அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான, 'நீட்' விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு, மே 1 மற்றும் ஜூலை 24ல், இரு கட்டங்களாக நடந்தது; ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில், தேர்வரின் கணினி பயன்பாட்டு விடைத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள், இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. இன்று மாலை வரை, மாணவர்கள், தங்கள் உள்ளீட்டு எண்ணை பயன்படுத்தி, அவற்றை பார்க்கலாம். மேலும், நீட் இணையதளம் மூலம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,க்கு கருத்துக்களை தெரிவிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.aipmt.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.