மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாடவாரியாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் அப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி ஆகஸ்டு 17 (இன்று) முதல் 23-ம் தேதி வரை ஈரோடு, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மாவட்டத்துக்கு தலா 3 பேர் வீதமும், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய 2 பாடங்களுக்கும் சேர்த்து 3 பேர் என்ற வீதமும் கலந்துகொள்வர். முதன்மை கருத்தாளர் பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பின்னர் மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். இவ்வாறு 27 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக