பெண் ஆசிரியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காடு வல்லக்கடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட நல்லூரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், அப்பகுதியில் உள்ள, 90 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், தலைமை ஆசிரியர் சத்யராஜ் மற்றும் மூன்று பெண் இடைநிலை ஆசிரியர் உள்பட, ஐந்து பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஹஜ்ரீமா என்ற இடைநிலை ஆசிரியை, ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். அப்புகாரில், கூறியிருப்பதாவது: பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்யராஜ், நான் வகுப்பு எடுக்கும் போது, வகுப்பறையில் அமர்ந்து கொண்டு கவனிப்பது மற்றும் பாலியல் சீண்டல் முயற்சிகளில் ஈடுபட்டும் வந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்த நிலையில், என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார்.முதல் பருவ தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிக்கு வரும் போது, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என, மிரட்டல் விடுத்தார். இதனால், கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில், ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கேஷக்தாவூத், பள்ளியில் சக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி, அறிக்கையை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பித்தார். இந்த அறிக்கை, இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டு, இயக்குனரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ், நேற்று நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்யராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். பாலியல் புகாரில் சிக்கி, தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் ஆன சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.