- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
7/11/15
“அகரம் பவுண்டேஷன்” - தன்னார்வலர் ஆசிரியர்கள் தேவை!
அகரம் பவுண்டேஷன்” சார்பாக பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் அகரம் மாணவர்களுக்குத் திண்டிவனம் அருகில் உள்ள கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளயில் வாரந்தோறும்சிறப்பு வகுப்புகள்நடைபெறுகின்றன. இந்த சிறப்பு வகுப்பில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்பும் ஆசிரியர்கள்,
அகரம் மென்டார் திரு. ஜே.சுரேஷ் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்றால் நலம். தொடர்புக்கு J. சுரேஷ் 9894637974 Email. to jvvsureshin@yahoo.com.

விரிவுரையாளர் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு
விரிவுரையாளர் போட்டி தேர்வுக்கான பாடத்திட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்; மாவட்டங்களில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சிநிறுவனம்; அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் போன்ற வற்றில் பணிபுரிய,போட்டித் தேர்வு மூலம், அவ்வப்போது விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதனால், தேர்வு எழுதுவோர், தேர்வுக்கு தயாராக வசதியாக, போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம், பாடங்கள் வாரியாக, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

6/11/15
மாணவர்களுக்கு காய்ச்சலா? தகவல் தெரிவிக்க அறிவுரை
பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு தகவல் தெரிவிக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளால், பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். காய்ச்சல் அறிகுறியுடன் சில மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், தொற்று கிருமிகளால், டெங்கு, பன்றிக்காய்ச்சல் சக மாணவர்களுக்கும் எளிதாக பரவி விடுகிறது. இதனால், பள்ளி தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளியிலுள்ள நீர் தேக்க பகுதிகள், குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வுகளை, மாவட்ட கல்வி அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காய்ச்சலால் பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் மாணவர்கள் குறித்தும், தொடர் காய்ச்சல், கடுமையான சளி, இருமல், உடல் நிலையில் மாற்றம் போன்ற அறிகுறிகளுடன் பள்ளிக்கு மாணவர்கள் வந்தால், சக மாணவர்களிடம் இருந்து மாணவனை தனிமைப்படுத்தி அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது

டெங்கு' பரவுவதை தடுக்க புதிய திட்டம்
டெங்கு' காய்ச்சல் பரவுவதை தடுக்க, 300 குடும்பங்களுக்கு, ஒரு சுகாதாரப் பணியாளரை நியமிக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவு விவரம்:* சுகாதார பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும்* ஒவ்வொரு வீட்டுக் கும் ஆறு நாட்களுக்கு ஒரு முறை, சுகாதார பணியாளர் செல்லும் வகையில், செயல் திட்டம் வகுக்க வேண்டும்* மக்களுக்கு நில வேம்பு கஷாயம் வழங்கு வதுடன் நோய் குறித்த, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இயற்கை பாடம்! வனத்தை பாதுகாக்க புது முயற்சி
தண்ணீர் சிக்கனம், வனம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு குறித்து, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கவும், 'இயற்கை பாடம்' நடத்தப்படவுள்ளது.
நாட்டின் வனப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. வன உயிரினங்களுக்கான உணவு, தண்ணீர் தேவை வனத்தினுள் குறைந்து வரும் நிலையில், அவை வனத்தை விட்டு வெளியே வருகின்றன. இதனால், மனித - வன விலங்கு மோதல் ஏற்படுகிறது. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில், சமீப காலமாக, யானை, சிறுத்தை, கரடி, காட்டு எருமை போன்ற விலங்குகள் புகுந்து விடுவது அதிகரித்து வருகிறது. இதனால், மனித - விலங்கு மோதலும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
வன உயிரினங்களை பாதுகாத்தால் தான், மனிதர்களுக்கான காற்று, குடிநீர், உணவு போன்றவை தடையின்றி கிடைக்கும். இதுபற்றிய புரிதல் இல்லாததால், பல இடங்களில் போராட்டங்களும், பிரச்னைகளும் வெடிக்கின்றன. இயற்கையை பாதுகாக்க வேண்டும், வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற உணர்வை மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும்.
இதற்காக, 'நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி' அமைப்பு வாயிலாக, தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில், கோவை மாநகரம், புறநகரம் மற்றும் நீலகிரி மாவட்ட போலீசாருக்கு, வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. அதேபோன்று, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம், 'நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி', வனத்துறை இணைத்து, செயல்வடிவம் கொடுத்துள்ளது.
மாநகராட்சியிலுள்ள, 41 துவக்கப்பள்ளிகளில் பணியாற்றும், 199 ஆசிரியர்கள்; 15 நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும், 109 ஆசிரியர்கள்; 11 உயர்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், 103 பேர்; 16 மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், 408 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம், 83 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை, தலா, 274 பேர் வீதம், மூன்று பிரிவுகளாக பிரித்து பயிற்சி வகுப்பு நடக்கிறது. சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில், 'பயிற்றுனர்களுக்கான பயிற்சி' என்ற தலைப்பில், 'இயற்கை பாடம்' போதிக்கப்படுகிறது.
காலை, 10:00 - மாலை 4:00 மணி வரையிலும் வகுப்பு நடக்கிறது. மொத்தம் மூன்று நாட்கள் பயிற்சியில், மூன்று பிரிவுகளாக பயிற்சி வகுப்பு நடக்கிறது. தண்ணீர் பாதுகாப்பு, வனஉயிரின பாதுகாப்பு, மனித - விலங்கு மோதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகிய தலைப்புகளில், 'பவர் பாயின்ட்' மற்றும் செயல்திட்டம் முறையில் வகுப்பு நடக்கிறது. வனத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் அமைப்பினர், வனத்துறை கால்நடை மருத்துவர்கள், துறை சார்ந்த வல்லுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
தொடர்ந்து, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். சுழற்றுச்சூழலை பாதுகாக்க இலவசமாக இப்பயிற்சி நடத்தப்படுகிறது

புதிய கல்விக் கொள்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும்: பேராசிரியர் ராமானுஜம்
மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று, கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், கல்வியாளருமான ஆர்.ராமானுஜம் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஆகிய அமைப்புகளின் சார்பில் "உயர் கல்வி எதிர்கொண்டுள்ள சவால்கள்' என்ற தலைப்பில் சென்னையில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய கல்விக் கொள்கை குறித்து கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், விஞ்ஞானியுமான ஆர்.ராமானுஜம் பேசியது: புதிய கல்விக் கொள்கைக்கான விவாதப் பொருள்களிலிருந்து அந்தக் கொள்கை எப்படியிருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். இந்தக் கொள்கை கல்வி தொடர்பான பிரச்னைகளை முழுக்க, முழுக்க நிர்வாக ரீதியான பிரச்னையாகவே பார்க்கிறது.
கல்வியின் ஆன்மாவை இது தொடவில்லை. இந்த விவாதப் பொருள்களில் ஆசிரியர்கள் மிகவும் தரக்குறைவானவர்களாகப் பார்க்கப்படுவதை அறிந்துகொள்ளலாம். அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் கல்வி பெறுவதில்லை, உயர் கல்வி நிறுவனங்களுக்குள் அவர்களால் இன்னமும் வர முடியவில்லை என்பதுதான் நமது மிகப்பெரிய பிரச்னை. ஆனால், இந்தியாவில் உருவாக்குவோம் என்கிற திட்டத்துக்காக பள்ளிப் படிப்பு முடித்த மாணவர்களிலிருந்து தொழிலாளர்களை உருவாக்குவதாகவே இந்தப் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சமூகத்தில் உள்ள பிரிவுகளையும், வேறுபாடுகளையும் நியாயப்படுத்தும் பல்வேறு அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளன. சமூக அவலங்களைப் போக்கும் கருவியாக கல்வியை இந்தப் புதிய கொள்கை பார்க்கவேயில்லை. மிக முக்கியமாக கலாசார ஒருமுகத்தன்மையையும் இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. தொழில் நிறுவனங்களின் நலன்கள், மதவாதக் கொள்கைகள் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து புதிய கல்விக் கொள்கையாக தரப்பட உள்ளது.
எல்லோருக்கும் வேலை தரப்போகிறோம் என்கிற புதிய கொள்கையை எதிர்ப்பது சுலபமல்ல. ஆனால், கல்வி பற்றிய அக்கறை கொண்ட அனைவரும் எதிர்க்க வேண்டியதுதான் இந்தப் புதிய கொள்கை. உயர் கல்வியில் அடிப்படையான மாற்றங்கள் தேவை. ஆனால், இந்த மாற்றங்கள் தேவையில்லை என்றார் அவர். சந்தைப் பொருளாக மாற்றக் கூடாது: அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் சத்கோபால்:
உலக வர்த்தக அமைப்பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா திறந்துவிட உள்ளது. நைரோபியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெறவில்லை என்றால், அதை எப்போதும் திரும்பப் பெற முடியாது. கல்வி என்ற நிலையில் இருந்து சந்தையில் விற்கப்படும் பொருளாக அது மாற்றப்பட உள்ளது. மாணவர்கள் நுகர்வோர்களாகவே பார்க்கப்படுவர். உயர் கல்வியை பணம் கொடுத்து மட்டுமே கற்க முடியும் என்ற நிலை உருவாகும். எனவே, இதை அனைவரும் எதிர்க்க வேண்டும். இப்போதைய உயர் கல்வி முறையில் நிச்சயம் மாற்றம் தேவை. ஆனால், அதை சந்தைக்குத் திறந்துவிடுவது தீர்வாகாது என்றார் அவர். மனோன்மணீயம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி: மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் ஒரேயொரு கல்வியாளரைத் தவிர மீதமுள்ள அனைவரும் அதிகாரிகள்தான்.
உலக வர்த்தக அமைப்பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதன் மூலம் உயர்கல்வி முழுக்க, முழுக்க சந்தைப் பொருளாக மாறும். இந்த ஒப்பந்தம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடுகிறது. இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெறவில்லையென்றால் நமது தலையெழுத்தை மாற்ற முடியாது. இப்போது நமது கல்விக்கும், ஜனநாயகத்துக்கும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களுடனை இணைந்து மிகப்பெரிய போர்க்குரல் எழுப்பினால் மட்டுமே மீட்சி உண்டு என்றார் அவர். புதிய கல்விக் கொள்கை குறித்த புத்தகத்தை கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் ஜி.முனுசாமி பெற்றுக்கொண்டார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, லயோலா கல்வியியல் கல்லூரியின் செயலாளர் டோமினிக் ராய்ஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொருளாளர் கே.செந்தமிழ்ச்செல்வன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பி.ரத்னசபாபதி, பேராசிரியர் மணி, பேராசிரியர் எஸ்.மோகனா உள்ளிட்டோர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

அரசு ஊழியருக்கான பி.எஸ்.என்.எல். கட்டணச் சலுகையில் 75 சதவீதம் குறைப்பு
அரசு ஊழியர்களுக்கு பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் வழங்கி வந்த தொலைபேசி கட்டணச் சலுகைகள் 75 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
"தரங் என்ற திட்டத்தின் கீழ் தரைவழி தொலைபேசி (லேண்ட் லைன்), பிராட்பேண்ட், பி.போன் உள்ளிட்ட பல்வேறு தொலை தொடர்புச் சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொலைபேசி வாடகைக் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி சலுகையை வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு அந்தச் சலுகையைத் திடீரெனப் பாதியாகக் குறைத்தது. இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சலுகையில் மேலும் 5 சதவீதம் அளவுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அதிரடியாகக் குறைத்துள்ளது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் சந்தைப் பிரிவு (Marketing Wing) பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மாதந்தோறும் தங்களின் தொலைபேசி வாடகைக் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி பெற்று வந்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்தச் சலுகை 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
அதேபோல், ஓராண்டுக்கான தொலைபேசி கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும்பட்சத்தில், இரண்டு மாத வாடகைக் கட்டணத்தை தள்ளுபடியாகப் பெற்றும் வந்தனர். இந்த சலுகையும், அப்போது ஒரு மாதமாக குறைக்கப்பட்டது.
75 சதவீதம் அளவுக்கு சலுகைக் குறைப்பு: சுமார் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், தற்போது வழங்கப்படும் 10 சதவீத சலுகையில் 5 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வுப் பெற்ற அரசு ஊழியருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அக்டோபர் 1-ஆம் தேதி முதல், இந்தப் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் இனி தங்களின் தொலைபேசிக் கட்டணத்தில் 5 சதவீதம் மட்டுமே சலுகையாகப் பெற முடியும். இதுவரை அரசு ஊழியர்கள் பெற்று வந்த சலுகையில் 75 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இலவச அழைப்புச் சலுகையும் குறைப்பு: வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பி.எஸ்.என்.எல்.தரைவழித் தொலைபேசி வாயிலாக, இரவு நேரத்தில் (9 முதல் 7 மணி வரை) அனைத்து தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கும் இலவசமாகத் தொடர்பு கொள்ளும் வசதியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதிலும், அரசு ஊழியர்களுக்கு சில மாற்றங்களைக் கொண்டுள்ளது. அதாவது, இனி வரும் நாள்களில் இரவு நேரத்தில் தரைவழித் தொலைபேசி வாயிலாக, பி.எஸ்.என்.எல். தொலைபேசி, செல்லிடப்பேசியைத் தொடர்பு கொண்டால் மட்டுமே இலவச அழைப்பாக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால், அதற்குரியக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
இழப்பை ஈடுகட்ட நடவடிக்கை: கடந்த 2004-ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லாபம் ரூ.10,183 கோடியாக இருந்தது. ஆனால், அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் அதாவது 2014-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் ரூ.8,234 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதேபோல, எம்டிஎன்எல் நிறுவனமும் நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நஷ்டத்தை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இந்தச் சலுகைக் குறைப்பு இருக்கலாம் என்றனர் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்.

அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைரூ.100 கோடியில் திட்டம்:
தமிழக அளவில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் ரூ.100 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விபரங்களை கல்லுாரி கல்வி இயக்குனரகம் சேகரித்து வருகிறது.மாநில அளவில் 72 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் இயங்குகின்றன. இதில், 10 கல்லுாரிகளுக்கு மேல் 'கிரேடு'- 1 அந்தஸ்து பெற்றுள்ளன. நடப்பு ஆண்டு பெரும்பாலான கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே சில கல்லுாரிகளில் போதிய வகுப்பறைகள் இன்றி மரத்தடியில் வகுப்புகள் நடப்பதாகவும், ஆய்வகம், நாற்காலி, மேஜை உள்ளிட்ட வசதியில்லை என புகார் எழுந்தது.
ரூ.100 கோடி திட்டம்: இந்நிலையில், அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை வசதிகளை ஏற்படுத்த அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் தேவை குறித்த பட்டியலை வழங்க, கல்லுாரிகளுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு கல்லுாரி அலுவலர் ஒருவர் கூறுகையில்,“ கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை,சேர்,மேஜை, அறிவியல் ஆய்வக உபகரணங்கள் தேவை குறித்த அறிக்கை தர அரசு கேட்டதால், சேகரித்து அனுப்பி வருகிறோம். விரைவில் அரசு கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

பொறியியல் மாணவியர் உதவித்தொகை அறிவிப்பு:
நடப்பு கல்வியாண்டில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவியர், 4,000 பேருக்கு, மத்திய அரசின், 'பிரகதி' திட்டத்தில், உதவித் தொகை வழங்கப்படுகிறது.இதேபோல், இப்படிப்புகளில் சேர்ந்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள், 1,000 பேருக்கு, 'சாக் ஷம்' என்ற திட்டத்தில், உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
இவர்களுக்கு, கல்வி கட்டணமாக, 30 ஆயிரம் ரூபாய்; மாதம், 2,000 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற, கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கு மட்டும், உதவித் தொகை கிடைக்கும்.உதவித்தொகை பெற, குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம், நவ., 23 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளி 'புஸ்:' ஆசிரியர்கள் தவிப்பு-Dinamalar:
ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், தீபாவளி பண்டிகை கொண்டாட முடியுமா என, அவர்கள் கவலைஅடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில், 10 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட, 20 ஆயிரம் ஆசிரியர்கள், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான மாத ஊதியம், மத்திய அரசின் நிதி உதவியில் இருந்து வழங்கப்படுகிறது.
இந்த ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டு களுக்கான ஊதிய ஆணை வழங்க, தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை கடிதம் அனுப்பியது. ஆறு மாதங்களாக இந்த கடிதம் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.அதனால், ஒவ்வொரு மாதமும் புதிய அரசாணை பிறப்பித்த பின், ஊதியம் வழங்கப்படும். ஆனால், இந்த மாதம், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வரவில்லை.இதை கண்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் ஊதிய வழக்கு எண் SLP . C. 9109/2015. I. A. No. 6/2015 விசாரணை விபரம்:
இன்று உச்ச நீதிமன்றத்தில் 6 வது ஊதியகுழு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினை மற்றும் இரு வேறுபட்ட ஊதிய முறையை ரத்து செய்து 1.1.2015 முதல் டிப்ளோமா கல்வி தகுதி படி 1-6-88 முதல் பெற்று வந்த ஊதியம் ஆறாம் ஊதிய குழுவில் மறுக்கப்பட்டுள்ளது .இதை ரத்து செய்து ஊதியம் 9300+4200 வழங்கிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .அதன் விசாரணை இன்று 5-11-2015 நடைபெற்ற இருந்து .ஆனால் விசாரணை பட்டியலில் இன்று இடம்பெற வில்லை .நமது மூத்த வழக்கறிஞர் .திரு.ந்ந்தகுமார் அவர்கள் தெரிவித்த படி நாளை அல்லது 14-1-2015 அன்று விசாரணைக்கு வரும் என தெரிவித்தார்கள் .நல்லது நடக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதியம் டாட்டா சங்க வழக்கில் மாற்றம் கிடைக்கும் .அனைவரும் ஆதரவு தாரீர் .இழந்த உரிமை மீட்போம் ........டாட்டா கிப்சன் .9443464081.
மீதியுள்ள Laptop -களை, உடனடியாக அனுப்புமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரிகள் உத்தரவு, அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை
கடந்த, 2013 - 14 கல்வி ஆண்டு தமிழக அரசின் இலவச திட்டத்தில் Laptop பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கியது போக, மீதி உள்ளவற்றை திருப்பி அனுப்புமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மீதியிருக்கும் Laptop பற்றிய கணக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இன்னும் வரவில்லை.
இந்நிலையில், மீதியுள்ள Laptop -களை, உடனடியாக அனுப்புமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழ்நாடு மின்னணு கழகமான, ‘Elcot‘ நிறுவனத்துக்கு, நாங்ள் கணக்கு கொடுக்க வேண்டும். எனவே, ஓராண்டாக பதுக்கி வைத்த, Laptop -களை உடனடியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளோம். அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

B.E, - B.Tech., மற்றும் Diploma of Engineering படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மத்திய அரசின், 'பிரகதி' திட்டத்தில் B.E, - B.Tech., மற்றும் Diploma of Engineering படிப்புகளில் சேர்ந்துள்ள 4,000 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதேபோல், 'சாக் ஷம்' என்ற திட்டத்தில் B.E, - B.Tech., மற்றும் Diploma of Engineering படிப்புகளில் சேர்ந்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள், 1,000 பேருக்கு, உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
இவர்களுக்கு, கல்வி கட்டணமாக, 30 ஆயிரம் ரூபாய்; மாதம், 2,000 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற, கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கு மட்டும், உதவித் தொகை கிடைக்கும்.
உதவித்தொகை பெற, குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம், நவ., 23 வரை விண்ணப்பிக்கலாம்.

5/11/15
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் தயாரிக்க உத்தரவு
வரும், 2016 மார்ச் மாதம் நடக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வில், கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை, ஆப்லைன் முறையில் தயாரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் மாதத்தில் நடத்தப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக, தேர்வுத்துறையின் செயல்பாடுகளான, தேர்வுக்கு விண்ணப்பிப்பது, ஹால்டிக்கெட் வழங்குவது, தேர்வு முடிவு வெளியிடுவது, தற்காலிக சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட அனைத்தும் இணையதளம் வழியாக செயல்படுத்தப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மாணவர்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், உறுதிமொழிப்படிவமும், கடந்த மாதத்தில், பள்ளிகளில் சேகரிக்கப்பட்டது.
தற்போது, சேகரிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் விபரங்களை ஆப்லைன் முறையில், பட்டியலாக தயாரித்து வைத்துக்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது தேர்வுத்துறையின் இணையதளத்தில், இதற்காகவே உருவாக்கப்பட்ட சாப்ட்வேரை டவுன்லோடு செய்து, அதில், மாணவர்களின் விபரங்களை பட்டியலாக தயாரிக்க வேண்டும்.
இப்பணிகளை, நவம்பர், 2ம் தேதி முதல், நவம்பர், 16ம் தேதிக்குள் முடித்து, பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், பின்னர் அறிவிக்கும் தேதியில், அவற்றை தேர்வுத்துறை இணையதளத்தில், அப்லோடு செய்ய வேண்டும் எனவும், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
லேப் - டாப்' பதுக்கல் பள்ளிகளுக்கு உத்தரவு
தமிழக அரசின் இலவச திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள்; பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது. கடந்த, 2013 - 14 கல்வி ஆண்டில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கியது போக, மீதி உள்ளவற்றை திருப்பி அனுப்புமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மீதியிருக்கும் லேப் - டாப் பற்றிய கணக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இன்னும் வரவில்லை. இந்நிலையில், மீதியுள்ள லேப் - டாப்களை, உடனடியாக அனுப்புமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழ்நாடு மின்னணு கழகமான, 'எல்காட்' நிறுவனத்துக்கு, நாங்ள் கணக்கு கொடுக்க வேண்டும். எனவே, ஓராண்டாக பதுக்கி வைத்த, லேப் - டாப்களை உடனடியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளோம். அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.-
பி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்
பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, நாடு முழுவதும் பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை அறிமுகமாகிஉள்ளது.இந்த முறைப்படி, பி.எட்., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் தேர்வுக்கான மதிப்பெண் மட்டுமின்றி, சி.சி.இ., முறையில், 30 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன், வகுப்புகளில் ஆர்வமாக பங்கேற்றல், செய்முறைப் பயிற்சியில் ஈடுபாடு, கற்றல் பயிற்சிக்கான திட்ட வரைவு தயாரித்தலில் ஆர்வம் மற்றும் புதுமை என, மாணவர்களின் செயல்திறன்கள் அடிப்படையில்,சி.சி.இ., மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது.யோகா உள்ளிட்ட உடல்நலம் குறித்த பாடங்களுக்கும் தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. பி.எட்., மாணவர்கள், முதலாம் ஆண்டில், 20; இரண்டாம் ஆண்டில், 80 என, மொத்தம், 100 நாட்கள், பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் போல், 'பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மூலம், கருத்தரங்கம் நடத்தி, பயிற்சித் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்று புதிய முறைகளுடன் படித்து, நல்ல கல்வித் தரத்துடன் பி.எட்., முடிக்க உள்ள பட்டதாரிகள், இனிமேல் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படும் என்றும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.மாநிலப் பள்ளிகளில், 8ம் வகுப்பு வரையிலும்; மத்திய இடைநிலைக் கல்வி வாரிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலும், கடந்த 2010ம் ஆண்டு முதல், சி.சி.இ., முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் படிப்புக்கும், சி.சி.இ., மதிப்பெண் திட்டம் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)