கபாலி பட ரிலீஸ் டென்ஷன் பழசு. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலைகளை அடைத்துக்கொண்டு இளசுகள் வரிசைக்கட்டி நின்றது ஜியோசிம்முக்குகாகத்தான்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புது 4ஜி சிம்மான ஜியோ, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. (ஆனால் குறிப்பிட்ட சில மொபைல்களுக்கு மட்டுமே ஜியோ சிம் பொருந்தும்) ஒரு முறை ஜியோ சிம் வாங்கிவிட்டால்அடுத்த மூன்று மாதத்துக்கு இலவச 4ஜி இணைப்பு என ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது. சாதாரணமாக ஒரு ஜி.பி க்கு சுமார் 250 ரூபாய் செலவழிக்க வேண்டிய சூழ்நிலையில் ஜியோவின் இந்த ஆஃபரால் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ சிம்மை வாங்கி வருகிறார்கள்.
ஜியோவின் இந்த அதிரடி ஆஃபரால் கதிகலங்கி போன மற்ற நெட்வொர்க்குகள் நெட்பேக் விலையை குறைத்து வருகின்றன. சில நிறுவனங்கள் அதே விலையில் கூடுதல் டேட்டா தர ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஏர்டல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான இயக்குனரான அஜய் பூரி இன்று புது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன் படி இனி ஒரு GB டேட்டாவை வெறும் ரூபாய்க்கு 51க்கு பெற முடியும். ஆனால் இங்கே ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. மெகா டேட்டா சேமிப்பு என்ற பாக்கேஜின் கீழ் வரும் இந்த ஆஃபரை பெற நீங்கள் முதலில் ரூ1498 என்ற ஸ்பெஷல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் செய்த பிறகு ஒரு வருடத்துக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ருபாய் 51 செலுத்தி ஒரு GB டேட்டாவை பெறலாம். ரூ 748 க்கு ஸ்பெஷல் ரீசார்ஜ் செய்தால் அடுத்த ஆறு மாதத்துக்கு 99 ரூபாய்க்கு ஒரு GB பெறலாம். இந்த இரண்டு ஆஃபர்களும் இப்போதைக்கு டெல்லிக்கு மட்டும் தான் பொருந்தும். விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்என ஏர்டெல் அறிவித்திருக்கிறது.
சரி இந்த ஆஃபர் லாபமா? நஷ்டமா?
நீங்கள் மாதம் ஒரு ஜிபி 3 ஜி டேட்டா பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கு ரூ.250 வசூலிக்கிறார்கள். ஒரு வருடத்துக்கு (250*12=3000) மூவாயிரம் ரூபாய் செலவாகும். தற்போதைய மெகா டேட்டா சேமிப்பு ஆஃபரில் (1498 + (12*51) = 2110)சுமார் 890 ரூபாய் மிச்சப்படுத்த முடியும் அல்லது வழக்கமாக செலவழிக்கும் தொகையில் கூடுதலாக ஒரு வருடத்துக்கு சுமார் 17 ஜி.பி டேட்டா பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.