யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/8/16

உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிப்பு.

கடலூர் மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 144 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 137 அரசுமேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 அரசுப் பள்ளிகள் உள்ளன.
இந்தப் பள்ளிகளில் உடற்கல்வி பிரிவில், மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், பேட்மிண்டன், செஸ், கோ-கோ, கபடி உள்ளிட்ட பல விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.ஆனால், மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளில், சுமார் 30க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரே இல்லையாம். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.மேலும், மாணவர்கள் விளையாட தேவையான, அடிப்படை உபரணங்களான பேட்மிண்டன், செஸ், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், வலை உள்ளிட்ட சாதனங்கள் இல்லாத நிலை தொடர்கிறது.பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமே இதுவரை ஏற்படுத்தப்படவில்லையாம்.பள்ளி மாணவர்களிடையே குறுவட்ட, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், அரசுப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை, உபகரணங்கள் இல்லாமை என பல்வேறு காரணங்களால், அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் கேள்விக்குறியாக உள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு, பள்ளிகளில் தேவையான உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கவும், விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.இதுகுறித்து ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் ஒருவர் கூறியதாவது:பள்ளிகளில் விளையாட்டுக்கு என எந்த நிதியும் இல்லை. பொது நிதியிலிருந்து விளையாட்டுக்கு நிதி ஒதுக்க தலைமையாசிரியர்களும் முன் வருவதில்லை.

மாணவர்கள் கல்வியைப் பெறுவதோடு உடலையும் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளைக் கொண்டு வந்தது தமிழக அரசு.ஆனால், இப்போது அந்த நோக்கமெல்லாம் கானல் நீராகி வருகிறது என அவர் கூறினார்.இதுகுறித்து, கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக