யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/8/16

தன்னம்பிக்கை கதை

திருநீறு இட்டுக்கொள்வது ஏன்?

தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்

தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி

18/8/16

தேசிய திறனறி தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவி தொகை வழங்கும், 'தேசிய திறனறி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறி தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; மாநில தேர்வில் தேர்ச்சி பெறுவோர், தேசிய தேர்வில் பங்கேற்கலாம்.

தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.
'தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் நவ., 6ல், இந்த தேர்வு நடக்க உள்ளது; அதற்கான விண்ணப்பங்களை, இன்று முதல் சமர்ப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். 'விண்ணப்பங்களை, www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேர்வுக் கட்டணம், 50 ரூபாயுடன், ஆக., 31க்குள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளிதோறும் கதர் ஆடை : அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வருமா?

மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 'தமிழக அரசு பள்ளிகளில், கதர் சீருடைகள் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, கதர் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் தனபால், உதவி இயக்குனர் பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: மஹாராஷ்டிரா, உ.பி., பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள், கதர் ஆடை அணிய
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தில், விமானப் பணிப் பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களின் சீருடை, கதர் ஆடையாக மாற்றப்பட உள்ளது; இதற்காக, 10 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
காதி வாரியம் தயாரித்த, 30 லட்சம் காகித கோப்புகளை, பிரதமர் அலுவலகம் வாங்கியுள்ளது. ரயில்வே ஊழியர்கள், கதர் ஆடைகள் வாங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது; இதற்காக, அத்துறையுடன் பேச்சு நடக்கிறது. தனியார் ஆடை விற்பனை நிறுவனங்களுடன், கதர் ஆடை விற்பனைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
கேரளாவில் பள்ளி மாணவர்கள், கதர் சீருடை அணிய, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் செயல்படுத்த கோரி, பள்ளிக் கல்வி செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
மேலும், அனைத்து அரசு ஊழியர்களும், வெள்ளிக்கிழமை மட்டும், கதர் ஆடை அணிய உத்தரவிட வேண்டும் என, முதல்வர், தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி

சென்னை: எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு கல்வியாண்டின்

இறுதியிலும் தேர்வு நடத்தப்படும்.இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான உதவித்தொகை, இந்த ஆண்டு முதல், நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என, பள்ளிகளுக்கான முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

செப்.,1 ல் வாக்காளர் பெயர் சேர்ப்பு

ராமநாதபுரம்: செப்.,1 முதல் 30 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளன. செப்.,10 மற்றும் 24ல் வாக்காளர் பட்டியல் கிராம சபை கூட்டங்களில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். இதே போல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய ஓட்டுச்சாவடிகள் அளவில் செப்.,11, 25ல் சிறப்பு முகாம் நடக்கிறது. நவ., 11ல் புதிய பட்டியல் சரிபார்க்கப்பட்டு ஜன.,5ல் இறுதி சுருக்க திருத்தப் பட்டியல் வெளியிடப்படும்

பி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு

சென்னை: பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
கவுன்சிலிங்கில் பங்கேற்க, 3,736 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல், லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வரும், 22ம் தேதி முதல், கவுன்சிலிங் நடக்கிறது.
முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கும். 23 முதல், 30ம் தேதி வரை, பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கான பட்டியலை, http://www.ladywillingdoniase.com என்ற, லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

குரூப் - 1 தேர்வு 'ரேங்க்' பட்டியல் வெளியீடு

குரூப் - 1' பதவிக்கான தேர்வில், நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களின், 'ரேங்க்' பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசுத் துறையில், சப் - கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரித் துறை கமிஷனர் உள்ளிட்ட, குரூப் - 1 பதவியில், 79 காலியிடங்களுக்கு, ஜூன் மாதம் முதன்மை தேர்வு நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு, ஜூலையில்
சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.நேர்முகத் தேர்வுக்கு, 163 பேர் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, அவர்களின் மதிப்பெண் அடிப்படையிலான, 'ரேங்க்' பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் நேற்று வெளியானது. இதில், 87 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கலந்தாய்வு

சென்னை: உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற, மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன; இதற்கான கலந்தாய்வு,
ஜூலை, 26ம் தேதி நடந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வெளி மாநில டாக்டர்களும் முதல் முறையாக பங்கேற்றனர்; இதில், 155 இடங்கள் நிரம்பின. இதில், எம்.சி.எச்., படிப்பில், 30; டி.எம்., படிப்பில், நான்கு இடங்களும் மீதம் உள்ளன. இதற்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை, மருத்துவக் கல்வி இயக்கத்தின், மாணவர் சேர்க்கை செயலர் அலுவலகத்தில், நாளை நடக்கிறது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கட்டாய கல்வி சட்டத்தில் ரூ.1,019 கோடி கூடுதல் செலவு

கட்டாய கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு வழங்கியதை விட, தமிழக அரசுக்கு, இரண்டு ஆண்டுகளில், 1,019 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் மட்டுமே மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகின்றனர். இதனால், தமிழகத்தில் இந்த சட்டத்தில்
சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசிடமிருந்து முழுமையாக பெற முடியவில்லை. இதன்படி, 2014 - 15 மற்றும் 2015 - 16ம் நிதி ஆண்டுகளில், 2,179 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இந்த நிதியுடன், தமிழக அரசு, 1,019 கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து, இதுவரை இலவச கல்வி சட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வழங்கி உள்ளது. எனவே, வருங்காலத்தில், மத்திய அரசு நிதியை முழுமையாக பெறும் வகையில், கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தமிழக நிதித்துறை அறிவுறுத்தியுள்ளது.

வேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள்18 லட்சம் பேர்! தமிழக அரசு விழிக்க வேண்டிய நேரமிது

தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

ஒரு பக்கத்தில், தொழில்களின் எண்ணிக்கை பெருகும் அளவுக்கு, மறு பக்கத்தில், வேலை யில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதால், தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.


வேலைவாய்ப்பு இல்லாதவர்களில், பட்டதாரி களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிக ரித்து வருகிறது. அரசுத் துறை பணிகள், தனி யாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கு வதால், வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. கடந்த, 2015 ஜூன் நிலவரப்படி,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 83 லட்சத்து, 35 ஆயிரம் பேர் வேலையின்றி காத்திருந்தனர். இந்த ஆண்டு, ஜூன், 30 நிலவரப்படி, 83.33 லட்சம் பேர், அரசு மற்றும் தனியார் வேலைக் காக, பதிவு செய்து காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன.

இவர்களில், பி.ஏ., போன்ற கலை பட்ட படிப் பில், 4.50 லட்சம்பேர்; அறிவியலில், 6.14 லட்சம்; வணிகவியலில், 3.40 லட்சம் பேர், என, 14 லட்சம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை எதிர் பார்த்துள்ளனர். பள்ளிகளில், பட்டதாரி ஆசிரி யராக பணிபுரிய, 3.82 லட்சம் பேர் காத்திருக் கின்றனர். மேலும், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், 2.15 லட்சம் பேரும் வேலை தேடுகின்றனர்.

வேலை இல்லாதவர்கள் பட்டியலில், வேளாண்மை பட்டதாரிகள் மிகக்குறைவாக, 641 மட்டுமே உள்ளனர். கல்லுாரி பேராசிரியர் பணியை எதிர்பார்த்து, 2.69 லட்சம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும், அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங் களும், தமிழகத்தில்அதிகரித்து வரும் நிலையில்,வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதே அளவுக்கு உயர்ந்து வருவது, கல்வி யாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை குறைக்க, தமிழக அரசு இப்போதே விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது:அரசுத் துறைகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பதவி உயர்வு, பணி ஓய்வு மற்றும் இறப்பால் ஏற்படும் காலியிடங்களை, உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். நீண்ட நாட்களாக காலியாக உள்ள இடங்களில், பட்டதாரிகள், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

தனியார் மெட்ரிக் பள்ளிகள், கல்லுாரிகள் போன்றவற்றில், தகுதியானவர்களை பதிவு மூப்பு மற்றும் கல்வித் தகுதியின் படி, பணி நியமனம் செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசே பணி அமர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கிலப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.

பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ஆங்கில மொழிப் பயிற்சி வரும் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்க வுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன.பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில மொழி மையம் தேவைக்கேற்ப பயிற்சிகளை வழங்கி வருகிறது. 
பயிற்சியில் சேருபவர்களின் தற் போதைய மொழித் திறனை அறிந்து பயிற்சி அளிக்க ஏதுவாக தகுதி நிலை சோதனை நடத்தி அதற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். தொடக்க காலத்தில் விண்ணப் பிப்பவர்களுக்கு தேர்வு செய்த பயிற்சி மற்றும் விரும்பிய நேரம் கிடைக்கும்.பொது ஆங்கிலம், ஆங்கில உரையாடல், வணிக ஆங்கிலம், IELTS தேர்வுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களுக்கான பயிற்சிஆகியவற்றில் 16 வய துக்கு மேற்பட்டோர் சேரலாம். அதேபோல குழந்தை களுக்கான பயிற்சியும் தொடங் கப்பட்டுள்ளது. இளம் சாதனையாளர்கள் பயிற்சி 7 முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கும், பேசுதல் மற்றும் சரியாக எழுதும் பயிற்சி 11 முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கும் வழங்கப்படும்.

முன்பதிவுக்கு 01204569000/ 01206684353 ஆகிய எண்களிலோ, winya.suzanna@in.britishcouncil.org என்ற இ-மெயில் மூலமே தொடர்பு கொள்ளலாம். Engish என டைப் செய்து 567678 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்யலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி, நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு: 2 கட்டமாக நடந்த தேர்வை 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படுகின்றன. 

தேசிய இளைஞர் விருதுக்கு 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய இளைஞர் விருதுக்கு இளைஞர்கள், தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ராஜேந்திரகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில், சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்யும் இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு மத்திய அரசு தேசிய இளைஞர் விருது வழங்குகிறது. 25 இளைஞர்களுக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கம், பதக்கம் வழங்கப்படுகின்றன. சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் ரொக்கம், பட்டயம், பதக்கம் வழங்கப்படும்.1-4-2015 முதல் 31-3-2016 வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இளைஞர் நலப்பணிகளுக்கான விருதுகள் இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட உள்ளன. தனிநபர் பிரிவுக்கான விருதுக்கு வயது 15 முதல் 29-க்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டாற்றியிருக்க வேண்டும்.ஏற்கெனவே விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள், இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. தொண்டு நிறுவன பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதுக்கு, தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு ஆற்றியிருக்கக் கூடாது.

குறிப்பிட்ட சாதி, மதம் அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் விண்ணப்பிக்க இயலாது.விருதுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்திசெய்து வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவால் பரிசீலிக்கப்பட்டு மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள் மாநில குழுவால் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை: கணினி அறிவியல் பாடம் கொண்டுவரப்படுமா? - 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.

சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் கொண்டுவரப்படுமா? என பிஎட் முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.இதற்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் 22-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
இதற்கான விண்ணப்பப் படிவங் கள் இன்று (புதன்கிழமை) முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப் படுகின்றன. விண்ணப்பப் படிவத் தின் விலை ரூ.100. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செப்டம்பர் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.பொறியியல் பாட உதவி பேராசிரியர் பணிக்கு எம்இ., எம்டெக் பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம். இளங்கலை அல்லது முதுகலைஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பு பெற்றிருக்க வேண்டும்.

TNPSC:குரூப்-2 மெயின் தேர்வுக்கு ஆன்லைனில் நுழைவுச்சீட்டு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர்,வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. 
இத்தேர்வை 6 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே 21-ம் தேதி அன்று வெளியிடப்பட்டன.இந்தநிலையில், அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு ஆகஸ்டு 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறவுள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் நுழைவுச்சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தங்கள் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.