யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/1/16

போலிச் சான்றிதழ் விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறை

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மடத்துக்குளம் வட்டம், கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, செங்கண்டிபுதூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இதில், ராமசாமி கொழுமத்திலும், சிவராஜ் துங்காவியிலும் கிராம நிர்வாக அலுவலர்களாக கடந்த 1999-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர்.

அப்போது ராமசாமி, சிவராஜ் இருவரும் பணியில் சேருவதற்காக 10-ஆம் வகுப்புசான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தனர். இந்தச் சான்றிதழ்கள் கோவையில் உள்ள தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ராமசாமி, சிவராஜ் இருவரும் கொடுத்த 10-ஆம் வகுப்புச் சான்றிதழ்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2004-ஆம் ஆண்டு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் இருவர் மீதும் மடத்துக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் 2-இல் நடைபெற்று வந்தது. இதில், போலியான சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்ததற்காக ராமசாமி, சிவராஜ் ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்ற நடுவர் சுதா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இதில், அரசு வழக்குரைஞராக பி.சிவசுப்பிரமணியம் ஆஜரானார்.

30 முதல் ஆசிரியர்கள் தொடர் மறியல்

வரும் ஜனவரி 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜேக்டோ அறிவித்துள்ளது. கோவை தாமஸ் கிளப்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஜேக்டோ மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: 

மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை, ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்புக்கென தனிச் சட்டம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் சிவானந்தா காலனியில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.முன்னதாக, மறியல் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கும் வகையில்ஜனவரி 27 முதல் 29-ஆம் தேதி வரை ஆசிரியர் சந்திப்பு இயக்க சுற்றுப்பயணம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் த.அருளானந்தம், சு.கணேஷ்குமார், ந.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்

தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் முதுகலை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு, கடந்த, 2011ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது.பின், மத்திய அரசு உத்தரவுப்படி, 

2013ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படுகிறது.அதேபோல், 2011ம் ஆண்டு முதல் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்புஆசிரியர்களுக்கும், தமிழக அரசு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில், 1,188 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.இதில், பார்வையற்றோர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீட்டில், ஒவ்வொரு பிரிவுக்கும், தலா, 1சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.ஆயினும், தற்போது விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து, தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக கூறி, போட்டித் தேர்வுகளை நடத்தாமல், தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

காலம் தாழ்த்துகிறது:சிறப்பு ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

கடந்த, 2012ம் ஆண்டுக்கு பிறகு, நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யவில்லை.தற்போது, சிறப்பு ஆசிரியர்கள் பணிக்காக, ஒரு லட்சம் பேர் தயாராக இருக்கின்றனர்.ஆனால், சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிடாமலேயே, ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு:பாமக புகார்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் அரசு விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என பாமக குற்றம்சாட்டியது.


பாமக மாநில துணைத் தலைவர் வடிவேல், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்தியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள அசுஉதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் ஆசிரியர் நியமனம் செய்வதில் அரசு விதிமுறைகளை மிறி நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆசிரியர் பணிநியமனத்தில் பதிவுமூப்பு அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 160 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் கடந்த வாரத்தில் 13 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்ப்பட்டுள்ளன. இதில், தகுதியில்லாத நபர்கள் அரசுவிதிமுறைகளுக்கு உள்படாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.தற்போது போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியில்லாதவர்கள் ஆதாயத்தின் அடிப்படையில் ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்படுகின்றனர். இதனால், பள்ளிக் குழந்தைகளில் கல்வி பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாகும். தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்கள் மிகவும் பாதிப்புஅடைந்துள்ளனர்.எனவே, நாமக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் வெளிப்படையான தன்மை நிலவ வேண்டும். இதில் அரசுவிதிமுறைகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலிச் சான்றிதழ் விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறை

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மடத்துக்குளம் வட்டம், கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, செங்கண்டிபுதூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இதில், ராமசாமி கொழுமத்திலும், சிவராஜ் துங்காவியிலும் கிராம நிர்வாக அலுவலர்களாக கடந்த 1999-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர்.

அப்போது ராமசாமி, சிவராஜ் இருவரும் பணியில் சேருவதற்காக 10-ஆம் வகுப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தனர். இந்தச் சான்றிதழ்கள் கோவையில் உள்ள தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ராமசாமி, சிவராஜ் இருவரும் கொடுத்த 10-ஆம் வகுப்புச் சான்றிதழ்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2004-ஆம் ஆண்டு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இருவர் மீதும் மடத்துக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் 2-இல் நடைபெற்று வந்தது. இதில், போலியான சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்ததற்காக ராமசாமி, சிவராஜ் ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்ற நடுவர் சுதா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இதில், அரசு வழக்குரைஞராக பி.சிவசுப்பிரமணியம் ஆஜரானார்.

ஆசிரியர் குடும்பத்திற்கு பணப்பலன் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டனர், இவர்களின் குடும்பத்திற்கு பணப்பலன் வழங்கவில்லை. தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டுமென ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச்சங்க மாநில தலைவர் தியாகராஜன் காளையார்கோவிலில் கூறியதாவது:மத்திய அரசு நாடு முழுவதும் ஓய்வூதிய திட்டத்தை கை விட்டு,'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்' செயல்படுத்த வலியுறுத்தியது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முதலில் 2004ல் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை செயல்படுத்தினார். பங்களிப்பு திட்டத்தை கைவிடக்கோரி வலியுறுத்தி வருகிறோம். 2006--11ல் செயல்பட்ட தி.மு.க.,அரசும் கண்டுகொள்ளவில்லை.

கடந்த 2011 தேர்தலின் போது ஜெயலலிதா,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டம் தொடரும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்து 5 ஆண்டும் முடியப்போகிறது,இன்னும் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை.ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இறந்து விட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை இன்றுவரை வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வறுமை யில் வாடுகிறது. இரண்டு லட்சம்
ஆசிரியர்களிடமிருந்து சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படுகிறது.

பிடித்தம் செய்த பணம் குறித்து கல்வித்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்கும் போது தெரியவில்லை என்றே தெரிவிக்கின்றனர். ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பணம் எங்கே செல்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. முதல்வர் ஜெயலலிதா பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிப்பார் என தளராமல் நம்பிக்கையோடு இன்றுவரை காத்திருக்கிறோம்.

மகப்பேறு விடுப்பின்போது செல்லும் ஆசிரியைகளுக்கு, பதிலி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், துவக்க, நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைக்கென தனியான இயக்குனரகங்களை அரசு ஏற்படுத்திட வேண்டும், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வினை கைவிடவேண்டும், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை வரவேற்கிறோம்,அதே வேளையில் உதவிபொருட்களை ஆசிரியர்களே எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தபால்துறை மூலமாக பொருட்களை பள்ளிகளுக்கே நேரடியாக வினியோகம் செய்துவந்தனர். அதே போன்று இனிவரும் காலங்களிலும் தபால் துறை மூலமாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

தீவிரமாக ஆராய்கிறது பதிவுத்துறை எந்த ஊரில் இருந்தும் பத்திரப்பதிவு சாத்தியமா?

சொத்து அமைந்துள்ள பகுதிக்கு செல்லாமல், எந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், பத்திரப்பதிவு செய்யும், புதிய வசதிக்கான சாத்தியக் கூறுகளை பதிவுத்துறை ஆராய்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும், சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. குறைந்துள்ளது.

இங்கு, சொத்து விற்பனை, குடும்பத்துக்குள் நடக்கும் பரிமாற்றம், திருமண பதிவு, நிறுவனங்கள் பதிவு என, ஆண்டுக்கு, 32 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சில ஆண்டுகளாக, இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

தற்போது, பொது அதிகார ஆவணங்களை மட்டுமே, பொதுமக்கள் அவரவர் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. விற்பனை ஆவணங்களை, சொத்து அமைந்துள்ள பகுதிக்கான, சார்-பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

சொத்து விற்பனை ஆவணங்களின் உண்மை தன்மையை சரி பார்ப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல் காரணமாகவே, இந்த முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாற்றம்:பதிவுத் துறையில், குறிப்பிட்ட சில பணிகளில், தற்போது தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதனால், சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகும் ஆவண விவரங்களை, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், தலைமையகத்தில் இருந்தும் கண்காணிக்கலாம். இதன் தொடர்ச்சியாக, எந்த அலுவலகத்தில் இருந்தும், சொத்து விற்பனையை பதிவு செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சாத்தியமாவது எப்போது?

பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பதிவுத்துறையில், தகவல் தொகுப்புகள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளன. இதனால், எந்த ஊரில் உள்ள சொத்து தொடர்பான வில்லங்க விவரத்தையும், பொதுமக்கள் இருந்த இடத்தில் இருந்தே, இணையதளம் வாயிலாக அறிய முடியும். அத்துடன், 'ஸ்கேன்' செய்யப்பட்ட ஆவணங் களின் தொகுப்பை, எந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், பார்க்கும் வசதி விரைவில் வர உள்ளது.

இதனால், தமிழகத்தின் எந்த பகுதியில் இருக்கும் சொத்து விற்பனையையும், எந்த சார்-பதிவாளர் அலுவலகத்திலும், பதிவு செய்து கொள்ளும் வசதியையும் அளிக்க வாய்ப்பு உள்ளது.
இதற்கான, வழிமுறைகள், சட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வருகிறோம்; விரைவில், இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழகத்தில், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன
* ஆண்டுக்கு 32 லட்சம் ஆவணங்கள் பதிவாகின்றன
* சொத்து வில்லங்க விவரத்தை, இருந்த இடத்தில் இருந்தே பார்க்கலாம்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை

'ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, 'குரூப் 2 - ஏ' இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில் நேற்று நடந்தது. 

8.5 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். சென்னையில், சில தேர்வு மையங்களை பார்வையிட்ட, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறுகையில், ''பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம், தகுதியானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுவதால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு மவுசு கூடி விட்டது. வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்,'' என்றார்.

சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்

தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் முதுகலை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு, கடந்த, 2011ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது.பின், மத்திய அரசு உத்தரவுப்படி, 2013ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படுகிறது.

அதேபோல், 2011ம் ஆண்டு முதல் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களுக்கும், தமிழக அரசு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில், 1,188 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

இதில், பார்வையற்றோர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீட்டில், ஒவ்வொரு பிரிவுக்கும், தலா, 1 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆயினும், தற்போது விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து, தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக கூறி, போட்டித் தேர்வுகளை நடத்தாமல், தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

காலம் தாழ்த்துகிறது:சிறப்பு ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:கடந்த, 2012ம் ஆண்டுக்கு பிறகு, நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யவில்லை.
தற்போது, சிறப்பு ஆசிரியர்கள் பணிக்காக, ஒரு லட்சம் பேர் தயாராக இருக்கின்றனர்.

ஆனால், சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிடாமலேயே, ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'ஆல் பாஸ்' திட்டம் மாநிலங்களுக்கு கெடு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மாநிலங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்காமல், அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்ய வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது. இந்த திட்டப்படி, 'அனைவருக்கும் கட்டாயமாக பள்ளிக்கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கம், சரியாக நிறைவேறவில்லை' என்ற, புகார் எழுந்தது.


இதுதொடர்பாக, மத்திய கல்வி ஆலோசனை வாரியம் சார்பில், குழு நியமிக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இதில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் நிபந்தனைகள் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில், 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, மாநிலங்கள் தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க, 2015 ஆகஸ்டில், மத்திய அரசு கடிதம் அனுப்பியது. பெரும்பாலான மாநிலங்கள் இன்னும் கருத்து தெரிவிக்காததால், ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மத்திய அரசு கெடு விதித்து உள்ளது.

நிபந்தனைகள் என்ன?
* ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை கண்டிப்பாக தேர்வு
நடத்தி, சி.சி.இ., என்ற தொடர் மதிப்பீட்டு முறையை பின்பற்ற வேண்டும்
* தேர்வில், மூன்று, ஐந்து மற்றும் எட்டு என, மூன்று தரவரிசை வழங்கப்படும். எட்டாம் தரம் பெறும் மாணவர்களை, அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்யக்கூடாது
* அனைத்து வகுப்பு மாணவர்களும், குறைந்தது, 80 சதவீதம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்பது கட்டாயம்.

குடியரசு தினம் என்றால் என்ன? ஒரு பார்வை

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும்.
ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு,  இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்ஹிந்த்

24/1/16

ஆசிரியரா, பேராசிரியரா: பட்டதாரிகள் குழப்பம்?

மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் சார்பில், 'சிசெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு, நவ., 3ல் வெளியானது.

இந்த தேர்வு, அடுத்த மாதம், 21ல் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முதுநிலை பட்டதாரிகள், சிசெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாக, மாநில அரசின் சார்பில் நடத்தப்படும், 'செட்' தேர்வு அறிவிப்பை, அன்னை தெரசா பல்கலை அறிவித்துள்ளது; இதற்கான தேர்வு நாளும், பிப்., 21 என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்படுவதால், மத்திய அரசின் பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதுவதா அல்லது, மாநில அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வை எழுதுவதா? என, பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, 'நெட், செட்' சங்க ஆலோசகர் பேராசிரியர் சாமிநாதன் கூறியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு பின், செட் தேர்வு நடக்க உள்ளது. தற்போது அதை எழுதாவிட்டால், அடுத்த தேர்வுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அதனால், பட்டதாரிகளின் வயது அதிகமாகி வேலையில் சேர முடியாது. எனவே, தமிழக அரசின் செட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பதிவாளரிடம் விசாரணை
செட் தகுதித் தேர்வு பொது அறிவிக்கையில், தேதியை தவறாகக் குறிப்பிட்டது குறித்து, அன்னை தெரசா பல்கலை பதிவாளர் கலாவிடம், உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா, நேற்று விசாரணை நடத்தினார். 'அறிவிக்கையில் தவறு நடந்தது எப்படி; அறிவிக்கை பைலை கையாண்டவர்கள் யார்?' என, விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், செட் தேர்வுக்காக தனியே உருவாக்கப்பட்ட, http:/www.setexam2016.in/ இணையதளத்தில், சரியான தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பிப்., 21ல் செட் தேர்வு நடக்கவுள்ளது. ஜன., 20 முதல், பிப்., 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.


பொது பிரிவினருக்கு, 1,500 ரூபாய்; பிற்படுத்தப்பட்டோருக்கு, 1,250 ரூபாய்; பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 500 ரூபாய் என, தேர்வு கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நியமனம் பட்டியல் வெளியீடு!

மாநிலத்தின் துவக்க, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, 9,511 பேர் கொண்ட பட்டியல், இன்று அறிவிக்கப்படும், என, துவக்க கல்வி துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார். பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதற்காக, 9,511 பேர் கொண்ட பட்டியல், இன்று அறிவிக்கப்படும். கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,யில் இருந்தே, தனியார் கல்வி நிறுவனங்கள், குழந்தைகளை, அட்மிஷன் செய்து கொள்ள வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களில் எந்த வகுப்பில் கல்வி அளிக்கப்படுகிறதோ, அதே வகுப்பிலிருந்து மாணவர்களை கல்வி உரிமை சட்டத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். முதல் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்கள், அடுத்த கல்வியாண்டில் இருந்து மாற்றப்படுகிறது. இவ்வாறு கிம்மனே ரத்னாகர் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1மெயின் தேர்வு முடிவு தாமதம்

தமிழகத்தில் குரூப்-1 மெயின் தேர்வு முடிந்து ஆறுமாதமாகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாததால் எழுதியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதல் நிலை தேர்வு கடந்த ஓராண்டுக்கு முன்பு நடந்தது. டி.எஸ்.பி., டி.இ.ஓ., சப்கலெக்டர், வணிகவரித்துறை ஆணையர், நகராட்சி கமிஷனர் உட்பட பல பதவிகளுக்கு 79 காலியிடங்களுக்கான தேர்வாக நடந்தது.

இந்த தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர். இதில் 4 ஆயிரம் பேர் மெயின் தேர்வுக்கு தேர்வாகினர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூனில் நடந்தது. தேர்வு முடிந்து 6 மாதமாகியும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. தேர்தல் வரும் நேரத்தில் தேர்வு முடிவுகள் கிடப்பில் போடப்படுமோ என்ற அச்சம் எழுதியவர்கள் மனதில் தொற்றிக் கொண்டுள்ளது.

நத்தத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறியதாவது: 

குரூப்-1 தேர்வை கனவுகளோடு எழுதினோம். ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றனர். ஆனால் ஆறுமாதமாகியும் வரவில்லை. தேர்தல் வருவதால் முடிவுகள் நிறுத்தப்படுமோ என்ற அச்சம் உள்ளது. விரைவில் வெளியிட்டால் நல்லது, என்றார்.

பள்ளிக் கல்வி முடிக்கும் மாற்றுத்திறனாளிகள் 9 சதவீதம்!

நாட்டில் மாற்றுத்திறன் குழந்தைகளில் 9 சதவீதம் பேரே பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர் என, காந்தி கிராம பல்கலை மனையியல்துறை தேசிய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. 

காந்தி கிராம பல்கலை மனையியல்துறை சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வளர்ச்சிப் பணிகளில் ஏற்படும் சவால்களும் கவனிப்புகளும் எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. தலைமை வகித்த துணைவேந்தர் நடராஜன் பேசியதாவது: சமூகத்தில் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகும் பிரிவினரில் மாற்றுத்திறன் குழந்தைகள் குறிப்பிடத்தக்கவர்கள். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான குறைபாடு 2 வகையில் ஏற்படும். ஒன்று உடல் சார்ந்தது. மற்றொன்று மனம் சார்ந்தது. ஏழு வயது வரை உள்ள குழந்தைகளே உடல், மனம் சார்ந்து அதிகம் பாதிப்படைகின்றனர்.

மாற்றுத்திறன் குழந்தைகளில் 9 சதவீதம் பேரே பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். மூன்று சதவீதம் பேர் கல்வியை தொடர முடியாமல் இடையில் நின்றுவிடுகின்றனர். 6 சதவீத பேர்தான் பள்ளிக்கல்வியை நிறைவு செய்கின்றனர். திட்டமிட்டு செயல்பட்டால் மாற்றுத்திறன் குழந்தைகளையும், ஏனைய குழந்தைகளுக்கு இணையாக வளர்ந்தெடுக்க முடியும். அரசு இதற்கு ஊக்கவிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்புக்களை வலுப்படுத்தி மாற்றுத்திறன் குழந்தைகளை மேம்படுத்த வேண்டும், என்றார்.

தேசிய மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சி கழக இயக்குனர் ஹிமாங்சூதாஸ், காந்திகிராம முன்னாள் துணைவேந்தர் பங்கஜம், ஒருங்கிணைப்பாளர் கவிதா, மருத்துவர்கள் ரீட்டாமேரி, நம்மாழ்வார் பங்கேற்றனர்.

வெறும் அறிவிப்போடு நின்றது சிறப்பாசிரியர்கள் நியமனம் : மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் Posted: 22 Jan 2016 07:35 PM PST சிறப்பாசிரியர்கள் நியமனம் குறித்து சட்டசபையில் அறிவித்து நான்கு மாதங்களாகியும், இன்று வரை ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு அறிவிக்காததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.2015 செப்.,2 ல் 1,188 விளையாட்டு, ஓவியம், தையல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் பார்வையில்லாதவர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 1 சதவீதம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. இதன்படி தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் ஊனமுற்றோருக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில் எத்தனை இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக சொல்லி போட்டித் தேர்வை நடத்தாமல் காலதாமதப்படுத்தி வருகின்றனர். தையல் ஆசிரியை பிரியதர்ஷினி கூறுகையில், “2012 ஏப்ரலுக்கு பின் 4 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர் நியமனம் செய்யவில்லை. தற்போது சிறப்பு ஆசிரியர் பணிக்காக சுமார் 90ஆயிரம் பேர் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது,”என்றார். 7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்' Posted: 22 Jan 2016 07:34 PM PST பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தி.மலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார், கடந்த 20ம் தேதி, போளூர் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது, சந்தவாசல் பள்ளியில், ஐந்து ஆசிரியர்கள், கஸ்தம்பாடி பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள், பள்ளிக்கு தாமதமாக வந்தது தெரிவந்தது. அவர்களுக்கு ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Jan 2016 07:32 PM PST புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனே வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனை நேரடியாகச் சந்தித்து அளித்தோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10-இல் வேலைநிறுத்தம்: இருப்பினும் திட்டமிட்டபடி பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றார். சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் கிருஷ்ணசாமி,தலைமை செயலக தலைவர் கணேசன்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் எஸ்.மோசஸ் உள்பட பல்வேறு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் வந்திருந்த அரசு ஊழியர்களும் பங்கேற்றனர். ஸ்மார்ட் மாணவியை மென்டலாக்கிய அதிகாரிகள்..! Posted: 22 Jan 2016 07:30 PM PST திருச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவரது விடைத்தாளில் ஏற்பட்ட மதிப்பெண் குளறுபடிக்காக, மாணவியை மெண்டலாக்கிய கல்வித் துறை அதிகாரிகளின் செயல் தற்போது அம்பலமாகியுள்ளது. திருச்சி, துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். நெசவுத் தொழிலாளி. இவர் மகள் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). துறையூரில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக நன்றாக படித்தார். பெற்றோரும், 'மகள் நல்ல மதிப்பெண் எடுத்துத் தேறிவிடுவாள்' என நம்பிக்கையோடு ஊக்கம் அளித்தனர். தேர்வு நாளும் வந்தது. அனைத்துப் பாடங்களையும் நன்றாக எழுதிய திருப்தியில் இருந்தார் சாந்தினி. தேர்வு முடிவைப் பார்த்தபோது அதிர்ந்தே போனார். 'சாந்தினி ஃபெயில்' எனக் காட்டியது ரிசல்ட். கதறியழுதவரை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. 'நன்றாகப் படிக்கும் மாணவி ஃபெயிலாக வாய்ப்பில்லையே' என ஆசிரியர்களும் அதிர்ந்து போனார்கள். மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபோது கூடுதல் அதிர்ச்சி. மாணவி எடுத்த மதிப்பெண்கள் பின்வருமாறு: தமிழ்-93, ஆங்கிலம்-75, கணிதம்-73, அறிவியல்-2, சமூக அறிவியல்-100 எனக் காட்டியது. 'எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண் இருக்கும்போது அறிவியல் பாடத்தில் மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை' என சமாதானம் செய்த ஆசிரியர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தினர். இங்குதான் சர்ச்சை ஆரம்பமானது. மறுகூட்டல் விண்ணப்பத்தை பார்த்த அதிகாரிகளுக்கு குளறுபடி நடந்திருப்பது புரியவந்தது. மாணவியின் ஒரிஜினல் விடைத்தாளில் என்ன கண்டார்களோ தெரியவில்லை. அடுத்த நாளே, மாணவி படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியையை தொடர்பு கொண்டு மாணவியை அழைத்து வரச் செய்தனர். அங்கு நடந்ததை விவரித்தார் மாணவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர். "டி.பி.ஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகத்துக்குள்ள சாந்தினியையும் அவரது அப்பா, அம்மாவையும் கூட்டிக்கிட்டு போனாங்க. சாந்தினி பெற்றோரை வெளியே உட்காரச் சொல்லிவிட்டு, ஒரு அதிகாரியோட அறைக்குள்ள கூட்டிட்டுப் போனாங்க. அங்க அந்த அதிகாரி, 'இங்க பாரு. மறுகூட்டலுக்கு எல்லாம் விண்ணப்பிக்க வேண்டாம். மறு தேர்வை எழுது. அறிவியல் பேப்பர்ல 2 மார்க் வர்றதுக்குக் காரணம். அப்ப மனநிலை சரியில்லாம இருந்தேன். மாத்திரை சாப்பிட்டதால, மாத்தி எழுதிட்டேன்னு லெட்டர் எழுதிக் கொடு'ன்னு எழுதி வாங்கிட்டார். சாந்தினியும் அழுதுட்டே வெளிய வந்துச்சு. இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாதுன்னு மிரட்டி அனுப்பிட்டாங்க" என்றார் வேதனையோடு. இதையடுத்து மறுதேர்வுக்கு விண்ணப்பித்தார் மாணவி சாந்தினி. அந்தத் தேர்வில் சாந்தினி எடுத்த மதிப்பெண் என்ன தெரியுமா? 93 மதிப்பெண்கள்! இப்போது மொத்த மதிப்பெண் 434. தற்போது பிளஸ் 1 அறிவியல் பிரிவில் சேர்க்கப்பட்டு படித்து வருகிறார். மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது? என்பதை அறிய ஆர்.டி.ஐ மூலம் மனு செய்தார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ. அதில் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். அதைப் பற்றி நம்மிடம் விவரித்த சிவ இளங்கோ, "கடந்த ஆண்டு 14.9.15 அன்று ஆர்.டி.ஐ மூலம் விடைத்தாளைக் கேட்டு மனு அனுப்பினோம். எந்தப் பதிலும் இல்லை. மேல்முறையீட்டில், தகவல் ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன், ' விடைத்தாளைக் கொடுக்கத் தேவையில்லை' என பதில் அனுப்பினார். இதனால் அதிர்ந்து போன நாங்கள், அவருக்கு ஒரு பதில் அனுப்பினோம். 'ஆர்.டி.ஐ சட்டத்தின்படி விடைத்தாளைக் கொடுக்க இடமுள்ளது. தேவைப்பட்டால் ஒவ்வொரு சனிக்கிழமையும் நாங்கள் ஆர்.டி.ஐ குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறோம். வந்து கலந்து கொள்ளுங்கள்' என கடிதம் அனுப்பினோம். அதன்பிறகே எங்களுக்கு மாணவி எழுதிய அனைத்து விடைத்தாள்களும் கிடைத்தன. மாணவி 2 மதிப்பெண் எடுத்ததாகச் சொல்லப்படும் விடைத்தாளில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை. எங்களுக்குக் கொடுப்பதற்காக யாரையோ வைத்து எழுதியுள்ளனர். அந்தத் தாளில், 'மலேரியா எப்படிப் பரவுகிறது?' என்ற கேள்விக்கு, 'எங்கள் பகுதியில் மலேரியா பாதிப்பு கிடையாது. எப்படிப் பரவுகிறது என உங்களுக்குத் தெரிந்திருக்குமே? பத்தாம் வகுப்பு மாணவியிடம் கேட்கலாமா? மலேரியாவைக் கட்டுப்படுத்த சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். இதை என்னிடம் கேட்க உங்களுக்கு அறிவே இல்லையா? இத்துடன் எனது விண்ணப்பத்தை முடித்துக் கொள்கிறேன்' என ஒரு பதில் எழுதப்பட்டுள்ளது. அடுத்து, மழைநீர் சேமிப்பு பற்றிய ஒரு கேள்விக்கு, 'மழைநீரை சேமிக்கத் தெரியாத கழுதைகள்தானே நாம். மரம் இல்லாத இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை. சீக்கிரம் சாகப் போகிறேன். இதைப் படிக்கும் நீங்களும் சாகத்தான் போகிறீர்கள்' என பதில் எழுதப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி, அறிவியல் பாடத்தில் இப்படியொரு பதிலை எழுதுவாரா? அதுவும் மறுதேர்வில் 93 மதிப்பெண்ணை அந்த மாணவி எடுத்திருக்கிறார். ஆசிரியர்கள் செய்த பெருந்தவறால் அந்த மாணவிக்கு மென்டல் பட்டம் கட்டிவிட்டார்கள் அதிகாரிகள். மாணவி பிளஸ் 2 முடித்துவிட்டு எங்கு சென்றாலும், பத்தாம் வகுப்பில் ஃபெயில் என்றுதானே இருக்கும்? இந்தத் தவறுக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைக்கு மாவட்டக் கல்வி அதிகாரியாக புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வோம்!" என்றார் அதிர்ச்சி விலகாமல். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Jan 2016 07:28 PM PST புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனே வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனை நேரடியாகச் சந்தித்து அளித்தோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10-இல் வேலைநிறுத்தம்: இருப்பினும் திட்டமிட்டபடி பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றார். சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் கிருஷ்ணசாமி,தலைமை செயலக தலைவர் கணேசன்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் எஸ்.மோசஸ் உள்பட பல்வேறு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் வந்திருந்த அரசு ஊழியர்களும் பங்கேற்றனர். வாசிப்பை வளர்க்க ’வாசித்தலே எல்லை’! Posted: 22 Jan 2016 09:03 AM PST உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில், வாசித்தலே எல்லை என்ற தலைப்பின் கீழ், அறிவிக்கப்பட்ட போட்டிக்கான ஆய்வு, நேற்று துவங்கியது. அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், வாசித்தலே எல்லை என்ற தலைப்பில், இப்போட்டி தமிழக கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில், துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளிலுள்ள, 4 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் வாசிப்பு திறன் அளவிடப்படுகிறது. 4, 5ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் ஆய்வு செய்யப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் பள்ளிக்கு, ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்படும் என, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டது. இதன் அடிப்படையில் உடுமலையில், 10, குடிமங்கலத்தில், 9 மடத்துக்குளத்தில், 7 பள்ளிகள், இப்போட்டிக்கு விண்ணப்பித்துள்ளன. நேற்று இப்பள்ளிகளில் ஆய்வு நடந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு பகுதியிலுள்ள பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர் ஆய்வு நடத்தினர். இதில் தேர்வு செய்யப்படும் மூன்று பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சிறந்த பள்ளியை தேர்வு செய்கின்றனர். ஆசிரியர்களுக்குள் அடிதடியால் கல்வி பாதிப்பு!

ஆசிரியர்கள் சண்டையால், கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, பெற்றோருடன், மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக, சூரியசெல்வி மற்றும், 10 ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு ஆய்வக உதவியாளர் என, 13 பேர் உள்ளனர். 286 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

தலைமை ஆசிரியை சூரியசெல்வி, கணக்கு ஆசிரியர் மதன், தமிழ் ஆசிரியர் வெங்கடேசன் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் குறித்து ஆலோசனை நடந்தது.அப்போது, மூன்று பேருக்கும் இடையே வழக்கம் போல வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தலைமை ஆசிரியை சூரியசெல்வி, தன்னை தரக்குறைவாக பேசி, ஜாதி பெயரை சொல்லி திட்டி, அடித்ததாக, ஆசிரியர்கள் மதன், வெங்கடேசன் மீது ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

ஜோலார்பேட்டை போலீசார், நேற்று காலை, 11:00 மணிக்கு, பள்ளிக்கு வந்தனர். தகவல் அறிந்த பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோருடன் வந்து, பள்ளி எதிரில் சாலை மறியல் செய்தனர். போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் சண்டை யால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அதனால், இவர்கள் மூவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என, பெற்றோர் கூறினர்.

ஸ்மார்ட் மாணவியை மென்டலாக்கிய அதிகாரிகள்..!

திருச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவரது விடைத்தாளில் ஏற்பட்ட மதிப்பெண் குளறுபடிக்காக, மாணவியை மெண்டலாக்கிய கல்வித் துறை அதிகாரிகளின் செயல் தற்போது அம்பலமாகியுள்ளது. திருச்சி, துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். நெசவுத் தொழிலாளி. இவர் மகள் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). துறையூரில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக நன்றாக படித்தார்.
பெற்றோரும், 'மகள் நல்ல மதிப்பெண் எடுத்துத் தேறிவிடுவாள்' என நம்பிக்கையோடு ஊக்கம் அளித்தனர். தேர்வு நாளும் வந்தது. அனைத்துப் பாடங்களையும் நன்றாக எழுதிய திருப்தியில் இருந்தார் சாந்தினி. தேர்வு முடிவைப்  பார்த்தபோது அதிர்ந்தே போனார். 'சாந்தினி ஃபெயில்' எனக் காட்டியது ரிசல்ட். கதறியழுதவரை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.

'நன்றாகப் படிக்கும் மாணவி ஃபெயிலாக வாய்ப்பில்லையே' என ஆசிரியர்களும் அதிர்ந்து போனார்கள். மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபோது கூடுதல் அதிர்ச்சி. மாணவி எடுத்த மதிப்பெண்கள் பின்வருமாறு: தமிழ்-93, ஆங்கிலம்-75, கணிதம்-73, அறிவியல்-2, சமூக அறிவியல்-100 எனக் காட்டியது. 'எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண் இருக்கும்போது அறிவியல் பாடத்தில் மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை' என சமாதானம் செய்த ஆசிரியர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தினர்.

இங்குதான் சர்ச்சை ஆரம்பமானது. மறுகூட்டல் விண்ணப்பத்தை பார்த்த அதிகாரிகளுக்கு குளறுபடி நடந்திருப்பது புரியவந்தது. மாணவியின் ஒரிஜினல் விடைத்தாளில் என்ன கண்டார்களோ தெரியவில்லை. அடுத்த நாளே, மாணவி படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியையை தொடர்பு கொண்டு மாணவியை அழைத்து வரச் செய்தனர்.

அங்கு நடந்ததை விவரித்தார் மாணவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்.

 "டி.பி.ஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகத்துக்குள்ள சாந்தினியையும் அவரது அப்பா, அம்மாவையும் கூட்டிக்கிட்டு போனாங்க. சாந்தினி பெற்றோரை வெளியே உட்காரச் சொல்லிவிட்டு, ஒரு அதிகாரியோட அறைக்குள்ள கூட்டிட்டுப் போனாங்க. அங்க அந்த அதிகாரி, 'இங்க பாரு. மறுகூட்டலுக்கு எல்லாம் விண்ணப்பிக்க வேண்டாம். மறு தேர்வை எழுது. அறிவியல் பேப்பர்ல 2 மார்க் வர்றதுக்குக் காரணம். அப்ப மனநிலை சரியில்லாம இருந்தேன். மாத்திரை சாப்பிட்டதால, மாத்தி எழுதிட்டேன்னு லெட்டர் எழுதிக் கொடு'ன்னு எழுதி வாங்கிட்டார். சாந்தினியும் அழுதுட்டே வெளிய வந்துச்சு. இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாதுன்னு மிரட்டி அனுப்பிட்டாங்க" என்றார் வேதனையோடு.

இதையடுத்து மறுதேர்வுக்கு விண்ணப்பித்தார் மாணவி சாந்தினி. அந்தத் தேர்வில் சாந்தினி எடுத்த மதிப்பெண் என்ன தெரியுமா? 93 மதிப்பெண்கள்! இப்போது மொத்த மதிப்பெண் 434. தற்போது பிளஸ் 1 அறிவியல் பிரிவில் சேர்க்கப்பட்டு படித்து வருகிறார். மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது? என்பதை அறிய ஆர்.டி.ஐ மூலம் மனு செய்தார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ. அதில் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம்.

அதைப் பற்றி நம்மிடம் விவரித்த சிவ இளங்கோ, "கடந்த ஆண்டு 14.9.15 அன்று ஆர்.டி.ஐ மூலம் விடைத்தாளைக் கேட்டு மனு அனுப்பினோம். எந்தப் பதிலும் இல்லை. மேல்முறையீட்டில், தகவல் ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன், ' விடைத்தாளைக் கொடுக்கத் தேவையில்லை' என பதில் அனுப்பினார். இதனால் அதிர்ந்து போன நாங்கள், அவருக்கு ஒரு பதில் அனுப்பினோம். 'ஆர்.டி.ஐ சட்டத்தின்படி விடைத்தாளைக் கொடுக்க இடமுள்ளது. தேவைப்பட்டால் ஒவ்வொரு சனிக்கிழமையும் நாங்கள் ஆர்.டி.ஐ குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறோம். வந்து கலந்து கொள்ளுங்கள்' என கடிதம் அனுப்பினோம். அதன்பிறகே எங்களுக்கு மாணவி எழுதிய அனைத்து விடைத்தாள்களும் கிடைத்தன.

மாணவி 2 மதிப்பெண் எடுத்ததாகச் சொல்லப்படும் விடைத்தாளில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை. எங்களுக்குக் கொடுப்பதற்காக யாரையோ வைத்து எழுதியுள்ளனர். அந்தத் தாளில், 'மலேரியா எப்படிப் பரவுகிறது?' என்ற கேள்விக்கு, 'எங்கள் பகுதியில் மலேரியா பாதிப்பு கிடையாது. எப்படிப் பரவுகிறது என உங்களுக்குத் தெரிந்திருக்குமே? பத்தாம் வகுப்பு மாணவியிடம் கேட்கலாமா? மலேரியாவைக் கட்டுப்படுத்த சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். இதை என்னிடம் கேட்க உங்களுக்கு அறிவே இல்லையா? இத்துடன் எனது விண்ணப்பத்தை முடித்துக் கொள்கிறேன்' என ஒரு பதில் எழுதப்பட்டுள்ளது.

அடுத்து, மழைநீர் சேமிப்பு பற்றிய ஒரு கேள்விக்கு, 'மழைநீரை சேமிக்கத் தெரியாத கழுதைகள்தானே நாம். மரம் இல்லாத இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை. சீக்கிரம் சாகப் போகிறேன். இதைப் படிக்கும் நீங்களும் சாகத்தான் போகிறீர்கள்' என பதில் எழுதப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி, அறிவியல் பாடத்தில் இப்படியொரு பதிலை எழுதுவாரா? அதுவும் மறுதேர்வில் 93 மதிப்பெண்ணை அந்த மாணவி எடுத்திருக்கிறார்.

ஆசிரியர்கள் செய்த பெருந்தவறால் அந்த மாணவிக்கு மென்டல் பட்டம் கட்டிவிட்டார்கள் அதிகாரிகள். மாணவி பிளஸ் 2 முடித்துவிட்டு எங்கு சென்றாலும், பத்தாம் வகுப்பில் ஃபெயில் என்றுதானே இருக்கும்? இந்தத் தவறுக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைக்கு மாவட்டக் கல்வி அதிகாரியாக புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வோம்!" என்றார் அதிர்ச்சி விலகாமல்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனே வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனை நேரடியாகச் சந்தித்து அளித்தோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10-இல் வேலைநிறுத்தம்: இருப்பினும் திட்டமிட்டபடி பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றார்.

சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் கிருஷ்ணசாமி,தலைமை செயலக தலைவர் கணேசன்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் எஸ்.மோசஸ் உள்பட பல்வேறு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் வந்திருந்த அரசு ஊழியர்களும் பங்கேற்றனர்.

வெறும் அறிவிப்போடு நின்றது சிறப்பாசிரியர்கள் நியமனம் : மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம்

சிறப்பாசிரியர்கள் நியமனம் குறித்து சட்டசபையில் அறிவித்து நான்கு மாதங்களாகியும், இன்று வரை ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு அறிவிக்காததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.2015 செப்.,2 ல் 1,188 விளையாட்டு, ஓவியம், தையல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் பார்வையில்லாதவர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 1 சதவீதம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.
இதன்படி தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் ஊனமுற்றோருக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில் எத்தனை இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக சொல்லி போட்டித் தேர்வை நடத்தாமல் காலதாமதப்படுத்தி வருகின்றனர்.
தையல் ஆசிரியை பிரியதர்ஷினி கூறுகையில், “2012 ஏப்ரலுக்கு பின் 4 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர் நியமனம் செய்யவில்லை. தற்போது சிறப்பு ஆசிரியர் பணிக்காக சுமார் 90ஆயிரம் பேர் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது,”என்றார்.

செட்' தேர்வுக்கான கட்டணம் உயர்வு

செட்' தேர்வுக்கான கட்டணம் உயர்வு
மாநில அளவிலான கல்லூரி ஆசிரியர் தகுதி (செட்) தேர்வுக்கான கட்டணம், அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நெட்' தேர்வைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது விண்ணப்பதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) யுஜிசி சார்பில் நடத்தப்பட்டு வந்தது. இப்போது இந்தத் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நடத்தப்படுகிறது.விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி: இந்த தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான கட்டணம் முன்னர் ரூ. 500-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 600-ஆக உள்ளது. மாநில அளவிலான தகுதித் தேர்வு மாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும். இதற்கு யுஜிசி அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு 2016-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான (செட்) தகுதித் தேர்வு, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 21-ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுக் கட்டணம் ரூ. 1,500 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 1,250-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 500-ம் என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண நிர்ணயம் விண்ணப்பதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் முருகானந்தம் கூறியதாவது:நியாயமில்லை: 
"நெட்', "செட்' இரண்டு தேர்வுகளையும் நடத்துவதற்கான அனுமதியை யுஜிசி-தான் வழங்குகிறது.
இந்த நிலையில்"நெட்' தேர்வுக்கு கட்டணமாக ரூ. 600 வசூலிக்கப்படும் நிலையில், "செட்' தேர்வு கட்டணம் ரூ. 1,500-ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றார். தமிழகத்தில் கடைசியாக கடந்த 2012-இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் "செட்' தேர்வு நடத்தப்பட்டபோது தேர்வுக் கட்டணமாக ரூ. 1,000 வசூலிக்கப்பட்டது. இப்போது மேலும் ரூ.500 உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மாணவர்களை கடுமையாகபாதிக்கும். எனவே, கட்டணத்தைக் குறைக்க பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்றார்.இதுகுறித்து தேர்வை நடத்தும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் என். கலா கூறியது:விசாரிக்கப்படும்..: "செட்' தேர்வுக்கு முந்தைய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கட்டணங்களின் அடிப்படையிலேயே, இப்போதையக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதைக் குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்றார்.
இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது:"செட்' தேர்வை நடத்த இந்த ஆண்டு அனுமதித்துள்ளோம். இந்தத் தேர்வை நடத்த அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எடுத்துள்ள முடிவு இன்னும் யுஜிசி-க்கு வந்து சேரவில்லை. இதனால் தேர்வுக் கட்டணம் குறித்த தகவல் தெரியவில்லை. எனவே, விவரங்கள் யுஜிசி-க்கு கிடைத்ததும் கட்டணம் குறித்து விசாரிக்கப்படும் என்றார்