யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/8/16

குரூப்-4 பகுதி -6

கோபத்தை தவிருங்கள்

சமத்துவம் சமதர்மம் என்ற வார்த்தைகள் மிகவும் அழகானவைகள்

சமையல் எரிவாயு மானியம் பெறுவது எப்படி?

சில பயனுள்ள இனையத்தளங்கள்!

சுப்ரமணிய பாரதி எனும் ஒரு தமிழ் வேள்வி தீ

26/8/16

தொடக்கக்கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்சமூகஅறிவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் - பிற பாடங்கள் படித்தால் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க கூடாது - இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 24/08/2016)

ராகிங்' தடுக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து : இன்ஜி., கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை

ராகிங்'கை தடுக்காவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்லுாரி, பல்கலைகளில், 'ராகிங்'கை தடுக்க, உச்ச நீதிமன்றம், வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது; அதன்படி, ஒவ்வொரு கல்லுாரி மற்றும் பல்கலையிலும், ராகிங் தடுப்பு குழு, விசாரணை கமிட்டி போன்றவை அமைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

● ராகிங் தடுக்க, தனி கமிட்டி அமைக்க வேண்டும்; ராகிங் புகார்களை விசாரிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும்; ராகிங் தடுப்பு பறக்கும் படையும் அமைக்க வேண்டும்
● மாணவர் சேர்க்கையின் போது, 'ராகிங்கில் ஈடுபட மாட்டேன்' என, கல்லுாரியிலும், விடுதியிலும் உறுதிமொழி எழுதி வாங்க வேண்டும்; விடுதிகளில், தனியாக ராகிங் தடுப்பு வார்டன் நியமிக்கப்பட வேண்டும்
● புதிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர, உரிய நிபுணர்களை நியமிக்க வேண்டும்
● ராகிங் என்ற கிரிமினல் குற்றத்தை விளக்கி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை, மாணவர்கள் கூடும் இடங்களில் வைக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ராகிங் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க தவறினாலோ, விதிகளை பின்பற்ற தவறினாலோ, சம்பந்தப்பட்ட கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதலாண்டு மாணவர்களுக்கு தனி விடுதி : கல்லுாரி மற்றும் பல்கலைகளில் ராகிங் தடுப்புக்கான மாநில கண்காணிப்பு கமிட்டியின் கூட்டம், கவர்னர் ரோசய்யா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பேசும்போது, ''தமிழகம், ராகிங் இல்லாத மாநிலமாக தொடர, அரசுத்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.

''ராகிங் தொடர்பாக மாணவர்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும். ராகிங்கில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கினால் மற்றவர்கள் அதில் ஈடுபட மாட்டார்கள்,'' என, கவர்னர் ரோசய்யா தெரிவித்தார்.

உள்துறை செயலர் அபூர்வ வர்மா கூறுகையில், ''ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கு தரவரிசை நிர்ணயிக்கலாம். வெளிமாநில மாணவர்களுக்கு தனியாக, மாணவர் விவகார கமிட்டி அமைக்கலாம்,'' என்றார்.

''ராகிங்கை தடுக்க, புதிய மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களை மட்டும் தனி விடுதியில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கலாம்,'' என, போலீஸ் டி.ஜி.பி., அசோக்குமார் கருத்து தெரிவித்தார்.

என்.எம்.எம்.எஸ்., தேர்வு பாட திட்டம் வெளியாகுமா?

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, உதவித்தொகை பெற்று தரும் தேர்வு குறித்த, பாடத் திட்டத்தை தற்போதே வெளியிட வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தேர்ச்சி பெறுவோருக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய அரசால் வழங்கப்படும்.
ஏழாம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த தேர்வு எழுதலாம். ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடக்கும் இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், தேர்வுக்கான பாடத்திட்டம், வினாக்களின் வகை, மாதிரி வினாக்கள் போன்றவற்றை, அரசு தேர்வுத்துறை தற்போதே அறிவித்தால், கிராமப்புற மாணவர்கள், தேர்வுக்கு தயாராக முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கான அடிப்படை திறன் மேம்பாட்டுப் பயிற்சி: 29இல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நாகர்கோவிலில் திங்கள்கிழமை (ஆக. 29) தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கணித உபகரணப் பெட்டியைப் பயன்படுத்தி அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல் பயிற்சி, வட்டார வளமைய அளவில் நடைபெறவுள்ளது.


இம்மாதம் 29, 30 ஆகிய நாள்களில், 31, செப். 1 ஆகிய நாள்களில் என, 2 கட்டங்களாக 1,055 ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறவுள்ளது.

இதற்கான மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி நாகர்கோவிலில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலக பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பயிற்சியைத் தொடக்கிவைத்தார். அப்போது அவர், தொடக்கப் பள்ளியில் கணிதத் திறனில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டியைப் பயன்படுத்தி சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். இதில், ஆசிரியர் பயிற்றுநர், ஆசிரியர்கள் என 30 பேர் கலந்துகொண்டனர்.

கருத்தாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் அஜிதகலா, மெர்சிஜெபா ஏஞ்சல், ஸ்ரீவித்யா, ஜாஸ்மின் ஷீபா ஆகியோர் பயிற்சியளித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் வில்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன் ஆகியோர் செய்தனர்.

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் நாடார் சங்கம் வலியுறுத்தல்

மத்திய பள்ளிக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம் பெற்றுள்ள நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.


இது தொடர்பாக தில்லியில் பிரகாஷ் ஜாவடேகரை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை காலையில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த தங்கம் செல்வராஜ், ராஜகுமார், வழக்குரைஞர் ரவீந்திர துரைசாமி, ஆலந்தூர் கணேசன், டி. கண்ணன், பரப்பாடி ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன், ஏலங்குளம் எட்வின், ஏ. முத்துகுமார் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 12 பேர் சந்தித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அனைவரையும் பிரகாஷ் ஜாவடேகரிடம் அழைத்துச் சென்றார்.

இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வழக்குரைஞர் ரவீந்திர துரைசாமி கூறியதாவது: சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தின் 168, 169 ஆகிய பக்கங்களில் நாடார் சமுதாய வரலாறு தொடர்புடைய பத்திகளில் "இடம் பெயர்ந்த சமூகம்' எனக் குறிப்பிடும் வரிகள் உள்ளன. நாடார் சமுதாயம் இடம் பெயர்ந்த சமூகமாக இருக்க முடியாது. அந்தப் புத்தகத்தை எழுதிய மலையாள எழுத்தாளர் உள்நோக்கத்துடன் அக்கருத்தைப் பதிவு செய்துள்ளதாகக் கருதுகிறோம். சர்ச்சைக்குரிய அந்த வரிகளை நீக்கக் கோரி நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தில்லியில் மத்திய அமைச்சர் ஜாவடேகரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம்.

மேலும், தமிழகத்தில் பெண்கள் மார்பகப் பகுதிகளை மறைக்கும் வகையில் தோள் சீலை அணியும் போராட்டத்தை அக்காலத்தில் முன்னெடுத்த வைகுண்டர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை பாட புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டோம்.

ஒரு முதலமைச்சராகவும் இதர பிற்படுத்த மக்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தவருமாகவும் திகழ்ந்த காமராஜரின் பெயரை மதிய உணவுத் திட்டத்துக்கு வைக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்து நிறைவேற்றும் என்று நம்புகிறோம் என்றார் ரவீந்திர துரைசாமி.

தமிழிசை நம்பிக்கை:

இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் தமிழசை கூறியது: சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் காமராஜர் பற்றி இடம் பெற்றுள்ள பிழையான தகவலை நீக்கவும், மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சரித்திரத்தில் இடம் பெற்ற வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மாநிலங்களில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எதிர்கால தலைமுறைக்கு மறைக்காமலும் இருட்டடிப்பு செய்யாமலும் மக்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே பாஜகவின் நிலைப்பாடு. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுதந்திர போராட்டத் தியாகிகள் பலரின் வரலாறும் தியாகங்களும் மறைக்கப்பட்டன. அதற்கு பாஜக ஒருபோதும் இடம் கொடுக்காது என்றார் தமிழிசை.

"க்ரீமி லேயர்' முறையை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

நாட்டில் "க்ரீமி லேயர்' முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

மண்டல் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஐக்கிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற "சமூக நீதிக்கான உரிமைகள்' தொடர்பான கருத்தரங்கில் அவர் பேசியதாவது:


"இடஒதுக்கீடு' என்பது அரசியலமைப்பு நம் அனைவருக்கும் அளித்துள்ள உரிமை. ஆனால், சமூகம், கல்வி ரீதியாக இடஒதுக்கீடு அளிப்பதற்குப் பதிலாக பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு அளிக்க நடைபெறும் முயற்சி அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது. இதற்கு வகை செய்யும் "க்ரீமி லேயர்' முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

இந்தியாவில் 1931-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்திய விசாரணையின் முடிவில் மண்டல் கமிஷன் அதன் அறிக்கையை 1981-இல் அளித்தது. அப்போதே பிற்படுத்தப்பட்டோர் 51-54 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 20-22 சதவீதமாகவும் இருந்தனர்.

இத்தகைய சூழலில் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதமாக இருப்பதை ஏற்க முடியாது. அதற்குப் பதிலாக சுமார் 85 சதவீதம் வரையிலாவது இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அன்புமணி ராமதாஸ்.து.

0, 12-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகள்: செப்டம்பர் 8-ல் தொடக்கம்

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 8-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெறவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.


அதன்படி, இயக்குநரகத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் வினாத்தாள் அச்சிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்.

இந்நிலையில், 2016-17 கல்வியாண்டுக்கான 10, 12-ஆம் வகுப்புகளின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். வினாத்தாளைப் படிக்க 10 நிமிஷங்களும், விடைத்தாளில் விவரங்களை நிரப்ப 5 நிமிஷங்களும் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 12.45 மணி வரையிலும் நடைபெறும். இவர்களுக்கும் கூடுதலாக 15 நிமிஷங்கள் வழங்கப்படும்.

பிளஸ் 2 பொதுப் பிரிவு, தொழிற்கல்வி பிரிவு, தட்டச்சு (தமிழ் - ஆங்கிலம்) உள்ளிட்ட பாடப் பிரிவினருக்கான செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கும் முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ள

சிறுபான்மையின பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்தாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையின  பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவு பொருந்தாது  மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்,  தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-இல் அரசாணை பிறப்பித்தது.


அதன்படி,அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள், தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதே போன்று, 2010-ஆம் ஆண்டு ஆகஸ்டு 28-ஆம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் சேவியர் அருள்ராஜ், அஜ்மல்கான், காட்சன் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:  ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்துவதற்காக, இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும், இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அரசின் தலைமை வழக்குரைஞர் தனது வாதத்தின் போது எடுத்துரைத்தார்.

ஆனால், உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டம், சிறுபான்மையின பள்ளிகளுக்கு பொருந்தாது  என்று மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.இதேபோன்று, உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளை கருத்தில் கொள்ளும் போது, பொது நலனை கருத்தில் கொண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம்.அதற்காக, அந்த பள்ளிகளின் தன்மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.

மேலும் ஆசிரியர்களை நியமனம் செய்யும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரத்தில் வேறு யாரும் தலையிட முடியாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.எனவே, அரசு உதவி பெறும், உதவி பெறாத சிறுபான்மையின  பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அவர்களுக்கு பொருந்தாது. மேலும் 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, ஆசிரியர்களுக்கு  ஊதியத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த ஊதியத் தொகையை 2 மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழக அரசைப்போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து, கடந்த 2015-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையும், புதுச்சேரியி்ல் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொருந்தாது.ஆசிரியரின் தரத்தை மேம்படுத்துவதை உறுதிப்படுத்த, சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் ஆண்டு விடுமுறை காலங்களில் புத்தாக்க பயிற்சிகள், விவாதங்களையும் நடத்திக் கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஆயிரம் கண்கள் உன்னை உன்னிப்பாகக் கவனிக்கும் . ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”


இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும் தாண்டி ஒரு
பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர்.
நான் பணியில் சேர்ந்த முதல் நாள் காலை எனது தலைமை யாசிரியர் எனக்களித்த அறிவுரை மறக்க இயலாது. “உனக்கு இரண்டு கண்கள். ஆனால், உன்னை ஆயிரம் ஜோடிக் கண்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் மட்டும் அல்ல; சாலையிலும் பொது இடங்களிலும் வீட்டிலும்கூட நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதை எல்லோரும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”

உண்மைதான். வேறு தொழில் செய்பவர் யாரும் இந்த அளவு சமூகத்தின் பார்வையில் சிக்க மாட்டார்கள். எப்போதுமே கல்வித் தகுதிக்கு மேல் ஆசிரியர்களிடம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான நியாயமும் இருக்கிறது. நான் ஆசிரியப் பணியை ஒரு சின்ன கிராமத்தில் தொடங்கினேன். தினமும் கடைவீதி வழியாகப் பள்ளிக்குச் செல்வேன்.
பல வணிகர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அப்போது எனக்கு வயது 19. அவர்களுக்கோ என் தந்தை, தாத்தா வயது. சங்கடப்பட்டுக்கொண்டு வேறு வழியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ஏன் இப்படிச் சுற்றிக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் காரணத்தைச் சொன்னேன். அப்போது ஒரு பெரியவர் சொன்னார்: “உங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் ஆசிரியராகப் பார்ப்பதில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருபவராகப் பார்க்கிறோம். அதனால்தான் வணங்குகிறோம்.”
பெற்றோரின், சமூகத்தின் இந்த நம்பிக்கைதான் ஒரு ஆசிரியர் எதிர்கொள்ளும் பெரிய சவால். ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது இந்த நம்பிக்கைக்குத்தான். இந்த நம்பிக்கைக்கு ஒரு ஆசிரியர் நேர்மையாக நடந்துகொள்ளும்போது ஒரு பள்ளிக்கூடம் தானாக தலைநிமிரும்!
- ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்,

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)

*.5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...

#கல்வியின் நிலை இன்று!



"இன்றைய மாணவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவர்களுக்கு
தூண்டுகோலாக இருக்க வேண்டிய ஆசிரியர் மற்றும் பெற்றோர்களே
இன்றைய கல்விமுறையின் தூண்டிலில் சிக்கியுள்ளனர்.என்றால்
அது மிகையாகாது.
ஆம்,
'மதிப்பெண்"எனும் மாயை வலையில் சிக்கி அதற்காக மாணவர்களை
கசக்கி எடுக்கிறார்கள்.

#இன்றைய மாணவர்களின் பிரச்னைகள்!

       *பெருபாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை அந்தகாலத்தில் நாங்க எல்லாம் எப்படி படிப்போம் தெரியுமா?
என்று கேள்வி கேட்டே கொல்கிறார்கள்.

        அன்றைய சூழல் வேறு என்பதை மறந்து,
    அன்று,
 நான் விளக்கொளியில் படித்து இன்று பெரிய பதவியில்
இருக்கிறேன்.என்று சொல்லும் நீங்கள்,
   
     இன்றைய மாணவர்களின் பிரச்சனையை உணராதது தான்
பெரும்  பிரச்சனையே!

      *அன்று நீங்கள் படிக்கும் காலத்தில் மின்சார வசதி இல்லாமல் இருந்திருக்கலாம்,ஆனால்

    இன்று அந்த மின்சார வசதி உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைத்திருக்கலாம்,
       மின்சாரவசதி கிடைத்தும் படிக்கவில்லை என்று கூறும்
நீங்கள் அந்த வசதியே அவனுக்கு பெரும் இடையூராக உள்ளது
என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்.

    *இன்று அறிவியல் துறையின்  அபரீத  வளர்ச்சியால் தொலைக்காட்சி,செல்பேசி,இணையம்,மற்றும் பல தகவல் தொடர்பு வளர்ச்சியின் காரணமாக

       *ஒரு மாணவன் தகவல்களை சேகரிப்பது மட்டும் கல்வியாக இருந்தால் அவனுக்கு ஆசிரியரே தேவையில்லை.

* விவேகானந்தரின் கூற்றுப்படி,
கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர,
வெறும் தகவல்களைச் சேகரிப்பதல்ல...

      அவனை மீட்டு எடுக்க வேண்டிய ஆசிரியர்களே
தொலைக்காட்சியால் அவனையே அவன் தொலைக்கிறான் என்பதையும்,செல்லிடபேசியால் அவன் செல்கள் செயல் இழக்கின்றன
என்பதை உணர்த்தாமல் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களை
குறைக்கூறுவதையே பெரும் குறையாக வைத்துள்ளனர்.
  அதற்கு அவர்கள்
              கூறும் காரணங்கள் "எதுவாக"இருந்தாலும்-அது
              மாணவர்களுக்கு "ஏதுவாக" இல்லை என்பதே
என் வருத்தம்.        

குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை
உருவாக்குவதை விட, மகிழ்ச்சியான
நிகழ் காலத்தைத் தருவது நம் கடமை!
என்பதை மறுக்காமலும், மறக்காமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

#நமது கல்விமுறை

*இன்றைய கல்வி முறையின் அவல நிலை?

*வெறும் எண்ணிக்கையால் உயர்ந்ததில்ல "வாழ்க்கை"
நல்லெண்ணங்களால் உயர்ந்ததே "வாழ்க்கை"..

   . என்பதை சொல்ல மறந்த இன்றைய கல்வி முறையால் ஆசிரியர்கள் வெறும் "calculator" ராக மாறிவிட்டன இவர்களின் பார்வையில் மாணவர்கள் ஒரு புள்ளி விவரங்களாகவே உள்ளனர்.
இது 95, இது 90, இது 80, இது 60,இது தேராது....
இத மாத்தி சொல்லணும் என்றால் A1,A2,B1,B2,C1,C2
D, E1,E2 GRADE -இவ்வாறாக அடையாளும் காணும்

கல்வியால் என்ன பயன்?

ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

             #நமது கல்விமுறை 100% தகவல்களை அளிப்பதாகவே இருக்கிறது.
                     அது ஒரு தூண்டுகோலாக,ஊக்கம் கொடுப்பதாக இல்லை ஊக்குவிப்பவர் இல்லையென்றால்,ஒரு மனிதன் அவனுடைய
எல்லைகளை தாண்டி உயர முடியாது.
வெறும் தகவல் தேவை என்றால்,
 ஓர் ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியது.
புத்தகங்களும்  ,இணையத்தளமும் இந்த வேலையை
இன்னும் சிறப்பாக செய்யும்.

      #ஓர் ஆசிரியரின் பங்கு,ஒரு மாணவனை கற்க தூண்டுவதாக
இருக்க வேண்டும்.அறிவுக்கான தாகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.அப்போது தான் ஆசிரியரின் பங்கில் ஏதாவது பொருள் இருக்கும்.
                  -சத்குரு            

ஆசிரியர்-மாணவர் உறவு மேம்பட!

இன்றயை மாணவர்களின் பிரச்சனை!

இன்று நேரத்தை மாணவர்கள் "useless" ஆக பயன்படுத்துவதற்கும்,

"usedless" ஆக பயன்படுத்துவதற்கும்,

வாய்ப்புக்கள் அதிகம் என்பதை உணர்த்தும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை ஒரு நல்ல ஆசிரியர், என்பவர் வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் போது, தான் ஒரு முன்னாள் மாணவன் என்பதை மனதில் வைத்துகொண்டு பாடம் கற்பிக்க வேண்டும்!

ஒரு நல்ல மாணவன் என்பவர் பின்னாளில் தானும் ஆசிரியர் ஆகலாம் என்ற எண்ணத்தோடு பாடத்தை கற்க வேண்டும்!

#யார் சிறந்த ஆசிரியர்?

சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிகொள்பவர்கள்- சாதரணமானவர்கள்!
சூழ்நிலையை தனக்கு சாதக்கமாக பயன்படுத்திக்கொள்பவர்கள்-புத்திசாலிகள்!
சூழ்நிலையை தங்களுக்கு  ஏற்றவாறு மாற்ற நினைப்பவர்கள்-போராளிகள்!
சூழ்நிலையை தங்களுக்கு ஏற்றவாறு  மாற்றியவர்கள்-சாதனையாளர்கள்!  

இன்றைய கல்விமுறையால் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவில்
உள்ள சிக்கலுக்கான காரணம் புரிதல் இல்லாததே என்பதை என் மன நெருடலாக பதிவு செய்துள்ளேன்!  

   இந்த பதிவு ஆசிரியர்-மாணவர்-பெற்றோர்  உறவை மேம்படுத்த உதவும்
என்ற நமிக்கையோடு!

   உங்கள் வாத்தியார் நண்பன்
        அருள் .பி.ஜி

தடய அறிவியல் பணி: விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்

இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.தமிழக அரசின், தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள, 30 இளநிலை தடய அறிவியல் அதிகாரி பணியிடங்கள், நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. 
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் குற்றவியலில், முதுநிலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அக்., 16ல் எழுத்து தேர்வை நடத்துகிறது.இதற்கு, ஜூலை, 29ம் தேதி, விண்ணப்ப பதிவு துவங்கியது. வரும், 28ம் தேதியுடன் விண்ணப்பங்களை பதிவு செய்யும்அவகாசம் முடிகிறது. விடுபட்ட பட்டதாரிகள், மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் விடுதிகள்: காலியாகவுள்ள சமையலர் பணிக்கு செப். 9-க்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்பட்டுவரும் விடுதிகளில் காலியாகவுள்ள சமையலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 9-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இது குறித்த விவரம்: 
சென்னை மாவட்டத்தில் காலியாகவுள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் விடுதிகளில் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக, நேர்காணல் மூலம்தகுதியுள்ள ஆண், பெண் இருபாலரும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடத்துக்கு சம்பளமாக ரூ.4800-10,000, தர ஊதியமாக ரூ.1,300 அளிக்கப்பட உள்ளது.இதற்காக, சென்னை மாவட்டத்தில் வசித்து, 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அதோடு, சைவ, அசைவஉணவு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த, ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.இதற்கென, உரிய தகுதிகளுடன் விடுதிகளில் சமையலர் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தந்தை-கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வித் தகுதி, சாதி உள்ளிட்டவையோடு, முன்னுரிமை விவரம் (மாற்றுத் திறனாளி, விதவை, முன்னாள் ராணுவத்தினர், கலப்பு திருமணம், மொழிப்போர் தியாகி போன்றவை) அளித்திட வேண்டும்.

அத்துடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின், அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், இருப்பிடச் சான்று ஆகிய விவரங்கள், உரிய சான்று நகல்களுடன், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-ஆவது தளத்தில் இயங்கும் சென்னை மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் செப்.6-ஆம் தேதியன்றுமாலை 5 மணிக்குள் நேரில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மாணவர் உதவித்தொகை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்.

சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும், முஸ்லிம், கிறிஸ்துவ, பார்சி, ஜெயின், புத்த மற்றும் சீக்கிய இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவியர், http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி, ஆக., 31 என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, செப்.,30 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது