அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள ஒரு லட்சம் பொறியியல் இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்க வுள்ளது.
தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்களை ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப ஜூன், ஜூலை மாதங்களில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. கலந்தாய்வின் முடிவில் 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. எஞ்சிய ஒரு லட்சத்து 2 ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கின்றன. இந்த காலியிடங்கள் அனைத்தும் சாதாரண கல்லூரிகள் என்று சொல்லப்படும் பொறியியல் கல்லூரிகளில்தான் அதிகம் உள் ளன. முதல் ஆண்டு மாணவர் களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 1-ம் தேதி தொடங்கிவிட்டன.
அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்பது விதிமுறை.கலந்தாய்வின் முடிவில் காலியாகவுள்ள இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி அளிக்கும். அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.
அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களைத்தான் ஆகஸ்டு15-ம் தேதிக்குள் நிரப்பலாமே தவிர, கலந்தாய்வு முடிந்த பின்னர் ஒப்பு தல் பெறப்பட்ட புதிய இடங்களை இதுபோன்று நிரப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக