யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/8/16

7வது சம்பள கமிஷன் நிலுவை தொகைக்கு வரி விலக்கைப் பெறுவது எப்படி?


உதாரணம் ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.9.50 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் பெறுகிறார்கள் என்றால், அதில் பாதி ரூ.50,000 சென்ற நிதி ஆண்டிற்கானது. இந்த வருட மொத்த வருமானம் ரூ.10 லட்சம் பெற வேண்டும் ஆனால் ரூ.10.50 லட்சமாக நிலுவை தொகையுடன் பெறுவீர்கள்.


7வது சம்பள கமிஷன் மூலமாக மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவில் அதிக சம்பளத்தை பெற இருக்கிறார்கள். இந்தச் சம்பள உயர்வு ஜனவரி 1, 2016 முதல் கணக்கிடப்படுவதால் 6 மாத நிலுவை தொகையை மொத்தமாக பெறவிருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்த வேண்டி வரும்.

30 சதவீதம் வரி ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். எனவே நீங்கள் ரூ. 10 லட்சத்திற்கும் மேலாக பெரும் போது வரி கட்ட வேண்டும். இதனால் கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? இல்லை, எப்படி என்று பார்ப்போம். நிலுவை தொகையை தாமதமாகப் பெறும் போது ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிப்பதற்கான விதிகள் உள்ளன.

பிரிவு 89(1) 
ஊழியர் மற்றும் குடும்பம் நிலுவை தொகையுடன் சம்பளம் அல்லது ஓய்வூதியம் பெறும் போது நிலுவைத் தொகைக்கு வரி செலுத்துவதில் இருந்து பிரிவு 89(1)-இன் கீழ் வரி விலக்கு பெறலாம். இந்தப் பிரிவின் கீழ் வரி தாக்கல் செய்ய வேண்டிய தொகையின் அளவைக் குறைக்கலாம். சென்ற வருடத்தை விட இந்த வருட வரியில் அதிகபடுத்தப்பட்டு இருக்கும் விகிதங்களால் இது சாத்தியம் ஆகிறது என்று க்ளியர் டாக்ஸ் நிறுவனத்தின் தலைமை பதிப்பாசிரியர் ப்ரீத்தி குரானா தெரிவித்துள்ளார்.

வரி விலக்கு எப்படிக் கணக்கிடப்படுகிறது? 
இரண்டு வருடத்திற்கும் பெற இருக்கும் நிலுவை தொகை மற்றும் இந்த வருடம் நீங்கள் பெற இருக்கும் நிலுவை தொகை என இரண்டையும் மறு கணக்கிடுவதன் மூலம் வரி விலக்கு பெற இயலும்.

கணக்கிடப்படும் முறை
1) இந்த வருடத்திற்குப் பெறப்பட்ட நிலுவை தொகையை தவிர்த்து மொத்த சம்பளத்தில் இருந்து செலுத்த வேண்டிய வரியைக் கணக்கிடவும். பின்னர் இரண்டையும் கழித்து வரும் தொகையை ‘A' என்று வைத்துக்கொள்ளுங்கள். 

2) ஒரு வருடத்திற்கான மொத்த சம்பளத்தில் நீங்கள் பெற்ற நிலுவை தொகை மற்றும் சென்ற வருடத்திற்குப் பெற்ற நிலுவை தொகையை தனித்தனியாகக் கணக்கிடவும். பின்னர் இதன் இரண்டையும் கழித்து வரும் தொகையை B என்று வைத்துக்கொள்ளுங்கள்.

3) B-ஐ விட A அதிகமாக இருந்தால் A தொகைக்குச் சமமாக வரிவிலக்கு பெறலாம்.

எப்படி உரிமை கோருவது? 
வரி விலக்கைப் பெற வருமான வரி சட்டத்தின் படி, ஃபார்ம் 10E படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். பான் எண், நிலுவை தொகை முன்னெடுப்பு சம்பள விவரங்கள் போன்றவற்றை படிவத்தில் நிரப்பி வருமான வரித்துறை இணையதளத்தில் பதிவேற்றுவதன் மூலம் வரி விலக்கு பெறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக