யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/8/16

தேசிய இளைஞர் விருதுக்கு 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய இளைஞர் விருதுக்கு இளைஞர்கள், தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ராஜேந்திரகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில், சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்யும் இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு மத்திய அரசு தேசிய இளைஞர் விருது வழங்குகிறது. 25 இளைஞர்களுக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கம், பதக்கம் வழங்கப்படுகின்றன. சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் ரொக்கம், பட்டயம், பதக்கம் வழங்கப்படும்.1-4-2015 முதல் 31-3-2016 வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இளைஞர் நலப்பணிகளுக்கான விருதுகள் இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட உள்ளன. தனிநபர் பிரிவுக்கான விருதுக்கு வயது 15 முதல் 29-க்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டாற்றியிருக்க வேண்டும்.ஏற்கெனவே விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள், இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. தொண்டு நிறுவன பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதுக்கு, தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு ஆற்றியிருக்கக் கூடாது.

குறிப்பிட்ட சாதி, மதம் அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் விண்ணப்பிக்க இயலாது.விருதுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்திசெய்து வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவால் பரிசீலிக்கப்பட்டு மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள் மாநில குழுவால் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக