யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/8/16

அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை: கணினி அறிவியல் பாடம் கொண்டுவரப்படுமா? - 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.

சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் கொண்டுவரப்படுமா? என பிஎட் முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு அப் போதைய திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் கணினி அறிவியல் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டது. தனியார் பள்ளி களுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு கணினி கல்வி அளிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச மாக வழங்குவதற்காக கணிப் பொறி இயல் பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் கைவிடப்பட்டது. இதனால், அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங் கள் மாணவர்களுக்கு வழங் கப்படவில்லை.கணினி அறிவியல் பாடம் கைவிடப்பட்டதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை கணினி ஆசிரியர்களை நியமிக்கும் அவசியமும் அரசுக்கு ஏற்படவில்லை. இந்நிலையில் சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிஎட் முடித்த கணினி பட்டதாரிகள் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பிஎட் முடித்துவிட்டு 39 ஆயிரம் பிஎஸ்சி கணினி அறிவியல் பட்டதாரிகளும், பிசிஏ பட்டதாரிகளும், பிஎஸ்சி (ஐ.டி.) பட்டதாரிகளும் அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இவர்களில் 39,440 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலை யில்லாத பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் உ.ராமச் சந்திரன், மாநிலச் செயலாளர் வெ.குமரேசன் ஆகியோர்கூறியதாவது:இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில், எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற சூழல் உருவாகியுள்ளது. மாணவர் களுக்கு ஆரம்பக் கல்வியில் இருந்தே கணினி கல்வியை அளித்தால் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது அவர்கள் அடிப்படை கணினி அறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். கணினிக் கல்வி வசதியான, தனியார் பள்ளிகளில் படிக் கின்ற மாணவர்களுக்கு கிடைத் துவிடுகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அங்கு கணினி அறிவியல் பாடமும் கிடையாது. சொல்லித்தருவதற்கு கணினி ஆசிரியரும் கிடையாது.எனவே, தனியார் பள்ளி களுக்கு நிகராக அரசுப் பள்ளிகளி லும் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக அச்சடிக்கப் பட்ட பாடப்புத்தகங்களை அவர் களுக்கு வழங்க வேண்டும். தற்போது அந்த புத்தகங்கள் யாருக்கும் பயனின்றி பாடநூல் கழக குடோன்களிலும், கல்வித் துறை அதிகாரிகளின் அலுவல கங்களிலும் கிடக்கின்றன.அரசு மேல்நிலைப்பள்ளி களிலும் கணினி பயிற்றுனர் பதவியில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன. கடந்த 2006-க்குப் பிறகு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு தொடங் கப்படவில்லை. எனவே, தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தொடங்கி தேவை யான கணினி பயிற்றுனர்களை நியமிக்க வேண்டும்.பிஎட் முடித்த கணினி பட்டதாரிகளாகிய நாங்கள் 39 ஆயிரத்துக்கு மேல் இருக்கி றோம். எங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைக்கவில்லை. அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவர்களும் கணினி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காககவும் இதை வலியுறுத்துகிறோம்.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்-டாப்களை சரியாக கையாளவும், பயன் பாட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை சரிசெய்யவும் கணினி ஆசிரியர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். பிஎட் முடித்த கணினி பட்டதாரிகள், ஆசிரியர் தகுதித்தேர்வையோ, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிதேர்வையோ, மாவட்ட கல்வி அதிகாரி தேர்வையோ எழுத முடியாது.எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கணினி ஆசிரியர் பணிதான். எனவே, எங்களின் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன்பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக