யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/11/15

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:-

*.டிசம்பர் 7 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
*.டிசம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 9 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
*.டிசம்பர் 10 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள
*.டிசம்பர் 12 - சனிக்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்
*.டிசம்பர் 14 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் கல்வி), நர்சிங் (பொது), கணக்குப் பதிவியல், கணக்குத் தணிக்கை
*.டிசம்பர் 16 - புதன்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மென் சிவில், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை
*.டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல், பொது இயந்திரவியல் தாள்-2, எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் தாள் 2, தொழில்கல்வி மற்றும் தணிக்கை
*.டிசம்பர் 21 - திங்கள்கிழமை - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்
*.டிசம்பர் 22 -செவ்வாய்க்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), புள்ளியியல், கணக்குப் பதிவியல்மற்றும் கணக்குத் தணிக்கை, செய்முறைத் தேர்வு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)
*.தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிஷங்கள்வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை:

*.டிசம்பர் 9 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
*.டிசம்பர் 10 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 12 - சனிக்கிழமை - ஆங்கிலம்முதல் தாள்
*.டிசம்பர் 14 - திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 16 - புதன்கிழமை - அறிவியல்
*.டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல்
*.டிசம்பர் 21 - திங்கள்கிழமை - கணிதம்

தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

Flash News:தமிழகத்தில் கனமழை காரணமாக 24 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (16.11.2015)விடுமுறை

*ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*புதுக்கோட்டை  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*கன்னியாகுமரி  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*நாமக்கல் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்டபள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*வேலூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவண்ணாமலை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*ராமநாதபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை
*திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 
*சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

TNPSC : குரூப்-4 பதவிக்கான கலந்தாய்வு நாளை திட்டமிட்டப்படி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சிஅறிவித்துள்ளது.குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.


இந்தப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2014 டிசம்பர் 21 ஆம் தேித நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து பணியாளர் தேர்வுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நாளை 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலமும், மின்னஞ்சல், குருந்தகவல் மூலமும் தகுதியானவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் கனமழை; பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம் மற்றும் பதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. 


சென்னையிலிருந்து 300 கிலோமீட்டருக்கு தொலைவில், இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ள இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணிநேரத்திற்குள், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 25 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மண்டல ஆய்வு வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்:

தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக அடுத்த 24 மணி நேரங்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தில் மழையளவு 35 சதவீதமாக உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.சென்னையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு:தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. சென்னை உட்பட மாநிலத்தின் பலபகுதிகளில் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புபணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஆந்திராவிலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் 140 பேர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், சென்னை, விழுப்புரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
கனமழை காரணமாக
01.திருச்சி
02.நாமக்கல்
03.விழுப்புரம்
04.திருவண்ணாமலை
05.கடலூர்
06.நாகப்பட்டினம
்07.காஞ்சிபுரம
்08.கன்னியாகுமரி
09. வேலூர
்10.சென்னை11. திருவள்ளூர
்12.திருவாரூர
்13. புதுக்கோட்டைமாவட்டங்களில் நாளை (16ம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

01.தர்மபுரி
02.பெரம்பலூர்
03.கரூர்
04.அரியலூர
்05.தஞ்சாவூர
்06.நீலகிரி
07.கிருஷ்ணகிரி
08.சேலம்
09. ஈரோடு
10. திருப்பூர்
மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் 34 நிவாரண மையங்கள்:

தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக , ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு 34 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு, அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் விஜயகுமார் தெரிவித்தார் . இந்த முகாம்களை அமைச்சர் சுந்தர்ராஜன் பார்வையிட்டார்.

விமான சேவை பாதிப்பு:

சென்னையில் பெய்து வரும் மழையால் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருந்து கோவை வரும் விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே போல் கோவை - சென்னை விமானமும் பறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் நாளை விடுமுறை:

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (16ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

ரூ.80க்கு 'செக்' மாணவர்கள் 'ஷாக்'

சேலம்:அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளில் பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. அதற்கான பரிசுத்தொகை, 100 ரூபாய் மற்றும், 80 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதால், பெற்றோர், மாணவ, மாணவியர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒன்று முதல், ௮ம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியரிடையே, பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டி, பள்ளி அளவில், நடத்தப்பட்டது.


இதில், ஒன்று முதல், 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஓவியப்போட்டியும், 4 மற்றும் 5ம் வகுப்புக்கு பேச்சுப்போட்டியும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை, நடத்தப்பட்ட போட்டிகளில், முதல் பரிசாக, 100 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 80 ரூபாயும் வழங்கப்பட்டது. 6ம் வகுப்பு முதல், ௮ம் வகுப்பு வரை, முதல் பரிசாக, 150 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 100 ரூபாயும் வழங்கப்பட்டது.பரிசுத்தொகை, வங்கியில் செலுத்தி மாற்றத்தக்க வகையிலான, 'செக்'காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, 80 ரூபாய்க்கான, 'செக்,' பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு, மாணவன் பெயரில் வங்கிக்கணக்கு துவக்க வேண்டும். அதற்கு குறைந்தது, 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை கட்ட வேண்டும். இதனால், பரிசுத்
தொகையாக வழங்கப்பட்ட, 'செக்' கை, பல பெற்றோர் பணமாக மாற்ற முயற்சிக்கவில்லை.

மழை விடுமுறையை ஈடுகட்ட அரையாண்டு தேர்வு லீவு ரத்து?

14 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (16.11.15) விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், 
திருச்சி, நாகை, இராமநாதபுரம், திருவாரூர், சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும்,

கரூர், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு  மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் (16.11.2015) - திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

15/11/15

வடதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும் மழையை பெய்விக்கும் என்று வானிலை இலாகா இன்று பகல் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து ஒரு உத்தரவு வெளியானது. அதன்படி, மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் ஜெயலலிதா.

இந்த அதிகாரிகள் மேற்பார்வையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள அதிகாரிகளுடன் இந்த அதிகாரிகளும் இணைந்து, ஒருங்கிணைந்து, சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டும், அவ்வாறு ஏற்பட்டாலும், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உத்தரவு.


இதன்படி, வேலூர் மாவட்டத்திற்கு சபீதா, விழுப்புரம்-உதய சந்திரன், நாகப்பட்டினம்-சிவ்தாஸ் மீனா, ராமநாதபுரம்-விஜயகுமார், திருவாரூர் மற்றும் தஞ்சை-சத்ய கோபால், புதுக்கோட்டை-சமயமூர்த்தி, தூத்துக்குடி-குமார் ஜெயந்த், திருநெல்வேலி-செந்தில்குமார், கன்னியாகுமரி-அதுல் ஆனந்த், கடலூர்-ககன்தீப் பேடி, காஞ்சிபுரம்-பிரபாகர், திருவண்ணாமலை-பிரதீப் , திருவள்ளூர்-பிரபாகர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி-ராஜேஸ் லக்கானி, காஞ்சீபுரம்-ராஜாராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அமைச்சர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களிலேயே இருக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை மற்றும் சேத தடுப்பு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 தனி தேர்வர்: 16 முதல் விண்ணப்பம்

சென்னை:'மார்ச்சில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், 16 முதல், 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.ஏற்கனவே தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும், 10ம் வகுப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில்,
நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான விவரங்களை அங்கே பெறலாம். சேவை மைய முகவரி, http://www.tndge.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

'மழை சேதத்தை கணக்கிடுங்கள்':அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

சென்னை:மழை சேதங்களை கணக்கிடும்படி, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள், அரசு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

எனவே, அனைத்து மாவட்டங்களிலும், மழையால் ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டு, உடனுக்குடன் தெரிவிக்கும்படி, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மழை சேதத்தை கணக்கிட, தாலுகா வாரியாக, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமையிடத்தில் தங்கி இருக்க வேண்டும்:மழையால் கல்வி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

தொடர் மழை எதிரொலியாக, பள்ளி மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தலைமையிடத்தில் தங்கியிருக்க வேண்டும்' என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, மாநில தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் பலத்த சேதம் அடைந்த நிலையில், பள்ளி மாணவரின் நலன் தொடர்பாக, முன்னேற்பாடு குறித்து, அனைத்து தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், மாநில தொடக்க கல்வி இயக்குனர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பள்ளிகளின் மேற்கூரையில், மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்தால், அதன் அருகில் மாணவ, மாணவியர் செல்லாத வகையில் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். உணவு இடைவேளை, காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவியரின் வருகை எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மின் கசிவு ஏற்பாடாத வகையில் பராமரிக்க வேண்டும். பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி, கழிப்பறை ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், குடிநீரை காய்ச்சி குடிக்க வலியுறுத்தல் வேண்டும். பருவ மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், அவர்களின் தலைமை
யிடத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

தேனி:பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, நவ., 16 க்குள் தயாரிக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 2016 மார்ச்சில், பொது தேர்வு நடத்த தேர்வு துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து ஆன்-லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதில் மாணவரின் பெயர், போட்டோ, பிறந்த தேதி, தந்தை, தாய் பெயர், ஜாதி, மதம், ஆதார் எண் போன்ற விவரங்கள் இடம்பெறுகின்றன. அந்த பெயர் பட்டி யலை மாணவர்கள் சரிபார்த்த பின், வகுப்பு ஆசிரியர் ஒப்புதல் வழங்குகின்றனர்.


தவறு இல்லாத மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்காக மிக கவனமாக நடந்து வரும் இப்பணியை வரும் நவ., 16 க்குள் முடித்து தேர்வு துறைக்கு அனுப்ப வேண்டும்.
இதேபோல் ஏப்ரலில், ௧௦ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியலையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து மேல்நிலை, மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு பள்ளி கல்வித்தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

ரூ.80க்கு 'செக்' மாணவர்கள் 'ஷாக்'

சேலம்:அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளில் பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. அதற்கான பரிசுத்தொகை, 100 ரூபாய் மற்றும், 80 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதால், பெற்றோர், மாணவ, மாணவியர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒன்று முதல், ௮ம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியரிடையே, பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டி, பள்ளி அளவில், நடத்தப்பட்டது.


இதில், ஒன்று முதல், 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஓவியப்போட்டியும், 4 மற்றும் 5ம் வகுப்புக்கு பேச்சுப்போட்டியும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை, நடத்தப்பட்ட போட்டிகளில், முதல் பரிசாக, 100 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 80 ரூபாயும் வழங்கப்பட்டது. 6ம் வகுப்பு முதல், ௮ம் வகுப்பு வரை, முதல் பரிசாக, 150 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 100 ரூபாயும் வழங்கப்பட்டது.பரிசுத்தொகை, வங்கியில் செலுத்தி மாற்றத்தக்க வகையிலான, 'செக்'காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, 80 ரூபாய்க்கான, 'செக்,' பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு, மாணவன் பெயரில் வங்கிக்கணக்கு துவக்க வேண்டும். அதற்கு குறைந்தது, 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை கட்ட வேண்டும். இதனால், பரிசுத்
தொகையாக வழங்கப்பட்ட, 'செக்' கை, பல பெற்றோர் பணமாக மாற்ற முயற்சிக்கவில்லை

தேர்வுக்கு விண்ணப்பிக்க'இ - சேவை' மையம்

சென்னை:தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், 339 இடங்களில், இ - சேவை மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன. இங்கு, டி.என்.பி.எஸ்.சி., மூலம் வழங்கப்படும், இணைய வழி விண்ணப்ப சேவைகள் துவக்கப்பட்டு உள்ளன. நிரந்தர பதிவுக்கு, 50; தேர்வுக்கு விண்ணப்பிக்க, 30; விண்ணப்பத்தில் மாறுதல் செய்ய, ஐந்து;
விண்ணப்ப நகல் பெற, 20 ரூபாய், சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.மேலும், டி.என்.பி.எஸ்.சி.,க்கு செலுத்த வேண்டிய நிரந்தர பதிவு கட்டணமான, 50 ரூபாய் மற்றும் நிர்ணயம் செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தையும், இந்த மையங்களில் செலுத்தலாம் என, அரசு கேபிள், 'டிவி' நிறுவன மேலாண் இயக்குனர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.86 ஆயிரம் கோடி

சென்னை:''நாட்டிலேயே முதலிடம் வகிக்கும், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, ஐந்து ஆண்டுகளில், 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபீதா தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், குழந்தைகள் தின விழா, எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ - இந்தியன் பள்ளியில், நேற்று நடந்தது. துறை இயக்குனர் கண்ணப்பன் வரவேற்றார்.


விழாவிற்கு தலைமை தாங்கிய, துறையின் முதன்மை செயலர் சபீதா பேசியதாவது:
தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, ஐந்து ஆண்டுகளில், 86 ஆயிரம் கோடி ரூபாயை, முதல்வர்
ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். தேசிய விதிமுறைப்படி தொடக்கப் பள்ளியில், 30 மாணவர்; நடுநிலைப் பள்ளியில், 35; உயர்நிலைப் பள்ளியில், 40; மேல்நிலைப் பள்ளியில், 45 பேருக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால், 22 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை ஏற்பட்டுஉள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், தமிழகம் முதலிடத்தில் இருக்க இதுவே காரணம்.போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டதால், பள்ளிக்கு செல்லாமல் இருந்த, 57 ஆயிரம் குழந்தைகளில், 48 ஆயிரம் பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு
உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

துறை அமைச்சர் வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சிறந்த நுாலகர்களுக்கு எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கி பேசினார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன.

மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.


பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:-

டிசம்பர் 7 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 9 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 10 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 - சனிக்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 14 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் கல்வி), நர்சிங் (பொது), கணக்குப் பதிவியல், கணக்குத் தணிக்கை

டிசம்பர் 16 - புதன்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மென் சிவில், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை

டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல், பொது இயந்திரவியல் தாள்-2, எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் தாள் 2, தொழில்கல்வி மற்றும் தணிக்கை

டிசம்பர் 21 - திங்கள்கிழமை - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்

டிசம்பர் 22 - செவ்வாய்க்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), புள்ளியியல், கணக்குப் பதிவியல் மற்றும் கணக்குத் தணிக்கை, செய்முறைத் தேர்வு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)

தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை:

டிசம்பர் 9 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 10 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 - சனிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 14 - திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 - புதன்கிழமை - அறிவியல்

டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல்

டிசம்பர் 21 - திங்கள்கிழமை - கணிதம்

தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா.

.தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா கூறினார்.

குழந்தைகள் தின விழா, டாக்டர்

எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.


விழாவில் தலைமை வகித்து, டி.சபிதா பேசியது:

பள்ளி மாணவர்களுக்கான 14 வகையான நலத்திட்டங்களுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

தரமான கல்வியை வழங்க எத்தகைய கட்டமைப்பு வசதிகள் தேவை என்பதை அறிந்து அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், சுற்றுச்சுவர்கள், கழிப்பறைகள் என உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டும் ரூ.3 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்கியது. இதனால், நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

குக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களையும் பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்காக போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளுக்கு வராமல் இருந்த 57 ஆயிரம் மாணவர்களில் 48 ஆயிரம் பேர் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.

மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2010-11-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 344 உயர்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்ட ரூ.380 கோடியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தப் பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின்படி, தரம் உயர்த்தப்பட்ட மேலும் 810 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்காக மொத்தம் ரூ.1,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்றார் அவர்.

அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி: பாடப் புத்தகங்களை படிப்பதோடு நின்றுவிடக் கூடாது. நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளைக் கொண்டாடும் அதேவேளையில், நம்முள் உள்ள குழந்தைத் தன்மையையும் கொண்டாட வேண்டும் என்றார்.

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோரும் பேசினர்

TNPSC : 813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித்தேர்வு: தமிழ்வழி படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு

கிராம நிர்வாக அதிகாரி(வி.ஏ.ஓ.) பதவியில்813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி14-ம் தேதிபோட்டித் தேர்வுநடத்தப்படும்என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசின்பல்வேறு துறைகளுக்கு
தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர் களும் டிஎன்பிஎஸ்சிபோட்டித் தேர்வுமூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
நேர்முகத் தேர்வு இல்லாதபணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்குஆன் லைனில்விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்ககடைசி தேதிநவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுஇருக்கிறது.இந்த நிலையில், 813 விஏஓ காலியிடங்களைநிரப்பு வதற்குஅடுத்த ஆண்டுபிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வுநடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில்நேற்று அறிவிப்புவெளியிட்டுள்ளது.
அதன்படி, விஏஓ பணிக்குஎஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் லைனில்(www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல்30-க்குள் இருக்கவேண்டும். பொதுப்பிரிவினர் நீங்கலாகஇதர இடஒதுக் கீட்டுப்பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் படித்தவர்களுக்குதமிழ்வழியில் படித்தவர் களுக்குஅரசுப் பணியில்20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தஉத்தரவு விஏஓபணிக்கும் பொருந்தும் என்பதால்மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சிமுடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதேஇதுகுறித்து குறிப்பிட வேண்டும்.
எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம்நடை பெறும். நேர்முகத் தேர்வுஎதுவும் கிடையாதுஎன்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில்பொது அறிவு, திறனறிவு, கிராமநிர்வாக நடைமுறைகள், பொது தமிழ்அல்லதுபொது ஆங்கிலம்ஆகிய பகுதிகளில்இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 300. எழுத்துத்தேர்வுக் கானபாடத்திட்ட விவரங் கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலேபணி உறுதி. தகுதியுள்ள விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ம்தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றுடிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது.

விஏஓ பணியில் சேருவோருக்கு சம்பளம்ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்குகிடைக்கும். 7-வது ஊதியக்குழுபரிந்துரை அமல்படுத்தப்படும்பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியைமுடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால்வருவாய்த் துறையில்உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணைவட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவிஉயர்வு பெறலாம்என்பதுகுறிப்பிடத்தக்கது

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதிசெய்ய தொடக்ககல்வித் துறைஅதிரடி
உத்தரவிட்டுள்ளது.தொடக்க கல்விஇயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில்பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள்அந்தந்த ஒன்றியத்தின்உதவி, கூடுதல்உதவி தொடக்ககல்வி அலுவலகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது.



இந்த பணி பதிவேடுகளில்ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பான பதிவுகள் உரியகாலத்தில் மேற்கொள்ளப்படாமல்இருப்பதாக தொடக்ககல்வி இயக்குநருக்குபுகார்கள் சென்றன. அதன் அடிப்படையில்தமிழக தொடக்ககல்வித் துறைஇயக்குநர்பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:உதவி, கூடுதல்உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள்தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடு களைஉரிய காலத்தில்முறையாக பதிவுசெய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2 மாதங்களுக்கு ஒரு முறைஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

உதவி, கூடுதல் உதவிதொடக்கக் கல்விஅலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின்பணிப் பதிவேடுகளை உரியகாலத்தில் முறையாகபதிவு செய்யப்பட்டுள்ளதைஉறுதி செய்துகொள்ள வேண்டும்.ஆசிரியர்களின் பணிபதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்வி விவரங்களைபதிவு செய்யும்முன்பு உயர்கல்விபயில்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும்,சான்றிதழ்கள்தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.ஒவ்வொரு ஆண்டிலும்டிச.31ம்தேதி ஒவ்வொருஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல், பதவி உயர்விற்கானதேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணி பதிவேட்டில்உள்ள பதிவேடுகளின்அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது. எனவே, சரியானசான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள்நடந்தது தெரியவந்தால்சம்பந்தப்பட்ட அலு வலர் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும்.ஆசிரியர்களின் வளர்ஊதியம், பதவிஉயர்வு, ஊதியம்நிர்ணயம் மற்றும்ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணிபதிவேட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில்அனுமதிக்கப்படுகிறது.

எனவே ஒவ் வொருஉதவி, கூடுதல்உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள்தங்கள் கீழ்பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிபதிவேடுகளில் விவரங்கள் விடுபட்டிருந்தால்15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்குஒரு முறைஅனைத்து பணிபதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளது என்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.உதவி, கூடுதல் உதவிதொடக்க கல்விஅலுவலர் பணிமாறுதல் மூலம்வேறு ஒன்றியங்களுக்குமாறுதல் பெற்றுசெல் லும்போது அனைத்துஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்தவிடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும்பதிவு செய்துவிட்டுத் தான்செல்ல வேண்டும்.உதவிதொடக்க கல்விஅலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள்ஆய்வு செய்யும் போதுஇந்த விவரங்களைசரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு அந்த உத்தரவில்கூறப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை லீவு ரத்து ?