ஜிஎஸ்டி என்றால் என்ன? எதனால் இது முக்கியம் பெறுகிறது என்பதற்கான பதிவு இது.
இந்த வரி முறை முக்கியமாக மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.
1-முதல் நிலை உற்பத்தி
2-இரண்டாம் நிலை மொத்த விற்பனை
3-மூன்றாம் நிலை சில்லறை விற்பனை
முதல் நிலை:
ஒரு சட்டை தயாரிப்பு நிறுவனம் என்று வைத்துக் கொள்வோம் அவர் அதற்கான மூலப் பெருட்களை (துணி, நூல், பொத்தாங்கள் போன்றவை) 100 ரூபாய் மதிற்ப்பிற்கு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நூறு ரூபாய்க்கான வரி தற்பொழுது இருக்கும் வரிகளின்படி 100க்கு 10 ரூபாய் அதில் சேர்த்து அவர் செலவிட்டிருப்பார்.
உற்பத்தி செய்து அதை மதிப்பு கூட்டி சட்டையாக கொண்டு வர அவருக்கு ஆகும் செலவு மற்றும் லாபம் கணக்கிட்டு 30 ரூபாய் என உற்பத்தியாளர் நிர்ணையத்து விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது அந்த சட்டையின் ஒட்டு மொத்த மதிப்பு
130 + 13 (10% வரி) = 143 ரூபாய் (பழைய முறையில்)
ஆனால் ஜி எஸ் டி முறையில்...
130 + 3 (13-10) = 133ரூபாய் மட்டுமே
மூலப் பொருட்கள் வாங்கும் பொழுது அவர் செலுத்திய 10% (10 ரூபாய்) வரியை இதில் கழித்து மீதம் உள்ளதை மட்டுமே அவர் மொத்த மதிப்பில் கணக்கிடுவார்.
இரண்டாம் நிலை:
உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வரும் பொழுது அடுத்த நிலை என்பது மொத்த விற்பனையாளரிடமே.இப்பொழுது அவரிடம் அந்த சட்டை வந்தால் எப்படி வரி விதிக்கப்படும் என்பதை பார்ப்போம்.
உற்பத்தியாளரிடம் மொத்த விற்பனையாளர் வாங்கும் செலவு 133 ரூபாய். இவருக்கான லாபத்தோடு கணக்கிட்டு அந்த சட்டையை 20 ரூபாய் சேர்த்து 150 ரூபாய்க்கு விற்பனை விலையை நிர்ணையம் செய்வதாக எடுத்துக் கொள்வோம் இப்பொழுது அந்த சட்டையின் விலை 150ரூபாயாகிவிடும் .
பழைய முறையில்
150 + 15 (10% வரி) = 165 ரூபாய்.
இதையே ஜிஎஸ்டி முறையில்
150 + 2 (15 - 13) = 152 ரூபாய்
மூலப் பொருட்கள் வாங்கும் பொழுது செலுத்தப்பட்ட வரியை எப்படி உற்பத்தியாளர் கழித்து மீதியை செலுத்தினாரோ அதே போல உற்பத்தியாளர் கட்டிய 13 ருபாயை கழித்தே மொத்த விற்பனையாளர் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
மூன்றாம் நிலை:
இதுதான் எந்த ஒரு பொருளுக்கும் கடை நிலை அதாவது சில்லறை வணிகம் இங்கிருந்து நுகர்வோருக்கு அந்த பொருட்கள் சென்றடையும். இரண்டு நிலைகளை பார்த்தோமல்லவா இது கடைநிலை மூன்றாம் நிலை...
உற்பத்தி மற்றும் மொத்த வியாபாரியிடம் இருந்து வரும் அந்த சட்டையின் இப்பொழுதைய விலை 152 ரூபாய். அவரின் நிர்வாக செலவு லாபம் கணக்கிட்டு அந்த சட்டையின் விலையை 160 ரூபாய் என நிர்ணையிப்பதாக வைத்துக் கொள்வோம்...
பழைய முறையில்
160 + 16ரூபாய் (10% வரி) = 176 ரூபாய்
இதையே ஜிஎஸ்டி முறையில்
மொத்த விற்பனையாளரிடம் வாங்கிய பொழுது செலுத்திய 15 ரூபாய் வரியை கழித்து 1 ரூபாய் மட்டுமே இவர் செலுத்த வேண்டியிருக்கும் அதாவது
160 + 1 (16-15) = 161 ரூபாய்...
ஒருவேளை எந்த ஒரு மூலப் பொருட்களும் வாங்காத மொத்த விற்பனையினரிடம் வாங்காத சேவையாக இருப்பின் 10 + 3 + 2 + 1 = ரூபாய் 16 வரியாக நேரடியாக விதிக்கப்படும்...
இதுவரை இருந்த முறையில் கட்டிய வரிக்கும் சேர்த்து இன்னொரு வரி அதற்கும் இன்னொரு வரி என்று இருந்ததைதான் இந்த ஜிஎஸ்டி முறை மாற்றியமைக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக