தடயஅறிவியல் அறிவோம் :

தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர்.
ஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்டது.

குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களைச் சேகரித்து தடயவியல் வல்லுனர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர்.
விரல்ரேகை மாறுமா?
தாயின் கர்ப்பப்பையில் கருவாக இருக்கும்போதே நம் விரல்களின் ரேகை உருவாகிவிடும். கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கு 17-வது வாரத்தில் கைரேகைகள் தோன்றும். இந்த ரேகை அமைப்பு தோலின் புறத் தோல் (Epidermis), அடித் தோல் (Dermis) ஆகிய தோலின் இரு அடுக்குகளிலும் பதிந்திருக்கிறது. இதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாகக்கூட மாற்ற முடியாது. அதேபோல, ஒருவருடைய விரல் ரேகை அமைப்பு, மற்றொருவருடைய விரல் ரேகை அமைப்புடன் ஒத்திருக்காது. ஒரே கருவில் உருவான இரட்டைக் குழந்தைகளுக்குக்கூட ரேகைகள் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு கைரேகையும் தனித்தன்மை கொண்டது. ஒருவரின் வாழ்நாள் முழுக்க அவருடைய ரேகையில் பெரிதாக மாற்றம் இருக்காது. வயது, கைகளைப் பயன்படுவதற்கேற்ப கைரேகையில் தேய்மானம் ஏற்படலாம்; ஆனால், மாற்றம் ஏற்படாது.
கைரேகைப் பதிவு மூலம் குற்றவாளிகளைக் கைது செய்யும் நுட்பத்தை உருவாக்கியவர் எட்வர்டு ஹென்றி. இவர் 1890-ஆம் ஆண்டு வாக்கில் வங்காளத்தில் காவல்துறைத் தலைவராக இருந்தவர்.

1901- ம் ஆண்டில் ஸ்காட்லாந்து யார்டில் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியாக ஹென்றி நியமிக்கப்பட்டார். அங்கு அவர் முதல் முறையாக கைரேகைப் பிரிவைத் தொடங்கினார். பின்னாளில் காவல்துறை ஆணையரான அவர் 1918-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

கைரேகைகளை வகைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய மற்றொரு காவல்துறை அதிகாரி அர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூவன் வுசெட்டிக்.

ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு மிகவும் நம்பத்தகுந்த ஆதாரமாக கைரேகை விளங்குகிறது.

ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை தடயவியல் நிபுணர்கள் முதலில் கைரே கையைத்தான் தேடுவார்கள். பதிவான கைரேகை `பளிச்'சென்று தெரிவதில்லை. எனவே கைரேகை நிபுணர்கள், கைரேகை பதிந்திருக்கக்கூடும் என்று நினைக்கும் இடத்தில் அதற் கென உள்ள பொடியைத் தூவிப் பார்ப்பார்கள்.

கையில் இயல்பாகவே உள்ள எண்ணைப் பசையால் கைரேகைப் பதிவுகள் ஏற்படுகின்றன. பொடி தூவப் படும்போது அது எண்ணைப் பசை பகுதியில் படிவதால் கைரேகைப் பதிவு நன்றாகத் தெரிகிறது.

அந்த கைரேகைப் பதிவுகள் புகைப்படம் எடுக்கப்பட்டு, ஏற்கனவே காவல்துறையினர் வசம் இருக்கும் குற்ற வாளிகளின் கைரேகைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமானவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.


கைரேகைகளை விட்டுவிடக்கூடாது என்பதற்காக குற்றவாளிகள் கையுறைகளை அணிவது உண்டு. ஆனால் கையுறைகளின் பதிவுகளின் மூலமும் அவை வாங்கப்பட்டு எவ்வளவு நாட்களாகின்றன, அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நூல் என்ன, தைக்கப்பட்டிருக்கும் விதம் என்ன என்பது போன்ற விவரங்களை அறியலாம்.

சந்தேகத்துக்கு இடமான ஒருவரிடம் கையுறைப் பதிவுகளுடன் ஒத்துப்போகும் கையுறை இருந்தால் அது குறிப்பிட்ட நபருக்கு எதிரான வலுவான ஆதாரமாகிவிடும்.

டிசம்பர்-3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் முன்னிட்டு சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை:



26/11/18

கல்லுாரி அங்கீகாரத்திற்கு காத்திருக்கலாமே!'

மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், 'துணைவேந்தர் பொறுப்பேற்ற பின், புதிய கல்லுாரி மற்றும் பாடத்திட்டம் இணைப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும்' என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
'துணைவேந்தர் பதவிக்கு தகுதியுள்ளோர், டிச., 14க்குள் விண்ணப்பிக்கலாம்' என, நாகேஸ்வரன் தலைமையிலான புதிய தேடல் குழு, நேற்று அறிவித்தது. டிசம்பருக்குள் புதிய துணைவேந்தர் நியமிக்க வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், 'புதிய கல்லுாரிகளுக்கான இணைப்பு அங்கீகாரம், கல்லுாரிகளில் புதிய பாடங்களுக்கான இணைப்பு அங்கீகாரம், டெண்டர் வெளியிடுவது உள்ளிட்ட பணிகளை, புதிய துணைவேந்தர் வருவதற்குள் முடித்து விடலாம்' என 'கடமை உணர்வுள்ள' சில அதிகாரிகள், 'துரித' நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:கல்லுாரி, பாடத்திட்டம் அனுமதி வழங்குவது தொடர்பாக, கல்லுாரிகளை ஆய்வு செய்ய, 30க்கும் மேற்பட்ட குழுக்கள், மாஜி துணைவேந்தர், செல்லத்துரையால் நியமிக்கப்பட்டன.

பல்கலை உயர் பதவிகளிலும், அவர் நியமித்தவர்களே உள்ளனர். குழுக்களில் அனுபவம் இல்லாத, ஜூனியர் ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளதாக, குற்றச்சாட்டு உள்ளது.டிசம்பருக்குள் துணைவேந்தர் நியமிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, 2018 -19 கல்வி ஆண்டுக்கு புதிய அங்கீகாரம், பாடத்திட்டம் இணைப்பு கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களை, புதிய துணைவேந்தர் பரிசீலிக்க வேண்டும். ஜூன், 16ல் தான் கல்லுாரிகள் துவங்கும். அதற்குள், புதிய துணைவேந்தரால், தகுதியுள்ள கல்லுாரிகளுக்கு இணைப்பு வழங்கி விட முடியும்.அதுவரை இதுபோன்ற அனுமதிகள், கொள்கை முடிவுகளை, இடைக்கால கன்வீனர் கமிட்டி எடுப்பதை நிறுத்த வேண்டும். இதன் மூலம் முன்பு போல முறைகேடுகள், ஊழல்கள் நடக்காமல் பல்கலை பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி சி.இ.ஓ., க்களுக்கு உத்தரவு

திண்டுக்கல்,:'கஜா' புயல் பாதித்த மாவட்டங்களில் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க போதிய வசதிகளை செய்து கொடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு 2019 மே 5ல் நடக்கிறது. இத்தேர்வுக்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர்கள் யாரும் விடுபடாமல் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதில், 'விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை கண்டறிந்து தேவையான வசதிகளை ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர்கள் செய்து கொடுக்க வேண்டும். போதிய இணைய வசதியை பெற முடியாத மாணவர்கள் மற்றும் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு : தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நிலையில் 3 மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால், அந்த ஊதிய உயர்வு கிடைக்காமலே ஓய்வுபெறும் நிலை இருந்து வந்தது. இதுதொடர்பாக அரசு அலுவலர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஓய்வுபெறும் மாதத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால் முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் சுவர்ணா வெளியிட்ட அரசாணையில் (எண்.148) கூறியிருப்பதாவது:

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தாலோ, மரணம் அடைந்து விட்டாலோ அந்த அரசு ஊழியர்களுக்கு அந்த மூன்று மாத தொடக்கத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன் கூறுகையில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தால், கடைசி மூன்று மாதத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஊதிய உயர்வுக்கு ஓராண்டு ஆகியிருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, ஓய்வுபெறும் ஊழியர்கள் 10வது மாதத்திலேயே ஊதிய உயர்வு பெறும் நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்’ என்றார்

சம வேலைக்கு " "சம ஊதியம்" என்ற கோரிக்கைகாக மூன்றே நாளில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரிய போராளிகளை திரட்டிய போராட்டக்குழு

                                               
                                             
சம வேலைக்கு " "சம ஊதியம்" என்ற கோரிக்கைகாக மூன்றே நாளில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரிய போராளிகளை திரட்டிய போராட்டக்குழு...
 இடம்-வள்ளுவர் கோட்டம்,சென்னை நாள்-25.11.2018

மீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்! வெளியான முக்கிய தகவல்!!

                   
                                     
ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும் . இந்த அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.

குறிப்பாக அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், அரசுப் பள்ளிகளை எக்காரணத்தை கொண்டும் மூடக் கூடாது என்பது குறித்து இந்த அமைப்பு தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை இதுவரை தமிழக அரசு அழைத்துப் பேசவில்லை.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதியம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் அறிவித்துள்ளனர்

ஜனவரியில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் நவ.26 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நவ.26-ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவிவியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில்தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும்ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வுக்கு 1.1.2019 அன்று பனிரெண்டரை வயது பூர்த்திஅடைந்த தனித் தேர்வர்கள் நவ.26-ஆம் தேதி திங்கள்கிழமை முதல்டிச.5-ஆம் தேதி புதன்கிழமை வரை www.dge.tn.gov.in என்றஇணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Nodal Centre) நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்களில்நேரடியாக செலுத்தலாம்.

முதல் முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன்விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும்ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவேஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தைதேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்சான்றிதழின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்கவேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமேஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களைwww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் எனதெரிவித்துள்ளார்

அலுவலக உபகரணங்களை பெறுவதற்கு - தனியார் பள்ளிகளை நாடும் மாவட்ட கல்வி அலுவலர்கள் - அரசு நிதி ஒதுக்காததால் இந்த நிலைமை :

புயல்களின் பட்டியலில் இருந்து 'கஜா, வர்தா' பெயர்கள் நீக்கம்?

பெரும் சேதங்களை ஏற்படுத்திய, 'கஜா, ஒக்கி, வர்தா' புயல்களின் பெயர்களை, புயல்களுக்கான பட்டியலில் இருந்து நீக்க, வானிலை மையம் முடிவு செய்துள்ளது.உலகம் முழுவதும், பல்வேறு நாடுகளில் ஏற்படும் புயல்களை, அதன் ஆண்டு மற்றும் நாடுகள் வழியாக தெரிந்து கொள்ள, பெயர்கள் வைக்கப்படுகின்றன. மேலும், புயல்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும், புயல்கள் வருவதை அறிவித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் எளிதாக, பெயர் வைக்கும் பழக்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்பட்டது.முதலில், 1900ல், புயல்களுக்கான பெயர்கள், ஆண் பாலினம் சார்ந்தே வைக்கப்பட்டன. அதன்பின், 1959ல் உலக வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில், மண்டல வாரியாக புயல் கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டன.இந்த கமிட்டிகள் இணைந்து, நாடுகளின் புவி அமைப்பின்படி, ஒவ்வொரு மண்டலங்களாக பிரித்து, பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில், வரிசையாக பெயர்கள் அமைக்கப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக பெயர் வைக்கப்படுகிறது. இந்த பட்டியல், ஒவ்வொரு, ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.இந்தியாவில் உருவாகும் புயல்களுக்கு, வடக்கு இந்திய பெருங்கடல் புயல் கமிட்டி பெயர் வைக்கிறது. இந்த கமிட்டி, 2,000த்தில், ஓமன் நாட்டின், மஸ்கட் நகரில் கூடி, பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, ஓமன் மற்றும் மாலத்தீவு நாடுகள் இணைந்து, பெயர்களை வழங்கியுள்ளன.இந்த பெயர் பட்டியல் விதிகளின்படி, பேரழிவு அல்லது பெரும் வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுத்தும் பெயர்களை, மீண்டும், புயல்களுக்கு வைக்கக் கூடாது. அந்த பெயர்களை, புயல் பெயர் பட்டியலில் இருந்து அகற்றி விட வேண்டும்.இதன்படி, இந்திய பெருங்கடலில் உருவாகி, பெரும் சேதங்களை உருவாக்கிய 'வர்தா, தானே, ஒக்கி மற்றும் கஜா' புயல்களின் பெயர்களை, பட்டியலில் இருந்து நீக்க, வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, புயல்களின் பாதிப்பு குறித்த அறிக்கையை, புயல்களுக்கான பெயர் பட்டியல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் உலக வானிலை நிறுவனத்திடம் தாக்கல் செய்யப்படும். அந்த அமைப்பு, புயல்கள் தாக்கியதன் அளவு, அதன் விளைவுகளை ஆய்வு செய்து, எந்த பெயர்களை நீக்குவது என்பது குறித்து, முடிவு செய்யும் என, வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்தன

அடுத்தாண்டு, ஜன., 1 முதல், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மட்டுமே செயல்படும் :

அடுத்தாண்டு, ஜன., 1 முதல், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக, தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

அறிவியல்-அறிவோம்: அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்:

கசிய திட்டத்தை 'பென்டகன்' நடத்தி வந்ததாக அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டம் 2012 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததாம். இதுகுறித்து ஒருசில அதிகாரிகள் மட்டுமே அறிந்திருந்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
விசித்திரமான அதிவேக விமானங்கள் பறப்பது மற்றும் விண்ணில் சில பொருட்கள் நகர்வதை இத்திட்டத்தின் ஆவணங்கள் விவரிப்பதாக சர்வதேச பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள், இது மாதிரியான விவரிக்க முடியாத சில சம்பவங்கள், வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என கூறுகின்றனர்.
இந்த ஆய்வை முன் நின்று நடத்தியுள்ள ஓய்வுபெற்ற ஜனநாயக கட்சி செனட்டர் ஹேரி ரீட், "நான் இத்திட்டத்தை நடத்தியதற்கு சங்கடமோ அல்லது வெட்கமோ படவில்லை. இதற்கு முன் யாரும் செய்யாததை நான் செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டில், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு, லட்சக்கணக்கான ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டது. விண்ணில், அடையாளம் தெரியாத பொருட்கள் மற்றும் பறக்கும் வட்டத்தட்டுகளை கண்டது குறித்த ஆவணங்களும் இதில் அடங்கும்.
விரைவு ரேடியோ வெடிப்புகள் (Fast radio bursts) முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு வேற்று கிரகவாசிகளின் சமிக்ஞையை பதிவு செய்தது.ராயல் வானியல் கழகத்தின் மாதாந்திர அறிக்கையில் 4 புதிய சமிக்ஞைகள் ஆராய்ச்சிக்காக எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன என கூறபட்டு உள்ளது.
இது குறித்து அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்து ஆராய்ச்சி செய்துவரும் நிகல் வாட்சன் கூறும் போது
விண்வெளியில் இருந்து வரும் ஒவ்வொரு அபூர்வமான சமிக்ஞைகளும் எங்களுக்கு ஒரு வேற்று கிரக நாகரீகம் இருக்கும் என ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த சமிக்ஞைகளை கேட்கும் போது இந்த பரந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் நாம் தனியா இல்லை என எண்ண தோன்றுகிறது.

மாணவர்களின் புத்தக பையின் (BAG ) எடை எவ்வளவு இருக்க வேண்டும் -எந்தெந்த வகுப்புகளுக்கு என்ன வீட்டுப்பாடம் என்று GOVT OF INDIA - CIRCULAR

TRB - எதிரான வழக்கு தள்ளுபடி!

50 ஆண்டுகளாக மாணவியர் இன்றி இயங்கும் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி :

                           
ராணிப்பேட்டையில் இயங்கிவரும்  இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி.
ராணிப்பேட்டையில் கடந்த 50 ஆண்டுகளாக மாணவிகள் சேர்க்கை இல்லாமல் மாணவர்கள் மட்டுமே படிக்கும் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளியை இருபாலர் பயிலும் பள்ளியாக மேம்படுத்த கல்வித் துறை நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 1926-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை ஆகிய 2 நகரங்களுக்காக இருபாலர் அரசுப் பள்ளி தொடங்கப்பட்டது. தொடர்ந்து, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வகுப்பறைக் கட்டடங்கள், விளையாட்டு மைதானத்துடன் மேம்படுத்தப்பட்ட பள்ளியாக மாற்றப்பட்டது. இப்பள்ளியில் 1,500 மாணவ, மாணவியர் வரை சேர்க்கை நடைபெற்று, மாநில, மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பள்ளியாகவும் உருவெடுத்தது.
இதைத் தொடர்ந்து 1970-ஆம் ஆண்டுகால கட்டத்தில் ராணிப்பேட்டை நகரில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே கிறிஸ்துவ அமைப்பின் சார்பில் 2 அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அப்போது ராணிப்பேட்டை சுற்று வட்டாரத்தில் ஆண், பெண் என தனித்தனியாக அரசுப் பள்ளிகள் இல்லாத சூழலில், அரசு நிதி  உதவி பெறும் 2 தனியார் பெண்கள் பள்ளிகளில் பெண் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் முன்வந்தனர்.
அதன் காரணமாக பெரும்பாலான மாணவிகள் அரசுப் பள்ளியில் இருந்து அரசு நிதி உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தனர்.
அதன்பிறகு தற்போது வரை ராணிப்பேட்டையில் இயங்கிவரும் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை இன்றி, மாணவர் மட்டுமே படிக்கும் இருபாலர் பள்ளியாக கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் சேர்க்கையும் வெகுவாக குறைந்து தற்போது 400 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரித்தனர்.
தற்போது பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி, தனது சொந்த செலவிலும், தனியார் சேவை அமைப்புகளின் நிதி உதவியாலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர உள்ளதாக உறுதியளித்துள்ளார். அதேநேரத்தில் மாநில பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட உள்ளதாக பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.அன்பழகன் தெரிவித்தார். மேலும், வரும் கல்வி ஆண்டில் மாணவிகளின் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இரு பாலர் கல்வித் திட்டத்தின் அடிப்படையே ஆணும், பெண்ணும் மாணவப் பருவத்தில் தோழமையோடு இணைந்து படித்து வளர வேண்டும் என்பதுதான். தமிழகப் பள்ளிகள் குறித்து எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்குப்படி, ஒரு பாலர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் காட்டிலும், இரு பாலர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் தலைசிறந்து விளங்குவதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
இப்பள்ளியில் மாணவியரின் சேர்க்கைக்கு மாவட்டக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

சித்தா, 1,235 இடங்கள் நிரம்பின :

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா படிப்புகளுக்கு, 1,235 இடங்கள் நிரம்பின.
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 1,482 இடங்கள் உள்ளன.
 இந்த இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில், நவ., 19ல் துவங்கியது. நேற்று நிரம்பிய, 183 இடங்களுடன், இதுவரை, 1,235 இடங்கள் நிரம்பியுள்ளன.இதுகுறித்து, தேர்வு குழு அதிகாரிகள் கூறியதாவது:முதற்கட்ட கவுன்சிலிங்கில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், 247 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இந்த இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், www.tnhealth.org என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் அரசு பள்ளிகள் :

கணினி அறிவியல் பாடத்தில் தமிழக அரசு பள்ளிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் தற்போது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய  பாடங்கள் உள்ளன. இதே பாடப்பிரிவுகள்தான் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளிலும் உள்ளது. மேல்நிலை பள்ளிகளில் அதாவது பிளஸ் 1 வகுப்பு சேரும்போது மட்டுமே கம்ப்யூட்டர் தொடர்பாக படிக்க கம்ப்யூட்டர் சயின்ஸ்  என்ற தனி குரூப் உள்ளது. 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்த அறிமுகம் இணைப்பு பாடமாக மட்டுமே உள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில் கணினி பயன்பாடு இல்லாத இடங்களே  இல்லை. ஆனாலும், அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் எட்டாக்கனியாகவே உள்ளது. எல்லா மாணவர்களும் கணினி அறிவு பெறவேண்டும் என்ற நோக்கில், கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் பாடத்திட்டம்  கொண்டுவரப்பட்டது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு, கணினி அறிவியல் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன. ஆனால், பின்னர் வந்த அதிமுக அரசு அரசியல்  காரணங்களுக்காக சமச்சீர் பாடத்திட்டத்தில் இருந்து கணினி அறிவியல் பாடத்தை எவ்வித காரணமும் இன்றி நீக்கிவிட்டது. இதனால் பல லட்சம் செலவிட்டு அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் குப்பையில்  வீசப்பட்டன. அதேசமயம், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலும், அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஒரு தனிப்பாடமாக உள்ளது. அண்டை மாநிலம் மற்றும் தனியார்  பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கணினி அறிவு இல்லாமலேயே தங்களது பள்ளிக்கல்வியை தொடர்கின்றனர். கணினி குறித்த அடிப்படை அறிவுகூட இவர்களுக்கு  புகட்டப்படவில்லை. கணினி பற்றிய தகவல் தெரியவேண்டுமானால், மேல்நிலை பள்ளிகளில் மட்டுமே தெரிந்துகொள்ளவேண்டிய நிலை உள்ளது. இது, மாணவர்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்க செய்யும் செயலாகவே உள்ளது  என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஜமுனாராணி கூறியதாவது: அண்டை மாநிலமான கேரளாவுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வி  நிலை மிகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் என்பது கேரளாவில் 1ம் வகுப்பில் இருந்தே உள்ளது. ஆனால், தமிழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற பாடப்பிரிவு 11ம் வகுப்பில்தான் உள்ளது. கணினி  அறிவியல் பாடத்தில் பின்தங்கி இருப்பதால்தான் நமது மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.  தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்,  அரசு பள்ளிகளில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழகத்தில் உயர்நிலை பள்ளிகளாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட 700 மேல்நிலை பள்ளிகளில் இன்னும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்படவில்லை. இதேபோல், 850  மேல்நிலை பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் காலிப்பணிடம் நிரப்பப்படாமல் உள்ளது. பள்ளிகளில் ‘’ஸ்மார்ட் கிளாஸ்’’ திட்டமும் முழு வீச்சில் துவங்கப்படவில்லை. ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு மட்டுமே  மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் குறித்த அறிவை தராது. கணினி அறிவியலை, தனிப்பாமாக கொண்டுவந்தால் மட்டுமே நம் மாணவர்களால் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட முடியும். போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள  முடியும். 12ம் வகுப்பு முடித்த பிறகே அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. அதுவும், எப்படி பயன்படுத்த வேண்டும் என சொல்லிக்கொடுப்பது இல்லை. கணினி அறிவியல் பாடத்தில்  இப்படி பின்தங்கியிருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு ஜமுனாராணி கூறினார்.

SSLC மதிப்பெண் பட்டியலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க திட்டம் :

எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.)திட்டமிட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியலை லேமினேட் செய்து தருவதோடு கே.எஸ்.இ.இ.பி. தனது பணியை முடித்துக் கொள்கிறது. ஆனால், லேமினேட் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல் எதிர்காலத்தில் பாழாவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் முக்கியமான ஆவணமாக கருதப்படுவதால், அதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.), எஸ்எஸ்எல்சி தேர்வுகளை நடத்தி மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை வழங்கி வருகிறது. தற்போது வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்த கே.எஸ்.இ.இ.பி. 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கும் தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு எளிதில் கிழிக்க முடியாத, நீரில் பாழாகாத, தீயில் சுட்டுப்போகாத மதிப்பெண் பட்டியலை வழங்கதிட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கே.எஸ்.இ.இ.பி. இயக்குநர் வி.சுமங்கலா கூறியது: எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் எல்லா மாணவர்களுக்கும் விலைமதிப்பில்லாதது மட்டுமல்லாது முக்கியத்துவம்வாய்ந்ததாகும். மாணவர்கள் முதல்முறையாக எழுதும் பொதுத்தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலாகும். எனவே, 2018-19-ஆம் கல்வியாண்டில் எளிதில் கிழியாத, நீரில் கசங்காத, தீக்கு இரையாகாத மதிப்பெண் பட்டியலை வழங்க யோசித்துவருகிறோம்.
இதுதொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் மதிப்பெண் பட்டியலில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிய திட்டமிட்டுள்ளோம். அந்த விவரங்கள் கிடைத்தவுடன், அதை சோதனைக்குள்படுத்தி, சிறந்த முறையில் பின்பற்றப்படும் பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக முடிவெடுத்தவுடன் மதிப்பெண் பட்டியல் தயாரிப்புக்கு ஒப்பந்தப்புள்ளி கோருவோம். வாரியத்துக்கு மாநில அரசிடம் இருந்து நிதி ஆதாரங்கள் கிடைப்பதில்லை. மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தேர்வுக் கட்டணங்களில் இருந்துதான் மதிப்பெண் பட்டியலுக்கும் செலவிடப்படுகிறது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பதால், கூடுதல் செலவு ஆகும். எனவே, செலவை சமாளிக்க எல்லா பாதுகாப்பு அம்சங்களையும் நிகழாண்டிலே அறிமுகப்படுத்தாமல், ஆண்டுக்கு ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துவோம் என்றார்.

கஜா புயல் பாதிப்பு…!4 மாவட்டங்களை சேர்ந்த 650 மாணவர்களுக்கு ரூ.48 கோடி கல்விக்கட்டணம் விலக்கு …!

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது எஸ்ஆர்எம் பல்கலைக்கழங்களின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர்,புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழங்களின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொண்டார்.அதன் பின் அவர் கூறுவகையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது.படிப்பு முடியும் வரை அவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். 4 மாவட்டங்களை சேர்ந்த 650 மாணவர்களுக்கு  ரூ.48 கோடி கல்விக்கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இதனால்  650 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்?

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை போட வேண்டும் என்று சொல்கிறார்கள். அது பின்னணி என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்?
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்க வேண்டும் இல்லையென்றால் சாமி குத்தம் ஆகிவிடும் என்று பல பெரியவர்கள் சொல்லி கேட்டதுண்டு.

ஆனால் அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?
நாம் அம்மாவின் கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்ற தண்ணீர் நிறைந்த சூழலில் இருந்திருக்கிறோம். அதில் உள்ள கழிவுகள் தலையில் தேங்கியிருக்கும். சாதாரணமாக கடல்நீரில் 5 நிமிடம் கை வைத்திருந்தாலே கை கழுவிய பிறகும் கூட உப்பின் ருசி ஒட்டியிருக்கும், கை ஊறி போய்விடும். அப்படி இருக்கையில் 10 மாதம் தண்ணீரிலே இருந்து வந்த குழந்தையின் உடல் எந்தளவு ஊறியிருக்கும். உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். ஆனால் தலையில் தேங்கிய கழிவுகள் முடியில் வேர் கால்கள் வழியாகத் தான் வெளியேறும்.  

அதனை வெளியேற்ற என்ன வழி மொட்டை அடித்தால் மட்டுமே அந்த வேரின் வழியாக தேங்கியிருக்கும் கழிவுகள் வெளிவரும். இது தான் உண்மையான காரணம். ஆனால் இப்படி கூறினால் யாருடைய செவிக்கும் எட்டாது. இதையே சாமி கண்ண குத்தும், தெய்வம் பார்க்குது, குலதெய்வ வேண்டுதல் என பட்டியலிட்டு கூறினால் அனைவரும் கேட்பர்.

எதையும் தெய்வீக ரீதியாக கூறினால் நம் மக்களின் செவிக்கு எட்டும். இதே போல் 3 வயதிலும் ஒரு மொட்டை அடிப்பர் அதற்கு காரணம், ஒரு வயதில் அடித்த மொட்டையில் சில கழிவுகள் வெளிவராமல் இருக்கும். அப்படி வராமல் இருக்கும் கழிவுகள் 3 வயதில் அடிக்கும் மொட்டையில் வந்துவிடும்.

இதற்காகவே ஒரு வயதிலும், மூன்று வயதிலும் மொட்டை சாமியின் பெயரில் அடிப்பர். இதன் உண்மை பின்னணியே இதுதான். முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பின் ஒரு அறிவியல் பின்னணி இருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்.

அதை கண்டுகொள்ளாமல் மொட்டை அடித்து கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டால், பிற்காலத்தில் குழந்தைக்கு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.   

மாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம்.
மாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...

காட்சி உலகம்...

இன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை ஆசிரியர்கள் ஈர்க்க முடியும். ஆகையால் பாடங்களைத் தாண்டிய விஷயங்களில் கருத்துப் பகிர்வு செய்ய சில நிமிடங்களை ஆசிரியர்கள் ஒதுக்க வேண்டும்.

பெற்றோரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்து தங்கள் குழந்தைகளை ஈர்க்கவும் வழி நடத்தவும் வேண்டும். மல்டிமீடியா மூலமாக குறுவீடியோக்கள், காட்சிப பகிர்வு மூலம் அவசியமான அறிவு வளர்ச்சி விஷயங்களை மாணவர்களின் மனதில் பதிக்க வேண்டும். இது அவசியமற்ற முறையில் அவர்கள் பொழுதுபோக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும். புரிதலை வளர்க்கும். மல்டிமீடியா நுட்ப அறிவையும் அவர்களுக்கு வளர்க்கும்.

இணையக் கல்வி அவசியம்

பயிற்சி வகுப்புகளையும், தகவல் தொடர்பையும் தற்காலத்திற்கு ஏற்றபடி இணைய வழிக்கு மாற்றினால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றலில் கவனம் செலுத்துவார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அனைத்து தகவல்களையும் இணைய தரவுகளாக மாற்றவும், பாடங்கள் மற்றும் பயிற்சிமுறைகளை கணினி- இணைய நுட்பத்திற்கு எளிதாக மாற்றவும் முடியும். மாணவர்களுக்கு தகவல்களை கடத்தவும், கருத்துகளை பகிரவும் இது ஏற்றது.

வீட்டுப்பாடப் பயிற்சிக்கான தகவல்களையும், அதற்கு தேவையான உபகரணங்களையும் இணையத்தில் பதிவேற்றினால் எந்த மாணவரும் குழப்பமடையாமல் தெரிந்து கொள்வார்கள். கூச்சம் தவிர்த்து தங்கள் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்கவும் இணைய தகவல் தொடர்பு வசதியாக இருக்கவும், இதன் வழியே ஒவ்வொரு மாணவரின் திறமையை பாராட்டவும், குறைநிறைகளை தனிப்பட்ட முறையில் தெரிவித்து அவர்களை வழிநடத்தவும் முடியும். இதனால் சராசரி மாணவர்கள் மற்றவர் முன்னிலையில் அவமானம் அடைவதையும், கூச்சம் கொண்டு ஒதுங்கிச் செல்வதையும் தவிர்க்கலாம். தங்களுக்கென எளிமையான இணையப்பக்கத்தை உருவாக்குவது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகச்சுலபமானது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

வகுப்பறை நிர்வாகம்

ஆசிரியர்களின் வகுப்பறை நிர்வாகத் திறமை, மாணவர்களின் கற்றல் முறையில் நேர்மறை தாக்கத்தை உருவாக்குகிறது என்கிறது கற்றல் தொடர்பான ஆய்வுகள். சிறந்த மாணவர்கள் மற்றும் சவால் நிறைந்த சராசரி மாணவர்கள் என பலதரப்பட்ட மாணவர்களை கொண்டதுதான் வகுப்பறை. அனைவர் நலனிலும் அக்கறை கொண்டவர்களாக ஆசிரியர்கள் தங்கள் பார்வையை செலுத்த வேண்டும்.

நீங்கள் தனித்துவம் நிறைந்த ஆசிரியர் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். புதுமையும், எளிமையும் கொண்ட ஆசிரியர்களாக வலம் வருபவர்களின் பாடங்களில் மாணவர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பல நேரங்களில் போதிப்பதைவிட மென்மையான வழிநடத்தல்கள் நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்பதை உணர்ந்தவர்கள் சிறந்த ஆசிரியர்கள்.

வகுப்புகள் பாடம் நடத்த மட்டுமல்ல, பண்பு வளர்க்கவும், மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை உருவாக்கவும்தான் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பழகும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பாட விளக்கங்களை நவீன மாற்றத்திற்கு ‘அப்டேட்’ செய்ய வேண்டும். காட்சிமுறை பாடங்களுக்கு உங்கள் வகுப்பை தயார் படுத்தியிருந்தால் நீங்கள் முன்மாதிரி ஆசிரியர்தான்.

தேவை சுயபரிசோதனை

மாணவர்களை மதிப்பிடுவதைப்போல தங்களையும் ஆசிரியர்கள் மதிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயம். மாணவர்கள் உங்கள் வகுப்புகளில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கு, நீங்கள் பாடம் நடத்தும் முறையில் உள்ள குறைநிறைகள் உள்ளதா? என அறிய முற்பட வேண்டும்.

ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஒரு வீடியோவாக பதிவு செய்து தாங்களாக சுய பரிசோதனை செய்யலாம். வேகமாக பாடம் நடத்துகிறீர்களா, போதிய விளக்கம் அளிக்கவில்லையா, கண்டிப்பு மிகுந்திருக்கிறதா? கனிவு குறைந்திருக்கிறதா? அதிகமாக பாடச்சுமை கொடுக்கிறீர்களா? கடினமான பகுதியை சுலபமாக கற்பிக்க நீங்கள் என்ன வழிகளை கையாளுகிறீர்கள், சிறந்த மாணவர்களையும், சராசரி மாணவர்களையும், பின்தங்கிய மாணவர்களையும் சரிசமமாக நடத்துகிறீர்களா? பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற கவனம் செலுத்துகிறீர்களா? இதர நடை, உடை, பாவனைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பது போன்ற அனைத்து அம்சங்களிலும் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது இன்றைய மாணவர்களை வழிநடத்த அவசியமான மாற்றமாகும்.

வகுப்பைத் தாண்டிய ஆசிரியர்கள்...

ஆசிரியர்கள் வகுப்பறை தாண்டியவர்களாக வலம் வர வேண்டியது அவசியம். பாடங்களைக் கடந்த விஷயங்களை மாணவர்களுடன் பகிர்வது முக்கியத் தேவையாக இருக்கிறது. அரசியல் அறிவு, சமூக அறிவு கொண்டவர்களாக ஆசிரியர்கள் வலம் வர வேண்டியது உள்ளது. அரசுக்கும், அரசு பிரதிநிதிகளுக்கும் தகவல்தொடர்பை ஏற்படுத்த ஆசிரியர்கள் பாலமாக இருக்க வேண்டும். தங்கள் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், நிதிகள் தாமதமின்றி பெற்றுத்தர ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புறவெளி கல்வியாக சுற்றுலா கல்வி மற்றும் நேரடி பயிற்சி கல்வியை அதிகப்படுத்த வேண்டும். இது மாணவர்களின் திறனை பெரிதும் வளர்க்கும்.

கற்பித்தலும், கற்றலும்...

கற்பித்தல் எளிதான பணியல்ல. அதை மாணவர்கள் எளிதாக உணர மாட்டார்கள். அதே நேரத்தில் கற்றலும் சாதாரணமான விஷயமல்ல. விருப்பமற்ற பாடங்களையும், அதிகப்படியான பாடங்களையும் அவர்கள் படித்தாக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். எனவே மாணவர்களும், ஆசிரியர்களும் அவசியம் தங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தியானம், யோகா, விருப்ப வாசிப்பு, ரசனையானதை ரசித்தல், வெளியே சென்று பொழுதுபோக்குதல் ஆகியவற்றின் மூலம் மனதை இலகுவாக்கி கற்றலில், கற்பித்தலில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.

கல்விச்சூழலானது ஆசிரியர் - மாணவர் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கும்போது கற்றல் மேம்படுகிறது. ஆற்றலும், ஆளுமையும் வளர்கிறது. வளரட்டும்!

24/11/18

போரைத் தடுத்த புலவர்- நாடகம்_low

பகைவனுக்கு அருள்வாய்_low

தள்ளுவண்டி தள்ளியே _ Tamil Rhymes & Baby Song for Children _ Infobells_low

செல்லம் சாப்பிடுமாம் _ Tamil Rhymes for Children _ Infobells_low

கவனம் தேவை- சமூகவியல் 5 ஆம் வகுப்பு_low

கண்மணி பாப்பா பாடல்கள் Vol.3 _ Tamil Rhymes _ Infobells_low

உங்கள் பேனாவில் அருமையான மேஜிக் செய்யலாம் __ AMAZING pen magic TRICK rev...

உங்கள் பெயரில் Mobile RingTone வைப்பது எப்படி_ How To Set-Make-Create Na...

இங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART-13) SPOKEN ENGLISH TH...

ஆங்கிலம் புரியிது, பேச முடியல - I Can Read, Write, Understand English Bu...

அறம் செய விரும்பு (Aram Seiya Virumbu) _ Aathichudi Kathaigal _ Tamil St...

அ சொல்லலாம் _ Tamil Rhymes for Children _ Infobells_low

How To Change Your Mobile Computer Mode In Tamil_low

English Typing -Tamil Tutorial_low

அடுத்த டிசம்பர் சாதாரணமாக கடந்து போகாது.. மொத்தமா காத்திருக்கு.. மிரள வைக்கும் புள்ளி விபரம்..?

இதுநாள் வரை சென்னையில் பெய்த மழை எல்லாம் மிக குறைவு தான். இந்த நேரத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் வெறும் 55 சதவிகிதம் மட்டுமே தான் சென்னை பெற்றுள்ளது.


டிசம்பர் மாதத்தில் அதிக கனமழை உண்டாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் பரவலாக பொழிய வேண்டிய மழை, கஜா புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கோரமுகத்தை காட்டி ஒருவழியாக்கி சென்றுவிட்டது.

இன்னும் தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கும் கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழக கடற்கரைப் பகுதிகளில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இப்போது வலுவிழந்துள்ளது.

இது தொடர்ச்சியாக காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக தமிழகத்தின் உள்மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.

வடமேற்குத் திசையில் நகர்ந்து செல்லும் போது இது வலுவிழக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரத்துக்கு வட மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் கனமழை பெய்யும்.

சென்னையில், இடைவெளி விட்டு மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை.

சென்னையைப் பொறுத்தவரை வழக்கத்தைவிட தற்போது 45 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.



வழக்கமாக பொழியும் மழைபொழிவை விட குறைவான அளவில் பதிவாகியுள்ளதால், அடுத்த மாதம் இதன் தாக்கம் இருக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அறிமுகமானது - Redmi Note 6 Pro!

கடந்த 4 வருடங்களுக்கு முன் இந்தியாவில் Mi3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது. அதிலிருந்து இன்று வரை அந்நிறுவனத்தின் வளர்ச்சி இந்தியாவில் அபரிவிதமாக இருக்கிறது. தற்போது இந்திய மக்கள் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் சியோமி நிறுவன மொபைலை பயன்படுத்துகின்றனர் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 4 , ரெட்மி நோட் 5 , நோட் 5 ப்ரோ என தொடர்ந்து இந்தியாவில் மொபைலை வெளியிட்டு தன்னை நிலையாக நிலை நிறுத்தியது. இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவிற்கு வந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் ரெட்மி நோட் 6 ப்ரோ - 4ஜிபி ரேம்/64ஜிபி வேரியண்ட் முதன்முதலாக தாய்லாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. தாய்லாந்தில் இந்த போனின் அறிமுக விலை டி.ஹெச்.பி 6,990 ஆகும். அதாவது இந்திய மதிப்பின் படி ரூ.15,300 ஆகும்.

ரெட்மி நோட் 6 ப்ரோவின் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் ரெட்மி நோட் 6 ப்ரோவின் சிறப்பு அம்சம், விலை, முதல் விற்பனை எப்போது என்பது குறித்து முழு விவரம் வெளியிடப்பட்டது.

இரட்டை சிம் வசதி கொண்டதாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டது.

6.26 இன்ச் ஹெச்.டி + திரை 19:9 என்ற வீதத்தில் இருக்கும்.

கொரில்லா கிளாஸினால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

14nm அக்டோ- கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 SoC.

அட்ரினோ 509 GPU,

4ஜிபி/6ஜிபி ரேம், 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் .

பின்புறம் இரண்டு கேமிராக்கள் உள்ளன.


4000mAh பேட்டரி.

விற்பனை தேதி: முதல் விற்பனை நாளை வெள்ளிக்கிழமை மதியம் சரியாக 12 மணிக்கு தொடங்குகிறது. பிளிப்கார்ட் மற்றும் mi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இந்த போனை வாங்கலாம்.

பிளிப்கார்ட் : https://www.flipkart.com

எம்ஐ : https://store.mi.com/in/buy/product/redmi-note-6-pro

இந்தியாவில் இரண்டு மாடல்களில் ரெட்மி நோட் 6 ப்ரோ வெளியாகிறது. அதன் படி 4 ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ.15,999 க்கும் மற்றும் 6ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ. 17,999 க்கும் விற்பனை செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது.

இருந்த போதிலும், நாளை முதல் விற்பனையை முன்னிட்டு இந்திய வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாடலுக்கும் ரூ.3000 தள்ளுபடி  வழங்கியுள்ளது. அதன் படி 4 ஜிபி / 64 ஜிபி மாடல் : ரூ. 12,999 | 6ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ. 14,999 க்கும் சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த சிறப்பு தள்ளுபடி நாளை மட்டுமே. நாளை சரியாக 12 மணிக்கு விற்பனை தொடங்கும் என்பதை நினைவில் கொள்க.

"கல்விமுறை 2030" எனும் தலைப்பில் மேகாலயா மாநிலத்தில் தமிழக ஆசிரியர் கட்டுரை சமர்பிப்பு!

NCERT மூலம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெறும் NERIE கருத்தரங்கு மற்றும் ஒரிசா மாநிலம் புபனேஸ்வரில் நடைபெறும் NCSE கருத்தரங்கிலும் பங்கேற்க நமது மாநிலத்திலிருந்து திரு சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இக்கருத்தரங்கில் பங்கேற்று எனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக 9.11.2018   அன்று நமது பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உயர்திரு. பிரதீப் யாதவ் அவர்கள் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உயர்திரு.கருப்பசாமி அவர்கள் முன் எனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தேன்.  நம் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் ஆய்வு கட்டுரை மிகச்சிறப்பாக உள்ளது என பாராட்டி, ஒரிசா மற்றும் மேகாலயாவில் நடைபெறும் கருத்தரங்கில் மிகச்சிறப்பாக வழங்கி நமது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும்படி வாழ்த்தி அனுப்பினர்.
சார்ந்த ஆசிரியரை நமது 
கல்விசிறகுகள் வாழ்த்துகிறது.

Teacher Details:
Srinivasan K
Head master
Hindu primary school
AMBUR
Vellore

பிளஸ்1 தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்படுமா?

பிளஸ்1 வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 கடந்த ஆண்டு முதல் பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. மாதாந்திரப் பாடத் திட்டம், புதிய மாதிரி வினாத் தாள் ஆகியவை தாமதமாக வெளியிடப்பட்டதால், பிளஸ்1 அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் சிலர் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. இவர்களுக்கென தனிப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படாமல் ஜுன் மாதம் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனால், பலரும் மீண்டும் தோல்வியைத் தழுவினர்.
 இந்த நிலையில், பிளஸ்1 தோல்வியுற்ற மாணவர்கள் பிளஸ்2 வகுப்பில் தொடர்ந்து பயின்று வருகின்றனர். இவர்கள் வருகிற மார்ச் மாதம் பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகளை ஒரே நேரத்தில் எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு தேர்வெழுதும் மாணவர்கள் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்று, பிளஸ்1 தேர்வில் தோல்வியடைந்தால் மேற்படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும்.
 பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் மறுதேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், பிளஸ்1 வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மறுதேர்வுகள் நடத்தப்படாத நிலையில், இனி வரும் காலங்களில் செப்டம்பர் மாதத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
 எனவே, பிளஸ்1 தேர்ச்சி பெறாத மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் தோல்வியுற்ற பாடங்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

டிச.5ம் தேதி முதல் பான் கார்டு விதிமுறை மாறுது

வரி ஏய்ப்பை தடுப்பதற்காக வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் பான் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்து வருமான வரித்துறை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஓர் நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் செய்பவர்கள், பான் கார்டு எண்ணுடன்  அனைத்து பரிவர்த்தனைகளையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓர் நிதியாண்டில் அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதி வரையில் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் மேற்கொள்ளப்படும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் பான் கார்டு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.


ஒருவர், ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்பவராக இருந்தால், அவரிடம் பான் கார்டு எண் இல்லை என்றால், அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதிக்கு முன்பாக பான் கார்டு எண் பெறுவது கட்டாயம். வருமான வரி சட்டம் 1962ன் புதிய திருத்த விதிகளில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
* இந்தபுதிய வருமான வரி விதிமுறைகள், இதுபோன்ற நிதி பரிவர்த்தனைகளில் தொடர்பில்லாத வருமான வரி செலுத்தும் தனி நபரைக் குறிப்பிடவில்லை.
* மேலாண்மை இயக்குநர், இயக்குநர், பங்குதாரர், டிரஸ்டி, பொறுப்பாளர், நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி அல்லது தொழில் நிறுவனத்தின் அலுவலக நிர்வாகி ஆகியோர், புதிய வருமான வரி விதிகளின்படி, பான் கார்டு எண் இல்லை என்றால் அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து பான் கார்டு எண் பெறுவது கட்டாயம்.
* ஒரு நிதியாண்டில் பண பரிவர்த்தனை ரூ.5 லட்டத்திற்கு அதிகமாக இல்லை என்றாலும் இதுபோன்ற தொழில் நிறுவனங்கள் பான் கார்டு எண் பெற வேண்டும். அப்போதுதான், பண பரிவர்த்தனையை வருமான வரித்துறை எளிதாக பார்வையிட முடியும். இதன் மூலம் முறையான வரி விதிப்புக்கும் வரி ஏய்ப்பையும் தடுக்க முடியும் என்று வரி துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
* தேவைக்கேற்ப விதிமுறைகளை வருமான வரித்துறை அவ்வப்போது மாற்றி வருகிறது. பான் கார்டு விண்ணப்பிக்க தந்தை பெயர் குறிப்பிடுவது கட்டாயம். ஆனால் கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான் கார்டு விண்ணப்ப படிவத்தில் தந்தையின் பெயரை குறிப்பிட தேவையில்லை இதுவும் அடுத்த மாதம் 5ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

செல்போன் கட்டணம் உயருமா..? ஆட்டத்தை தீர்மானிக்கப்போகும் ரிலையன்ஸ்!

வரவிருக்கிற காலாண்டுகளிலும் வருவாய் இழப்பைச் சந்திக்க ரிலையன்ஸ் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் தயாராக இல்லை. போட்ட மூலதனத்துக்கு ஏற்ற வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் இந்த நிறுவனங்கள் முனைப்புடன் இருக்கின்றன.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர், செல்போன் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த கட்டணத்தில் தொலைபேசி சேவைகளை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சலுகை நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்றும், விரைவிலேயே செல்போன் சேவைக் கட்டணங்கள் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், அந்தக் கட்டண உயர்வு எப்போது என்பதைத் தீர்மானிக்கப்போவதும் ரிலையன்ஸ் நிறுவனம்தான் என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.

செல்போன் கட்டணம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆர்ப்பாட்டமான அறிவிப்புகள் மற்றும் அதிரடி சலுகைகளுடன் செல்போன் சேவை துறையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ. மிகக் குறைந்த கட்டணத்தில் அவுட் கோயிங் முற்றிலும் இலவசம்,  மின்னல் வேக இணையதள இணைப்பு என்ற சேவைகளைப் பார்த்து, அதுவரை பிற செல்போன் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தி வந்தவர்களும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாற, வேறு வழியில்லாமல் மற்ற செல்போன் நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டன. இருப்பினும் இந்தக் கட்டணக் குறைப்பு போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏர்செல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தத் தொழிலிருந்தே வெளியேறின. ஐடியா செல்லுலார் நிறுவனம், வோடஃபோன் இந்தியா நிறுவனத்துடன் இணைய நேரிட்டது. இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடஃபோன் ஐடியா உருவெடுத்தது. இதர சிறு நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன.

 பின் தங்கிய போட்டி நிறுவனங்கள்

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த  இரண்டாவது காலாண்டில் 4,974 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முக்கியக் காரணம் நஷ்டத்தில் இயங்கிய ஐடியா செல்லுலார் நிறுவனத்தை வாங்கியதுதான் என்றும் வோடஃபோன் நிறுவனம் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோன்று, பார்தி ஏர்டெல் நிறுவனமும் நஷ்டத்தைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 118.80 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி, சந்தை ஆய்வாளர்களையே ஆச்சர்யப்படுத்தியது.  அதே சமயம் 2017-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 343 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இது 65.4% குறைவே.

ஆனால், ரிலையன்ஸ் ஜியோ எதிர்பார்த்தபடியே 681 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் ஈட்டி, தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் 3.7 கோடியாக அதிகரித்து, மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 25.23 கோடியாக உயர்த்திக் கொண்டது. தற்போது சந்தையின் வருவாய் பங்கு அடிப்படையில், இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய தொலைபேசி சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ்.

இதனுடன், தற்போது வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல்  ஆகிய 2 பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து நிற்கும் நிலையில், செல்போன் சேவைக் கட்டணங்களை இனி இந்த நிறுவனங்கள்  உயர்த்தலாம் என, ஏற்கெனவே இத்துறை உயரதிகாரிகள் சூசகமாக தெரிவித்திருந்தனர்.  ரிலையன்ஸ் ஜியோவைத் தவிர்த்து, மற்ற செல்போன் சேவை நிறுவனங்கள், கடந்த சில காலாண்டுகளில் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்த போதிலும், கடன் பத்திரங்கள் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நிதி திரட்டி, தொழில் மூலதனத்தை அதிகரித்துக்கொண்டு போட்டியைச் சமாளித்து சந்தையில் நிலைத்து நிற்கின்றன. அதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு ஏற்கெனவே 3.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மூலதனமாக இறைத்துள்ளது.

இந்த நிலையில், வரும் காலாண்டுகளிலும் வருவாய் இழப்பைச் சந்திக்க, ரிலையன்ஸ் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் தயாராக இல்லை. போட்ட மூலதனத்துக்கு ஏற்ற வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் இந்த நிறுவனங்கள் முனைப்புடன் இருக்கின்றன. எனவே, கட்டண உயர்வு குறித்து இந்த நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.

முதலிடத்தைக் குறிவைக்கும் ஜியோ

ஆனால், ஜியோ என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்தே அந்த நிறுவனங்கள் தங்கள் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க முடியும். ஏனெனில்,  ஜியோவும் நீண்ட காலத்துக்கு தற்போதைய சலுகைகளை வழங்க விரும்பாது. மற்ற செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை வளைக்கவே இலவச அவுட்கோயிங், கவர்ச்சிகரமான டேட்டா என சலுகைகளை அறிவித்தது. தற்போது,  இந்திய செல்போன் பயன்பாட்டாளர்களின் சந்தையைத்  தனது பிடியின் கீழ் கொண்டு வரும் அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிவிட்டது. இது நல்லதா, கெட்டதா என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

இந்த நிலையில், `4ஜி சேவை தளத்தில் தன் ஆதிக்கத்தை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள ரிலையன்ஸ் நினைக்கிறது. எனவே, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 40 கோடியாக அதிகரித்து, முதலிடத்தைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டால், அதன் பின்னர் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படலாம் என்றும், அது வரை  கட்டண உயர்வு இருக்காது’ என்று பிரபல பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லைன்ச் தெரிவித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தலும் 2019 ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என்பதால், கட்டண உயர்வு இருக்காது என அந்த நிறுவனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜியோ

இதனிடையே சந்தை கைப்பற்றலின் தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக,   ( ஃபைபர் டு த ஹோம்)  என்ற பெயரில், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக ஃபைபர் கேபிள் மூலம் இணைதள சேவை அளிக்கும்  பிராட்பேண்ட் சேவைத் திட்டம் மூலம் 5 கோடி வாடிக்கையாளர்களைத் தனது நெட் ஒர்க்கின் கீழ் கொண்டு வர ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜியோவில் பயன்படுத்திய அதே யுக்திகளை பிராட் பேண்டிலும் கையாளப்போகிறது ரிலையன்ஸ். அதாவது, ஜியோவைப்போலவே தொடக்கத்தில் இலவச டேட்டாக்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரத் திட்டமிட்டுள்ளது.

இது தவிர,  தனது மொபைல் டவர்களின் எண்ணிக்கையையும் 2 லட்சத்திலிருந்து, அடுத்த 6 மாதங்களுக்குள் 2.36 லட்சமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய மொபைல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக உள்ளது. இதில் 50 % முதல் 60% பயன்பாட்டாளர்கள் இன்னமும் 2ஜி நெட் ஒர்க்கிலேயே உள்ளனர். அதாவது இன்டர்நெட் சேவை இல்லாமல் இருப்பவர்கள்.

கட்டண உயர்வு எப்போது?

இந்த நிலையில்,  ரிலையன்ஸ், தனது  4ஜி வாடிக்கையாளர்கள் தளத்தை மென்மேலும் தீவிரமாக விரிவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம், செல்போன் சேவை சந்தையில் 35 சதவிகித வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வோடஃபோன் ஐடியா  நிறுவனத்தின் 2ஜி வாடிக்கையாளர்கள் 4ஜி நெட் ஒர்க்குக்கு மாறுவது மிக மெதுவாகவே நடைபெகிறது. ஏர்டெல் நிறுவனத்திலும் இதே கதைதான். எனவே, இந்த வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறிவிடாமல் தக்கவைத்துக் கொள்ள இந்த நிறுவனங்கள் கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும்.

மொபைல் கட்டண உயர்வு

இத்தகைய சூழலில் ரிலையன்ஸ், போட்டி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கான இலக்கை எட்டிவிட்டால்,  அதன் பின்னர் கட்டணத்தை நிச்சயம் மாற்றியமைக்கும். அப்படி மாற்றியமைத்து விட்டால், அதைத் தொடர்ந்து வோடஃபோன் மற்றும் ஏர்டெல் போன்ற அதன் போட்டி நிறுவனங்களும் கட்டண உயர்வை அமல்படுத்திவிடும்.

இருப்பினும், இப்போதைக்கு செல்போன் சேவை கட்டண உயர்வு இருக்காது. ஆனால், விரைவிலேயே அதை எதிர்பார்க்கலாம். 

48 பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு

கமுதி ஒன்றியத்தில் உள்ள 48 பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

  கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் என 48 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 22 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் உள்ளிட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் வருகைப் பதிவேடு, இலவச நலத்திட்ட உதவி பதிவேடுகள், அடிப்படை வசதிகள், வருகைப் பதிவேடுகள், மாணவர்களின் கல்வித்திறன், வாசித்தல், ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறை, ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமையில் ஆய்வு செய்யபட்ட அறிக்கை குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் கமுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட 48 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

பேய் பிடித்து மாணவிகள் ஆட்டம்.! அதிர்ந்து போன ஆசிரியர்கள்.!! விபூதி போட மாவட்ட கல்வி நிர்வாகத்தை நாடிய ஆசிரியர்கள் !!

                                                
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள கிராமம் கீரநல்லூர். இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் 230 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் அந்த கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் சனிக்கிழமை அன்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது அங்குள்ள 7 ம் வகுப்பில் பயிலும் 15 மாணவிகள் திடீரென எழுந்து கூச்சல் போடவும்., ஆடி குதிக்கவும் துவங்கினர்.

இதனை கண்டு ஒருகணம் செய்வதறியாது திகைத்துப்போன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்., மாணவிகள் அமைதியாகும் வரை பொறுமை காத்தனர். பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அவர்களின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு அவர்களை அழைத்து செல்லக்கூறி அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால்., திங்கட்கிழமை வழக்கம்போல பள்ளி நடைபெற்றது. அப்போது அதே வகுப்பறையில் இருந்த மாணவிகள் மீண்டும் அதே போன்று செய்தனர்.

மீண்டும் அவர்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்பியவுடன் அவர்களிடம் இது குறித்து ஆசிரியர் கேட்ட போது., காரணம் தெரியாமல் திகைத்தனர். பின்னர் அவர்களின் பெற்றோரை மீண்டும் தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் அவர்கள் வந்தவுடன் அவர்களை மருத்துவமைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.

இந்த செய்தியானது மாணவர்களிடையே., அவர்களுக்கு பேய் பிடித்துள்ள்ளது என்று பரவவே., விசயம் சுற்றுவட்டார கிராமங்களில் தீயை போல பரவியது. இதனால் பயந்துபோன பிற பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் செய்வதறியாது திகைத்த ஆசிரியர்கள்., இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதற்க்காக மனநல ஆலோசகர்கள் மூலமாக ஆலோசனை வழங்குவதற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது

அண்ணா பல்கலை. தேர்வுகள்: 3 மாவட்ட கல்லூரிகளின் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு

                                            
கஜா புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகளுக்கான நாளைய (சனிக்கிழமை) தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.

கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. வியாழக்கிழமை முதல் திட்டமிட்டபடி அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பருவத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது.

இதையடுத்து, புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நிறைவடையாததைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு மட்டும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், இந்த 3 மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகளுக்கான மறு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம் ஆதார் விவரங்களுடன் முழுவிவரம் சேகரிப்பு:

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி இருப்பதால் ஆதார் விவரங்களுடன் அவர்களின் முழு விவரம் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகள் தினமும் காலை 9.15 மணிக்கு தொடங்கி மாலை 4.15க்கு முடிவடைகிறது. பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக, தலைமை ஆசிரியர் அறையில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறையாக இருந்து வருகிறது. இது போல மதியமும் பள்ளி துவங்குவதற்கு முன், ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடவேண்டும். 
குறித்த நேரத்தில் வரமுடியாத ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை சரிக்கட்டி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வருகின்றனர். இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிகல்வித்துறை சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக அனைத்து பள்ளிகளிலும், இந்தாண்டு இறுதிக்குள் பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அங்கு பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளின் எண்ணிக்கை, ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்து வருகின்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 41,805 பேருக்கும், 4,040 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 774 பேருக்கும் இந்த பயோமெட்ரிக் முறையில் அமலுக்கு வருகிறது. இதற்காக ₹15.30 கோடி செலவிடப்பட உள்ளது. மேலும் நிதிப்பற்றாக்குறை காரணமாக அரசுப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் உதவிகள் செய்ய அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்ைத செயல்படுத்துவதற்காக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படும். அதன்பிறகு தனி சாப்ட்வேரில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் ஆசிரியர்களின் கை ரேகை பதிவுகள் செய்யப்படும். இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்

வட மாவட்ட பள்ளிகளில், 60 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலி!

கவுன்சிலிங் போது நிரப்பப்படாத காலிப்பணியிடங்களுக்கு, முறைகேடாக டிரான்ஸ்பர் வழங்கியதால், வட மாவட்ட பள்ளிகளில், 60 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, ஜூன் மாதம் நடந்தது.
இதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட, 20 மாவட்டங்களுக்கு காண்பிக்கப்படவில்லை. இங்குள்ள காலியிடங்களுக்கு, முறைகேடாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.வட மாவட்ட பள்ளிகளில் இருந்து பெரும்பாலானோர், தென்மாவட்ட பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர். இதனால், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார் உள்ளிட்ட, வட மாவட்ட பள்ளிகளில், பெரும்பாலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாட திட்டம் மாற்றப்பட்டதால், தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த, திணறுகின்றனர்.
பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் பின்தங்கும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் சுரேஷ் கூறுகையில்,''கவுன்சிலிங்கின் போது மறைக்கப்பட்ட இடங்களில், தற்போது ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். முறையற்ற பணியிடமாறுதல் கண்டித்து, இருமுறை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காலியிடங்கள் நிரப்ப, தற்போது அறிவிப்பு வெளியிட்டால் தான், பிப். மாதத்திற்குள், புதிய ஆசிரியர்கள் நியமிக்க முடியும். எனவே, மாணவர்களின் நலன்கருதி, விரைவில் டி.ஆர்.பி., மூலம், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்,'' என்றார்

மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து புயல் நிவாரண நிதி திரட்டும் இளைஞர் :

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலியில் கல்லூரி மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து நிதி திரட்டுகிறார், பாளையங்கோட்டை சாந்தி நகரில் வசிக்கும் இளைஞர் பா.பாப்புராஜ். இந்தியாவில் எந்தப் பகுதியில் இயற்கை பேரிடர் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டாலும் திருநெல்வேலியில் உள்ள அன்னை தெரசா நண்பர்கள் குழு நிதி திரட்டி அளித்து வருகிறது. இதற்காக வித்தியாசமான முயற்சிகளை இந்த குழுவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பா.பாப்புராஜ் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட போது, திருநெல்வேலியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களைச் சுத்தம் செய்து கொடுத்து நிதி சேகரித்து, ஆட்சியர் மூலம் அனுப்பி வைத்தார். தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்க ளுக்கு வழங்க, ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று வாசலில் அமர்ந்து மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து கொடுத்து நிதி சேகரித்து வருகிறார். கஜா புயல் சேதங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த புகைப்படங்கள், செய்திகளை பெரிய அட்டையில் ஒட்டி அதை தன்னருகில் வைத்துக்கொள்கிறார். மாணவர்கள் மத்தியில் கஜா புயலின் பாதிப்பு குறித்தும், மக்கள் படும் வேதனைகள் பற்றியும் சொல்லி நிதி சேகரிக்கிறார். இதற்காக மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து அளிக்கிறார். தினமும் 2 மணிநேரம் இதுகுறித்து பாப்புராஜ் கூறிய தாவது: கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து மிகுந்த வேதனை அடைந்தேன். அங்குள்ள சகோதர, சகோதரி களுக்காக நிவாரண நிதி திரட்ட திட்டமிட்டேன். அதன்படி கடந்த 19-ம் தேதி யிலிருந்து வரும் 26-ம் தேதி வரை தினமும் 2 மணிநேரம் திருநெல்வேலியில் உள்ள ஒவ்வொரு கல்லூரி வாசலிலும் அமர்ந்து மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளேன். இதுவரை 2 கல்லூரிகளில் நிதி திரட்டி யுள்ளேன். மற்ற கல்லூரிகளிலும் நிதி திரட்டி நேரடியாக டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உதவ உள்ளேன்” என்றார் அவர். பலமுறை உதவியவர் ஏற்கெனவே இவர் குஜராத் பூகம்பம், சுனாமி பேரழிவு, இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக செருப்பு துடைத்து நிதி திரட்டி அளித்திருக்கிறார். தானே புயல் பாதிப்பின்போது திருநெல்வேலியில் கார்களை சுத்தம் செய்து நிதி திரட்டினார்.

 ஒரிசா புயல் வெள்ள பாதிப்பின்போது வெள்ள நிவாரண நிதி திரட்ட டீ விற்றிருக்கிறார்.கடந்த 19-ம் தேதியிலிருந்து வரும் 26-ம் தேதி வரை தினமும் 2 மணிநேரம் திருநெல்வேலியில் உள்ள ஒவ்வொரு கல்லூரி வாசலிலும் அமர்ந்து மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் நவம்பர் 30 வரை பள்ளி ,கல்லூரிகளுக்கு சிறப்புவிடுமுறை அளிப்பது குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் உயர்கல்வி மற்றும் பள்ளிகல்வி அமைச்சர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் :

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புறப் பகுதிகளுக்கே மின்சாரம் இன்னும் கிடைக்காத சூழலில், கிராமப் புறங்களுக்கு மின்சாரம் என்பது இன்னும் கூடுதல் நாட்களாகும் என்பது கண்கூடாக தெரிகிறது.  ஒரு குடம் குடிதண்ணீருக்கு சாலையில் காத்திருக்கும் பொதுமக்களை நேற்று மாலைவரை கண்கூடாக காணமுடிந்தது.

ஒருவேளை உணவுக்காக சாலையில் கையேந்தி நிற்கும் நிலை ஊருக்கே உணவளிக்கும் தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு வரும் என்பதெல்லாம்  கனவிலும் நினைத்துப்பார்க்க இயலாத சம்பவம்.



 அத்தோடு மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் ஊடகநண்பர்கள், தன்னார்வ அமைப்புகள் இவர்களுடன் ஆசிரியர்கள்தான் பெரும்பாலும் இணைப்புப் பாலமாக செயல்பட்டு வருகின்றனர். நம் டெல்டா மாவட்டங்களை பாதிப்பில் இருந்து விரைவில் மீட்டெடுக்கவும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் *நவம்பர் 30 வரை பள்ளி ,கல்லூரிகளுக்கு சிறப்புவிடுமுறை* அறிவித்து ஆசிரியர்கள் அனைவரையும் களப்பணிக்கும் ஈடுபடுத்திக்கொள்ளவும், பள்ளிகளை புணரமைப்பு செய்திட வாய்ப்பு வழங்கவும் வகைசெய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும்,  உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளிகளில் மரம் அகற்றுதல் என்பது தற்போதைய முதன்மை பிரச்சினையாக இருந்தாலும், அது எளிதில் சரிசெய்ய முடியும். மின்சாரம் இல்லாமல், குடிநீர் இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு வருதல் என்பது மிகச்சவாலானது.

 *குடிதண்ணீரும், உணவு சமைத்தலும், கழிப்பறை உபயோகமும் அடிப்படைப் பிரச்சினைகளாகும்.* எனவே இதனைக் கருத்தில் கொண்டு சரியான நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


தொடர்ந்து நிவாரணப்பணிகளில் தற்பொழுது இரவு வரை பெற்ற அனுபவத்தில் இதனைப் பதிவு செய்கிறேன்.

சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்.

பள்ளி செல்லும் 80 சதவீத குழந்தைகள் காலையில் பட்டினி! ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கு உத்தரவு :

தமிழகத்தில் பள்ளிக்கு வரும் குழந்தைகளில், 80 சதவீதம் பேர், காலை உணவை தவிர்ப்பதாகவும், சரிவிகித உணவு முறையை பின்பற்றாத அவர்களின் பெற்றோருக்கு ஊட்டச்சத்து குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவின் பேரில், சென்னையில் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு வகுப்புகள், பல கட்டங்களாக நடக்கின்றன. வரும் 30ம் தேதி வரை, நடக்கும் வகுப்புகளில், கோவையில் இருந்து 12 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.சித்த மருத்துவம் முதல் உளவியல் நிபுணர்கள் வரை, துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று, ஊட்டச்சத்து, சரிவிகித உணவு முறை, தன் சுத்தம் குறித்து, பல்வேறு தகவல்களை விளக்கி வருகின்றனர்.

பங்கேற்ற ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இந்த வகுப்பில், பள்ளி வளாகத்தில் துாய்மை பேணும் முறை குறித்து வலியுறுத்தப்படுகிறது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 25 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறையும், 50 பேருக்கு ஒரு சிறுநீர் கழிப்பறையும் அமைத்தல் வேண்டும். தமிழகத்தில் 90 சதவீத பள்ளிகளில், இக்கட்டமைப்பு வசதி இல்லை.
உடலுக்கு தினசரி தேவைப்படும் தண்ணீர் அளவில், 20 சதவீதம் கூட, பள்ளி நேரத்தில் மாணவர்கள் குடிப்பதில்லை.அடிக்கடி தண்ணீர் அருந்தினால், கழிப்பறைக்கு செல்ல வேண்டுமே, என்பதால் குடிநீர் அருந்தும் பழக்கத்தையே, மாணவர்கள் பின்பற்றுவதில்லை. உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல், சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.˜ மாதவிடாய் சமயங்களில், பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர தயங்குகின்றனர். முறையாக சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்த, பல பள்ளிகளில் வசதி இல்லாததே காரணம். இதை அமைத்து தர வேண்டியது, தலைமையாசிரியர்களின் கடமை என, வலியுறுத்தினர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

விழிப்புணர்வுக்கு திட்டம்!
காலையில் பள்ளிக்கு வருவோரில், 80 சதவீதம் பேர், உணவு சாப்பிடுவதில்லை. சரிவிகித உணவு உடலுக்கு கிடைக்காததால், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவராக வளர வாய்ப்புள்ளது. இதற்காக விரைவில், அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பயிற்சி வகுப்பு நடத்தி, மாணவர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


பெற்றோரே...கவனிங்க!
நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஜாஸ்மின் கிறிஸ்டல் கூறியதாவது:˜ பள்ளியில் உள்ள குடிநீரை, அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.˜ காலையில் சாப்பிடாத குழந்தைகள், இரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.˜ உடலுக்கு தேவையான கலோரியை, காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் என, பிரித்து சாப்பிட வேண்டும்.˜ வளரும் குழந்தைகளுக்கு, சிவப்பு அவலை, பாலில் சேர்த்து அளித்தால், இரும்புச்சத்து அதிகரிக்கும்.பெற்றோர்களுக்கு இது குறித்து அறிவுறுத்த, கூட்டத்தில் டாக்டர்கள் வலியுறுத்தினர்.இவ்வாறு, அவர் கூறினார்

NMMS தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு :

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுகளுக்கு (என்.எம்.எம்.எஸ்.,) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு வரும் டிச.1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள யூஸர் ஐ.டி, பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி நுழைவுச் சீட்டுகளை நவ.22 வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் நவ.26 முதல் விண்ணப்பிக்கலாம் :

தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நவ.26-ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு 1.1.2019 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் நவ.26-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் டிச.5-ஆம் தேதி புதன்கிழமை வரை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Nodal Centre)  நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.
முதல் முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவித்துள்ளார்

NEET - 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் வினாத்தாளில் குளறுபடி காரணமாக 196 மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.