யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/11/16

பிழைப்பு ஊதியமும் 'கட்:' தலைவருக்கு சிக்கல்

கல்வித் துறையால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, கலை ஆசிரியர் சங்க தலைவருக்கு, இரு மாதங்களாக, பிழைப்பு ஊதியம் வழங்காததால், போராட்டம் நடத்துவது குறித்து, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார். இவர், கல்வித் துறையின் பல பிரச்னைகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, உயரதிகாரிகளிடம் மனு அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அதனால், இரு மாதங்களுக்கு முன், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பத்திரிகைகளுக்கு தவறான தகவல் தருவதாகவும், இவர் மீது, கல்வித் துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில், ஆசிரியர் ராஜ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பின், விதிகளின்படி ஊதியத்தில், 50 சதவீதத்தை பிழைப்பு ஊதியமாக வழங்க வேண்டும்; அதுவும், வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. 'பிழைப்பு ஊதியமாவது வழங்க வேண்டும்' எனக்கோரி, ராஜ்குமார் சார்பில், நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், சென்னை வந்த அவர், முதல்வரின் தனிப்பிரிவிலும், பள்ளிக்கல்வி செயலரிடமும் மனு அளித்துள்ளார். இதேநிலை தொடர்ந்தால், சங்க உறுப்பினர்களை திரட்டி போராட்டம் நடத்த, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். 

ரூபாய் 500,100 நோட்டுகள் செல்லாது : நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும்...!

1. நவம்பர்9-ம் தேதி அனைத்து வங்கிகளும்மூடப்பட்டிருக்கும்.

2. நவம்பர்9 மற்றும் 10 தேதிகளில் ஏ.டி.எம்செயல்படாது.

3. நீங்கள்கையில் வைத்திருக்கும் ரூபாய் 500, 1000 நோட்டுகளை உங்கள் வங்கி அல்லதுதபால் நிலையம் சேமிப்புக் கணக்கில்வைப்பு வைதிருக்க
வேண்டும்.
4. வங்கியிலிருந்து நீங்கள் ஒரு நாளைக்கு 10000 ரூபாய் அல்லது ஒரு வாரத்திற்கு 20,000 தான் எடுக்க முடியும்.

5. காசோலைகள், வரைவோலைகளை, டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகள் மற்றும் மின்னணு நிதி பரிவர்த்தனைகளுக்கு எந்த தடையும் இல்லை.
அடுத்த72 மணிநேரங்களுக்கு கீழ்கண்ட இடங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தமுடியும் :



1. ரயில்நிலையத்தின் டிக்கெட் கவுண்டர்கள், பஸ் மற்றும் விமானடிக்கெட்டுகள் பெற தற்போதைய 500, 1000 ரூபாய்நோட்டுகளைப்    பயன்படுத்தலாம்.

2. அரசுமருத்துவமனைகளில் பில் தொகைக்கு செலுத்தமுடியும்.

3. மத்தியஅரசின் அங்கீகரிக்கப்பட்ட  பெட்ரோலியநிறுவனங்களின் பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில்செலுத்த முடியும்.

4.  மத்திய மற்றும் மாநிலஅரசால் அனுமதிக்கப்பட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகளில் செலுத்த முடியும்.

5.  மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டபால் பூத்களில் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் : தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு

தமிழகத்தில்10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஆதார்எண் இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத முடியும் என்றுஅரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2016-2017 பொதுத்தேர்வு வருகிற மார்ச்
மாதம்நடக்க உள்ளது. இந்த பொதுத்தேர்வில்பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவருவதாக தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு தேர்வுத்துறை இயக்ககம்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.
அதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைஅரசு தேர்வுத்துறை இயக்ககம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது, மாணவர்களின் ஆதார் எண்ணையும் கட்டாயமாகபதிவு செய்ய வேண்டும். இதைவைத்துதான் இந்த ஆண்டு பொதுத்தேர்வில்பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஆதார் எண் இருந்தால் மட்டுமேபொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும். எனவேஇந்த மாதத்திற்குள் மாணவர்களிடம் ஆதார் எண்ணை வாங்கவேண்டும்என கூறப்பட்டுள்ளது.


இதனால்தனியார் மற்றும் அரசு, அரசுநிதியுதவி பள்ளிகளில் பொதுத்தேர்வு மாணவர்கள் எத்தனை பேர்? இன்னும்எத்தனை பேர் ஆதார் எண்எடுக்கவில்லை என்று கணக்கெடுத்து, அந்தபள்ளிகளுக்கு ஆதார் எடுக்கும் சிறப்புமுகாம் அமைத்து, ஆதார் அட்டை வழங்ககல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பணியை இந்தமாதத்திற்குள் முடிக்கவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பது முதல் முறை அல்ல...!

ஃபேஸ்புக், ட்விட்டர் என சமுகவலைதளங்களின் ஆதிக்கம்ஊடுருவியுள்ள இந்த டிஜிட்டல் காலத்திலும்1000,  500 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்பதை  பிரதமர்மோடியின் அரசு ரகசியமாக வைத்திருந்துஇன்று அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு புத்தாண்டுதொடக்கத்தில்
மக்களிடம் பழைய, ரூ 500, ரூ1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது.
திடீரெனஇப்படி ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன மத்திய அரசு அறிவிப்பதுதற்போதைய தலைமுறைக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், இதற்கு முன்புஇதே போல இரண்டு அதிர்ச்சிசம்பங்களை இந்தியா சந்தித்துள்ளது.

''ஊழல்மற்றும் கறுப்பு பணம், வறுமை, பயங்கரவாதம் ஆகியவை நம்  நாட்டை பின்நோக்கி இழப்பதைநான் உணர்ந்தேன்" .1000,500 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன பிரதமர் மோடி அறிவித்தபோது, கூறிய உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்இவை.  மோடியின்இந்த  முயற்சியால், கருப்புப்பண முதலைகள் ஆட்டம் கண்டுள்ளன. ரூபாய்நோட்டுகள் செல்லாது என அரசு திடீரெனஅறிவிப்பது புதிதல்ல. இதற்கு முன் இந்தியாவில்ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசும், அதற்குப் பின் மொரார்ஜி தேசாய்அரசும் இதை செய்து இருக்கின்றன.

1946 ஆம்ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின்கணக்கில் வராத  பணங்களைதடுக்கும் நோக்கில் ரூ1,000 மற்றும் ரூ10,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது. இந்தியாசுதந்திரம் அடைந்த பிறகு 1954-ல்மக்களில் வசதிகளுக்காக  5,000 ரூபாய்நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், மீண்டும் அரசுக்குதலைவலியே மிஞ்சியது, கடத்தல்காரர்கள் லட்ச லட்சமான பணத்தைச்சுலபமாகக் கடத்க்ச் சென்றனர். வேறு வழியின்று 1978-ல்5000 ரூபாய் நோட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. அதன்பிறகுதற்போது தான் ரூபாய் நோட்டுகளுக்குமத்திய அரசு தடை விதித்துள்ளது.

 தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையின்பிண்ணனியில் மோடி அரசின், நம்பகத்தன்மைஅடங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.  1946 மற்றும்1978-ல் இந்தியவின் வளர்ச்சியை தடுக்கும் மலையளவு  கருப்புபணம் இல்லை. ஆனால் 1990க்குபிறகு கருப்புப்பணம் பதுக்கல் என்பது புதுப் பரிமாணத்துடன்வளர்ந்தது.  ஆட்சிக்குவந்தவுடன் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தைமீட்டு, ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம்வழங்குவோம் என்கிற வாக்குறுதியை 2014-ம்ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி முன்வைத்தார். மோடிஅரசின் மிக முக்கியமான வாக்குறுதியாககருதப்பட்டது இது. ஆனால், ஆட்சிக்குவந்த பிறகு இந்த வாக்குறுதியைமோடி மறந்துவிட்டார் என்று நாடு முழுவதிலும்விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அதிரடிநடவடிக்கையால், தனது செல்வாக்கை மீட்டிருக்கிறார்மோடி

TNTET CASE......ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம்*


ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -

உச்சநீதிமன்றம் தீர்ப்பு.


5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.

Flash news:TNTET தீர்ப்பு -ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும்: உச்சநீதிமன்றம்

தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆசிரியர் தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை உறுதி செய்தது.

இரு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்பை அளித்ததால், ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு காரணமாக கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு. 5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.

இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம்

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.

8/11/16

ராணுவத்திற்கு ஆள் சேர்க்கை மதுரையில் நவ.11ல் துவக்கம்

மதுரை: மதுரை ரேஸ்கோர்சில் ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர் பதவிகளுக்கு ஆள் சேர்க்கை முகாம் நவ., 11 முதல் 16 வரை நடக்கிறது.நவ., 11ல் தர்மபுரி,தேனி; 12ல் மதுரை; 13ல் திண்டுக்கல், கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தினர் பங்கேற்கலாம். விண்ணப்பித்தவர்கள் அனுமதி அட்டையை www.joinindianarmy.nic.inல் பதவிறக்கம் செய்யலாம்.

'அதை தேர்வின் போது கொண்டு வர வேண்டும்' என ராணுவ தேர்வு இயக்குனர் பிக்ராம் டோக்ரா தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற பணி : சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: உயர் நீதிமன்ற பணி நியமனங்களுக்கான எழுத்துத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 14 முதல், 17 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.சென்னை உயர் நீதிமன்றத்தில், கணினி இயக்குபவர், தட்டச்சர், காசாளர், மற்றும் ஒளி நகல் எடுப்பவர் பதவிகளில், 290 காலியிடங்களுக்கு, ஆக., 28ல், எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 714 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு, நவ., 14 முதல், 17 வரை, சென்னை, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அலுவலத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பணி நிறைவு நாளில் பி.எப்., பணம்

மதுரை: மதுரை மண்டல பி.எப்., அலுவலகத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடந்தது. இதற்கு, மண்டல கமிஷனர் ரபீந்திர சமல் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊழல் கண்காணிப்பு வார விழா நடத்தப்படுகிறது.
துறை அதிகாரிகள் வெளிப்படை தன்மையையும், நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களின் சேவை அளிப்பதில் ஏற்படும் தாமதமே ஊழலின் துவக்கம். எனவே, ஏழு நாட்களுக்குள் அவர்களிடமிருந்து பெறும் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்.பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை தீர்த்து வைப்பதில் மதுரை பி.எப்., மண்டல அலுவலகம், இந்தியாவிலேயே 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்திற்கு வருவதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம்.இனி, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பணி காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, அவர் சார்ந்த நிறுவனங்களிடமிருந்து, அவரது ஆவணங்கள் பெறப்படும். இதன் மூலம், அவர் பணி நிறைவு செய்யும் நாளில், பி.எப்., பணத்தை பெறும்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.மண்டல உதவி கமிஷனர் ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டம் 80 லட்சம் குடும்பங்கள் 'ரெடி'

அனைத்து உறுப்பினர்களின், 'ஆதார்' விபரமும் வழங்கிய, 80 லட்சம் குடும்பங்களுக்கு, விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில், தற்போதுள்ள காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அக்கருவியில், ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின், 'ஆதார்' அட்டை விபரம் பதியப்படுகிறது. அதன் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.இப்பணியை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், அக்டோபரில் துவங்கி, டிச., 31க்குள், அனைத்து மாவட்ட மக்களுக்கும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கதிட்டமிடப்பட்டது. பலர், ஆதார் விபரம் தராததால், இப்பணி தாமதமானது.


திட்டமிட்டபடி

இந்நிலையில், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரத்தை வழங்கிய குடும்பங்களுக்கு மட்டும், விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்போர் தான், ஆதார் விபரம் தராமல் உள்ளனர். இதனால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி,திட்டமிட்டபடி துவங்கவில்லை. தற்போது, 80 லட்சம் குடும்பங்கள், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரங்களையும் வழங்கியுள்ளன.
அரசு ஒப்புதல் அளித்தால், முதல் கட்டமாக, அவர்களுக்கு, டிச., துவக்கத்தில் ஸ்மார்ட்கார்டு வழங்கப்படும். பின், ஆதார் விபரம் வழங்குவதற்கு ஏற்ப, ஸ்மார்ட் கார்டு வழங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


எத்தனை பேர்?


தமிழகத்தில், 2.06 கோடி ரேஷன் கார்டுகளில், 7.87 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். நேற்றைய நிலவரப்படி, 4.96 கோடி பேர் மட்டுமே ஆதார் விபரம் வழங்கியுள்ளனர். மீதமுள்ள, 2.91 கோடி பேர், விபரம் தரவில்லை.

வட்டி தள்ளுபடி அரசாணை எப்போது? : முதல்வர் அனுமதித்தும் தாமதம்

வீட்டு வசதி வாரியத்தில், தவணை கட்ட தவறியோருக்கு, வட்டி தள்ளுபடி திட்டத்தை, ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க முதல்வர் அனுமதித்தும், அரசாணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
நிலுவை தொகை : தமிழகத்தில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள், முறையாக தவணை செலுத்தாததால், வட்டி, அபராத வட்டி ஆகியவை சேர்ந்து நிலுவைத் தொகை அதிகரித்து விடுகிறது. இதனால், அவர்கள் விற்பனை பத்திரம் பெற முடிவதில்லை.
இதையடுத்து, அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி, இறுதி விலை வித்தியாச தொகை ஆகியவற்றில், குறிப்பிட்ட அளவு தள்ளுபடி செய்யும் திட்டம், 2011ல் அறிவிக்கப்பட்டது; பின், 2014 வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி, 14 ஆயிரத்து, 992 பேர் நிலுவைத் தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெற்றனர். மேலும், 23 ஆயிரத்து, 600 பேர் நிலுவைத் தொகையை செலுத்தாததால், விற்பனை பத்திரம் பெற முடியவில்லை. அவர்கள் நலன் கருதி, அபராத வட்டி தள்ளுபடி திட்டம், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என, செப்., 17ல், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை.அரசு ஒப்புதல்
இது குறித்து, வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த, அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
முதல்வர் அனுமதி அளித்தும், அரசாணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, வீட்டு வசதி துறை செயலருக்கு, நினைவூட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது' என்றார். 

துணைவேந்தர் கையெழுத்து: சான்றிதழில் கட்டாயமா?

சென்னை பல்கலை துணை வேந்தராக இருந்த தாண்டவன், ஜனவரியில் ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தரை நியமிக்க, தேடல் குழு அமைக்கப்பட்டு, இந்த குழு, அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
துணைவேந்தர் இல்லாததால், பல்கலை நிர்வாகம், உயர்கல்வி செயலர் கார்த்திக் பொறுப்பில் உள்ளது. இந்நிலையில், பட்டமளிப்பு விழா நடத்த, பல்கலையில் முடிவு எடுக்கப்பட்டது. பட்டச் சான்றிதழில், துணை வேந்தருக்கு பதில், கார்த்திக் கையெழுத்திட முடிவானது. அதற்கு, சிண்டிகேட் கூட்டத்தில், உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த பிரச்னை சட்டத் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரம், துணை வேந்தர் கையெழுத்து இல்லாமல், பட்டச் சான்றிதழ் வழங்கலாமா; அதற்கு, பல்கலை விதிகளில் இடம் உள்ளதா என, விதிகளை புரட்டிப் பார்க்க, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது. இந்த ஆய்வுக்கு பின்னரே, பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என, தெரிகிறது

பிழைப்பு ஊதியமும் 'கட்:' தலைவருக்கு சிக்கல்

கல்வித் துறையால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, கலை ஆசிரியர் சங்க தலைவருக்கு, இரு மாதங்களாக, பிழைப்பு ஊதியம் வழங்காததால், போராட்டம் நடத்துவது குறித்து, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார். இவர், கல்வித் துறையின் பல பிரச்னைகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, உயரதிகாரிகளிடம் மனு அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அதனால், இரு மாதங்களுக்கு முன், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பத்திரிகைகளுக்கு தவறான தகவல் தருவதாகவும், இவர் மீது, கல்வித் துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில், ஆசிரியர் ராஜ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பின், விதிகளின்படி ஊதியத்தில், 50 சதவீதத்தை பிழைப்பு ஊதியமாக வழங்க வேண்டும்; அதுவும், வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. 'பிழைப்பு ஊதியமாவது வழங்க வேண்டும்' எனக்கோரி, ராஜ்குமார் சார்பில், நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், சென்னை வந்த அவர், முதல்வரின் தனிப்பிரிவிலும், பள்ளிக்கல்வி செயலரிடமும் மனு அளித்துள்ளார். இதேநிலை தொடர்ந்தால், சங்க உறுப்பினர்களை திரட்டி போராட்டம் நடத்த, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். 

ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் எப்போது?

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் பதவிக்காலம், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டது. அதனால், குழுவினர் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், புதிதாக பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, மத்திய அரசு ஆலோசனைப்படி, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம், 2003ல் அமலுக்கு வந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

வல்லுனர் குழு : 'பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்' என, வலியுறுத்தி, பல போராட்டங்களையும் நடத்தினர். அரசு ஊழியர்களின் கோரிக்கையை சமாளிக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, சட்டசபை தேர்தலுக்கு முன், வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்தது. தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும், வல்லுனர் குழுவின் செயல்பாடுகள் துவங்கின. செப்டம்பரில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், வல்லுனர் குழு கருத்து கேட்டது. அக்டோபர், 28ம் தேதியுடன், வல்லுனர் குழுவின் பதவிக்கலாம் முடிவடைந்து விட்டது. அதனால், குழுவினர் தங்களின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
ஆசிரியர்கள் உறுதி : இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு, இரண்டு மாதங்களாகிறது; இன்னும் குழுவின் முடிவு தெரியவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடரக்கூடாது என்பதில், ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். அதற்கு முன், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்திற்கு, இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத தடை

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகள் எழுத அனுமதி கிடையாது' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வர்களுக்கான புதிய அறிவுரைகள், 85 பக்கங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன் முக்கிய அம்சங்கள்:


* தேர்வர்கள் யாரும், சிபாரிசுக்காக, தேர்வாணைய தலைவர், செயலர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்கக் கூடாது. சந்திக்க முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

* விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ, தேவையற்ற இடங்களில் எழுதினால், எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்* அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில், வண்ண பேனா கிரயான்கள், ஒயிட்னர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது

* வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்டபெயர், சுருக்கொப்பம், முகவரி தவிர, மற்ற பெயர், கையொப்பம், சுருக்கொப்பம், தொலைபேசி, மொபைல் போன் எண், முகவரி மற்றும் மதம் சார்ந்த குறியீடு இடுதல் கூடாது

* விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில், கெஞ்சி கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்கு தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில் எழுதக் கூடாது

* கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டிலும், மாற்றி, மாற்றி எழுதினால், அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும்

* தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய, ஸ்மார்ட் வாட்ச்,மோதிரம், கம்யூனிகேஷன் சிப், மொபைல் போன், பல விபரங்கள் உடைய கால்குலேட்டர்களை, தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது* தேர்வர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரர் பெண்ணாக இருந்தால், ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய்திருக்கக் கூடாது.இவ்வாறு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.


ஒரு மொழியில்மட்டும் எழுதலாம்


தேர்வர்கள் விடைத்தாளில், தமிழ் அல்லது ஆங்கிலம் என, இரண்டில் எதில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், இரண்டிலும் மாற்றி, மாற்றி ஒவ்வொரு பக்கத்திலும் எழுதக் கூடாது. விதிகளை மீறுவோர், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, முந்தைய விதிகளில் இருந்தது. தற்போது, எந்த காலம் வரை தடை என்பதை, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்யும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிடெட்' ஆசிரியர் தகுதி தேர்வு 'ரிசல்ட்'

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'சிடெட்' தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசு பள்ளி, தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, 'சிடெட்' என்ற, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான தேர்வு, செப்., 18ல் நடந்தது.மொத்தம், 91 நகரங்களில், 851 மையங்களில், 6.53 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அதற்கான முடிவுகள், http:/www.ctet.nic.in/ என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன.

கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மதிப்பெண் பார்க்கும் முறை சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகம்

சென்னை, கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மாணவர்கள் மதிப்பெண்களை பார்க்கும் முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.

சென்னை பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் 129 உள்ளன. இதில் தன்னாட்சி கல்லூரிகள் 23 உள்ளன. இந்த கல்லூரிகளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 512 மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.


இந்த கல்லூரிகள் தவிர தொலை தூரக்கல்வி நிறுவனமும் உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் இந்தியா உள்பட 80 நாடுகளில் உள்ள மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.

தேர்வில் சீர்த்திருத்தம்
சென்னை பல்கலைக்கழக தேர்வில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுகிறதா? என்று சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் எஸ்.திருமகனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தொலை தூரகல்வி நிறுவனத்தில் படித்தால் நல்ல பெயர் உள்ளது. குறிப்பாக எம்.பி.ஏ. படிப்பை தொலை தூரக்கல்வியில் படித்தாலும் நல்ல வரவேற்பு இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உள்ளது.

வெளிநாடுகளில் சென்னை பல்கலைக்கழகதொலை தூரக்கல்வி நிறுவனத்தில் படிப்போருக்கு தேர்வு நடத்தும்போது வினாத்தாள்கள் ஆன்லைன் மூலம் தான் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டு பல்கலைக்கழகத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்திற்கு வினாக்கள் ஆன்லைன் மூலம் அனுப்பப்படும். அவர்கள் அதை ஜெராக்ஸ் எடுத்து மாணவ–மாணவிகளிடம் வழங்குவார்கள்.

தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுவதில்லை. அவர்கள் தாளில்தான் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதி ஒப்படைத்த விடைத்தாள்கள் ஒரு வாரத்திற்குள் கூரியர் மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்கிறது.

ஆன்லைன் மூலம் தேர்வு
இப்போது சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

அவ்வாறு ஆன்லைனில் முதல் கட்டமாக 2 தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அவை ஆப்ஜெக்டிவ் டைப் ஆக இருக்கும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில்கள் இருக்கும். 4 பதிலில் ஒன்று சரியாக இருக்கும். 3 தவறாக இருக்கும். மாணவ–மாணவிகள் காப்பி அடிக்காமல் இருக்க கேள்விகளின் நம்பரில் மாற்றம் இருக்கும். ஆனால் கேள்விகள் ஒன்றாக தான் இருக்கும்.

உடனடியாக மதிப்பெண் தெரியும் முறை
2 மணி 45 மணிக்கு குறைவாக எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுத முடியாது. ஆன்லைனில் தேர்வு எழுதி முடிக்கும் போது அவர்கள் எழுதிய தேர்வு கம்ப்யூட்டரில் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் உடனடியாக தெரியும்.

அதாவது தேர்வு எழுதி முடிக்கும்போது மதிப்பெண் தெரிந்து விடும். இந்த புதிய முறை அடுத்த கல்வி ஆண்டில் (2017–2018–ம் ஆண்டு) சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த முறை நன்றாக இருந்தால் தொலை தூரக்கல்வியிலும் அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய முறை செனட், சிண்டிகேட் கூட்டத்தின் அனுமதி பெற்று பின்னர் கொண்டுவரப்படுகிறது. ஆன்லைனில் கம்ப்யூட்டரில் தேர்வு நடத்தும்போது எந்த கல்லூரியிலாவது கம்ப்யூட்டர் வசதி இல்லாவிட்டால் பல்கலைக்கழகம் மூலம் கம்ப்யூட்டர் கொடுக்கப்படும். இந்த முறையில் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் தேவை இல்லை.  இவ்வாறு எஸ்.திருமகன் தெரிவித்தார்.

ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேருவதை பெருமையாக கருதுகிறார்கள். தற்போது 37-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (‘டி.இ.எஸ்’-37, ஜூலை 2017) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 37-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேருவதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-1-1998 மற்றும் 1-1-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. கல்வித்தகுதி: பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். நாளை (8-11-2016) முதல் இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டிற்கு வரும். 7-12-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

சென்னை, தனியார் பள்ளிகளுக்கு நிலம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் 3 கல்வியாளர்களை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் ஏ.நாராயணன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–


தற்காலிக அங்கீகாரம்
தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள எந்தவொரு அடிப்படை தகுதிகளையும் கடை பிடிக்காமல், கடந்த 2004–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு தமிழக அரசும், ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக அங்கீகாரத்தை வழங்கி வருகின்றன.

இறுதியாக கடந்த மே மாதம் 31–ந்தேதி வரை ஒரே ஒருமுறை என்ற அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

அதன்பிறகு பல பள்ளிகள் தேவையான நிலம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை நீட்டிக்க கூடாது.

செயலாளர் ஆஜர்
சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடவும், அங்கீகாரம் பெறாத இந்த பள்ளிகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக விளம்பரப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா நேரில் ஆஜரானார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ஒரு வகுப்புக்கு எவ்வளவு நிலம் தேவை? என்பது தொடர்பான ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

கால அவகாசம்
பின்னர் அவர், ‘ஒரு வகுப்பிற்கு தேவைப்படும் நிலத்தின் அளவை தீர்மானித்து, இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 5 பிரிவுகள் வரை உள்ளன. இந்த பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் தேவைப்படும்? என்பதையும் கணக்கிட்டுள்ளோம். இந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழு முன்பு வைத்து, ஒப்புதல் பெற்ற பின் உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்கு கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.

கல்வியாளர் நியமனம்
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

அரசு அமைத்த நிபுணர்கள் குழுவில் கல்வியாளர்கள் யாரும் இல்லை. அரசு அதிகாரிகள் தான் உள்ளனர். கல்வியாளர்களை நியமித்தால் மட்டுமே குழுவின் நோக்கம் நிறைவேறும். எனவே கல்வியாளர்கள் எஸ்.எல்.சிட்டிபாபு, லலிதா, எஸ்.எஸ்.ராஜகோபால் ஆகியோரை அரசு நியமித்த நிபுணர்கள் குழுவில் சேர்த்து உத்தரவிடுகிறோம்.

இந்த குழுவில் உள்ளவர்கள், கும்பகோணம் கோர விபத்து சம்பவம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை மனதில் வைத்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆலோசிக்கவேண்டும்
நிலம் தொடர்பான விதிமுறைகளை சரியாக கணிக்க வேண்டும். இந்த குழுவில் இடம் பெற்ற நிபுணர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து 4 வாரத்தில் தகுந்த முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பிளஸ்-2 படித்தவர்கள் ராணுவத்தில் சேர்ப்பு

ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேருவதை பெருமையாக கருதுகிறார்கள்.


தற்போது 37-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (‘டி.இ.எஸ்’-37, ஜூலை 2017) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 37-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேருவதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-1-1998 மற்றும் 1-1-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

கல்வித்தகுதி:

பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். நாளை (8-11-2016) முதல் இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டிற்கு வரும். 7-12-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.